The Constant Gardener மிகவும் பரபரப்பாக விற்பனையான நாவலை தழுவி எடுக்கப்பட்டது தான் இந்த திரைப்படம். இந்த நாவலை எழுதியவர்
ஜான் லெ கர் (John Le Carre). உலகப் புகழ் பெற்ற ஒற்றறிதல் கதைகளை எழுதியவர். The Spy Who Came in from the Cold நாவ்ல அவர் எழுதியது தான்.
திரைப்படம் வெளிவந்தது 2005.
ஜஸ்டின் நைரோபியில் இருக்கும் பிரிட்டன் தூதரக அதிகாரி. அவரது அன்பு மனைவி டீஸா. டீஸா அவளது மருத்துவ நண்பர் ஒருவருடன் ஆப்ரிக்காவில் பயணிக்கும் பொழுது படுகொலை செய்யப்படுகிறார்கள்.
மிகவும் மென்மையான குணங்கள் கொண்ட தன் அன்பு மனைவியின் படுகொலைக்கான காரணம் தேடி கண்டுபிடிப்பதே திரைக்கதை.
உலக புகழ்பெற்ற சில மருத்துவ நிறுவனங்கள் தடைசெய்யப்பட்ட தனது மருந்துகளை பரிசோதனை செயதற்காகவே ஏழை ஆப்ரிக்க நாடுகளில் இலவசமாக விநியோகிப்பதையும் அதன் சூழ்ச்சிகளுக்கு அந்த நாட்டு அரசிய்ல தலைவர்கள் உடந்தையாயிருப்பதையும் கண்டுபிடித்த டீஸாவை தீர்த்து கட்டியதற்கான காரணம் என்பதை கண்டுபிடிக்கிறார் ஜஸ்டின்.
டீஸாவாக நடித்திருப்பது Rachel Weisz . காதலை வெளிப்படுத்துவதிலும் ஏழை குழந்தைகளிடம் அன்பை பொழிவதும் அத்தனை இயல்பான நடிப்பு. இத்திரைப்படத்தில் நடித்தற்கான 2006ல் ஆஸ்கார் விருதினை வென்றவர்.
திரைக்கதை அமைத்தவர் Jeffrey Caine. இவரும் இப்படத்திற்கான ஆஸ்கார் விருதை வென்றவர்.
இயக்குதல் என்பது அடிப்படையில் படிமங்களாக உருமாற்றப்படும்
உண்மை. கவலை, நம்பிக்கை, காதல், அழகு, வறுமை, நோய் என பலவகைப்பட்ட உணர்ச்சிகளை இயக்குநர் Fernando Meirelles கையாண்டவிதம் அருமையிலும் அருமை. . ஒவ்வொரு காட்சியிலும் கதையை கதையை திறப்பதற்கான சாவி உள்ளது அதை எப்படி
நகர்த்துகிறார் என்பதை சொல்ல வார்த்தைகளில்லை.
ஒரு படைப்பாளியாக தனக்கிருக்கும் சமூக பொறுப்பையும் அற்புதமாக வெளிகொணர்ந்துள்ளார். உலக விருதுகள் நாற்பதிற்கு மேல் வென்றுள்ள Fernando Meirelles ஆஸ்காரும் வென்றுள்ளார்.
கதை, திரைக்கதை, இசை, எடிட்டிங் என்று பல ஆஸ்கர் விருதுகளையும் உலக அரங்கில் 42 விருதுகளை வென்ற திரைப்படம் The Constant Gardner.
சஸ்பென்ஸ் திரில்லர் விரும்பிகள் மட்டுமல்லாது அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம்.
தமிழிலும் ஈ என்று இக்கதையின் பின்னணியில் ஒரு திரைப்படம் வந்தது நினைவிருக்கலாம். ஈ படத்தை பார்க்காதவர்கள் இத்திரைப்படம் விமர்சனம் இங்கே
19 comments:
எப்படி இத்தனை நாளா தவறவிட்டேன்னு தெரியல இந்த பக்கத்தை.. இவ்ளோபடங்களா.. விரைவாய் விமர்சனங்கள் முழுசையும் படிச்சு முடிக்கணம்.. வாழ்த்துக்கள் வண்ணத்துப்புச்சியார்.. எழுதுங்க நம்மைப் போன்றவர்கள் படங்களைப் பற்றி அறிந்து கொள்ள..
படத்தை.. ரொம்ப நாள் முன்னாடியே பார்த்துச்சுங்க தல. இருந்தாலும் உங்களோட ’கம்மிங் ஸூன்’ விமர்சனத்தை எதிர் நோக்கும்.....!!!!!
படங்களே ஆவலை தூண்டுகிறது சீக்கிரம் எதிர் பார்க்கிறோம்..
உங்களோட விமர்சனம் நன்றாக உள்ளது. என்க்கும் இந்த படத்தை பார்க்க வேண்டும் போல் உள்ளது.
உங்களோட விமர்சனம் நன்றாக உள்ளது. என்க்கும் இந்த படத்தை பார்க்க வேண்டும் போல் உள்ளது.
நன்றி மகா. நன்றி..
am also so interested in cine news... i like ur page very very much...becoz u give lot of information world wide movies... thank u for the information...
Thanx Mani Ramalingam.
I thought I saw this post with just pics a couple of days back and sudden-a kaanom......
and yeah, this looks like a nice movie...edhavadhu channel-la Oscar Fever-nu poduvaangannu nenaikkaren :)
Thanx Sowmya. Yes. வீட்டு சிஸ்டம் புட்டுகிச்சு. அதான். Draft ல் போட்டுவிட்டேன்.
ஆஸ்கர் ஜீரம் அகில உலகமும் பரவி கிடக்கு.. சென்னையில ஆட்டோகாரன் எல்லாம் பட்டாசு வெடிக்கிறாங்க.. ஒண்ணும் புரியலை.. சல்தா ஹை..
அன்புள்ள வண்ணத்து பூச்சியார் அவர்களுக்கு,
இந்த படம் 3 வருடம் முன்பே பார்திருந்தாலும் உங்கள் விமர்சனம் அதை மீண்டும் அசை போட்டு பார்க்க வைத்தது,
கதா நாயகி நடிப்பு அபாரம்,தன் பொது சேவைக்கான தகவல் அரிய தன் கற்பயே இழக்க துடிப்பதும், தனக்கு குழந்தை இறந்து பிறந்த பின்பும் தாயிழந்த குழந்தைக்கு பால் கொடுப்பது,அவகளுக்கு லிப்ட் தர சொல்லி கணவனிடம் அவமானப் படுவது, இவரா மம்மி போன்ற படங்களில் நடிப்பது?,சமீப காலமாக இவரது நடிப்பிற்க்கு தீனி கிடைக்க வில்லை,
அவரது கணவன் தன் மனைவி போன இடத்தில் சென்று உயிர் விடுவது,மனதை உருக்கும் ஒன்று,மீண்டும் பார்கிறேன்,
நான் செவன் பவுண்ட்ஸ் படம் பார்த்து விட்டு அதில் இருந்து மீள முடியாமல் தவிக்கயில் இந்த படத்தினை நீஙகள் நினைவு படுத்தினீர்கள், நன்றி,கண்டிப்பாக இந்த வருட ஆஸ்கர் உங்களுக்கு திருப்தி அளித்திருக்காது,எல்லா உண்மையான கலை ரசிகர்களையும் ஏமாற்றி மசாலாவும் ஏகப்பட்ட தவறுகளும் நிரைந்த ‘உவ்வ’படத்துக்கு போய் 8விருதுகள்,
அதைப் பற்றி ஒரு கட்டுரை உஙகளிடம் இருந்து எதிர் பார்க்கிறேன்,
அந்த சோகத்தை கலை மொழி அறிந்த உஙகளிடம் தான் பகிர்ந்து கொல்ல முடியும்,
என்னுடைய பிளாக்-
http://geethappriyan.blogspot.com/2009/02/goofs-in-un-worthy-for-golden-globe.html
பார்க்க தஙகளை அழைக்கிறேன்,
படம் பார்க்கவில்லை.ஆனால் தாங்கள் எழுதிய கதையைப் படித்தால்,நாவலைப் படித்த ஞாபகம்.மதிப்புரை மதிப்புக்குரியதாக இருக்கிறது.நன்றி நண்பரே.
நன்றி கார்த்திகேயன். தங்கள் அனைத்து கருத்தும் ஒ.கே.தான். மீண்டும் நீண்டு உரையாடுவோம்.
வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் பல..
நன்றி டைரக்டர் சார். கொஞ்சம் சுருக்கமாகதான் எழுதிவிட்டேன்.
கண்டிப்பாக பாருங்கள். உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும் என்ற நம்பிக்கை எனக்குண்டு..
நல்ல விமர்சனம். நீங்கள் தவறாக நினைக்காவிட்டால் ...
இந்த நாவலை எழுதியவர் ஜான் லெ கர் (John Le Carre). உலகப் புகழ் பெற்ற ஒற்றறிதல் கதைகளை எழுதியவர். The Spy Who Came in from the Cold நாவ்ல அவர் எழுதியது தான்.
நன்றி ஜோஷ்.. தமிழில் சரியாக எழுதவில்லைதான். நீங்கள் கண்டிப்பாக திருத்த வேண்டும். அப்போதுதான் எனக்கும் தெரியும்.
தப்பா நினைக்கறதா..?? தினமும் வலையை பார்வையிடும் பல பேர் எந்த கமெண்ட்டும் போடாமல் போனாலும் சுட்டி காட்டியமைக்கு நன்றி. இதையும் சேர்த்து விடுகிறேன்.
அடிக்கடி வாருங்கள். நிறை / குறை சுட்டுங்கள்.
நன்றிகள் பல..
பி.கு: தங்கள் வலை சம்பந்தப்பட்ட தொழில் தானுங்க அடியேனும். தங்கள் வலையும் தகவல்களும் சூப்பர். வாழ்த்துகள்.
ஜான் லு கார்ன் நாவல் மிக அற்புதமான ஒன்று, அதனைப் படத்திலும் கொண்டு வந்திருப்பது சிறப்பானது, தோட்டங்களில் அன்பு நிறைந்திருக்கிறது. மரணத்திற்காக அமைதியாக காத்து நிற்கும் ரல்ஃப் ஃபியன்ஸின் அந்த தருணம், இசை, இன்னமும் நினைவில் நிற்கிறது.
வண்ணத்துபூச்சியர் அவர்களே,
Bourne Identity, Bourne Supermacy & Bourne Ultimatum ஆகிய திரைப்படங்களின் விமர்சனம் கொஞ்சம் போடுங்களேன்.
வே. விஜய் ஆனந்த்
நன்றி விஜய் ஆனந்த்.
கண்டிப்பாக செய்றேன்.
வாழ்த்துகள்.
Post a Comment