Niwemang {Half Moon}
மனித நேயத்தையும் மனித உறவுகளின் நெகிழ்ச்சியான கவித்துவ வாழ்வியலை கொண்டவை ஈரானிய மற்றும் குர்ஷித் மொழி திரைப்படங்கள்.
சதாமின் வீழ்ச்சிக்கு பின் இராக் சென்று ஒரு மாபெரும் இசை விருந்தில் பங்கு கொள்ள முயன்ற ஒரு இசை ஆர்வலரின் கதை தான்
Hafl Moon.
இரானில் வசித்த ஒரு குர்திஷ் இசைமேதையின் கதை. அவரை மாமோ என்று அழைக்கிறார்கள்.
மாமோவின் அதி தீவிர ரசிகன் காகோ. அவன் தான் இந்த இசை விருந்துக்கு செல்ல எல்லா ஏற்பாடுகளையும் செய்கிறான்.
எல்லை தாண்டி போக வாகன வசதி இல்லை. காகோவின் நண்பனிடம் ஒரு பேருந்து உள்ளது. அது கிட்டதட்ட "சுந்தரா டிராவல்ஸ்" பஸ் தான்.
நண்பனிடமிருந்து இரண்டு வாரங்களுக்கு வாடகைக்கு தருமாறும் அதற்கு ஈடாக தான் உயிரினும் மேலாக நேசித்த இரண்டு சண்டை கோழிகளை அவனுக்கு பரிசாக அளிப்பதாக கூற நண்பனும் ஒப்பு கொள்கிறான்.
இரண்டு வாரங்களில் நடந்தது என்ன..?
எல்லை தாண்டி போய் சேரும் வழியில் அடைந்த சிரமங்களையும் அவர்களின் இசை பற்றையும் மண்ணின் மணத்தோடும் நகைச்சுவை இழையோடும் அழகாக சித்தரிக்கின்றார் இயக்குநர் Bahman Ghobadi.
இவரும் என் உலக சினிமா ஆர்வத்தை தூண்டிய மஜித் மஜிதி போன்ற இரானிய இயக்குநர்.
மாமோ தனது சீடர்களை ஒவ்வொருவராக ஒவ்வொரு இடத்தில் பிக்கப் செய்து கொண்டு புறப்படுகிறார்.
காகோ வழி நெடுக தான் ஆசையாய வாங்கிய Handy Cam மூலம் அனைத்தையும் படம் எடுத்து தள்ளுகிறான்.
கடைசியாய் வந்து சேர்ந்த மாமோவின் கடைசி மகன் சீவல்புரி சிங்காரம் & காழியூர் நாராயணின் கஸ்டமரோ என்னவோ தந்தைக்கு கண்டம் என்றும் பவுர்ணமி (full moon) நெருங்குவதால் போனால் திரும்புவது கடினம் என்றும் கூறுகிறான்.
எதையும் லட்சியம் செய்யாத மாமோ இராக்கில் இசை விருந்து தனது நீண்ட நாள் கனவு என்றும் பல ஆண்டுகள் இதற்காக காத்திருப்பதாய் கூறி பயணத்தை தொடர தீர்மானிக்கிறார்.
திருவிளையாடல் ""ஹேமநாத பாகவதர்"" போல இத்தனை வாத்திய கோஷ்டிகள் இருந்தாலும் ஒரு Female Singer இல்லையே என குறை பட்டு கொள்கிறார் மாமோ.
தனது ஒரே மகளை அழைத்து செல்ல முற்படுகிறார். ஆனால் மாப்பிள்ளை தான் நடத்தும் இசை பள்ளியில் மாணவிகளுக்கு இசை பயிலுவது தடை படும் என கூறி மறுக்கிறான்.
ஹிஷோ எனற பெண்ணை சந்திக்கிறார். அவளது குரல் தெய்வீகராகம் என்றும் அவளை அழைத்து செல்வதே மிகப்பொருத்தம் எனவும் முடிவெடுக்கிறார்.
ஆனால் ஹிஷோ அவளை போன்ற 1334 இசை ஆர்வமுள்ள பெண்களுடன் வாழ்ந்து வருவதுடன் இசைக்காகவே உயிர் வாழ்பவள்.ஆனால் எல்லை தாண்டி போவதின் அபாயங்களை எண்ணி சற்று கலக்கமடைகிறாள்.
மாமோவோ எல்லா ஏற்பாடுகளும் தயார் என கூறி பேருந்தில் ரகசிய அறைக்குள் அவளை ஒளித்துவைத்து கொண்டு மேற்கொண்டு பயணிக்கின்றனர்.
வந்தது எல்லை.. செக்போஸ்ட்.
இது நம்ப பூந்தமல்லியோ அல்லது ஓசூர் செக்போஸ்ட் போல இருந்தால் ஒரு சின்ன கட்டிங்கில் மேட்டர முடிச்சிடலாம்.
ஆனால் அங்குள்ள அதிகாரியோ கேப்டன் விஜயகாந்தையே மிஞ்சுவது போல பயங்கர கண்டிப்பு. எல்லா ஆவணங்களையும் கறாராக சரிபார்கிறார்.
சரியான பேப்பர்ஸ் இல்லை என்று இரண்டு பேரை துரத்தியும் விடுகிறார்.
பேருந்து முழுவதும் அலச எதுவும் சிக்கவில்லை. ரகசிய அறைக்குள் படுத்திருக்கும் ஹிஷோ போல நமது நெஞ்சும் பட படக்கிறது.
மோப்ப நாய்களை கொண்டு கண்டுபிடித்து விட ஹிஷோவை கைது செய்து அழைத்து சென்றும் விடுகிறார்.
மாமோவும் கோஷ்டியும் மிகுந்த கவலை அடைகிறது. எல்லோரும் இப்படியே திரும்பிவிடலாம் என வற்புறுத்த மாமாவோ எதிர்த்து பேசுபவர்களை சுட்டு தள்ளுவேன் என துப்பாக்கி முனையில் மிரட்டி அடைந்தால் மகாதேவி.. இல்லையேல் மரணதேவி... என சபதமிடுகிறார்.
இந்த வயதிலும் அவரது தீராத இசை ஆர்வத்தை எண்ணி அனைவரும் சம்மதிக்கின்றனர்.
குர்ஷித் கிராமத்தில் தனது நீண்ட நாள் நண்பரும் "பாணபத்திரர்" போல அவரும் பெரிய இசை மேதை என்றும் அவரின் உதவியோடு வேறு ஒரு பெண் பாடகியை ஏற்பாடு செய்யலாம் என கூறி கிராமத்திற்கு பயணிக்கின்றனர்.
அங்கு போய் பார்த்தால் கிராமமே காலியாக கிடக்கிறது. அடிமேல் அடியாக நேற்று தான் அவர் இறந்த்தாக செய்தி வருகிறது.
சரி வந்தது வந்து விட்டோம். அவரது ஈமச்சடங்கிலாவது கலந்து கொள்வோம் என வருத்தபடுகிறார் மாமோ.
அந்த ஈமசடங்கில் ஒப்பாரி பாடல் ஒன்றை கேட்கிறார். இதுவும் தெய்வீக குரலாக இருக்கிறதே என குரலுக்கு உண்டான பெண்ணை தேடுகிறார். கிடைக்கவில்லை.
நண்பரின் மகன்களிடம் பேசி சில வாத்திய உபகரணங்களை மட்டும் பெற்று கொண்டு பயணத்தை தொடருகின்றனர்.
திடிரென தேவதை போல வந்து பேருந்து மீது குதிக்கிறாள்ள் பெண்ணொருத்தி.
அவள்தான் ஈமசடங்கில் பாடியதாகவும் மாமோவின் தீவிர ரசிகை என்றும் அவருக்கு உதவுவதற்காகவே தில்லான மோகனாம்பாளுக்கு உதவ வந்த
S.V. சஹஸ்சரநாமம் போல சில ஆட்களுடன் வந்திருப்பதாகவும் கூறிகிறாள்.
இசைக்கருவிகளை சவப்பெட்டியில் வைத்து
எடுத்து சென்று விடலாம் என்றும் ஆட்கள் மோட்டர் பைக்கில் செல்லவும் ஏற்பாடு செய்கிறாள்.
அங்கு பல வித இடையூறுகள்.
சவப்பெட்டிகள் மாட்டி கொள்ள கோஷ்டிகள் இசை விருந்து நடக்கும் பகுதிக்கு சென்று விட்டதாக தகவல் வருகிறது.
காவலாளிகளிடம் மாட்டிக்கொண்டு மொட்டையடிக்கப்பட்ட தலையோடு வந்து சேருகிறான் காகோ. இதுநாள் வரை தான் எடுத்த கேமிராவில் கேசட் இல்லை என்பதும் அறிந்து விதியை நொந்து கொள்கிறான்.
கடும் குளிரிலும் பனி மழையிலும் மாமோ அந்த பெண்ணுடன்
குதிரையில் பயணமாகிறார்.
இரண்டு வாரம் நெருங்கிவிடுகிறது. பாதி நிலவும் தென்படுகிறது.
தன் உயிர் போனாலும் இசை விருந்து நடக்கும் இடத்தில் கொண்டு போய் சேர்க்குமாறு தாழ்மையுடன் கூறுகிறார்.
தாங்க முடியாத குளிரால் சிறிது சிறிதாக மாமோ உயிரிழக்கும் நிலைக்கு வர ஒரு காலி சவப்பெட்டியில் தானே வலியச் சென்று படுத்தும் கொள்கிறார்.
இசை நிகழ்ச்சி நடைபெறும் இடம் நோக்கி சவப் பெட்டியை அந்த பெண்ணும் மாமோவின் கடைசி மகனும் இழுத்து செல்கின்றனர்.
அத்துடன் முடிகிறது திரைப்படம்.
மண்ணின் மணத்தோடு நகைச்சுவை கலந்த அருமையான திரைப்படம். மொழி புரியாவிட்டாலும் அருமையான இசையும மெல்லிய ரீங்காரமாய் வரும் பாடல்களும் கேட்பதற்கு அவ்வளவு இனிமை. இசைக்கு மொழி தேவையில்லை என்பதை சொல்லவும் வேண்டுமோ.?
தேவதையாக வந்த Golshifteh Farahani. உண்மையாகவே ஒரு அழகு தேவதைதான்.
அண்மையில் வெளிவந்த Body of Lies ஹாலிவுட் திரைப்படத்திலும் நடித்திருக்கிறார்.
இஸ்தான்புல் சர்வதேச திரைப்படவிழாவில் பரிசு பெற்றதுடன் பல பரிசுகளையும் தட்டி சென்றுள்ளது Half Moon.
சந்தர்ப்பம் கிடைத்தால் நிச்சயம் பாருங்கள்.
Labels:
Bahman Ghobadi,
Dont Miss Movies,
Golshifteh Farahani,
Half Moon,
Irani Film,
Music Festival
|
Estou lendo: Niwemang {Half Moon}Tweet this! | Assine o Feed |
Subscribe to:
Post Comments (Atom)
64 comments:
Pictures creating interest to see narration.War interfering in a peaceful life?
BODY OF LIES-ன் ஹீரோயினா (Golshifteh Farahani) இவர்?
Yes Dr. About participating in a music concert during war. Thanx for spending your precious time. It motivates me a lot.
ஆமாம் பாலா. இரானிய அழகு தேவதைதான்.
விமர்சனங்களுக்கே ட்ரெயிலர் போடும் முதல் விமர்சகர் நான் அறிந்த வரையில் நீங்கள்தான்,அன்பரே!!
நல்லாயில்லையா டைரக்டர் சார்..?? ஏதோ சும்மா இருக்கட்டுமே என்று போட்டு வைத்தேன்.
இரானில் வசித்த ஒரு குர்திஷ் இசைமேதையின் (மாமோ) கதை. படம் கண்டு ரசித்தவன் நான். இருந்தாலும் தங்களது விமர்சனத்துக்கு காத்திருக்கிறேன்.
Nice pics....Hope the review is out, soon??!!
ஆமாம் வாசவன். நன்றி.
Thanx Viji. Sure..
நீங்கள் இட்டிருக்கும் படங்களே இத் திரைப்படம் பற்றிய எதிர்பார்ப்பினைத் தூண்டிவிடுகிறது. இத் திரைப்படம் இங்கு கிடைப்பதில்லை. இணையத்தில்தான் தேடிப் பார்க்கவேண்டும். விமர்சனத்தையும் எழுதுங்கள் நண்பரே !
wanted to ask you.....where do you get to see these 'phoren' movies? Are these movies available with most DVD libraries?
என்னங்க இது இப்படியே இமேஜப்போட்டே காலத்த ஓட்டீருவீங்களாட்டா தெரியுதே அப்பப்ப பதிவும் எழுதுங்க
மைடியர் கார்த்திக். இமேஜ் போட்டு நாலுநாள்தான்யா ஆச்சு.
அதுக்குள்ள இப்படியா..??? போட்டு தாக்கறிங்களே.
எழுதிட்டோம்ல.. இப்ப நிஜமா தாக்குங்க...
வணக்கம் .பதிவு அருமையாகவுள்ளது.வண்ணப்படங்கள் மனதைக் கொள்ளைக்கொள்கிறது.
நன்றி கல்பனா. அடிக்கடி வாருங்கள்.
அடடா! இத்தனை நாள் இப்படி ஒரு அழகான சினிமா பக்கம் வராமல் இருந்து விட்டேனே!
விமர்சனம் மிக அருமை. உங்கள் மற்ற பதிவுகளையும் ப்டிக்கும் ஆர்வம் உண்டாகிறது. ப்டித்து விட்டு கருத்து கூறுகிறேன்.
முதல் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி தீபா.
படித்து ரசியுங்கள். தங்களை போன்ற முகம் தெரியாத பல நல்ல உள்ளங்களின் அன்பு பெருகும் நட்பால் நானும் ஒரளவு தங்களை மகிழ்ச்சியடைய செய்ததற்கு கிடைத்த வாய்ப்பை எண்ணி நானும் மகிழ்ச்சியால பறக்கிறேன். Me butterfly na...
இந்த மாதிரி படங்களெல்லாம்... நான் பார்க்கறது இல்லை. ஆனா பதிவே பார்த்த எஃபெக்ட் கொடுக்கறனால... படம் முழுக்க பார்த்த திருப்தி.!
a nice story ButterflySurya.See the devotion of Maamo to music,it is really wonderful You have developed an individual writng style ButterflySurya apart from ur posts.Wishing u all the best in ur writings.
Thanx Dr. With your wishes and motivation I am trying to improve. Thanx a lot
நன்றி பாலா. You are making to fly often. Thanx a lot. Keep blogging & rocking. Cheers.
நல்ல படம்
நான் இப்போதைக்கு இரான் படம் பாக்கவேணாம்னு முடிவு பண்ணிருக்கேன்.கடைசியா ஒரு ரண்டு படம் பாதேன்.அப்பாஸ் இயக்கிய டேஸ்ட் ஆப் செர்ரி,குளோஸ்அப்(இது ரண்டும் புரிஞ்சுக்கரளவுக்கு எனக்கு பத்தல!).அது போகா இன்னும் ரண்டு படம் வேர கைல இருக்கு.
உங்க பதிவே படம் பாத்த மாதிரி இருக்குங்க சூர்யா
அருமையான விமர்சனம்.
ஹால்ஃப் மூன் படத்தை தாங்கள் விமரிசனம் செய்துள்ள நகைச்சுவை பாணி நன்றாக உள்ளது. எல்லா படங்களையும் இதே பாணியில் விமரிசனம் செய்ய முடியாதுதான். இருந்தாலும் மற்ற விமரிசனங்களைவிட இதற்கு ஒரு ஸ்டார் அதிகம்.
your website so cute.,
great work.keep it up
வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி கார்த்திக்.
அன்பு முகில் .. முதலில் தங்கள் வரவே எனக்கு பேரானந்தம். ஒரு நல்ல எழுத்தாளரின் பார்வையான கருத்துகள் புரிகிறது. எனக்கு பொறுப்பும் கூடி உள்ளதாக உணர்கிறேன்.
இதுவரை எந்த விமரிசனமும் இந்த பாணியில் இல்லை. Just a trial.
Happy you gave one more *
Very nice Mugil.
Plz do visit when time permits. Again thanx for your wishes and valuable comments.
Thanx ரசிகன் பாலு.
நல்ல படங்களை அறிமுகம் செய்யும் சிறந்த பணி செய்யறீங்க படங்கள் மனசைகொள்ளை அடிக்கின்றன.டிவிடி வாங்கிப்பார்த்துடறேன் நன்றிசூர்யா
வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ஷைலஜா..
பாருங்கள். ரசியுங்கள். வாழ்க்கையை கொண்டாடுங்கள். All the best..
"தன் உயிர் போனாலும் இசை விருந்து நடக்கும் இடத்தில் கொண்டு போய் சேர்க்குமாறு தாழ்மையுடன் கூறுகிறார்.
தாங்க முடியாத குளிரால் சிறிது சிறிதாக மாமோ உயிரிழக்கும் நிலைக்கு வர ஒரு காலி சவப்பெட்டியில் தானே வலியச் சென்று படுத்தும் கொள்கிறார்."
நல்ல அழகான விமர்சனம் . பிரசுரித்த படங்களும் நீங்கள் விமர்சனம் செய்யும் விதமும் நன்று. என்னுடைய இடுகையில் கருத்துரை இட்டமைக்கு நன்றி .தொடர்ந்து வாசியுங்கள்.
ராஜ்குமார். வருக ..வருக.. நிறை /குறை தருக.. தருக..
நன்றி.
Thanks for the comment.. you have a nice blog but I cant read too much of tamil ! just very basic stuff..
sorryinga nanum intha kathai review fulla padikalam parten.. but ennaku pudichathu... pakka kollywood masala movies than!
ivalo arivu illa ennaku.
btw, thnks for visiting my blog... ange erumai sonningala? arumai sonningala? :D
Thanx Suchitra. Keep visiting.
Raz .. Thanx for your visit and comments.
அட அருமைன்னு சொன்னேன்.
seems like u got very good collections of movies.. After reading this..felt like watching the movie..will update my netflix queue
படம் முழுக்க இசை என்று வருகிற்தே,நாம் ரசிக்கக் கூடிய இசையாக இருக்கிறதா நண்பரே?
மதிப்பிற்குரிய இயக்குநரே.. "மொழி புரியாவிட்டாலும் அருமையான இசையும மெல்லிய ரீங்காரமாய் வரும் பாடல்களும் கேட்பதற்கு அவ்வளவு இனிமை" ..
சுட்டிகாட்டியதற்கு நன்றி. இதையும் தற்போது சேர்த்துவிட்டேன்.
Thanx for your visit and wishes Carpe Diem.
Hi
உங்கள் வலைப்பதிவ வலைப்பூக்களில் பதித்ததற்கு நன்றி. வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.
உங்கள் இணைப்பை இப்பூக்களில் பார்க்கவும்.
நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்
மதிப்புற்குரிய வண்ணத்துபூச்சியார் அவர்களுக்கு அன்பு வணக்கம்,
உங்களின் வலைப்பூ பார்த்தேன் , இதைபோல் ஒரு உலக சினிமா அறிந்த நண்பரைத்தான் தேடிகொண்டிருந்தேன், எனக்கும் நண்பர் வர்கோத்தமனுக்கும் , உங்களுடன் உரையாடவேண்டும் என்பது விருப்பம், வைப்பு கிடைத்தால் சந்திப்போம்
நன்றி...
கே.ஆர்.பி.செந்தில்
நன்றி செந்தில்.
மிக்க மகிழ்ச்சி.
நண்பர் வர்கோத்தமனுக்கும் வாழ்த்துகள்.
நிச்சயம் சந்திப்போம்.
வலைப்பூக்கள்.காம் நண்பர்களுக்கு நன்றிகள் பல..
நல்லதொரு முயற்சி!!
வாழ்த்துக்கள் உங்கள் வலைபதிவுக்கு!!
Thanx Rebel.
வண்ணத்துப்பூச்சியாருக்கு என் மறு வணக்கமும்
பெரும் நன்றியும்.
//சினிமா இந்தியரின் வாழ்வோடு இசைந்த இயல்பான ஒன்று. ஆனால் எது நல்ல சினிமா. பழைய தமிழ் சினிமாக்களா..??? கதையமைப்பு என்பதே தெரியாத தற்போதைய சினிமாக்களா.?
அது என்ன உலக சினிமா.. ஏன் தமிழ் சினிமாக்கள் மட்டும் உலக அளவில் ஒரு போதும் போய் சேரவில்லை.
உலக சினிமாக்களில் என்னதான் உள்ளது. அவர்கள் மட்டும் உலக விருதுகளை வாரி குவிக்கிறார்கள். அந்த சினிமாக்கள் எவை..?//
நானும் இது போன்ற கேள்விகளுடனே உள்ளேன்.
எஸ்.இராமகிருஷ்னன் மற்றும் செலியன் அவர்கள் எனக்கு அறிமுகபடுத்தியதே உலகசினிமாக்கள். அவைகளை படித்தும், பார்த்தும் அது தந்த புது அனுபவமும் சிலிர்ப்பும் என்னை நல்ல சினிமாக்களை தேடிபிடித்து பார்க்க ஆர்வத்தை ஏற்ப்படுத்தி விட்டது. அவர்களுடைய பெரும்பாலான படங்களை பார்த்தாச்சி. இனி நீங்கள் அறிமுகப் படுத்தும் நல்ல படங்களையும் தேடிபிடித்து பார்ப்போம். உங்கள் அறிமுகம் கிடைத்ததில் எனக்கு மகிழ்ச்சி.
இந்த அரை நிலவை நிச்சயம் பார்த்து விடுகின்றேன்.
நன்றியுடன்.
ஆ.முத்துராமலிங்கம்
சாலிகிராமம்.
நன்றி முத்துராமலிங்கம். மற்ற பதிவுகளையும் ஒரு பார்வையிடுங்கள். எனக்கும் மிக்க மகிழ்ச்சியே.
முழு படத்தையும் மிக அழகாக வார்த்தைகளால் செதுக்கி .... நிறைவு... நண்பரே !
நன்றி அசோசியேட்.
மிக அருமையாக அறிமுகப்படுத்தியுள்ளீர்கள். தேடிப்பிடித்துப் பார்ப்பேன்.
நன்றி டொக்டர். நிச்சயம் பாருங்கள். அடிக்கடி வாருங்கள்..
எக்கணமும் மயக்கும் வண்ணத்துபூச்சியின் வண்ணங்கள் போல... வண்ணத்திரையில் வரும் வாழ்வின் வண்ணங்களை... நீங்கள் பார்க்கும் பார்வை... எங்களின் நெஞ்சங்களையும் வண்ணத்துபூச்சியார் பக்கம் திருப்புகிறது...
சிறந்த படமொன்றை அறிமுகம் செய்தமைக்கு நன்றி...
அருமையான வலைப்பூ...எல்லாவற்றையும் படித்து..பின்..தொடர்பு கொள்கிறேன்
அருமையான வலைப்பூ...எல்லாவற்றையும் படித்து..பின்..தொடர்பு கொள்கிறேன்
நன்றி மகேந்திரன். வண்ணத்துபூச்சியை துரத்தி பிடித்த நாட்கள் என்றுமே இனிமையானவை..
எந்த வயதினரையும் குழந்தையாக்கும் வண்ணத்துபூச்சி..
வாழ்த்துகள்.
வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி T.V.R.
படித்து ரசித்து நிறை / குறை கூறுங்கள்..
நன்றி HS.
//wanted to ask you.....where do you get to see these 'phoren' movies? Are these movies available with most DVD libraries?
There are somany forums dedicated for them.You may need a rapidshare premium account.Thats all.
Google it.you will find lots.
Thanx Rebel.
Hi the write up gives a good insight about the movie. The review is as poetic as the title.
Thanx Karthika
நண்பருக்கு வாழ்த்துக்கள்.
தொடர்ந்து நல்ல படங்களை அறிமுகப்படுத்துங்கள். நன்றி
நல்ல திரைப்படமாகத்தான் தோன்றுகிறது. வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் பார்ப்பேன். நம்ம ஊரு தில்லானா மோகனாம்பாளுடன் ஒப்பிட்டிருக்கும் உங்கள் சிந்தனைக்கு எனது பாராட்டுக்கள்....
Post a Comment