Silent Light இது ஒரு மெக்ஸிகன் திரைப்படம்.
நமக்கு பழக்கமான, அதுவும் இன்றைய தமிழ் சினிமாவின் பிறந்த வீடாம் கோடம்பாக்கத்திலிருந்து 9,454 மைல் வரை தள்ளி நிற்கிறது. அதாவது இந்தியாவிற்கும் மெக்ஸிகோவிற்கும் தூரம் 9,454 மைல் என்பது பதினைந்தாயிரத்து சொச்சம் கிலோமீட்டர்.
ஏதோ ஒரு தமிழ் சினிமாவில் ஒளி ஒவியம் என்று டைட்டிலில் பார்த்ததாக நினைவு.
இது அப்படியெல்லாம் அலட்டி கொள்ளவில்லை. அதனால் தானோ ஒளிப்பதிவிற்காக உலக அளவில் 8 விருதுகளையும் அனைத்திற்குமாக 25 விருதுகளை குவித்துள்ளது திரைப்படம்.பதக்க பட்டியல் இங்கே வெளிவந்ததது 2007.
மெக்ஸிகன் திரைப்படம் என்று சொன்னாலும் Plautdietsch என்ற மொழியிலேயே எடுக்கபட்டுள்ளது. இதில் என்ன முக்கிய அம்சம் என்றால் இந்த மொழியில் எடுக்கப்பட்ட முதல் சினிமா இதுதானாம்.
ஜோகனும் அவனது மனைவி எஸ்தரும் நிறைய குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர். ஜோகன் பால்பண்ணையை நடத்தி வருகிறான். எஸ்தர் விவசாயத்தை கவனிக்கிறாள்.
ஆனால் ஜோகனுக்கு மரியானா என்ற பெண்ணுடன் தொடர்பு உண்டு.. மரியானா ஹோட்டலில் சர்வராக வேலைபார்க்கிறாள். ஆனால் அதை எஸ்தருக்கு தெரியாமல் மிகவும் கவனத்துடன் குடும்பம் நடத்துகிறான்.
தனது நண்பனிடம் இருவரையுமே உயிருக்கு உயிராக காதலிப்பதாக கூறுகிறான் ஜோகன். நணபனும் ஜோகனை தவறான முடிவு எடுக்கப்பட்டதாக எச்சரிக்கிறான். ஆனால் ஜோகன் கிடைப்பதை ஏற்று கொள்பவனே வீரன் என நண்பனை மறுக்கிறான்.
ஜோகனின் தந்தையோ எல்லாம் உன் தலையெழுத்துபடிதான் என உபதேசிக்கிறார். அவரையும் பொருட்படுத்தவில்லை ஜோகன்.
ஒரு சமயம் எஸ்தரிடம் உண்மையை கூறி அவளை பிரிந்து மரியானாவுடன் வாழ இருப்பதாக தெரிவிக்கிறான். துடித்து போகிறாள் எஸ்தர். ஆனால் மவுனத்தையே பதிலாக தருகிறாள். எந்த வித ஆர்பாட்டமோ கூச்சலோ இல்லாமல் அவனுக்கு விருந்தளிக்கிறாள்.
இதையெல்லாம் அறிந்த மரியானா ஜோகனை விட்டு பிரிய எண்ணுகிறாள். அதற்கான தருணத்தையும் எதிர்பார்த்து காத்திருக்கிறாள்.
இருவரும் குழந்தைகளை உறவினர் வீட்டிற்கு அனுப்பி விட்டு சொல்ல முடியாத வேதனையுடன் மவுன மொழியிலேயே பேசப்படுவது போன்ற காட்சி அமைப்புகள்..
உறவினர் வீட்டிற்கு போக எண்ணி இருவரும் காரில் பயணமாகிறார்கள்..
கடந்த பல வருட குடும்ப வாழ்க்கையில் இருவரும் பாட்டும் நடனுமுமாக எவ்வளவு ஆனந்தமாக வாழ்ந்தையெல்லாம் ஜோகனிடம் கூறி எஸ்தர் அதையெல்லாம் மற்ந்து விட்டாயா..?? என கேட்கிறாள். பதில் சொல்ல மவுனியாகிறான் ஜோகன்.
திடிரென கடும் நெஞ்சுவலியால் துடிக்கிறாள் எஸ்தர்.. கொட்டும் மழையில் அவளை காப்பாற்ற எண்ணி மருத்துவமனைக்கு விரைகிறான் ஜோகன். சொல்ல முடியாத சோகத்தாலும் அத்தனை சோகத்தையும் வெளிகாட்டாததாலும் திடிரென ஏற்பட்ட மாரடைப்பால் இறந்து விட்டதாக மருத்துவர் தெரிவிக்கிறார்.
தன் தவறையெல்லாம் எண்ணி எண்ணி வருந்துகிறான் ஜோகன்..
உறவினர் வீட்டிற்கு வந்ததும் அனைவருக்கும் சொல்லி அனுப்ப அனைவரும் வந்து சேர்கிறார்கள்.
மரியானாவும் வந்து எஸ்தரை முத்தமிட்டு செல்ல எஸ்தர் எழுந்து உட்கார்ந்து விட குழந்தைகள் மகிழ்ச்சி வெள்ளத்தில் குதிக்கின்றன.
மரியானா அவர்கள் வாழ்வில் இனி குறிக்கிடாமல் ஜோனுடன் வாழ்ந்த நாட்களை சந்தோஷமாக எண்ணி செல்கின்றாள். கனவா நாடகமா என்று சொல்லாமல் முடித்திருப்பது ஒரு தனித்துவமான கதை சொல்லல்...
தமிழ் சினிமாவுக்கும் இந்திய சினிமாவுக்கும் பழக்கப்பட்ட முக்கோண காதல் கதைதான். ஆனால் கதை சொல்லும் விதம் இந்தியாவுக்கும் மெக்ஸிகனுக்கும் உள்ள தூரத்தைவிட இயல்பு அதிகம்.
எந்த வித பரபரப்பும் வேகமும் இல்லாமல் மெதுவாக கதையை சொல்லியிருப்பது மிகவும் இயல்பு என்றாலும், அதீத இயல்பையும் விமர்சித்தவர்களும் உண்டு..
பெரும்பாலும் வார்தைகள் அற்ற காட்சி அமைப்புகள்.. மிக மிக மெதுவாக நகரும் ஒளிப்பதிவு. இயற்கையும் அவர்கள் இயல்பு வாழ்க்கையும் சித்தரிக்கப்பட்டிருக்கும் விதம் அலாதி.
எழில் கொஞ்சும் தொடக்க காட்சிகளை
{opening shot} பற்றி பெரும்பாலான
உலக திரைப்ப்டவிழாக்களில் வியந்து வியந்து பாராட்டியுள்ளனர்.
இது உண்மையான ஒளி ஒவியம்தான்.
ஓளிப்பதிவு Alexis Zabe இதுவரை பெற்ற
உலக விருதுகள் இருபது..
கதை மற்றும் இயக்கம் Carlos Reygadas, பெற்றுள்ள விருதுகளும் முப்பதிற்க்குமேல்.
கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.
சந்தர்ப்பம் கிடைத்தால் Don't Miss..
Labels:
Alexis Zabe,
Award,
Carlos Reygadas,
Dont Miss Movies,
Mexican Movie,
Not for Kids,
Photography,
Photography awards,
Silent Light
|
Estou lendo: Silent LightTweet this! | Assine o Feed |
Subscribe to:
Post Comments (Atom)
12 comments:
Expecting ur detailed narration.Dr.MOHAN.
எங்க இருந்து தேடி பிடிக்கிறீங்க.. சீக்கிரமா படத்தை பத்தி எழுதுங்க.. ஆவலோடு இருக்கோம்.
நானும் இந்தப் படத்தைப் பார்த்தேன், சில வாரங்களுக்கு முன். நல்ல படம் என்று சம்பிரதாயமாகச் சொல்லி அந்தக் கலைஞர்களைக் கொச்சைப்படுத்த மாட்டேன்.
நீங்கள் சொன்னது போல, கோடம்பாக்கத்துக்கும் மெக்ஸிகோவுக்கும் உள்ள தூரம் 9454 கி.மீ. இது நாடுகளுக்கு இடைப்பட்ட தூரம் மட்டுமல்ல... இருநாட்டு திரைப்பட பாணிக்கு இடையிலான வித்தியாசமும் கூட. நல்ல படங்கள் பார்க்கிறீர்கள். உங்கள் ரசனை வாழ்க!
Vinojasan
//ஏதோ ஒரு தமிழ் சினிமாவில் ஒளி ஒவியம் என்று டைட்டிலில் பார்த்ததாக நினைவு.//
முதன்முதலாக அதை “காதல் கோட்டை”-யில் தங்கர் பச்சான் ஒளிப்பதிவுக்காக உபயோகப்படுத்திய வார்த்தை.
தஙகள் பதிவை இன்றுதான் பார்த்தேன்.திரைப்படங்களை நல்ல ரசனையோடு தேர்ந்தெடுத்தது மட்டுமின்றி அதற்கு அழகான
விமர்சனங்களையும் எழுதியுள்ளீர்கள்.வாழ்த்துக்கள்.
Nandri Surya for a nice film.A first in that language Plautdietsch getting numerous awards itself declares the quality of the film.Even slow,the finishing is good.
Thanx Dr. Very nice film to watch with patience..
தங்களது வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.
இது போன்ற படங்களை தனிமையில்
இருந்து ரசிக்க வேண்டும். இது போல் நான்
கண்டு ரசித்த சில படங்கள். The Silence of the Lambs ( Jodie Foster, Anthony Hopkins), The scent of a Woman (Al Pacino, Chris O'Donnell), The Da Vinci Code(Tom Hanks, Audrey Tautou, Sir Ian McKellen).தங்களது விமர்சனம் நன்றாக இருக்கின்றது. Best Wishes.
வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி வாசவன்.
உங்கள் லிஸ்ட் அருமை. சில அறிமுகத்திற்கு நன்றிகள். அடிக்கடி வாங்க.. வாழ்த்துக்கள்.
நல்லா எழுதுறீங்க...கீப் யுவர் கூட் வொர்க் :)
வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி சுபாஷினி.. நளபாகம் சூப்பர்.
இந்த வலைப்பதிவின் நோக்கம் மிக வித்தியாசமான ஒன்றாகும். நல்ல பல திரைபடங்களை பலருக்கு அறிமுகப்படுத்துவது என்பதும் நல்ல செயலாகும்.
நன்றி
சந்தர் சுப்ரமணியன்
Post a Comment