Honey I Blew Up the Kid 1992 ல் வெளிவந்த திரைப்படம். Honey I Shrunk the kids திரைப்படத்தில் வருவது போன்ற அதே விஞ்ஞானி Wayne Szalinski.
ஆனால் இந்த முறை மின்சாரம் மூலம் பொருட்களை மிகப்பெரியதாய் உருமாறும் கருவியை கண்டுபிடிக்கிறார். இந்த முறையும் சரியாக வேலை செய்யவில்லை. அவரது இரண்டரை வயது செல்ல மகன் ஆடம்ஸை வைத்து கொண்டு அதன் அருமை பெருமைகளை தன் குடும்பத்தாருக்கு சொல்லும் போது திடிரென வேலை செய்ய ஆரம்பிக்கிறது.
ஆடம் 150 அடி குழந்தையாக உருமாறுகிறான். வீட்டையே உடைத்து கொண்டு தெருக்களில் நடக்கவே ஊரே அதிர்ந்து போகிறது. அமெரிக்க வீதிகளில் அசுர வளர்ச்சியான குழந்தை நடக்க துவங்க காண்பவர் எல்லாம் மலைத்து போகிறார்கள். உயரமான கட்டிடங்கள் மினுக்கும் மின்சார விளக்குகளை கண்டு குழந்தை ஆர்பரிக்க செய்வதறியாது அரசாங்கமும் மற்றவர்களும் திகைக்கிறார்கள்.
ஆடம்மை பழைய நிலைக்கு கொண்டுவர அவனது தந்தையும் பல வழிகளில் முயற்ச்சி எடுத்து களத்தில் இறக்குகிறார். ஆனால் 12 வினாடிகள் அசையாது ஆடம் நின்றிருந்தால் மட்டுமே அந்த மருந்து வேலை செய்யும். அவனோ இரண்டரை வயது குழந்தை.
இதற்கான மருந்தை எப்படி செலுத்தி ஆடம்மை மீண்டும் சுய உருவத்தை கொண்டு வருகிறார் என்பதே நகைச்சுவை கலந்து சொல்லபட்ட திரைப்படம்.
மின்சாரம் பாய்ந்து ஆடம் அழுவதும் அதை கண்டு அவனது தாய் துடிப்பதும் கடைசியில் அவனது தாயால் மட்டுமே ஆடம் அமைதியடைவதும் நமக்கே கண்கள் பனிக்கின்றன.
பத்திற்கும் மேற்பட்ட விருதுகளை பெற்ற திரைப்படம். குழந்தைகளுடன் குடும்பம் அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம்.
7 comments:
Nice. You are introducing good movies for kids and family. Keep it up.
குழந்தைகள் மக்கிழ ஒரு அருமையான திரைப்படம் - பதிவினைக் கண்டே மகிழும் நாம் படத்தினைக் கண்டால் ...... - குழந்தைகள் காண வேண்டிய படம்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சீனா.
குழந்தைகளுக்கென தனியாக தமிழிலும், இந்திய மொழிகள் பலவற்றிலும் திரைப்படங்கள் வருவதில்லை என்ற ஏக்கத்திலேயே மற்ற மொழி படங்களை இங்கு இட வேண்டியுள்ளது.
அடிக்கடி வாருங்கள்.
நன்றி. வாழ்த்துக்கள்
இதற்கு முன்னர் வந்த படம் தான் எனக்கு மிகவும் பிடித்தது!
இதே போல் நிறைய படங்களை பற்றி எழுதுங்கள்
வால் பையன்... ரொம்ப வால் போல இருக்கு. இதற்கு கீழேதான் அந்த படம் பற்றி எழுதி இருக்கேன். இது நல்ல காமெடி..
ஐஸ்கீரீமெல்லாம் காட்டி
தாஜா பண்ணப்பார்ப்பார்கள்
குழந்தைகளுடன் பெரியவர்கள்
சேர்ந்து பார்க்கவேண்டிய படம்
வாங்க மாதங்கி. குழந்தைகளுக்கென தனியாக தமிழிலும், இந்திய மொழிகள் பலவற்றிலும் திரைப்படங்கள் வருவதில்லை என்ற ஏக்கத்திலேயே மற்ற மொழி படங்களை இங்கு இட வேண்டியுள்ளது.
Post a Comment