Tuya de hun shi {Tuya's Marriage}
சீன திரைப்படம்
மங்கோலிய பாலைவன பிரேதசத்தில் வாழும் Tuya என்ற பழங்குடி பெண்ணின் வாழ்க்கை போராட்ட கதைதான் Tuya' Marriage.
Tuyaவின் கணவனான Bater விபத்து ஒன்றில் இரு கால்களையும் செயலிழக்கிறான். அதனால் குடும்பம் வருமானமின்றியும் ஆதரவில்லாமல் மிகுந்த அல்லல் படுகின்றனர். அவளே மன தைரியத்துடன் கணவனையும் இரு குழந்தைகளையும் மிகுந்த சிரமங்களுக்கிடையில் பராமரிக்கிறாள்.
Tuya விற்கு மறுமணம் புரிதலே இதற்கு தீர்வாகவும் என Bater கூறவே அவனை விவாகரத்து செய்யவும் வேறு ஒருவரை மணக்கவும் இருவரும் ஒரு மனதோடு சம்மதித்து குடும்ப நீதி மன்றதில் மனு இடுகின்றனர்.
ஆனால் தனது கணவனையும் இரு குழந்தைகளையும் அன்போடு வாழ்நாள் முழுவதையும் ஆதரிப்போம் என வாக்குறுதி தருவோரையே தான் மணப்ப்பேன் என் உறுதியோடு கூறுகிறாள் Tuya.
அவளை பெண் பார்க்க பல பேர் வருவதும் அவர்க்ள் சென்றதும் அதை பற்றி இருவரும் விவாதிப்பதும் சோகத்திலும் ஒரு நகைச்ச்சுவை.
Tuya வின் பழைய பள்ளி தோழனும் பெரிய செல்வந்தனுமான ஒருவன் அவளை மணக்க விரும்புகிறான். ஆனால் அவளது கணவனை ஒரு விடுதியில் வைத்து பராமரிக்க மட்டுமே இயலும் என்றும் அனைவரும் சேர்ந்து இருப்பது இயலாது என கூறி கணவனை விடுதியில் சேர்த்து விடுகின்றனர். ஆனால் Bater தற்கொலைக்கு முயலுகிறான. நண்பனின் செயல்களுக்கும் Tuya விற்கு பிடிக்கவில்லை. எனவே அவனை மணக்கும் எண்ணத்தையே அடியோடு விட்டு விடுகிறாள்.
தண்ணீருக்காக மிகுந்த தூரம் செல்ல வேண்டி இருப்பதால் அவளுக்காக கிணறு தோண்டும் முய்ற்ச்சியில் ஈடுபடும் அவளது பகுதியை சேர்ந்த ஏறகனவே மணமான ஒருவன் அவனது மனனவி வேறு எவருடனோ போய்விட்டதாகவும் Tuya வை மணக்க விரும்புவதாகவும் கூறுகிறான்.
Wei Lu கதையை மையமாக கொண்டது இத்திரைப்படம்.
கால் நடைகளுடனும் குளிருக்கான மதுவுடனும் அவர்களின் வாழ்வோடு இசைந்து செல்வதை கவிதையாக படைத்திருக்கிறார் இயக்குநர் Quanan Wang.
Tuya வாக நடிக்கும் Nan Yu மிகச்சிறந்த சீன நடிகை. மிக துல்லியமான உணர்ச்சிகளை வெளிகாட்டுவதில் அத்தனை இயல்பு.
கடைசியில் Tuya விற்கு திருமணம் நடந்ததா..?? யாரை மணந்தாள்.??
உலகமெங்கும் ஒவ்வொரு பெண்ணும் வாழ்க்கைக்காக போராடதான் வேண்டுமா..?? என்ற கேள்வி மனதின் அடிமனதில் ஒரு சுமையாக சித்தரிக்க திரைப்படம் நிறைவு பெறுகிறது.
சந்தர்பம் கிடைத்தால் கண்டிப்பாக பாருங்கள்.
பெர்லின் மற்றும் சீன திரைப்பட விருதுகளை வாரிக்குவித்த திரைப்படம்.
அனைத்து இந்திய திரைவிழாக்களிலும் திரையிடப்பட்டதும் குறிப்பிடதக்கது.
பயோடேட்டா:
கதை: Wei Lu
இயக்கம்: Quanan Wang.
வெளிவந்தது: 2007
வகை: குடும்ப கதை
காலம்: 86 நிமிடங்கள்
விருதுகள் : 2007 ல் பெர்லின் & சிகாகோ திரைப்பட விழா விருதுகள் மற்றும் நான்கிற்கும் மேற்ப்பட்ட உலக விருதுகள்
2 comments:
வாய்ப்பு கிடைத்தால் இது போன்ற நல்ல திரைப்படங்களைப் பற்றி நிறைய எழுதுங்கள் !!!
நல்ல முயற்சி.
வருகைக்கு நன்றி நண்பரே..
கண்டிப்பாக முயற்சிக்கிறேன்.
அடிக்கடி வாருங்கள். நிறை / குறை சொல்லுங்கள்..
நன்றி.
Post a Comment