Lila Says...











Love is the answer, but while you are waiting for the answer, sex raises some pretty good questions.



சிமோ தொலை தூர அரபு தேசமொன்றில் தன் தாயோடு வசித்து வருபவன். வேலையுமில்லை. மேலே படிக்க வசதியுமில்லை. ஆனால் நல்ல எழுத்து வளம் உள்ளவன். பெரிய எழுத்தாளனாக வரவேண்டும் என்று கொஞ்சம் ஆவல் உண்டு.ஆனால் சகவாச தோஷத்தால் ஊர் சுற்றி திரிகிறான். சதா நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு ஊர் சுற்றுவதும் வெட்டி பேச்சும் சிமோவின் அம்மாவுக்கு பிடிக்கவில்லை.



சிமோவின் டீச்சர் பாரிஸீல் எழுத்தாளர்கள் இணைந்து ஒரு பயிற்சி பட்டறை நடத்துவதாகவும் அதற்கு தன்னால் ஏற்பாடு செய்ய முடியும் என்று வீடு தேடி வந்து கூறுகிறாள். அந்த பயிற்சி கிடைத்தால் சிமோ நிச்சயம் நல்ல எழுத்தாளனாக முடியும் என்று தான் நம்புவதாக கூறுகிறாள். ஆனால் பயிற்சியில் சேர சிமோ ஒரு நல்ல சிறுகதையை எழுதி கொடுக்க வேண்டும் என்று அதை அனுப்பி வைத்து அவள் ஆவன செய்வதாகவும் கூறுகிறாள்.



ஆனால் சிமோவின் தாயிடம் அதிகம் பணமில்லை. சிமோவவை அனுப்பி வைக்கவும் மற்ற செலவுக்கும் தனக்கு வசதியில்லை என்று கூறுகிறாள். தன் முனைப்பும் நாட்டமும் இல்லாமல் நண்பர்களுடன் கும்மாளமிடுவதிலேயே காலத்தை கழிக்கிறான் சிமோ. நண்பர்களில் மெளலத் முக்கியமானவன். நல்ல பணக்காரன். சிமோவிற்கு அவனே சதா செலவு செய்கிறான்.



அந்த ஊருக்கு மேற்கத்திய தேசத்திலிருந்து தனது அத்தையுடன் வந்து சேருகிறாள் லைலா. இளமையும் அழகும் கொண்ட தேவதையாக இருக்கிறாள்.



அவள் தெருவில் வலம் வரும் போதெல்லாம் இளைஞர்கள் ஒருமாதிரியாகத்தான் பார்க்கிறார்க்ள். ஏனென்றால் முந்தைய நாட்களில் அவளது அத்தையின் தொழில் அப்படி என்று கிசு கிசுக்கிறார்கள். இவளும் அப்படிதான் என்றும் எண்ணுகின்றனர்.



ஒரு நாள் சிமோ தனிமையில் பூங்கா ஒன்றில் அமர்ந்திருக்கும் போது அங்கே வருகிறாள் லைலா. அவனிடம் பேசவும் செய்கிறார்கள். பூங்கா ஊஞ்சலில் ஆடும் போது அவள் அழகை ரசிக்கவும் அதற்கு காசு கொடுக்கவும் வேண்டுமென்கிறாள். சிமோ சம்மதிக்கிறான்.



சிறிது நேரம் உரையாடிவிட்டு பட்டாம்பூச்சியாய் பறக்கிறாள். காமம் பற்றி லைலா அதிகம் பேசுகிறாள். பல வித உணர்ச்சிகளை குறிப்பிட்டு தனது முந்தைய அனுபவங்களையெல்லாம் சொல்லவே குழம்பி போகிறான். சிமோ. ஆனாலும் அவள் நினைவுகள் அவனை சுற்றிய வண்ணமே இருக்கிறது.




நண்பர்களிடம் அதிக நேரம் செலவிட முடியாது தவிக்கிறான். ஆனால் நண்பர்களோ அவளை அடைந்தே தீர வேண்டும் என்று சபதம் செய்கின்றனர்.



அதிலும் சிமோவின் நண்பன் மெளலத்திற்கு அவள் மீதுள்ள அதீத இச்சை அதிகரித்து கொண்டேயிருக்கிறது. அவள் தெருவில் வரும் போதெல்லாம் லைலாவை சீண்டி கொண்டே இருக்கிறான். பல வித கொச்சை கேள்விகளையும் தைரியமாக கேட்டு கொண்டேயிருக்கிறான். கூடவே இருக்கும் சிமோவிற்கு இது கொஞ்சமும் பிடிக்கவில்லை. லைலா வெறுப்பாக விலகி ஒடுகிறாள். அவளை சீண்டுவதை சிமோ துளியும் விரும்புவதில்லை. அவள் மீது அவனுக்கு அன்பே அதிகமாகிறது. சிமோவிற்கும் மெளலத்திற்கும் மோதல் முற்றுகிறது. நண்பர்களை சந்திப்பதையும் தவிர்க்கிறான்.



சிமோவும் லைலாவும் அடிக்கடி சந்திக்கின்ற்னர். சந்திக்கும் போதெல்லாம் லைலா காமம் பற்றியே அதிகம் பேசுகிறாள். அதெல்லாம் உண்மையா இருக்குமோ என்று சிமோ அஞ்சுகிறான். சிமோ லைலாவை காதலிப்பதாக எண்ணி தாய் சிமோவை கண்டிக்கிறாள். அது மாதிரி பெண் உனக்கு தேவையா..?? அவளை சந்திக்க வேண்டாமென்றும் வேலைக்கு போகவும் வற்புறுத்தி இனி தன்னால் ஒரு பைசா கூட கொடுக்க் இயலாதென்றும் கூறுகிறாள். நண்பர்களிடம் பழகுவதை நிறுத்தியதாலும் தாயிடம் காசு கேட்க மனமில்லாததாலும் ரத்த தானம் செய்து செலவிற்கு பணத்தை ஏற்பாடு செய்கிறான்.



ஒவ்வொரு வார விடுமுறையிலும் ஒரு கார் வந்து லைலாவை ஏற்றி செல்கிறது. அதை மறைந்திருந்து பார்க்கிறான் சிமோ. அவன் குழப்பமும் கவலையும் அதிகரிக்கிறது. அவளிடம் தொடர்ந்து பழகுவதா வேண்டாமா என்று சிமோவின் மனம் துடிக்கிறது.



இதற்கிடையே ஒரு நாள் சிமோவும் லைலாவும் பேசுவதை ஒட்டு கேட்கிறான் மெளலத். அவளது பேச்சு அவள் அப்படி பட்ட பெண் தான் என்று உறுதியாகிவிட்டதாகவும் ஆனால் சிமோ மட்டும் அவளை அடைந்து விட்டதாகவும் நண்பர்களிடம் கூறுகிறான்.



சிமோ லைலா சந்திப்பில் ஒரு நாள் எப்போதும் காமம் பற்றி தான் பேசுவியா என்று லைலாவை கோபித்து கொள்கிறான் சிமோ. அழுத படியே வீடு நோக்கி ஒடுகிறாள் லைலா. அவளை சந்திப்பதையும் தவிர்க்கிறான்.



அன்று இரவு நண்பர்க்ள் வழக்கமாக சந்திக்கும் கிளப்புக்கு செல்கிறான். அடித்து நொறுக்கப்பட்ட கிளப் அலங்கோலமாக காட்சியளிக்கிறது. ஆனால் நண்பர்கள் எவருமில்லை. கிளப் முதலாளி மெளலத்தும் மற்ற நண்பர்க்ளும் நன்றாக குடித்து விட்டு லைலா வீட்டிற்கு செல்ல முயன்றதாகவும் அதை தடுத்ததால் இப்படி அடித்து நொறுக்கி தன்னையும் தாக்கியதாகவும் கூறுகிறான்.



பதைத்து போய் லைலா வீடு நோக்கி ஒடுகிறான் சிமோ. சிமோவின் நண்பர்கள் லைலாவின் அத்தையை கட்டி போட்டு விட்டு அடுத்த கட்டத்திற்கு ஆயுத்தமாகும் வேளையில் லைலாவை காப்பாற்ற போராடுகிறான் சிமோ.



அதற்குள் போலிஸ் வந்து விடவே அனைவரையும் கைது செய்து சிறையில் அடைத்து விடுகின்றனர். சிமோ தான் மட்டும் காப்பாற்ற வந்ததாக கதறுகிறான். ஆனால் போலீஸ் நம்ப மறுக்கிறது.



ஒரு சில நாட்கள் சிறையிலிருந்ததும் சிமோ மட்டும் குற்றவாளியல்ல என்று அறியப்பட்டு விடுதலையாகிறான். லைலாவை காண ஓடுகிறான். ஆனால் வீடு காலி செய்ய பட்டதாகவும் அவள் அத்தையுடன் இரண்டு நாட்கள் முன் போலந்து நாட்டிற்கு சென்று விட்டதாகவும் அறிகிறான். சொல்ல முடியாத வேதனையில் தவிக்கிறான் சிமோ.



வீட்டில் கிடந்தை பழைய குறிப்பேடுகளில் லைலா அவனிடம் சொல்லியதெல்லாம் வெறும் போலிப்புனைவுகள் என்று அறிகிறான். அவனை சீண்டி விளையாடவே அவ்வாறெல்லாம் செய்த்தாக குறிப்பெழுதியிருக்கிறாள் லைலா. அது மட்டுமல்லாது வார விடுமுறையில் பக்கத்து ஊரில் ஒரு குழந்தையையும் பார்த்து கொள்ள (baby sitting) வேலைக்கு அவள் சென்றதாக விஷயம் கேள்வி படுகிறான். சிமோவிற்கு வேதனையும் அழுகையும் அதிகரிக்கிறது.



லைலாவின் இருப்பிடம் பற்றி அறிய போலீஸ்காரரின் உதவியை நாடுகிறான். கடுமையாக முடியாது என்று முதலில் மறுத்தாலும் சிமோவின் வருத்தம் அவரை சற்று உருக வைக்கிறது. அட்ரெஸ் எல்லாம் கொடுக்க மாட்டேன். வேண்டுமென்றால் போன் செய்து தருகிறேன். லைலா விரும்பினால் அவளே உனக்கு முகவரி கொடுக்கட்டும் என்கிறார். அது போதும் என்று மகிழ்ச்சியோடு சம்மதிக்கிறான் சிமோ.



சிமோவால் லைலாவிடம் பேச முடியவில்லை. அவனது மனவெழுச்சி ஒன்று அதிக சந்தோஷமாகவும் அதே நேரம் துக்கமாகவும் இருக்கிறது.



I love you so much என்று முதல் முறையாக தன் காதலை சொல்கிறான் சிமோ. I know என்று ஆமோதிக்கிறாள் லைலா. போலிஸ்காரருக்கு நன்றி தெரிவித்து விட்டு செல்கிறான்.




லைலாவை பினனணியாக கொண்டு ஒரு அற்புத சிறுகதையை இரண்டே நாட்களில் எழுதி டீச்சரிடம் கொண்டு போய் மகிழ்ச்சியுடன் கொடுக்கிறான் சிமோ. டீச்சரும் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து பயிற்ச்சி பட்டறையிடமிருந்து ஸ்காலர்ஷிப் ஒப்புதல் கடிதத்தையும் கொண்டு வந்து கொடுக்கிறாள்.



பாரிஸிக்கு பயணமாகவும் வேளையில் பயிற்ச்சி முடிந்ததும் லைலாவை சந்திக்க போவதாக தாயிடம் கூறுகிறான். தாயும் சம்மதித்து ஆசியோடு அனுப்பி வைக்கிறாள்.



லைலாவால் தான் தன் வாழ்க்கை மாறியதாகவும் அவளை பற்றியே எண்ணி கொண்டு பயணிக்கிறான். லைலாவும் சிமோவால் தன் வாழ்க்கையும் மாறியதாக எண்ணி சிமோவிற்காக காத்திருக்கிறாள்.


2004ல் சிமோ என்ற பெயரில் பிரெஞ்சு நாவலாக எழுதிய Ziad Doueiri என்பவரே இத்திரைப்படத்தையும் எழுதி இயக்கியிருக்கிறார்.




அன்பாக பழக முயன்றது இயற்கைதான். ஆனால் தேவையில்லாத பொய்கள் ஏற்படுத்தும் சிக்கல்களை கொண்டு கதையை நகர்த்தியுள்ளார் இயக்குநர். வயதின் ஏக்கத்தால் காமம் பற்றி லைலா நிறைய பேசினாலும் அது ஆபாசமாக தெரியவில்லை. ஒரே வயதுடைய சிமோவிற்கும் குழப்பங்கள் வருவதும் தவிர்க முடியாததுதான்.



லைலாவாக நடிக்கும் Vahina Giocante கொள்ளை அழகு. அவளது வயதுகேற்ற இயல்பான ஆசைகள், இச்சைகள், கனவுகள் இவையே திரைப்படத்டை முன் நகர்த்துகினறன.பெரும்பாலும் குளாசப் ஷாட்டுகளால் இருவரின் நடிப்பையும் இயல்பாக சித்தரிக்கிறார் இயக்குநர். கதையின் நேர்த்தியாலும் காதல் பருவ வயதினாலும் சிமோ லைலா நடிப்பு அருமையாக மிளிர்கிறது. அதனால் தான் இருவருக்கும் சிறந்த நடிப்பிற்கான விருதுகளையும் பெற்று தந்துள்ளது.



பிரெஞ்சு சினிமாக்கள் எப்போதும் உலகெங்கிலும் ஒரு புதிய அலையை ஏற்படுத்தி கொண்டேயிருக்கிறது. இந்த திரைப்படமும் மான்ஸ், சூடான் திரைப்பட விழாக்களில் பங்கு பெற்றதுடன் பல பரிசுகளையும் வென்றுள்ளது.


சிமோவும் லைலாவும் ஒருவர் மீது ஒருவர் அதீத அன்பு செலுத்தினாலும் கடைசி வரை இருவரும் காதலை சொல்வதில்லை. இதுவும் பார்த்து மகிழ ஒரு வித்தியாசமான காதல் கதைதான்.



Lila Says = Erotic but not vulgar



சந்தர்ப்பம் கிடைத்தால் கண்டிப்பாக பாருங்கள்.



உடனே பார்க்க வழக்கப்படி டிரைலர்



தமது முதல் காதலை யாராலும் மறக்க இயலாது. மனதின் ஆழத்தில் எங்காவது யாருக்கும் தெரியாமல் ஒளிந்து கொண்டு உட்கிரக்கவும் முடியாமல் வெளியில் சொல்லவும் முடியாமல் நிழலாடி கொண்டுதானிருக்கும். அப்படிப்பட்ட பழைய நினைவுகளை கிளறி விட லைலாவின் காதல் கதை ஒரு காதலர் தின ஸ்பெஷல் என்று நான் சொல்லணுமா..?? நீங்க பின்னூட்டத்தில் சொல்லுங்க.





Viva Cuba









அப்பாவும் அம்மாவும்
தராத அரவணைப்பை
பொம்மைக்கு தந்தபடி
உறங்கிக்கொண்டிருந்தது குழந்தை.
கனவில் தோன்றிய கடவுள்கள்
அச்சிறு குழந்தையின் அரவணைப்பை
வரமாய் கேட்டனர்.
வரிசையில் நின்றிருந்த
கடவுள்களுக்கு உறக்கப்புன்னகையை
தந்துவிட்டு பொம்மையை
இறுக்கி அணைத்துக்கொண்டதது.
பொம்மையாதலின் வழிமுறைகள்
அறியாமல் விழித்தபடிநின்றனர்
கடவுள்கள்.


-நிலாரசிகன்.



குழந்தைகளின் உலகம் பரந்து விரிந்து கிடக்கிறது. அது தனித்துவமானது. எல்லையற்ற பாதையில் முடிவில்லாத பயணமாய் செல்ல அவர்களை தூண்டுகிறது. நட்பும் சந்தோஷமும் மட்டுமே அவர்களின் ஆசை, விருப்பம் மகிழ்ச்சி.


அப்படி எல்லையில்லா பேரானந்தத்தை விரும்பிய இரண்டு பாலினம் புரியாத பால்ய நட்பு சிறார்களின் கதையே விவா கியூபா என்றும் ஸ்பானிஷ் திரைப்படம்.


மாலு உயர்குடியில் பிற்ந்த செல்வந்தரான சிறுமி. அவளது தந்தையோ அவளது குடும்பத்தை விட்டு விலகி வெகுதூரம் வாழ்ந்து வருபவன். தாயுடனும் தனது முதிர்ந்த பாட்டியுடன் வசித்து வருகிறாள்.


மாலுவுக்கு சம வயதுடைய ஜார்ஜி எதிர் வீட்டில் பெற்றோருடன் வசிக்கும் சிறுவன். கம்யூனிச சித்தாந்த கொள்கைகளுடைய குடும்பத்தில் பிறந்தவன்.


இருவரும் ஒரே பள்ளியில் படிக்கும் இணை பிரியா நண்பர்கள். துள்ளி திரிவதும் சிறு சிறு சண்டைகளுடன் சதா விளையாடி மகிழ்வதும் ஒருவருக்கொருவர் உதவி செய்வதுமாய் பொழுதுகள் போகின்றது. இது இரு வீட்டாருக்கும் பிடிப்பதில்லை. மாலுவை அவள் தாய் ஆண்பிள்ளைகளுடன் விளையாடுவது தவறென்றும் பெண் குழந்தைகள் வீட்டின் உள்ளேயே தான் விளையாட வேண்டும் என்றும் நச்சரித்து கொண்டே இருக்கிறாள். இதனால் மாலுவுக்கோ தாயின் மீது அளவற்ற கோவம். ஆனால் அவளின் ஒரே ஆறுதல் வயதான பாட்டி மட்டுமே.


இதே நிலைதான் ஜார்ஜிக்கும். ஜார்ஜியின் தந்தை மாலுவினுடனான நட்பை துண்டிக்க வேண்டுமென்றும் சக ஆண் நண்பர்களுடன் விளையாட அறிவுறுத்துகிறார். அப்பாவை கண்டாலே அவனுக்கு வேப்பங்காயாய் கசக்கிறது. மாலு & ஜார்ஜியாவின் நட்பால் இரு குடும்பமும் இந்தியா பாகிஸ்தானாய் முறைத்து கொள்கிறது.


நிலைமை இப்படி இருக்க மாலுவின் தாய் வேறொருவனை மணமுடிக்க எண்ணுகிறாள். ஜெர்மனியில் வசிக்கும் அவனிடம் சேர்ந்து வாழ விருப்பமும் தெரிவிக்கிறாள். இதற்காக சட்டப்படி மாலுவின் தந்தைக்கு அவர் கையெழுத்திட வேண்டி ஒப்புதல் படிவத்தையும் அனுப்பி வைக்கிறாள். மனமுடைந்து போகிறாள் மாலு.

ஒரு புதிய வாழ்க்கை வருகிறதென்றும் ஜெர்மனியில் சுகமாய் வாழலாம் என்று மாலுவை தேற்றுகிறாள் தாய். சோகத்திலும் சோகமாய் பாட்டியும் திடிரென்று மரணித்து விட சொல்லமுடியாத வேதனையுடன் இருக்கிறாள் மாலு. விளையாடவோ பாடத்திலோ விருப்பமின்றி இருப்பதை பார்த்து ஜார்ஜியாவும் மிகவும் வருத்தப்படுகிறான்.


தாயின் விருப்பத்தையும் இடம் பெயர்வது பற்றியும் மற்றும் அனைத்து விபரங்களையும் நண்பன் ஜார்ஜியாவிடம் அழுதபடியே சொல்கிறாள். தற்போதைய பள்ளி கூடத்தையோ ஜார்ஜியாவையோ பிரிய ஒரு போதும் இயலாது என்றும் வருந்துகிறாள். அவளை தேற்றுகிறான் ஜார்ஜியோ.


இதற்கு ஒரே வழி மாலுவின் தந்தையை சந்தித்து அவரை அந்த ஒப்புதல் படிவத்தில் கையெழுத்திடாமல் செய்தால் மட்டுமே அனைத்து பிரச்சினைகளையும் என்றும் இருவரும் தனியே கிளம்பி போய் அவரை சந்திக்கலாம் என்று முடிவும் செய்கின்றனர்.

இரவோடு இரவாக வேண்டிய துணிகளையும், ஊருக்கு செல்ல வரைப்படம் சேர்த்து வைத்த உண்டியலையும் எடுத்து கொண்டு பள்ளி செல்வது போல காலையில் கிளம்பி இருவரும் உற்சாகமாகவும் அதீத சந்தோஷத்துடனும் பயணத்தை தொடங்குகின்றனர்.

படகில் ஆரம்பித்த பயணம் கார், மோட்டர் சைக்கிள், மாட்டுவண்டி, இரயில் என்று சகலவித பாதைகளிலும் பயணிக்கிறது.

பசியும் சோர்வும் வாட்டுகிறது. தொலை தூர கிராமத்தில் பார்வையிழந்த பெண்ணொருத்தியின் வீட்டிலிருந்து ரொட்டியையும் பாலையும் திருட முற்பட அவள் நாயின் துணையோடு இருவரையும் விரட்டி பிடிக்க செய்வதறியாது திகைக்கின்றனர். அங்கிருந்து தப்பித்து ஒட இரவில் காட்டில் பேய் நடமாட்டம் இருப்பதாக வழி போக்கன் சொன்னதை நம்பி பயந்து ஜார்ஜியாவிற்கு கடுமையான காய்ச்சல்.

டாக்டரிடம் சென்று காண்பிக்க ஊர் மக்கள் உதவினாலும் ஊசிக்கு பயந்து ஜார்ஜியா ஒடுவதும் நகைச்சுவையாய் காட்சிகள்.


இதனிடையே இரு வீட்டாரும் போலிஸில் புகார் கொடுக்க இரு குடும்பமும் ஒத்துழைத்தால் மட்டுமே குழந்தைகளை மீட்க முடியும் என்கிறார் அதிகாரி. சண்டையிட்டு கொண்டிருந்த இருவரின் குடும்பம் சிறிது சிறிதாய் நட்பாகி ஒருவருகொருவர் ஆறுதலாய் இருந்து வர குழந்தைகள் இருவரும் ஒரு பக்கம் போலிஸ் துரத்திலில் இருந்தும் மறைந்து மறைந்து ஒடுவதும் பல புதிய மனிதர்களை சந்திப்பதுடன் ஒவ்வொரு சந்திப்பும் அவர்களுக்க் பல வித அனுபவத்தையும் புத்துணர்வையும் அளிக்கிறது.

ஒரிடத்தில் தவறுதலாய் விட்டு சென்ற ஜார்ஜியாவின் கைப்பையை வைத்து போலிஸ் அவர்களின் இருப்பிடம் தெரிவிக்க இரு குடும்பமும் குழந்தைகளை தேடி புறப்படுகின்றனர்.

கடைசியில் மலை குகைகளை ஆராய்ச்சி செய்யும் ஒருவனின் துணையோடு மாலுவின் தந்தையிருக்குமிடத்தை சென்றடைந்து விடுகின்றனர் மாலுவும் ஜார்ஜியாவும்.

அதற்கு முன் அங்கு வந்த் சேர்ந்த மாலுவின் தாயும் ஜார்ஜியாவின் பெற்றோர்களும் குழந்தைகளை கண்ட அனைவரும் முதலில் சந்தோஷத்திலும் பரவசத்தில் திளைத்தாலும் சிறிது நேரத்தில் யார் மீது குற்றம் என்று சண்டை பிடிக்க தொடங்கியவுடன் அருகே இருக்கும் கடற்கரையை பார்த்ததும் எதையும் பொருட்படுத்தாது அளவில்லா ஆனந்தத்துடன் விளையாட செல்கின்றனர் மாலுவும் ஜார்ஜியாவும்.

தூரத்தில் பெற்றோர்கள் சண்டையிட மணலில் குழந்தைகள் விளையாட அற்புத காட்சியாய் திரைப்படம் நிறைவு பெறுகிறது.


2005ல் வெளியான இத்திரைப்படம் பல சர்வதேச விழாக்களில் பங்கு பெற்றதுடன் 34 உலக விருதுகளை வாரி குவித்துள்ளது. 2005 கேன்ஸ் குழந்தைகள் சர்வதேச விழாவில் முதன் முதலில் பரிசு பெற்ற கியூபா திரைப்படம் என்ற பெருமையும் பெற்றது. இயல்பான நடிப்பும் அருமையான ஒளிபதிவும் கூடுதல் சிறப்பு.

வானொலியில் காணாமல் போனவர்களின் பற்றிய அறிவிப்பை கேட்டவுடன் ஜார்ஜியா பெண் வேடமிட்டு திரிவதும், வழி நெடுகிலும் ஒருவருக்கு ஒருவர் மாற்றி மாற்றி பொய்யுரைப்பதும் பிறகு மாட்டி கொண்டு முழிப்பதும் சிறு சிறு சண்டையிடுவதும் மீண்டும் நட்பாவதும் இயல்பான நகைச்சுவையுடன் நெகிழ வைக்கும் காட்சிகள்.






இத்திரைப்பட்த்தை எழுதி இயக்கியிருப்பவர் கியூபா திரைப்பட துறையில் மிகவும் போற்றதக்க Juan Carlos Cremata. கியூபா இனத்தவரான இவர் குழந்தைகளுக்கான தொலைகாட்சி நிகழ்ச்சிகளை பல ஆண்டுகள் இயக்கிய அனுபவம் பெற்றவர். இயக்குநர் மற்றும் எடிட்டிங் பயிற்ச்சி பள்ளியில் ஆசிரியராகவும் இருந்து பல மாணவர்களுக்கு பயிற்ச்சியும் அளித்துள்ளார்.


2001ல் இவரது முதல் திரைப்படம் Nada Mas வெளிவந்தது. தொடர்ந்து அற்புதமான திரைப்படங்களை இயக்கியும் பரிசுகளையும் வென்று வருகிறார். விமான பணியாளராக பணியாற்றிய இவரது தந்தை
1976 ம் ஆண்டு உலகையே உலுக்கிய கியூபா விமான வெடிகுண்டு விபத்தில் பலியானவர் என்ற சோகமும் உண்டு.



யாருக்கும் கிடைக்காத அதிர்ஷ்டம் தனக்கு கிடைத்ததாக Juan Carlos Cremata சொல்வது Viva Cuba திரைப்படத்தின் துணையியக்குனர் இவரது அம்மாவே என்பது தான்.


குழந்தைகளை பற்றிய இத்திரைப்படம் பார்பவர் அனைவருக்கும் தமது பாலர் பருவத்தை கிளர செய்யும் என்பதில் ஐயமில்லை. குழந்தைகளுடனும் குடுமபத்துடனும் பார்க்க வேண்டிய சிறந்த திரைப்படம்.



வழக்கப்படி உடனே பார்க்க டிரைலர் இங்கே




குழந்தைகள் குறித்த எந்தவித சிந்தனையில்லாமல் சென்னை போன்ற பெரு நகரங்களில் அவசர உலகம் ஒடிக்கொண்டு இருக்கிறது. பெரிய பெரிய புத்தகப்பைக்களுக்குள் அவர்கள் நசுங்கி கிடப்பதும் சதாராணமான நிகழ்வுகள்.
இன்று ஞாயிற்று கிழமைகளில் கூட தெருக்களில் விளையாடும் பிள்ளைகளை பார்க்க முடிவதில்லை.


நமது சிறு வயதில் நூற்றுகணக்கான விளையாட்டுகளில் உலகம் விரிந்து கிடந்ததை நினைத்து சந்தோஷப்படும் வேளையில் “தொலைக்காட்சி” பூதம் அந்த விளையாட்டுகளையெல்லாம் விழுங்கி விட்டதை நினைத்து வேதனை படாமல் இருக்க முடிவதில்லை.



Deck The Halls { Christmas Special }








Deck The Halls
(மீள் பதிவு)


கிறிஸ்மஸ் பண்டிகையை வித்தியாசமாக கொண்டாடுவதில் போட்டியும் பொறாமையும் கொண்ட இரு அண்டை வீட்டுகாரர்களின் பூசல்தான் நகைச்வை கலந்த குடுமப திரைப்படம் தான் Deck The Halls


100% பொழுது போக்கு மற்றும் நகைச்சுவைக்கு உத்திரவாதம்.


Steve தன் குடும்பத்தினருடன் கிறிஸ்மஸ் பண்டிகையை உற்சாகமாக கொண்டாட ஆயத்தமாகிறன். அப்போதுதான் அவன் பக்கத்துவீட்டிற்கு குடி வருகிறார்கள் Buddy Hall & family.


Buddy Hall ஒரு கார் விற்பனையாளன். மிக குறைந்த வருமானம். அவன் மனைவியோ எப்போதும் பணத்திற்காக அவனை நச்சரிக்கிறாள். அவனோ தான் எதாவது சாகசம் செய்து பெரிய புகழ் பெறவேண்டும் என நினைக்கிறான். அதனால் கிறிஸ்மஸ் பண்டிகையின் போது விளக்குகளால் வீட்டை அலங்கரித்து அது வானுலகத்திலிருந்து பார்த்தாலும் தெரியும் படி செய்ய பல முயற்சிகளை மேற் கொள்கிறான்.



ஆனால் பல ஆண்டுகளாய் வாழும் அவர்கள் குடியிருப்பு பகுதியில் Steve குடும்பமே கிறிஸ்மஸ் பண்டிகையை விமர்சனையாக கொண்டாடி புகழ் பெற்று வருகின்றனர். இந்த தருணத்தில் புதிதாக குடி வந்த Buddy யின் முயற்சிகளை கெடுக்க Steve செய்யும் குளறுபடிகளும் அதை Buddy எப்படி முறியடிக்கிறான் என்பதே மீதிக்கதை.



என்னதான் அவர்கள் இருவர்ம் போட்டி பொறாமையுடன் இருந்தாலும் குழந்தைகளும் இரு மனைவிகளும் இதை விரும்புவதில்லை. அவர்க்ள் ஒரே குடும்ப்மாக இருக்க வேண்டும் என எவ்வளவோ முயற்ச்சிகின்றனர்.



ஆனால் Buddy ,Steve இருவரும் அவர்களின் பேச்சை கேட்க மறுப்பதால் இரு மனைவிகளும் குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறி கிறிஸ்மஸ் பண்டிகையை விடுதியில் கொண்டாட போவதாய் சொல்லி விட்டு போய் விடுகின்றன்ர்.




இறுதியில் Buddy Hall தான் நினைத்ததை நிறைவேற்றி எல்லோரும் ஒன்று சேர்ந்து கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாட சுபம்.


குறிப்பாக கிறிஸ்மஸ் பாடல்கள் குறும்பாடல்களாக வந்து போவது இனிமை.நவம்பர் 2006ல் வெளிவந்த திரைப்படம். அந்த வருடத்தில் இந்த கிறிஸ்மஸ் பாடல்கள் மிக பிரபலம். நிஜமாகவே எவ்வளவு உவகையுடன் உற்சாகத்துடன் அமெரிக்கர்கள் அந்த ஆண்டு கிறிஸ்மஸ் கொண்டாடி இருப்பார்கள் என நினைக்கவே மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது.


குட்டையான உருவமும், குறுகுறுத்த கண்களும் வித்தியாசமான குரலும் கொண்ட Buddy Hall பாத்திரத்தில் நடித்து கலக்கியிருப்பவர் Danny De Vitto. அத்தனை இயல்பான நடிப்பும் நகைச்சுவையும் சூப்பர்.





64 வயதான DANNY DeVITO அமெரிக்காவில் முறைப்படநடிப்பு கலையை பயின்றவர். மிக பிரபலான பல தொலைகாட்சி தொடர்களில் நடித்து மக்களுடன் ஒன்றாக கலந்தவர். 1978 முதல் Danny De Vitto பல அவார்டுகளை அள்ளி குவித்தவர். 2001 ல் ஆஸ்கர் அவார்டுக்கும் பரிந்துரைக்கப்பட்டவர்.


ஒரு சமயத்தில் மோசமான நடிகர் என்று விமர்சிக்கபட்டாலும் தொலைகாட்சியிலும் திரைப்படங்களிலும் 40 வருடங்களாக தொடர்ந்து நடித்து வரும் அமெரிக்க மக்களுக்கு நிஜமாகவே இவர் அண்டை வீட்டுகாரர் போல தானாம். குழந்தைகளுக்கும் குடும்பத்திற்கும் ஏற்ற நல்ல நகைச்சுவை திரைப்படம்.



சந்தர்பம் கிடைத்தால் நிச்சயம் பாருங்கள்.



உடனே பார்க்க டிரைலர் இங்கே


அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்

செக்ஸ் & லூசியா










Sex and Lucia { Spanish }


இது 2001ம் ஆண்டு வெளியான் ஒரு ஸ்பானிஷ் மொழி திரைப்படம். சென்சார் இல்லாத திரைப்படம் என்று முதலில் எச்சரிக்கிறேன். ஏன் என்று கடைசியில் டிஸ்கியில் சொல்கிறேன்.



குழந்தைகளுடன் கண்டிப்பாக பார்க்க இயலாது.




லூசியா ஸ்பெயினில் ஒரு சிறிய ஹோட்டலில் பணி புரிகிறாள். திடீரென்று தொலை பேசி அழைப்பு. அவளது காதலனும் எழுத்தாளருமான லோரென்ஸோ கூப்பிடுகிறான். அவனுடன் சரியாக பேச மறுக்கிறாள். தொலைபேசியையும் துண்டிக்கிறாள்.



வீடு சென்று பார்த்தால் அவனை காணவில்லை. தன்னை தேட வேண்டாம் என சீட்டு எழுதி வைத்து விட்டு எங்கோ சென்று விடுவதாய் சொல்லியிருகிறான். போலிஸிடமிருந்து போன்... அவளது காதலன் லோரென்ஸோ கார் விபத்தில் இறந்திருக்ககூடும் என்ற செய்தியும் வரவே நிலை குலைந்து போகிறாள் லூசியா.



அவனை இழந்த துக்கத்துடன் அவன் வெகு நாட்களுக்கு முன்பு அவன் எழுதிய நாவல் உருவாக காரணமாக கூறிய அந்த தீவிற்கு பயணமாகிறாள். இயற்கை எழில் நிறைந்த அதிக மனித நடமாட்டம் இல்லாத தீவில் ஒருவனை சந்திக்கிறாள். அங்கு சில நாள் தங்கும்படியும் அவளுக்கு வேண்டிய உதவிகள் செய்வதாய் கூறுகிறான் அவன்.



தங்கவும் சம்மதிக்கிறாள். அவனிடம் லோரென்ஸோவை சந்தித்த முதல் தருணமும் அவனிடம் பழகிய நாட்களில் காமக்கூடலில் திளைத்த இரவுகளும் காட்சிகளாய் மன திரையில் ஒட அனைத்தையும் கூறுகிறாள்.



காட்சிகள் பின்னோக்கி பயணிக்கிறது.



அதே தீவில் லோரென்ஸோ ஒரு பெயர் தெரியாத பெண்ணுடன் ஆறு வருடங்களுக்கு உறவு கொண்டுள்ளான். அவளும் கர்ப்பமாகி ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்து வளர்ந்து வருவதாய் லோரென்ஸோவின் நண்பன் கூறுகிறான்.




அந்த குழந்தையை வளர்க்க ஒரு பணிப்பெண்ணை நியமிக்கிறாள். அவளை ஒரு நாள் எதேச்சையாக பூங்காவில் சந்திக்கிறான் லோரென்ஸோ. அந்த பணிப்பெண் லோரென்ஸோவை விரும்புகிறாள். அவனுடன் உறவு கொள்ளவும் துடிக்கிறாள். தனது மகளை வளர்த்து வரும் பணிப்பெண் என்று தெரியாமலே அவளை நிராகரிக்கிறான் லோரென்ஸோ.





பின்னர் ஒரு நாள் லோரென்ஸோ
உயிரோடு இருப்பதாக நண்பன் மூலம் லூசியாவிற்கு மகிழ்ச்சியான செய்தி வருகிறது. லூசியா லோரென்ஸோ இணைந்தார்களா..? அந்த பெண்ணும் சிறுமியும் என்ன ஆனார்கள் என்பதே மீதிக்கதை.



இயற்கை எழில் கொஞ்சும் கடற்கரை, வெண்மேகங்கள், குளிர்ச்சியான நிலவொளி அந்த இனிமையான தருணங்களில் உடல் காமத்தின் சுழல்வெளி அது உருவாக்கும் சூறாவளி என்று ஒன்று கொன்று தொடர்பில்லாமல் ஆரம்பித்து ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு இடத்தில் கோர்த்து ஒரு அற்புத திரைக்கதை வடிவமைத்து இயக்கியிருக்கிறார் Julio Medem




இயல்பான விருப்பங்களில் தொடங்கி காமத்தில் அரங்கேற்றினாலும் முடிவில் உடலை கடந்து ஒரு காதல் கதையாய் முடித்திருப்பது மிகவும் அருமை.



காமத்தின் நுட்பங்கள் பற்றியும் அதை தூண்டவும்
தணிக்கவும் லூசியா செய்யும் காட்சிகள் வார்த்தைகளில் அடங்காதவை. உடலை பற்றிய ஒரு புது அர்த்ததை தனது பாத்திர படைப்பான லூசியா மூலம் சொல்கிறார் இயக்குநர் Julio Medem.









ஸ்பானிஷ் திரைபடங்களில் மிக முக்கியமான இயக்குநர் Julio Medem. சிறு வயது முதல் திரைப்ப்டத்தின் தீராக்காதல் கொண்டவர். பள்ளி பருவத்திலேயே தனது தந்தையிடம் பரிசாக மூவிங் கேமிரா வேண்டும் என்று நச்சரித்து குறும்படங்களை எடுத்தவர். இதுவரை பல திரைப்படங்களுக்கு உலக அளவில் பல விருதுகளை வென்றவர். இவரது முந்தைய படமான LOVERS OF THE ARCTIC CIRCLE மிகவும் முக்கியமன திரைப்ப்டம்.




இந்த படம் திரைப்டத்திற்காக ஒரு படப்பிடிப்பில் சென்ற தீவில் தான் Sex and Lucia திரைக்கதை அவருடைய மனதில் உருவானதாம்.பின்னர் 18 மாதங்களில் 8 திரைக்கதைகளை எழுதி முடிவில் இந்த நாஸ்டால்ஜிக் வகை திரைக்கதையே பொருந்தும் என்று தீர்மானித்தாராம். நடிக்க பல பேரை பார்த்தும் எவரும் அவர் மனதிற்கு பொருந்தாமல் கடைசியில் லூசியா பாத்திரத்திற்கு Paz Vega வை தீர்மானித்திருக்கிறார்.







Paz Vega ஸ்பானிஷ் தொலைக்காட்சி சீரியல் நடிகை. ஆனால் நடிப்பை முறைப்படி நடிப்பு பள்ளியில் பயின்றவர். பல தொலைகாட்சி தொடர்களில் நடித்து அனுபவம் பெற்றவர். இத்திரைப்பட அனுபவம் பற்றி "What I liked the most about Lucia how pretty, positive and courageous she was. I would like to have some of that" என்று சொல்கிறார். இத்திரைபடத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதையும் பெற்றுள்ளார்.



பனிரெண்டு ஸ்பானிஷ் கோயா விருதுகளையும் பல உலக திரைப்பட விழாக்களிலும் பங்கு பெற்றதுடன் சூடான், டோரெண்டோ விருதுகளையும் அள்ளிய திரைப்படம்.



சந்தர்ப்பம் கிடைத்தால் நிச்சயம் பாருங்கள்.




உட்னே பார்க்க டிரைலர் இங்கே




டிஸ்கி: Why Strictly 18 + ..? இங்கே கிளிக்குங்க


The Circle











வாழ்வை நமக்கு மிக நெருக்கமாகக் காட்டுகின்றது சினிமா. அதனால் தான் அதன் மேல் ஒரு தீரா மோகம் நம்மை எப்போதும் ஆட்டி படைக்கிறது.


நம்மை திரையில் பார்ப்பது போன்ற உணர்வுகளால் அடையும் மகிழ்ச்சிக்கு அளவில்லை. அதனால் தான் ஆனால் உலக சினிமாவிலிருந்து ஈரானிய சினிமா எப்போதும் தனித்தே நிற்கின்றது.
அனைத்து விதமான சினிமா வகை மாதிரிகளை விடவும் ஈரானிய சினிமாவில் வாழ்வும் சமூக பொறுப்பும் எப்போதும் பனித்துளியைப் போல் பதிவு செய்யப்படுகின்றது. அதனால் தான் மிக குறுகிய காலத்தில் உலகம் முழுவது ஒரு சொல்ல முடியாத ஈர்ப்பையும் தன்னகத்தே கொண்டு உயர்ந்து நிற்கிறது.


அப்படி பெண்களின் வாழ்வியலை மையமாக கொண்ட Jafar Panahi யின் மற்றொருமொரு அதி உன்னத படைப்பு The Circle. ஆனால் மிக கடுமையான தணிக்கை முறை உள்ள ஈரானியில் தடை செய்யப்பட்ட இந்த திரைப்படம் 2000ம் ஆண்டு வெளிவந்தது. மொழி பெர்சியன்.


மருத்துவமனையில் பிரசவ வார்டில் சொல்மாஸ் என்ற நடுத்தர வயது பெண்மணியை அழைத்து அவளுடைய மகளுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்திருபதாக கூறுகிறாள் செவிலி. மனமுடைந்து போகிறாள் சொல்மாஸ். மகன் பிறக்காவிட்டால் தனது மகளை விவாகரத்து செய்ய நேரிடும் என்று மருமகனின் பெற்றோர் சொல்லியிருப்பதை செவிலியிடம் கூறுகிறாள். தனது இன்னொரு மகளை கூப்பிட்டு குழந்தை பிறந்த விஷயத்தை அனைவருக்கும் தெரிவிக்க சொல்கிறாள்.


தொலைபேசியில் தகவல சொல்ல நேரும் போது அங்கு மூன்று பெண்களை காண்கிறாள். அவர்கள் பேசுவதிலிருந்து அவர்கள் மூவரும் சிறையிலிருந்து சில நாட்கள் முன் தான் வெளியே வந்திருப்பதையும் அறிகிறாள். அவர்கள் மீண்டும் ஊருக்கு செல்ல பணம் இல்லாமல் தவிக்கின்றனர். சில நகைகள் விற்று ஊர் செல்லவும் முயலும் போது ஒருத்தி போலிசாரால் கைது செய்யப்படுகிறாள்.
மற்ற இருவரான எரிசோவும் நர்கீஸும் பயந்து ஒடி விடுகின்றனர். ஒரு விபசார புரோக்கர் மூலம் சிறிது பணம் சம்பாதித்து எரிசோவை ஊருக்கு அனுப்ப முயன்று பணத்தையும் தந்து விட்டு ஊருக்குள் போய் விடுகிறாள்.


எரிசோ விற்கு ஊருக்கு செல்ல முற்படும் போது பெண்கள் தனியே பயணிக்க கூடாதென்றும் அப்படி போவதென்றால் தகுந்த பத்திரங்கள் வேண்டுமென்று கூறகிறார் நிலைய அதிகாரி. தான் மீண்டும் கைது செய்யப்படுவோம் என்று அஞ்சி நடுங்குகிறாள் எரிசோ.



சொல்ல முடியாத வேதனையுடன் சுற்றி திரிகிறாள். அப்போது சிறையிலிருந்து அன்று தான் வெளியான பாரி என்பவளை சந்திக்கிறாள். பாரி திருமணமாகாமல் கர்ப்பமானவள். அதற்கு காரணமானவனுக்கு மரண தண்டளை விதிக்கப்ப்ட்டு நிறைவேற்றப்பட்டும் விட்டது. சிறையிலிருந்து விடுதலையானவள் எங்கு போவாள்...??


ஆனால் சிறையிலிருந்து வெளி வந்த அவளை வீட்டின் உள்ளே கூட சேர்க்காமல் அடித்து விரட்டுகிறான் அவளின் தந்தை. அவளது சகோதர்களை பார்க்க கூட அனுமதியளிக்க மறுக்கிறார் அவளின் தந்தை. உயிர் தப்பித்தால் போதும் என்று வீட்டை விட்டு ஒடி வந்து விடுகிறாள்.


தனது சிறைத்தோழியான எல்ஹாம் என்பவளை சந்தித்து கருக்கலைப்பு செய்ய உதவுமாறு கேட்கிறாள். ஆனால் அவளோ தான் சிறையில் இருந்ததும் கடந்த கால வாழ்வும் தனது தனது மருத்துவனான கணவனுக்கு தெரியாதென்றும் அவளால் எந்த உதவியும் செய்ய இயலாத நிலைமையும் விவரிக்கிறாள்.


மீண்டும் வேறு எங்காவது சென்று பிழைக்க வழி தேடும் நேரத்தில் ஒரு பெண்மணி தனது மூன்று வயது குழந்தையை ரோட்டிலே தனியே விட்டு விட்டு ஒட முயற்ச்சி செய்வதை பார்க்கிறாள்.
அவளை விசாரித்த போது அவளது விதவையென்றும் வறுமை அவளை வாட்டுவதால் குழந்தயை விட்டு சென்றால் யாராவது எடுத்து சென்று வளர்ப்பார்கள் என்று நம்புவதாய் கூறுகிறாள்.



ஏற்கனவே மூன்று முறை விட்டு சென்றதும் ஆனால் அது நிறைவேறவில்லை என்றும் வருத்ததுடன் கூறுகிறாள். அந்த நேரம் போலிஸ் வந்து குழந்தையை தூக்கி செல்லவே தெருவிலேயே சுற்றி திரிகிறாள் அந்த பெண். விபச்சாரி என்று கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்படுகிறாள்.
சிறிது நேரத்தில் வேறு ஒரு பெண்ணும் விபச்சாரம் செய்ததற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறாள். இரும்பு சுவர்களாலான வட்ட வடிவ சிறையில் உள்ளே நுழைநததும் திரையில் முன்னர் பார்த்த பெண்களும் இருக்கிறார்கள்..


கனமான வாயில்களுக்கு வெளியே காவலாளியிடம் சொல்மாஸ் அங்கு இருக்கிறாளா..?? என்று தொலைபேசியில் கேட்கிறார் அதிகாரி. அவள் மற்றொரு பிரிவில் இருப்பதாக கூறுகிறான் காவலாளி. முதல் காட்சியில் ஆரம்பித்த புள்ளியிலிருந்து இத்துடன் வட்டம் நிறைவடைவதாய் திரைப்படமும் நிறைவு பெறுகிறது.




திரைப்படத்தை ஒரு முழுநீள கதையாக சொல்லாமல் தனி தனி காட்சிகளாக சொல்லி ஒரு வட்டமாக முடிக்கிறார் இயக்குநர். மிகவும் குறைந்த கதாபாத்திரங்கள். ஐந்து பெண்களை மையப்படுத்திய சில காட்சிகள் நிறைவு பெறாமலும் நம் எண்ணத்திற்கு விட்டு விடுவதும் சிறப்பு. ஒவ்வொர் கதையும் பெண்களின் வாழ்வியலில் முற்று பெறாத துயங்களை போல முற்று பெற்றதாக இல்லை.


அது தவிர சில காட்சிகள் யூகிக்க தக்க குறீடுகளால் நிரம்பியுள்ளது தனிச்சிறப்பு.


சிறு பெண் குழந்தையை விட்டு விட்டு தாய் ஒட முற்படும் போது மணவிழாவில் ஒரு பெண் சிரித்து மகிழ்வதாய் அமைத்திருப்பதும் பேருந்து நிலையத்திலும் மருத்துவம்னைகளிலும் பெரிய ஹால்களில் வட்ட வடிவ சித்திரங்கள் வரையப்பட்டுள்ளது பெண் ஒரு வட்டத்தில் எப்போதும் அடைக்கப்பட்ட்வள் என்பதை சொல்லாமல் சொல்கிறார் இயக்குநர்.

ஈரானில் பெண்களுக்கு எதிரான கடுமையான சட்டங்களும் வன் கொடுமைகளையும் சித்தரிப்பதால் தானோ அங்கு தடை செய்யப்பட்டுள்ளது..



சிங்கப்பூர், உருகுவே உட்பட பத்திற்கும் மேற்பட்ட உலக திரைப்பட விழாக்களில் பரிசையும் பாராட்டையும் பெற்றதுடன் வெனிஸ் திரைப்பட விழாவில் தங்க சிங்கம் விருதையும் வென்றது.


சந்தர்ப்பம் கிடைத்தால் பார்க்க வேண்டிய திரைப்படம்.




உடனே பார்க்க டிரைலர் இங்கே





இவரது மற்றொரு படைப்பான The White Baloon

சம்சாரா












மூன்று வருடம் மூன்று மாதம் மூன்று நாட்கள் குகையின் உள்ளேயே கடும் தவம் புரிந்து வரும் தாஷிவை அழைத்து செல்ல மடாலயத்தின் குருமார்கள் வருகின்றனர்.



பாறை மீது எழுதியுள்ள 'ஒரு சொட்டு நீரை காய்ந்து போகாமல் எப்படி தடுக்க முடியும்?' என்ற வாக்கியத்தை படித்து யோசித்து கொண்டே தன் துறவற மடாலயத்திற்கு திரும்புகிறான் தாஷி.. ஐந்து வயது முதல் பெண் பார்வையும் வாசனையும் இல்லாத கடும் துறவறம்.



தாஷிவை லாமாக்க அவனது குருமார்கள் செய்யும் ஏற்பாடுகள் ஒருபுறமிருக்க
தாஷிவுக்கு கடுமையான தடுமாற்றம் மறுபுறம். மீண்டும் துறவறமா..?? என்ன சாதித்தோம் இந்த துறவறத்தில். குழப்பி போகிறான்.



அறுவடை காலத்தில் பயிர்களையும் விவசாயிகளையும் ஆசிர்வதிக்க போன இடத்தில் பேமாவை பார்க்கிறான். சந்திக்கிறான். மனம் இழக்கிறான். மீண்டும் திரும்பி வந்ததும் மடலாயத்தில் அவனுக்கு இருப்பு கொள்ளவில்லை. ஆண்மையையும் அடக்க முடியவில்லை. பேமைவை தேடி செல்ல முடிவும் எடுக்கிறான்.


பேமா ஏற்கனவே குடும்ப முறைப்பையன் ஒருவனுக்கு நிச்சயிக்க பட்டவள். துறவறத்தை துறந்து சாதாரண உடையில் பார்த்ததும் கிராமத்தினருக்கு அதிர்ச்சியும் ஆச்சரியும் கூடுகிறது.



பேமாவும் தாஷியை விரும்புகிறாள். புல் வெளியில் இயற்கையோடு இருவரும் கலக்க முறைப்பையன் பார்த்தும் விட விட்டும் கொடுக்கிறான். பேமா தாஷி திருமணம் இனிதே நடக்கிறது.



மண்வாசனையே அறியாதவனுக்கு திடிரென்று கிடைத்த இல்லறம். அதுவும் அடக்கி வைக்கப்பட்ட ஆண்மை.... கேட்க வேண்டுமா..? காமத்தில் கொக்கேகருக்கே கற்று கொடுக்கும் அளவிற்கு மூழ்கி திளைக்கிறான் தாஷி. ஒரு மகனும் பிறக்க அவனுக்கு கர்மா என்று பெயர் சூட்டுகிறார்கள் தம்பதியர்கள்.



குடும்பஸ்தன் ஆகி விட்டதால் பொருள் ஈட்டும் ஆசையும் வருகிறது. விவசாயத்திலும் நாட்டம் கொள்கிறான். தரகு முதலாளி வேண்டாம், நாமே சந்தையில் போய் விற்றால் நல்ல லாபம் பார்க்கலாம் என்று கிராமத்தினரிடமும் தன் மாமானாரிடம் வாதாடுகிறான். ஆனால் இரவோடு இரவாக பயிர்கள் தீ பிடித்து எறிய தரகன் தான் காரணமென சந்தேகித்து அவனோடு சண்டையிட நகருக்குள் செல்கிறான். தனியாய் வந்து மாட்டி கொண்டவனை தரகனின் ஆட்கள் புரட்டி அடிக்க மீண்டும் கிராமத்திற்கே வந்து சேருகிறான்.




மீச்சம் மீதி இருக்கும் தானியங்களையாவது விற்று நாலு காசு பார்க்கலாம் என மகனுடன் நகரத்துக்கு பயணிக்கிறாள் பேமா. கூலி வேலை செய்யும் கவர்ச்சி பெண்ணொருத்தியான சுஜாதாவின் மேல் வெகு நாட்களாக கண் வைத்து காத்திருக்கிறான் தாஷி.



வீட்டில் மனைவியும் இல்லை எவரும் இல்லை. அந்த நேரத்தில் சுஜாதாவும் அடிக்கடி வந்து செல்கிறாள். ஆசையும் மோகமும் பற்றி எரிய இதுவரை எவருமே செய்யாத புது வித கலவியில் இருவரும் ஈடுபடுகின்றனர்.



தாஷிவைக் காண பழைய மடாலயத்தோழன் வருகிறான். அவனது இல்லறம் பற்றியெல்லாம் விசாரிக்கிறான். மெளனத்துடன் திரும்பி செல்கிறான். மனைவி இருக்க வேறொரு பெண்ணுடன் உறவு கொண்டதை எண்ணி வருந்துகிறான். குற்ற உணர்வால் நிலை கொள்ளது தவிக்கிறான்.



இந்த வாழ்க்கையும் கசந்து விடவே துறவறமே நல்லறம் என்று எண்ணியவனாய் இரவோடு இரவாக துறவற உடையணிந்து மடாலயம் நோக்கி பயணிக்கிறான்.



அதே பாறையின் அருகே சென்று கொண்டிருக்கும் போது பேமா குறுக்கிடுகிறாள். சித்தார்த்தன் கதையில் யசோதாவை தெரியுமா..?? என்று ஆரம்பித்து அவள் பட்ட வேதனைகள், அவமானங்கள். இரவோடு இரவாக விட்டு சென்றபின் யாரறிவார்..??


ஆண்களுக்கு இது வழக்கமாக இருக்கலாம். ஆனால் பெண்ணின் நிலைப்பாடு அவ்வாறு இருக்குமா..?? அதனை செய்ய துணியுமா என்று ஆவேசத்தோடு கேள்வி கணைகளால் தாஷிவை துளைக்கிறாள்.


பதில் பேச முடியாமல் உடைந்து போகிறான் தாஷி. பேமாவின் காலடியில் கண்ணீருடன் விழுகிறான். அவனையும் அவன் துறவறத்தையும் மதிக்காத பேமா குழந்தையை எண்ணிய படி வீட்டை நோக்கி செல்கிறாள்.



பாறையின் இன்னொரு புறத்தில் 'சொட்டு நீர் காய்ந்து போகாமல் இருக்க, அதனை கடலில் எறியுங்கள்!' என்ற வாசகம் காணப்படுகிறது. இந்த காட்சியுடன் நிறைவடைகிறது திரைப்படம்.



திபெத் / லடாக்கி மொழிகளிம் ல் வெளியான இத்திரைப்படம் பல உலக விழாக்களில் பங்கு பெற்றதுடன், உலகம் முழுவதும் முப்பதுக்கு மேற்பட்ட விருதுகளுடன் மெல்போர்ன் பட விழாவில் பரிசையும் தட்டி சென்றது. சுஜாதாவாக நடித்திருப்பது Neelesha BaVora



வசூலிலும் நூறு கோடிகளை வாரி குவித்துள்ளது.






இயற்கை எழில் கொஞ்சும் மலை பிரதேசம், தூய்மையான நீரோடைகள், வெளிர் நீல வானம், என்று இயற்கை காட்சிகள் அனைத்தும் கண்ணுக்கு விருந்து. மலைகளின் உச்சியில் மடாலயம். அங்கு பால்யம் மாறாமல் வாழ்க்கை அறியாமல் சுற்றி திர்யும் குழந்தை துறவிகள் என்று ஒவ்வொன்றையும் ஒரு தவம் போல் இயக்கியுள்ளார் பான் நளின்.



இயக்குநர் பான் நளின் இந்தியர். குஜாராத்தை சேர்ந்தவர். பரோடா பல்கலை கழகத்தில் பயின்றவர். திரைப்பட தாகத்தால் பல வித மனிதர்களையும் அவர்களின் வாழ்வியல்புகளை நேரில் காணவும் இந்தியா முழுவதும் சுற்று பயணம் செய்தவர். இருபது மேற்பட்ட குறும்படங்களை எடுத்துள்ள பான் நளினின் முதல் திரைப்படம் இது.



2006ல் உலக சுற்று விழிப்புணர்வு குறித்தான ஸ்பெயின் நாட்டின் மிக உயரிய விருதினையும் பெற்றுள்ளார்.


பல உலக நாடுகளின் திரைபட விழாக்களிலும் நடுவர் குழுவில் இடம் பெற்றதுடன், ஐக்கிய நாடுகள் சபை உலக அளவில் அடுத்த வருடம் சுற்று சூழல் குறித்தான 30 நாடுகளிலிருந்து 30 இயக்குநர்களை ஆவண படம் எடுப்பதற்காக அழைத்துள்ளதில், அதில் அழைக்கப்பட்ட ஒரே இந்தியர் பான் நளின் ஒருவர் மட்டுமே என்பது கூடுதல் தகவல்.



நம் இந்தியர் ஒருவரின் இந்த உலக சினிமாவையும் பாருங்கள்.



உடனே பார்க்க வழக்கப்படி டிரைலர்.


சில கூடுதல் காட்சிகள் இங்கே





 

©2009 butterfly Surya | by TNB