உலக திரைப்பட வரலாற்றில் தனக்கென தனி இடத்தை பிடித்தவரும் வாழ்க்கையின் மெல்லிய தருணங்களை யதார்த்த்மாக காட்டக்கூடிய மிகச்சிறந்த இயக்குநர்கள் வரிசையில் என்னுடைய முதலிடம் இவருக்குதான்.
1959 {ஏப் 17 } ல் இரானில் பிறந்து வறுமையில் வாடி 12 வயதில் தெருதெருவாக இனிப்பு மற்றும் ஜஸ் விற்று பள்ளி படிப்பை மேற்கொள்ள முடியாமல் டெஹ்ரானில் உள்ள நாடக கல்லூரியில் படித்தார்.
1978- 79 ல் இஸ்லாமியப் புரட்சிக்குப் பின் திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் கொண்டு சிறு சிறு வேடங்களில் நடிக்க தொடங்கினார். என்றாலும் இயக்குநராக வேண்டும் என்பதே இவரது பேரார்வம்.
1992 ல் தனது முதல் திரைப்ப்டத்தை இயக்கினார்.
1998ல் இவர் இயக்கிய Children of Heaven ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் இரானிய படம். பல்வேறு உலக திரைப்பட அரங்கில் விருதுகளை வாரிக்குவித்த படம்.
கோவிலிலோ கல்யாண மண்டபத்திலோ தவறவிட்டு விடுவோமோ என நினைக்கும் "காலணி" தான் திரைப்படத்தின் "கதாநாயகன்" அனைவரும் பார்க்கவேண்டிய படம்.
2008ல் நடந்த சீன ஒலிம்பிக்ஸ்ஸில் பெய்ஜிங் பற்றிய குறும்படம் தயாரிப்பதற்காக சீன அரசாங்கம் இவருடன் சேர்த்து 5 மிகச்சிறந்த இயக்குநர்களை தேர்வு செய்தது.
இவரது மிகச்சிறந்த சில படங்கள்:
Baduk (1992)
God Will Come (1995)
Father (1996)
The Colour of Paradise (1999)
Baran (Rain) (2001)
Weeping Willow (2005)
Song of Sparrows ( 2008 ) இத்திரைப்ப்டத்தை பற்றிய பதிவு இங்கே
வர இருப்பது: Kashmiri A Float (2008)
3 comments:
Children of Heaven - பார்க்க வேண்டிய அருமையான இளிமையான படம்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜெஸி.
எனக்கும் மிகவும் பிடித்தமான இயக்குனர். இவரது 3 படங்களையே இதுவரையில் பார்த்திருக்கிறேன். இணையத்தில் மற்றப் படங்களைப் பார்க்கமுடியுமெனில் தயவுசெய்து இணைப்பைத் தாருங்கள் !
Post a Comment