Malos hábitos { BAD HABITS }
17ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு மெக்ஸிகன் கன்யாஸ்திரியின் உண்மை கதைதான் இத்திரைப்படத்தின் கரு.
வெவ்வேறு உணவு பழக்க வழக்கங்களில் பற்றுதலும் தவிர்தலும்
கொண்ட சிலரது வாழ்க்கையின் ஏற்படும் பாதிப்பே Bad Habits திரைப்படம்.
திரைப்படம் ஆரம்பம் முதல் முடிவு வரை மழையும் உணவுமே பிரதான காட்சிகள்.
அன்பும் பாசமும் கொண்ட பெற்றோர்களின் ஒரே பெண் மால்டிட். இறைவனின் சேவையே அவளது வாழ்க்கையாக வேண்டும் என நினைப்பவள். பெற்றோர்களின் வற்புறுத்தலால் மருத்துவம் படித்து பட்டம் பெற்ற அன்றே கன்னியாஸ்திரியாக மாறி விடுகிறாள். மருத்துவம் படித்த பெண் திடீரென கன்னியாஸ்திரியாகிவிடுவதால் அவளது தந்தை மிகவும் வருத்தமடைகிறார்.
ஏழைகளுக்கு பணிவிடை செய்வதோடு சர்ச் பள்ளியில் குழந்தைகளுக்கு நற்போதனை
பாடங்களையும் சொல்லி கொடுக்கிறாள் மால்டிட்.
அநத பள்ளியில் படிக்கும் ஒரு சிறுமிதான் லிண்டா. சதா சால்லேட்டும் கேக்கும் அவளது பிரியாமான
உணவுகள். இதை அறவே வெறுக்கும் அவளது தாய். உடல் மெலிக்கவும் அழகை பாதுக்காக்கவும் அளவுக்கு அதிகமாக உடற்பயிற்ச்சி செய்பவள். தாய் நாளுக்கு நாள் எடை குறைவதை எண்ணி மகிழ்ச்சியடைகிறாள்.
லிண்டாவின் தந்தை குஸ்டேவ் ஒரு உணவு விரும்பி. வகை வகையான உணவுகளை விரும்பி உண்பவன். ஆனால் அவனது மனைவியோ உணவு கட்டுபாட்டை விதித்து அவனோடு சண்டையிடுகிறாள்.
இதனால் அவளை வெறுத்து தான் பணி மேற்கொண்டுள்ள பல்கலை கழகத்தில் பயிலும் ஒரு பெருநாட்டு பெண்ணொருத்தியுடன்உறவு கொண்டு உண்டு திளைக்கிறான். மனைவியை கண்டு
கொள்வதாக இல்லை.
லிண்டாவின் தாய் லிண்டாவின் உடலை இளைக்க வைப்பதற்க்காக அவளை படாத பாடு படுத்துகிறாள். முதலில் ஒரு மருத்துவரை அணுக அவரும் ஒரு பாட்டிலில் மருந்து ஒன்றை கொடுத்து தினமு 3 சொட்டு மருந்தை நீரில் கலந்து அருந்தினால் ஒரு மாதத்தில் உடல் இளைக்கும் என்றும் அளவை மீறினால் இறக்க நேரிடும் எனவும் கூறகிறாள். ஆனால் மருந்து உட்கொள்ளும் நாட்களில் கண்டிப்பாக எந்த வித சாக்லேட்டும் சாப்பிட கூடாது எனவும் அறிவுருத்துகிறாள்.
குழந்தை லிண்டாவோ தாய்க்கு தெரியாமல் பள்ளியில் படிக்கும் சக மாணவன் கொண்டு வரும் அனைத்து இனிப்புகளையும் கண்டபடி உண்டு திளைக்க மூன்று மாதம் கழித்து 300 கிராம் எடை கூடிவிடுகிறாள்.
லிண்டாவின் தாய் மருத்துவரிடம் முறையிடவே அவரும் லிண்டாவின் தாயை தனியே அழைத்து குழந்தைக்கு கட்டுபாடு விதிக்கவே அவ்வாறு கூறியதாகவும் அது மருந்தில்லை வெறும் மின்ரல் வாட்டர் தான் என கூற கடுப்பாகி லிண்டாவின் தாயும் மருத்துவறை அறைந்து விட்டு வெளியேறுகிறாள்.
ஆனால் லிண்டாவின் தாய் விடுவதாக இல்லை. ஜிம், அக்குபங்சர், உடற்பயிற்ச்சி, நீச்சல் என பலவிதங்களில் லிண்டாவை ஈடுபடுத்தி லிண்டாவின் உடல் இளைக்க பிரம்ம பிரத்ய்னம் செய்கிறாள்.
ஒன்றும் நடக்காததால் பல விதங்களில் லிண்டாவை அடித்து துன்புறுத்துகிறாள். தனது உணவு வகைகளையும் கைவிட முடியாமல் தாயையும் பொறுத்து கொள்ள முடியாமல் மருத்துவர் வழங்கிய கொடிய மருந்தை {மினரல் வாட்டர்} மொத்தமாக சாப்பிட்டு தற்கொலை செய்ய முடிவெடுக்கிறாள் லிண்டா.
ஆனால் சாக்லேட் ஆசையால் தற்கொலை முயற்ச்சியை கைவிடுகிறாள்.
இதனிடையே மெக்சிகோ முழுவது அடை மழையால் வெள்ளகாடாக மாறுகிறது. மழை நிற்பதற்காக சர்ச்சில் பல விதங்களில் பிரார்தனை செய்கிறார்க்ள்.
பல இடங்களில் உயிரிழப்பும் ஏற்படவே மால்டிட் இரவு பகலாக மழை நிற்க வேண்டி உண்ணாமல் உறங்காமல் பிரார்தனையில் ஈடுபடுகிறாள். உடல் மிகவும் சோர்வடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறாள். அவளே ஒரு மருத்துவராக இருந்து கொண்டு உண்ணாமல் உடல் வருந்துவதை பார்த்து அவளது பெற்றோர் மிகவும் வருத்தம் அடைகின்றனர். இனிமேலும் உண்ணாமல் இருந்தால் அவள் உயிரிழக்க நேரிடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். அந்த நிலையிலும் மழை நிற்காமல் உண்ணுவதில்லை என்று மன உறுதியிடனும் இருக்கிறாள் மால்டிட்.
லிண்டா உடல் இளைக்க அவளது தாய் எடுத்த எல்லா முயற்ச்சிகளும் தோற்று போகவே ஒரு பிரபல மருத்துவரை அணுகுகிறாள். தனது எடை குறைப்புகளை பெருமையோடு கூறுகிறாள். இனிப்பு உண்பது குழந்தைகளின் இயல்பு எனவும் அதை பெரிது படுத்த வேண்டாம் என்றும் கூறி ஆனால்
முதலில் லிண்டாவின் தாய்க்கு தான் சிகிச்சை தேவை என்று அறிவுறுத்துவதோடு அவளுக்கு பல வித பரிசோதனைகளை செய்கிறார் மருத்துவர்.
பல பரிசோதனைகளின் முடிவில் அவளுக்கு பயங்கர நோய் இருப்பதாகவும் அதனால் தான் நாளுக்கு நாள் எடை குறைவதாகவும் இத்தனை நாள் சிகிச்சை அளிக்காததால் விரைவில் இறக்க நேரிடும் என்கிறார்.
இத்தனை நாட்களும் கணவனையும் குழந்தையையும் உணவிற்காக துன்புறுத்தியதை எண்ணி எண்ணி கலங்குகிறாள் லிண்டாவின் தாய். திடீரென் மனைவியின் மனமாற்றத்தை எண்ணி வியப்படைகிறான் குஸ்டேவ்.
இரவெல்லாம் யோசித்து தாயின் இத்தனை கொடுமைகளையும் எண்ணி நொந்து போன லிண்டா அவள் குடிக்க வைத்திருக்கும் வாட்டர் பாட்டிலில் மருத்துவர் அளித்த்த கொடிய மருந்தை { ??? } முழுவதுமாக கலந்து விடுகிறாள்.
மறுநாள் லிண்டாவின் தாய் இறந்து போகிறாள். அவளது இறுதி சடங்கிற்காக எல்லா விதமான ஏற்பாடுகளும் நடக்கிறது.
உண்ணாவிரத்தை கைவிட்டு குடும்பத்தோடு வந்து சேறுமாறு கெஞ்சுகிறாள் மால்டிடிடின் தந்தை.அவளது தாய் ஆசையோடு செய்து கொடுத்த சிறு கேக் துண்டினையும் கொடுக்கிறார். எல்லாவற்றையும் மறுக்கிறாள் மால்டிட்.
தன்னால் தான் தாய் இறந்ததாக எண்ணி "செய்த அனைத்து பாவங்களுக்கும் கடவுளிடம் மன்னிப்பு உண்டா" என தந்தையிடம் கேட்கிறாள் லிண்டா.. மனைவியை சரிவர கவனிக்காதலால் தான் அவள் இற்ந்ததாக எண்ணி பதில் சொல்ல முடியாமல் தவிக்கிறான் லிண்டாவின் தந்தை.
அன்று மழையும் நிற்கிறது.. தனது இடைவிடாத பிரார்தனையின் பலன் தான் என எண்ணி கடவுளுக்கு நன்றி கூறி நாளை முதல் பணிக்கு திரும்புவதாக மகிழ்சியுடன் கூறுகிறாள் மால்டிட். .
மறுநாள் மீண்டும் மழை..அனைத்தும் கடவுளின் செயலே..அதற்காக தன்னையே வருத்தி கொண்டதுடன் பெற்றோரையும் வருத்தபடவைத்ததை எண்ணி தனது வீடு நோக்கி பயணமாகிறாள் மால்டிட். .
பல்வேறு கதாபாத்திரங்களை வைத்து suspense படம் போல சொன்ன Babel திரைப்படத்தை போல இதுவும் அனைவரையும் ஒரு இடத்தில் முடிச்சு போட்டு இருப்பது கதை சொல்லில் மிகவும் வித்தியாசமான பங்களிப்பு. ஆனால் சஸ்பென்ஸ் திரில்லர் இல்லை. யதார்தத்தின் பிரதிபலிப்பாக நகருகிறது.
விடாது பெய்யும் மழையின் நடுவே இத்தனை அழகாக கதை சொல்ல முடியும் என்பதற்கு இந்த திரைப்படம் அத்தாட்சியாக விளங்குகிறது. மழை படத்தின் ஒரு முக்கிய பாத்திரமாகவே
சித்தரிக்கப்பட்டுகிறது அருமை.
கவிதை போலக்கச்சிதமாக அமைய வேண்டும் திரைக்கதை. சரியான சொற்கள் சரியான இடத்தில் பயன்படுத்தபடுவதுதான் கவிதையை உச்சமானதாக்குகிறது. திரைக்கதையிலும் அதுவே முக்கியமானது அது போல நல்ல கவிதை படித்த உடனே மன எழுச்சி தரக்கூடியது. திரைக்கதையும் அப்படியே இருக்க வேண்டும் என்பார் சிறந்த திரைக்கதை ஆசிரியருக்கான ஆஸ்கார் விருது பெற்ற பேடி சயாப்ஸ்கி. அவர் கூற்றிற்கு இத்திரைப்படம் ஒரு எடுத்துக்காட்டு.
மால்டிடாக நடித்த Ximena Ayala வின் உணர்ச்சி குவியலை பாராட்ட வார்த்தைகளில்லை..
இயக்கம் : Simón Bross
வெளிவந்தது: 2007
லாஸ்ஏஞ்சல்ஸ் சர்வதேச திரைப்படவிழா விருதுடன் பல உலக விருதுகளை கொண்டாடியது.
சந்தர்ப்பம் கிடைத்தால் நிச்சயம் பாருங்கள்.
Labels:
Adult Movie,
Bad Habits,
Mexican Movie,
Not for Kids,
Screen Play Movie,
Simón Bross,
Ximena Ayala
|
Estou lendo: Bad HabitsTweet this! | Assine o Feed |
Subscribe to:
Post Comments (Atom)
21 comments:
எதிர்பார்ப்புகளுடன்...
Nice pics! Look fwd to your review!
Nice pics. Look fwd to your review!
what is the Bad habbit?
// விரைவில் விமர்சனம் //
இது கூட நல்லாத்தாங்க இருக்கு
ஆஹா! என்னங்க விமர்சனம் பாருங்கன்னு கூப்புட்டீங்க ..சரி ன்னு வந்தா இங்கே ஏகப்பட்ட படம் இருக்கே ..
இருங்க நான் பொறுமையா படித்து மெதுவா பின்னூட்டம் போடுறேன்..(கண்டிப்பாக)
ஏகப்பட்ட படம் இருக்கு :-)
good photographs!
Being movie buffs I think, my husband and I are going to frequent this space!
Thanks for stopping by mine.
Welcome Sowmya.. My Cheers to Sri. Wishes to Aditi.. குடும்பத்தோடு வாங்க..
yup.. do share yr reviews on NK.
oh.. how did u find my blog?thru search?
Lovely write-up.
I would love to read your take on this Japanese movie 'Kikujiro'. They played that on World Movies, about a month back and my hubby and I totally luurrved it. You would too.
Thanx SaRa.. Yes.. Google Andavar than..
Thanx Sowmya. Noted.. Sure I will try.
Request Sri to have a glance & comment.
Hope "Bad Habits" will entice him.
Cheers.
நல்ல கதைவிட்டிருக்கீங்க மன்னிக்கணும் சொல்லியிருக்கீங்க :-). படத்தை பார்த்தது போல் இருந்தது கதை சுருக்கம். நிறைய எழுதுங்க.
ஜெஸி நலமா..??? அமீரகம் சுகமா..??
மக்கா எல்லோரும் நலந்தானே..?
நன்றி தோழி..
வாழ்த்துக்கள்.
ம்..நல்ல பதிவு...லிஸ்டில் சேர்த்து கொண்டேன்..விரைவில் பார்த்து விடுகிறேன்...
வருகைக்கு நன்றி ரெளத்ரன். அடிக்கடி வாருங்கள்.
தேடிப்பிடித்துப் பார்க்கும் ஆவலைத் தூண்டிவிட்டது உங்கள் பதிவு. நன்றி நண்பரே !
நன்றி ரிஷான்.
very interesting! I wanna watch this film.
நன்றி அபிலாஷ்..
Post a Comment