The World's Fastest Indian
ஏதோ இந்தியன் என பெயர் உள்ளதால் நம்ம ஊரு கதை என நினைத்தேன்.. இந்தியன் என்பது 1920 ஆண்டின் மோட்டார் சைக்கிள் மாடல். நியுஸிலாந்தின் Burt Munro என்பவரை பற்றிய உண்மை கதை. கதாபாத்திரத்திற்கும் அதே பெயரை வைத்து எழுதி, தயாரித்து இயக்கி உள்ளார் ரோஜர் டொனால்ட்சன்.
25 வருட மோட்டார் சைக்கிள் பந்தய கனவு நனவாகிறதா என்பதே கதை? 50க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்று குவித்துள்ள் Antony Hopkins அற்புத நடிப்பு.
தானே வடிவமைத்த மோட்டார் சைக்கிளுடனும் சிறிது உடல் நல குறைவனுடனும் நியுஸிலாந்திலுருந்து அமெரிக்கா நோக்கி புற்ப்படுகிறார். கடைசியில் தனது 25 வருட கனவை அடைந்ததுடன் புதிய ரெக்கார்டையும் படைக்கிறார்.
வழியில் சந்திக்கும் நபர்களிடம் அவர் உரையாடுவதும் அன்புடன் பேசுவதும் எவ்வளவு யதார்தம். தமிழில் இந்த மாதிரி யதார்தங்கள் இல்லாமல் நடிகர்களை விஸ்வரூபங்களை போலவும் நடிகைகளை பதார்தங்கள் போல ( நல்ல பிசைந்து) காட்டுகிறார்கள் என எரிச்சலுடன் நினைக்க தோன்றுகிறது.
6 comments:
வண்ணத்து பூச்சி (சூரி)யார்,
நல்லா இருக்கு. நீங்க என்ன அரங்கிலிருந்து அரங்கு திரையிலிருந்து திரை பறப்பீங்களா? வாங்க, தமிழ் பதிவுலகத்துக்கு. வாழ்த்துகள்!!!
வாங்க, வளம் பெற!
இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதினால் நன்றாக இருக்கும்.
இன்னும் நிறைய ஆங்கிலப்பட விமர்சனங்களை எதிர்பார்க்கிறேன்.
திரை விமர்சனம் வலைப்பதிவில் தங்களது பின்னூட்டம் பார்த்தேன். நீங்களும் அங்கு உங்களது பதிவுகளை பகிரலாமே? உங்கள் பதிவின் முதலிரண்டு வரிகளைக் கொடுத்து உங்களுடைய வலைப்பதிவுக்கு வாசகர்களை அழைத்து வரலாம்.
தங்களுக்கு விருப்பமிருந்தால், விமர்சனம் பதிவில் பின்னூட்டமிட்டு தெரிவிக்கவும்.
நன்றி,
அனைவரின் அன்புக்கும் ஆலோசனைக்களுக்கும் மிக்க நன்றி..
முயற்ச்சிக்கிறேன்.
This was a superb movie! simple and sensitive.
While reading your review I felt good to note my thoughts reflected there in.
Enjoyed your blog. thanks.
முதல் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் பல.
வாழ்த்துகள் வெற்றி மகள்.
பெயர் சூப்பர்.
Post a Comment