ஸ்பெயினில் வாழும் ஒரு சில குடும்பங்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களின் தொகுப்பே இந்த திரைப்படம்.
தாயின் பெருமைகளை சார்ந்து எடுக்கப்ப்ட்டதாலும் ஒரு மகனை மையப்ப்டுத்தியதாலும் திரைப்பட பெயர் All about my mother.
Barcelona To Madrid:
ஒரு காமுகனால் கைவிடப்பட்டு கருவை சுமந்து பயணமாகிறாள் மேனுலா.
17 வருடங்கள் கணவனை மறந்து அவன் விபரங்களை மறைத்து தன் அன்பு மகனுடன் ஸ்டீபனுடன் மேட்ரிட் நகரில் வசித்து வருகிறாள்.
உடல் உறுப்புகளை தானம் செய்யும் உறவினர்களிடம் அதன் அவசியத்தையும் அவற்றின் பயன்களையும் எடுத்து சொல்வதே அவள் வேலை. {co-ordinator Donor organ transplants}
ஸ்டிபனுக்கோ மிகப்பெரிய எழுத்தாளராக வேண்டும் என்பதே லட்சியம். அதற்காக வாழ்க்கையின் அனைத்து நிகழ்வுகளையும் அனுபவங்களையும் குறிப்பெடுத்து கவிதையாக கதைகளாக வேண்டும் என தீராத ஆர்வத்துடன் இருக்கிறான்.
பார்சிலோனாவிலிருந்து வந்திருந்து நடைபெற்று கொண்டிருக்கும் நாடகத்தை காண ஆவலுடன் இருக்கிறார்கள் இருவரும்.
ஸ்டிபனின்17வயது பிறந்தநாளில் தாயும் மகனும் அவள் தனது இளவயதில் பாத்திரமேற்று நடித்த நாடகத்தை பார்க்க செல்கிறார்கள்.
நாடகம் முடிந்ததும் ஆர்வத்தாலும் பிறந்த நாள் சந்தோஷத்தாலும் ஹீமா என்ற நடிகையிடம் ஆட்டோகிராப் வாங்க ஒடும்போது கார்விபத்தில் பலியாகிறான் ஸ்டீபன்.
ஒரே மகனின் திடிர் மரணத்தால் சொல்ல முடியாத வேதனையுடன் அவனது உறுப்புகள் அனைத்தையும் தானமாக கொடுக்க சம்மதிக்கிறாள்.
Back To Barcelona
மகனின் பிரிவால் அவளால் எதுவுமே செய்ய இயலவில்லை. வேலையையும் உதறிவிட்டு வாழ்க்கையே வெறுத்துபோய் தனது கணவனான லோலாவைத் தேடி பார்சிலோனாவுக்கு பயணமாகிறாள் மேனுலா.
தனக்கு மகன் பிறந்ததும் வளர்ந்தும் அவன் திடீரென விபத்தில் இறந்ததும் தெரியாதவன் லோலா.
பார்சிலோனாவில் தனது பழைய தோழி அக்ரடோவை சந்தித்து தான் பட்ட வேதனைகளையும் தனது நிலையையும் கூறுகிறாள். காலம் எல்லாவற்றையும் மாற்றிவிடும் அதுவரை தன்னுடன் தங்கும் படியும் அவளுக்கு வேலை ஏற்பாடு செய்வதாகவும் அவளது கணவனையும் கண்டுபிடித்துவிடலாம் என நம்பிக்கை ஊட்டுகிறாள்ள் தோழி. ஆனால் அக்ரடோ பாலினம் மாறி விபச்சார தொழில் புரிபவள். திருநங்கைகளும் பாலியில் தொழில் புரிபவர்களுமே அவளது துணை. அரைமனதுடன் அவளுடன் தங்க சம்மதித்து வேலை தேடும் முயற்ச்சியில் ஈடுபடுகிறாள்.
அக்ரடோவின் தோழியான ரோஸா. செவிலியும் பாலியல் தொழில் செய்பவர்களுக்கான மறு சீரமைப்பு வாழ்க்கை ஏற்படுத்தும் சேவையும் செய்துவருபவள்.
ரோஸாவை சந்தித்து உதவி கோருகிறாள் இருவரும்.
ரோஸாவின் தந்தை ஞாபக மறதி நோயால் பாதிக்கப்டடவர். எனவே தாயிடம் மேனுலாவின் நிலையை எடுத்து கூறி தந்தையை கவனிக்க அவளது வீட்டிலேயே வேலை ஏற்படுத்தி கொடுக்க முயற்ச்சிக்கிறாள்.
ரோஸாவின் தாய் மறுக்கவும் அவளை இது போன்ற மனிதர்களின் நட்பையும் அவளது சேவையும் அடியோடு வெறுக்கிறாள். தாயின் போக்கை எண்ணி வருந்தி குடும்பத்தை பிரிந்து மேனுலாவுடன் சேர்ந்து வசிக்கிறாள்.
மேட்ரிடில் கடைசியாக மகனுடன் நாடகம் தற்போது பார்சிலினோவில்
நடைபெற்று கொண்டிருக்கிறது. மகனின் பிரிவை எண்ணி தினந்தோறும்
நாடகம் காணச்செல்கிறாள். ஒரு நாள் நாடக நடிகையான ஹீமாவை சந்தித்து நடந்தது அனைத்தையும் கூறவே தன் காரியதரிசியாக
வேலையில் அமர்த்துவதுடன் போதை மருந்துக்கு அடிமையான தனது மகளையும் கண்காணிக்க வேண்டுகிறாள்.
மகளான நினாவுக்கோ மேனுலாவின் வருகையும் அவள் தன்னை கண்காணிப்பதையும் பொறுக்க முடியாமல் நித்தம் சண்டையிடுகிறாள். நினாவை திருத்த தன்னாலான அனைத்து முய்ற்ச்சிகளையும் செய்கிறாள் மேனுலா.
இதற்கிடையில் ரோஸா தான் கருவூற்று இருப்பாதாகவும் அதுமட்டுமல்லாது தனக்கு எய்ட்ஸ் நோய் தாக்கி இருப்பதையும் கூறவே அதிர்ந்து போகிறாள் மேனுலா.
அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக ரோஸாவின் கர்பத்திற்கு காரணம் பல பெண்களுடன் தொடர்புடைய தன்னுடைய கணவன் லோலாவேதான் என்பதை எண்ணி மேலும் குழப்பமும் வருத்தமும் அடைகிறாள்.
ரோஸா ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்து விட்டு எய்ட்ஸ் தீவிரமாகி இறக்கிறாள்.
லோலாவை சந்தித்து அவனின் செய்கைகளையும் அவனுக்கு ஒரு மகன் பிறந்து 17 வயதில் இறந்ததையும் கூறவே தான் செய்த செய்கைகளையெல்லாம் எண்ணி எண்ணி வருந்துகிறான்.
Again To Madrid:
கால மாற்றத்தாலும் தனது வாழ்க்கையில் புதிய வரவான பிஞ்சு குழந்தைக்கு ஸ்டீபன் என்று பெயரை சூட்டி அவனுக்க்காக தான் வாழ வேண்டும் என மன உறுதியோடு Aids Awarness Co ordinator வேலையை ஏற்றுக்கொண்டு மீண்டும் மேட்ரிட் நோக்கி பயணமாகிறாள்.
Visit To Barcelona:
பணி நிமித்தம் காரணமாக இரண்டு வருடம் கழித்து தன் குட்டி மகனுடன் பார்சிலோ செல்லும் மேனுலா அனைவரையும் சந்திக்கிறாள்.
தோழியான அக்ரடோ பாலியல் தொழிலை விட்டுவிட்டு நாடக நடிகை ஹீமாவின் காரியதரிசியாகிறாள். மகளும் நினாவும் போதை பழக்கத்தை விட்டு மணமாகி செட்டில் ஆகிவிட்டதை அறிந்து மகிழ்கிறாள்.
மனநலம் குன்றியவர், பாலியல் தொழில் புரிபவர், பாலினம் மாறியவர், எய்ட்ஸ் நோய் தாக்கியவர், போதைபழக்கத்திற்கு அடிமையானவர் என்று சமூகத்தால் வெறுத்து ஒதுக்ப்படும் பல்வேறு பாத்திரங்களை வைத்து எந்த வித ஆபாசமோ அருவருப்பான காட்சிகளோ இல்லாத ஒரு அற்புத திரைப்படம்.
சாவின் விளிம்பில் இருக்கும் நிலையில் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் தந்தையுடன்வாக்கிங செல்லும் நாய் ரோஸாவை
பார்த்து குதித்து அன்பை வெளிப்படுத்துவதும் ஆனால் தந்தையே மகளை பார்த்து What is your age..?? What is your height ..?? என்று கேட்பது நெகிழ்ச்சியான காட்சிகள்.
ரோஸாவாக நடித்த Penélope Cruz பற்றி சொல்ல வார்த்தைகள் இல்லை. பல உலக விருதுகளை குவித்ததுடன் இந்த வருடம் ஆஸ்கர் அள்ளியவர்.
மேனுலாவாக நடித்த Cecilia Roth மிகச்சிறந்த ஸ்பெயின் நடிகை. பல விருதுகளை பெற்றது மட்டுமல்ல பல உலக விழாக்களில் சிறந்த திரைப்ப்டங்களை தேர்ந்தெடுக்கும் குழுவிலும் இருப்பவர்.
இயக்கம் Pedro Almodóvar. இவரை பற்றி ஒரு புத்தகமே போடலாம் போல இருக்கு. யப்பா பதக்க பட்டியல் இங்கே .. பொறுமை இருப்பவர்கள் படிக்கலாம்.
47 உலக விருதுகளுடன் 2000ம் ஆண்டு ஆஸ்கர் வென்றது.
நிச்சயம் பார்க்க வேண்டிய திரைப்படம்.
43 comments:
Pics are nice. Awaiting.
வாழ்த்துக்கள் (யூத்)
நன்றி ஜமால். சுகம் தானே..???
Thanx Tulpan..
விரைவில் விமர்சனம்...//
பதிவுக்கு சஸ்பென்ஸ் வைக்கறேன்னு எனக்கு பெயர்.
விமர்சனத்திற்கும் சஸ்பென்ஸா... :))))
சரி சரி சீக்கிரம் வரட்டும்.
பினாலப்பி க்ரூஸ் ஆஸ்கர் வாங்கியிருக்கற சமயம் பார்த்து... கலக்கலா.. ஒரு படம் எழுத போறீங்களா..?!! வெய்ட்டிங்.
அதுசரி... அஸய்ன்மெண்ட் முடிஞ்சிதா..?
ஸ்டில்ஸ் நல்லாருங்க சூர்யா
சின்ன பிட் விமர்சனம் கூட நல்லாருக்கு.
Fashion படம் பாத்தீங்களா
நன்றி புதுகை... கண்டிப்பாக முயல்கிறேன்.
கொஞ்ச நாளா முன்னோட்டமா ஓட்டுறீங்களே.. படத்தைப் போடுங்க :)
இல்ல பாலா. முடிய இன்னும் ஒரு வாரம் ஆகும்.
கொஞ்சம் நாள் முன்னால பார்த்ததுதான். Penélope Cruz one of my fav.
பிட் விமர்சனமாக இருக்கலாம். பிட் படமாகத்தான் இருக்க கூடாது. நன்றி நண்பரே.
ரவி சங்கர், எழுதவே முடியாத நிலைமை நைனா.வீட்டு சிஸ்டம் மக்கர் பண்ணிடுச்சு. கொஞ்சம் பொறு கண்ணு.. கண்டிப்பா முடிச்சுடறேன்.
// பிட் விமர்சனமாக இருக்கலாம். பிட் படமாகத்தான் இருக்க கூடாது.//
ரசிகன ரசிக்க வெக்குர எந்த பிட்டுமே தப்பில்லை.
உங்க பிட் விமர்சனம் உட்பட :-))
நன்றி கார்த்திக். விரைவில் அதுவும் போட்டுறுவோம்..
இந்த படம் பாத்துட்டேன்... பாலின மாறியவர்கள் பற்றிய கதை. நல்லா இருந்தது. ஆனாலும் எனக்கு இந்த இயக்குநரின் Volver படமே ரொம்ப பிடித்திருந்தது, அந்த படம் கிடைச்சால் பாருங்க, நல்லா இருக்கும் :)
நன்றி ஆளவந்தான். மீட்டிங் பதிவு சூப்பர். வாழ்த்துகள்.
கண்டிப்பாக பார்க்கிறேன்.
எதிர்பார்க்கிறோம்
Definitely a nice story.Waiting for ur text.
Thanx Dr..
Again Thanx Dr M.
வணக்கம்..அன்று குறும்பட வட்டத்தில் சந்தித்தோம்..மணி..சியர்ஸ் பட இயக்குனர்....
Hi Mani Cheers.
நண்பரே.. நீங்கள்தான் butterfly சூர்யாவா? தோழர் அகநாழிகை உங்களைப் பற்றி சொல்லி உள்ளார்.. உலக சினிமா பற்றி அருமையாக எழுதுகிறீர்கள்.. வாழ்த்துக்கள்..
கீழை ராசா பதிவின் மூலம் உங்கள் பதிவிற்கு வந்தேன். இவ்வளவு நாட்கள் எப்படி உங்கள் பதிவை தவறவிட்டேன் என ஆச்சரியமாக இருக்கிறது.
மிக்க நன்றி.
இனி தொடர்ந்து வருகிறேன்.
manjoorraja.blogspot.com
தோழரே.. நீங்கள்தான் butterfly சூர்யாவா.. உலக சினிமா பற்றி அற்புதமாக எழுதுகிறீர்கள்.. உங்களைப் பற்றி நண்பர் அகநாழ்ழிகை என்னிடம் பேசினார்.. வாழ்த்துக்கள்..
சுவாரசியமான பதிவு... இப்போது மனிதாபிமானிகள் மத்தியில் பரபரப்பாக உள்ள விஷயம் பற்றி எனது பதிவில்.. நேரம் இருந்தால் வரலாம்..
http://kottumurase.blogspot.com/2009/03/blog-post_03.html
Hi
Nice post. I need a help in getting the subtitle of this movie. I was able to download the movie and i tried the subtitles that were available on subtitle.org, subscene.com, allsubtitles.org and few other sites..But none of them are in sync. the subtitles come well before the scenes.If u have a subtitle file for single CD let me know.
all your posts are wonderful
Thanks
Sundari
Dear vannathupoochiyaar..
very nice review abouth the film,very adorable way of writing,iam planning to download this movie soon.and make a comments again,nice job,
have you seen che(2008)argentina film,about cheguvara,its suppose to be a great biographical film,iam keeping this for weekend,keep in touch
karthikeyan
dubai
The husband & wife getting united & naming the child Stephen are great.Totally so many characters but each one having a valuable note.Your love for cinema is great Butterfly urya.
தங்கள் வெளியிட்டுள்ள படத்தின் புகைப்பட ஸ்டில்களும் கதை விமர்சனமும் அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
அன்பு நண்பர் கார்த்திகைப் பாண்டியன்.. வருக வருக.. வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் பல..
உங்கள் அன்பு என்னை சிறகடிக்க செய்கிறது.
தொடர்ந்து வருகை தந்து நிறை / குறை சொல்லுங்கள்.
அகநாழிகைக்கும் நன்றிகள்.
தமிழ் நேசனே.. உங்கள் வருகைக்கு நன்றி. உங்கள் வலையும் பதிவுகளும் அருமை. பின்னூட்டம் இட முடியவில்லை. சரிபார்க்கவும்.
வலை பதிவில் சந்தேகங்கள் இருந்தால் நண்பர் வேலன் / தமிழ் நெஞ்சம் அவர்களை அணுகவும்.They are experts.
Hi Sundari.
Thanx for your visit and comments. It motivates me a lot.
This DVD I got from a friend @ Chennai. I watch movies mostly on DVD and film festivals. Sorry yar., Not on downloads.
Thanx again.
Hi Dubai Karthik.
I guess you are referring Che Part II.
No not yet. Still in my list "Movies to watch"
Thanx for your visit and wishes.
Keep me posted about the film after you watch.
Thanx Dr.M.
வாங்க வேலன்.
நன்றி...
அருமையான விமர்சனங்க சூர்யா
எனக்கு பிடித்த இயக்குனரும் கூட.இவரப்பத்தி நம்ம எஸ்ரா வோட பதிவு
நன்றி கார்த்திக். இவருடைய பல படங்களை தேடி கொண்டிருக்கிறேன். பார்த்து விட்டு ஒவ்வொன்றாக பதிவிடுகிறேன். Thanx my dear..
நல்ல பதிவு சூர்யா....அல்மதோவின் மிக முக்கியமான படம் இது. விரைவில் நானும் பதிவிடுகிறேன்...வேலை சூழலில் சிக்கியுள்ளதால் கதைக்க நேரமில்லை. விரைவில் திரும்பி வருகிறேன்...
நன்றி உமா. எழுத்துகளிலேயே அவசரம் தெரிகிற மாதிரி இருக்கிறதே..
கவிதாயினியின் வருகையே மிகுந்த மகிழ்ச்சிதான்.
பொறுமையாக வாருங்கள்.
நல்லதோரு இயக்குனரையும் திரைப்படத்தையும் அறிமுகம் செய்தமைக்கு நன்றி. கடந்த ஒரு வாரத்தில் 3-4 பதிவு. உங்கள் ஒவ்வோரு பதிவும் பின் புலத்தில் நிறைய நேரத்தையும்,உடல்,மன பிரயாசையையும் வேண்டி நிற்கும் என் யோசிக்கும் பொழுது உங்கள் உழைப்பு பிரமிப்பாக இருக்கிறது. தொடருங்கள்
வாழ்த்துக்களுடன்.....
நன்றி ஜெ.ஜெ.
"ஓ.. நீங்கள்தான் வண்ணத்துப்பூச்சி சூர்யாவா..? பட்டர்பிளை சூர்யா சொன்னார்.. நிறைய தெரிந்து கொண்டேன்..! உங்களை விரைவில் சந்திக்க வேண்டும் என்று நினைத்துள்ளேன்.."
ச்சும்மா.. ஒரு ஜாலிக்குண்ணே..!
Post a Comment