புதிதாக வீடு ஒன்று வாங்க திட்டமிடுகிறார்கள். ஒரு மிகப்பெரிய வீட்டையும் தேர்வு செய்கிறார்கள். அந்த வீட்டின் விசேஷம் அதில் ஒரு ரகசிய அறை ஒன்று உண்டு. அதாவது எதிரி எவராவது வீட்டில் நுழைந்து விட்டால் அவர்களிடமிருந்து தற்காத்து கொள்ளும் அறை. முழுக்க முழுக்க எலக்ட்ரானிக் செய்யப்பட்டு அனைத்து அறைகளின் அசைவுகளும் அங்கிருந்தே கண்காணிக்கும் படி வடிவமைக்கப்பட்ட அறை அது.
அம்மாவிற்கும் மகளுக்கும் மிகவும் பிடித்து விடவே உடனே வீட்டை வாங்கி வசிக்க ஆரம்பிக்கின்றனர். வந்தது விபரீதம். ஒரு நாள் மூன்று மிக பயங்கர கொள்ளையர்கள் உள்ளே நுழைந்து விடுகின்றனர். அந்த கொள்ளையர்களின் நோக்கம் அந்த வீட்டில் ஒரு கணக்கிடமுடியாத சொத்து ஒன்று உள்ளது. அதை கொள்ளையடிக்கவே அங்கு வருகின்றனர். இதையறிந்த தாயும் மகளும் அந்த ரகசிய அறைக்குள் எப்படியோ நுழைந்து தாளிட்டு கொள்கின்றனர்.
அந்த கொள்ளையர்களிடமிருந்து எப்படி தப்பினார்கள் என்பதே Panic Room திரைப்படம்.
கொள்ளையர்கள் அந்த சொத்திற்காக வீடு முழுவதும் தேடி அலைகின்றனர். அவர்கள் தேடிவந்த சொத்து வீட்டின் எந்த பகுதியிலும் இல்லை. ஆனால் அந்த ரகசிய அறைக்குள் இருக்கிறது. அந்த அறையை வெளிப்பகுதியிலிருந்து என்ன செய்தாலும் திறக்க இயலாது. உள்ளே இருக்கும் தாயும் மகளும் நினைத்தால் மட்டுமே திறக்க இயலும்.
கொள்ளையர் மூவரில் ஒருவன் மிகவும் கருணையுள்ளவனாக இருக்கிறான். தாயையும் மகளையும் எக்காரணம் கொண்டு கொல்ல கூடாது என்கிறான். அவர்களுக்குள் சண்டை வருகிறது. இதில் எதிர்பாரமல் ஒருவன் இறந்தும் விடுகிறான்.
எப்படியோ தன் கணவனுக்கு தகவல் தந்து விடுகிறாள். அவனும் அவர்களை காப்பாற்ற வந்து கணவனும் கொள்ளையர்களிடம் சிக்கி கொள்கிறான்.
அவர்கள் கொள்ளையடிக்க வந்தது என்ன..?யார் வெற்றி அடைந்தார்கள்.? தாயும் மகளும் மீட்க பட்டார்களா..? கொளையர்கள் பிடிபட்டார்களா என்பதே இரண்டு மணி நேர Non stop சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படம். வெளிவந்தது 2002.
Jodie Foster நடிப்பில் இது ஒரு Master Piece.
சஸ்பென்ஸ் & திரில்லர் விரும்பிகள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம்.
Don't Miss it
13 comments:
அப்ப பார்த்துட வேண்டியது தான் :-)
FYI, உங்கள் வலைப்பூவிற்கு ஒரு பட்டாம்பூச்சி அனுப்பி உள்ளேன். http://nandhu-yazh.blogspot.com/2009/01/blog-post_08.html.
வருகைக்கு நன்றி கிரி..
கண்டிப்பாக பாருங்கள்.
மகிழ்ச்சி.. வாழ்த்துக்கள்
அமுதா
அளவு கடந்த மகிழ்ச்சி.. திகைத்து போனேன்..
நன்றி என்பது சிறிய வார்த்தை..
வார்தைகள் அற்ற சொற்களே மனதின் மொழி...அதுவே தியானம் என்பார் என் குரு ஒஷோ..
வேறு வார்த்தைகளில்லை..
"NALLA PATHIVU"..."JODIE FASTER"..."ACADEMY AWARD WINNER"...."FLIGHT PLAN"..IS ANOTHER FANTASTIC THRILLER FROM HER...
Thanx for your visit mr.sharma
Already wrote about Flight Plan
http://butterflysurya.blogspot.com/search/label/Flight%20Plan
Visit and post your comments plz.
நான் மிகவும் விரும்பி பார்த்த படங்களில் இந்த படமும் ஓன்று. அழகாக விமர்சனம் செய்து உள்ளிர்கள்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வினோத்.
வாழ்த்துக்கள்.
//கிரி said...
அப்ப பார்த்துட வேண்டியது தான் :-)//
ஆஹா! நான் ஏற்க்கனவே இதற்க்கு பின்னூட்டம் போட்டு இருக்கேன் ..
இதற்காக மறுபடியும் அடித்த பின்னூட்டம் ...ஒரே மாதிரி அடித்து இருக்கேன்..ஆனா இன்னும் படம் தான் பார்க்கலை :-)))
//சஸ்பென்ஸ் & திரில்லர் விரும்பிகள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம்//
அப்ப கண்டிப்பா பார்த்துட வேண்டியது தான்.
உங்கள் விமர்சனம் பார்த்த பிறகு, படம் பார்க்க வேண்டிய வரிசையில் சேர்த்து வைத்துள்ளேன்.
The Brave One (2007 film)கூட அருமையாக இருந்தது.
நன்றி.
very super site
முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி. மற்ற பதிவுகளையும் பார்க்கவும். வாழ்த்துகள்.
நல்ல 'thriller'. முடிந்த அளவுக்கு லாஜிக் மீறல்கள் இல்லாமல் இருக்கும்... ஆனாலும் கடைசியில் heroine action வேண்டும் என்பதற்காக கொஞ்சம் இழுத்து இருப்பார் இயக்குனர். climax கு சற்று முன்பு ஒரு போலீஸ் heroine வீட்டுக்கு வருவார்... ஏதேனும் பிரச்சனை என்றால் கண்ணை மூடி திறக்கவும் என்று சொல்லுவார்... அப்போதே சொல்லி இருந்தால் போலீஸ் வந்து கதையை முடித்து இருக்கும்.. அதை விட்டு விட்டு கொஞ்சம் நேரம் சுத்தி இருப்பார்கள்... இது என்னுடைய பார்வை... இதனால் இந்த திரைப்படம் பார்க்கவே தகுதி இல்லாத ஓன்று என்றெல்லாம் இல்லை... இயக்குனர் கொஞ்சம் யோசித்து இருக்கலாம்... அவ்வளவு தான்... மற்றபடி நல்ல thriller . பூச்சியாரின் விமர்சனம் அருமை... மீண்டும் ஒரு முறை பார்க்க வேண்டும்...
Post a Comment