DECK THE HALLS
குடும்பத் திரைப்படம்
கிறிஸ்மஸ் பண்டிகையை வித்தியாசமாக கொண்டாடுவதில் போட்டியும் பொறாமையும் கொண்ட இரு அண்டை வீட்டுகாரர்களின் பூசல்தான் நகைச்வை கலந்த குடுமப திரைப்படம் தான் DECK THE HALLS.
100% பொழுது போக்கு உத்திரவாதம்.
Steve தன் குடும்பத்தினருடன் கிறிஸ்மஸ் பண்டிகையை உற்சாகமாக கொண்டாட ஆயத்தமாகிறன். அப்போதுதான் அவன் பக்கத்துவீட்டிற்கு குடி வருகிறார்கள் Buddy Hall & family.
Buddy Hall ஒரு கார் விற்பனையாளன். மிக குறைந்த வருமானம். அவன் மனைவியோ எப்போதும் பணத்திற்காக அவனை நச்சரிக்கிறாள். அவனோ தான் எதாவது சாகசம் செய்து பெரிய புகழ் பெறவேண்டும் என நினைக்கிறான். அதனால் கிறிஸ்மஸ் பண்டிகையின் போது விளக்குகளால் வீட்டை அலங்கரித்து அது வானுலகத்திலிருந்து பார்த்தாலும் தெரியும் படி செய்ய பல முயற்சிகளை மேற் கொள்கிறான்.
ஆனால் பல ஆண்டுகளாய் வாழும் அவர்கள் குடியிருப்பு பகுதியில் Steve குடும்பமே கிறிஸ்மஸ் பண்டிகையை விமர்சனையாக கொண்டாடி புகழ் பெற்று வருகின்றனர். இந்த தருணத்தில் புதிதாக குடி வந்த Buddy யின் முயற்சிகளை கெடுக்க Steve செய்யும் குளறுபடிகளும் அதை Buddy எப்படி முறியடிக்கிறான் என்பதே மீதிக்கதை.
என்னதான் அவர்கள் இருவர்ம் போட்டி பொறாமையுடன் இருந்தாலும் குழந்தைகளும் இரு மனைவிகளும் இதை விரும்புவதில்லை. அவர்க்ள் ஒரே குடும்ப்மாக இருக்க வேண்டும் என எவ்வளவோ முயற்ச்சிகின்றனர்.
ஆனால் Buddy ,Steve இருவரும் அவர்களின் பேச்சை கேட்க மறுப்பதால் இரு மனைவிகளும் குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறி கிறிஸ்மஸ் பண்டிகையை விடுதியில் கொண்டாட போவதாய் சொல்லி விட்டு போய் விடுகின்றன்ர்.
இறுதியில் Buddy Hall தான் நினைத்ததை நிறைவேற்றி எல்லோரும் ஒன்று சேர்ந்து கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாட சுபம்.
குறிப்பாக கிறிஸ்மஸ் பாடல்கள் குறும்பாடல்களாக வந்து போவது இனிமை.
நவம்பர் 2006ல் வெளிவந்த திரைப்படம். அந்த வருடத்தில் இந்த கிறிஸ்மஸ் பாடல்கள் மிக பிரபலம். நிஜமாகவே எவ்வளவு உவகையுடன் உற்சாகத்துடன் அமெரிக்கர்கள் அந்த ஆண்டு கிறிஸ்மஸ் கொண்டாடி இருப்பார்கள் என நினைக்கவே மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது.
குட்டையான உருவமும், குறுகுறுத்த கண்களும் வித்தியாசமான குரலும் கொண்ட Buddy Hall பாத்திரத்தில் நடித்து கலக்கியிருப்பவர் Danny De Vitto. அத்தனை இயல்பான நடிப்பும் நகைச்சுவையும் சூப்பர். இவரை பற்றி கண்டிப்பாக சொல்லியாக வேண்டும் .
64 வயதான DANNY DeVITO அமெரிக்காவில் முறைப்படநடிப்பு கலையை பயின்றவர். மிக பிரபலான பல தொலைகாட்சி தொடர்களில் நடித்து மக்களுடன் ஒன்றாக கலந்தவர். 1978 முதல் Danny De Vitto பல அவார்டுகளை அள்ளி குவித்தவர். 2001 ல் ஆஸ்கர் அவார்டுக்கும் பரிந்துரைக்கப்பட்டவர். ஒரு சமயத்தில் மோசமான நடிகர் என்று விமர்சிக்கபட்டாலும் தொலைகாட்சியிலும் திரைப்படங்களிலும் 40 வருடங்களாக தொடர்ந்து நடித்து வரும்அமெரிக்க மக்களுக்கு நிஜமாகவே இவர் அண்டை வீட்டுகாரர் போல தானாம்.
குழந்தைகளுக்கும் குடும்பத்திற்கும் ஏற்ற நல்ல நகைச்சுவை திரைப்படம்.
சந்தர்பம் கிடைத்தால் நிச்சயம் பாருங்கள்.
குறிப்புகள்:
நடிப்பு: Danny De Vitto,Mathew,Kristin Davis ,Dylan Blue மற்றும் பலர்.
மொழி: ஆங்கிலம்.
இயக்கம்: John Whitesell
காலம்: 93 நிமிடங்கள்
வெளிவந்தது: 2006
2 comments:
///குழந்தைகளுக்கும் குடும்பத்திற்கும் ஏற்ற நல்ல நகைச்சுவை திரைப்படம்.
சந்தர்பம் கிடைத்தால் நிச்சயம் பாருங்கள்.///
நல்லதொரு அறிமுகம்
நன்றி
ஆம் நண்பரே.. குழந்தைகளுக்கான திரைப்படங்களை தமிழில் தேடி தேடி அலுத்து விட்டேன்.
கதை புத்த கங்களை படிக்கும் ஆர்வம் மிகுதியாக இல்லாத இந்தியாவில் குழந்தைகளுக்கு என்று திரைப்படமே இல்லை என்பது மிகுந்த வேதனையான விஷயம். அதனால் தான் குழந்தைகளுக்கு மன அழுத்தமும் வீணான சிந்தனக்களும் வருகிறது என்பது உளவியலாளர்கள் கருத்து.
அதனால் தான் தமிழகத்திலும் குழந்தைகளும் அழுது வடியும் சீரியல்களையும் சினிமா என்ற பெயரில் ஆபாச நடனங்களையும் நடு ஹாலில் உட்கார்ந்து மணிகணக்கில் பார்ப்பது என்பது கொடுமையிலும் கொடுமை.
என்னுடைய ஏக்கத்தின் ஒரு சிறு முயற்ச்சியே இது.
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் பல.
இந்த ஊக்கமே மேலும் எழுத ஆர்வமுட்டுகிறது.
நன்றி.
Post a Comment