RUPANTOR (Transformation)
மகாபாரத உட்கதையான துரோணாச்சாரியாருக்காக ஏகலைவன் தனது கட்டை விரலை குருதட்சிணையாக தருவதே இப்படத்தின் மூலக்கதை.
இதை பற்றிய திரைப்படம் எடுப்பதற்காக ஆரிப் என்ற இயக்குநர் காட்டு பகுதிகளுக்கு செல்கிறார். படத்திற்கு "குருதட்சிணை" எனவும் பெயரிடுகிறார்.
ஆனால் அங்கோ வில் வித்தைக்கு கட்டை விரலையே பயன படுத்தாது ஆட்காட்டி விரலையும் நடு விரலை மட்டுமே வில் வித்தை வீரர்கள் பயன் படுத்துவதை கண்டு ஆச்சிரியமும் குழப்பமும் அடைகிறார்.
ஏன் துரோணர் ஏகலைவனின் கட்டை விரலை குருதட்சிணையாக கேட்டார் என்ற கேள்விக்கு விடை தெரியாமல் ஆராய்ச்சி செய்கிறார்.
பல்வேறு நூல்களையும் படித்து தகவல்களை திரட்டுமாறு தனது உதவி இயக்குநர்களிடமும் கூறவே அவர்களும் தகவல்களை திரட்டுகின்றனர்.
தனக்கான சரியான பதில் கிடைக்காமல் படத்தை தொடர்ந்து எடுக்க போவதில்லை என்றும் விடை தெரிய அங்குளள வயதான மூத்த பழங்குடி மக்களை தேடி அலைகிறார்.
கடைசியில் குருதட்சிணையாக ஏகவலைனின கட்டைவிரலை கேட்டதற்காக கோபம் கொண்டு அவனது பூர்விக குடிகள் இனிமேல் கட்டை விரலை பயன்படுத்தாது மற்ற விரல்களை பயன்படுத்தியே வில் வித்தையில் ஈடுபட போவதாக கூறுவதாக திரைக்கதையை மாற்றி அமைத்து திரைப்படத்தின் பெயரையும் RUPANTOR (Transformation) என மாற்றி திரைப்படத்தை முடித்து சந்தோஷத்துடன் ஊருக்கு பயணமாகிறார்கள்.
ஒற்றை வரிகதையை பழங்குடி மக்களின் வாழ்க்கையோடு பிணைந்து நல்ல திரைப்படத்தை இயக்கிய அபு சயீத்திற்கு ஒரு "O" போடலாம்.
பல்வேறு திரைப்பட விழாவில் பங்கு பெற்றதுடன் கேரளா & சென்னை திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டது.
குறிப்புகள்:
குறிப்புகள்:
நடிப்பு: Ferdous, Jayonto Chottopadhya, Sakiba, Habibur Rahman மற்றும் பலர்
தயாரிப்பு & இயக்கம்: Abu Sayeed
ஒளிப்பதிவு: A R Jahangir
மொழி: பங்களாதேஷி
வெளி வந்தது: 2008
காலம்: 86 நிமிடங்கள்
1 comments:
Good Movie. Should watch. Thanks for the information. Your blog is nice. Keep it up.
Partha
Post a Comment