ஷாங்காயில் பிறந்தது 17 ஜீலை 1958 . இவரது பெற்றோர்கள் இவருக்கு 5 வயது இருக்கும் போது ஹாங்காகிற்கு இடம் பெயர்ந்தனர். ஷாங்காய் மொழியும் மேண்ட்ரின் மொழியும் மட்டுமே பேச தெரிந்த இவர் காண்டனோசி பேசும் ஹாங்காங்கில் சிறிது சிரம்ப்பட்டார்.
தனது ஆர்வத்தாலும் சிறுவயதில் தாயுடன் பல திரைப்ப்டங்களை பார்த்தே காண்டனோசி மொழியை கற்று கொண்டார்.
1980ல் பாலிடெக்னிக்கில் கிராபிக் டிசைனில் டிப்ளமோ முடித்தார். பிறகு ஹாங்காங் தொலைகாட்சியில் தயாரிப்பு சம்மந்தபட்ட வேலைகளுக்கான வேலையில் சேர்ந்தார்ர் 1981ல் கதையாசிரியரானார்.
பேட்ரிக் டாமின் திரைப்படங்களுக்கு கதையாசிரியாக பணியாற்ற துவங்கினார். கடந்த 18 வருடங்களில் தன்க்கென ஒரு திரை மொழியையே உருவாக்கி விட்டார் என்றால் அது மிகையாகாது..
இவரது திரைப்படங்களில் இசை ஒரு சிறப்பு. திரைப்படங்களுக்காக இசையா அல்லது இசைக்காக நகரும் காட்சிகளா என்று பிரித்து அறியாதபடியான ஒரு திரை அனுபவம் அது...
சிறு வயதில் ஹாங்காகின் தெருக்களில் தான் கேட்ட அனைத்து ஒரு வித வினோத இசையே தனது திரைப்ப்டங்களில் ஊடுருவி பார்ப்பவரின் உள்ளங்களின் ரீங்காரமிட வேண்டும் என்பதே தனது ஆசை என்கிறார்.
As Tears Go By என்ற தனது முதல் திரைப்படத்தை 1988ல் இயக்கினார்.
1994 ல் இயக்கிய Chungking Express திரைப்படத்திற்க்கு பிறகே இவரை திரும்பி பார்க்க ஆரம்பித்தது திரை உலகம். இரண்டு போலீஸ்காரர்களின் வாழ்க்கை பற்றிய கதை. 223 என்ற எண்ணுள்ள போலீஸ்காரருக்கும் 663 என்ற எண்ணுள்ள போலிஸ்காரருக்கும் ஏற்பட்ட தனித்தனி காதல் அனுபவத்தை இருவரது கதையும் ஒன்றாக கலந்திருப்பது போன்ற கதை.
இரண்டு காதல் கதைகள் என்ற மெலிதான உணர்வுகளை இந்த இருபதாம் நூற்றாண்டின் அதி வேக வாழ்க்கை அமைப்பையும் தன் மீது அன்பு செலுத்த யாராவது கிடைப்பார்களா என்று ஏங்குபவர்களாக இருப்பதை வெளிப்படுத்துவதாக அமைந்த திரைப்படம். பல பல புதிய உத்திகளையும் புதுமைகளையும் கையாண்ட விதம் அனைவரையும் அதிர வைத்தது..
1997ல் எடுக்கப்பட்ட Happy Together பெரும் சர்ச்சையை கிளப்பிய திரைப்ப்டம்.
இரு ஆண்களின் ஒரின சேர்க்கை பற்றிய காதல் கதையா அல்லது நட்பு பற்றியதா என்பதே மிகப்பெரிய சர்ச்சை.. அவர்களுக்குள் உடல் ரீதியாகவும் உறவிருக்கிறது. ஆனால் ஒருவரை ஒருவர் எப்படி புரிந்து கொண்டிருந்தார்கள் எப்படி பாதிக்கப்பட்டார்கள் என்பதே மையம். இத்திரைப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த இயக்குனருக்கான விருதை தட்டி சென்றது..
In the Mood for Love 2000 ஆண்டு வெளிவந்தது.. இவரின் திரைவாழ்வையே புரட்டி போட்டது. இதுவும் ஒரு காதல் கதைதான். சம்பிரதாய காதல் அல்ல முற்றிலும் வித்தியாசமானது. அடுத்தடுத அடுக்குமாடி வீட்டில் குடியிருக்கும் திருமணமான ஆனால் அந்நியரிடம் எந்த வகையான உறவு என்று பெயரிடப்படாத இரண்டு இளம் ஜோடிகளின் காதல் கதை. தனிமையும் வாழ்க்கையின் வெறுமையும் அவர்களுக்குள் காதலை எப்படி ஏற்படுத்துகிறது என்பதை இசையுடன் சேர்ந்த காவியம் என்று பார்த்தவரெல்லாம் பாராட்டினார்கள்.
தான் எப்போதோ கேட்ட ஒரு பாடலின் முதல் வரிதான் இத்திரைப்ப்ட தலைப்பு என்கிறார். மற்க்க முடியாத இசையுடன் கூடிய அதன் அந்த பாடலையே ஒரு இசைக்காவியமாக படைத்துள்ளார். இசையும் ஒளிப்பதிவும் இத்திரைப்படத்திற்கு இரு கண்கள் போன்றது. திரைக்கதையே உயிர்.
ஒளிப்பதிவு கிறிஸ்டோபர் டாயல். இவரே இவரது ஆஸ்தான ஒளிப்பதிவாளர். ஆனால் இசை உலக புகழ் பெற்ற மைக்கேல் கலேசோ{ Michael Galasso }
இப்படத்த்தின் பின்னணி இசைக்கோர்வை மட்டும் தனியாக வெளியாகி அதுவே விற்பனையில் பல ரெக்கார்டுகளை ஏற்படுத்தியது..
காட்சியமைப்புகள் உடையமைப்பு மற்றும் கலை இயக்கம் எல்லாமே அற்புதம். உலக திரைப்படம் வரலாற்றில் நீங்கா இடம் பெற்றுவிட்ட ஒரு உன்னத படைப்பு.. இதுவும் உலகமெங்கும் பல விருதுகளை வாரி எடுத்து வந்தது..
கேன்ஸ் திரைப்படவிழாவில் சிறந்த நடிகர், இயக்குநர் என்ற முக்கிய விருதுகளும் ஹாங்காங் திரப்ப்ட விழாவில் ஏழு விருதுகளும் கிடைத்தது..
My Blueberry Nights இவரது மற்றுமொறு உன்னத படைப்பு.
இதுவும் எலிசபெத் என்ற பெண்ணின் வாழ்வில் புதைந்த காதல் கதைதான். இவரது முதல் ஆங்கில திரைப்படம். பிரபல ஆங்கில பாடகரும் பாடலாசிரியருமான Norah Jones நடித்தது. இத்திரைப்படமும் இவருக்கு மிகப்பெரிய பெருமையை தேடித்தந்தது. பல உலக திரைபட விழாக்களில் பங்கு பெற்றதுடன் விருதுகளையும் வென்றது.
இவரை பற்றிய மிகப்பெரிய ஆச்சரியம், இவர் தனது திரைப்ப்டங்களுக்கு கதையை யாரிடமும் விவாதிக்கமாட்டாரம். அதிவிட ஆச்சரிய்ம திரைக்கதையை எழுதி கொள்ள்வே மாட்டாராம். அவ்வப்போது உருவாக்குவதுடன் நடிகர்களிடம் சிறு அறிமுகத்தோடு நடிக்க வேண்டிய காட்சிகளை பற்றி மட்டுமே கூறுவாராம்.
எடுத்த காட்சிகளையே மீண்டும் மீண்டும் எடுப்போது போன்றே இருக்கும் என்று நடிகர்கள் குழம்புவதுடன் இவரை கேலி பேசியவர்களும் உண்டு. ஆனால் திரைப்ப்டம் முடிந்ததும் ஒரு கவிதையாக சித்தரிக்கப்ப்ட்டுள்ளதை பார்த்து அவர்களே வியந்து போனார்களாம்.
இவரது வித்தியாசமான இய்க்கம் புரிந்தவர்கள் என்பதால் பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட நடிகர்களையே தனது அனைத்து திரைப்ப்டத்திலும் பயன்படுத்துகிறார். மீண்டும் மீண்டும் பார்த்த முகங்களானாலும் தனது வித்தியாசமான கதையானாலும் காட்சியமைப்பாலும் வியந்து பாராட்டும் அளவிற்கு மாற்றியமைத்து விடுகிறார்.
இவர், நேரடியகாக கதை சொல்வதைவிட கதைக்கான மனநிலையை ஒளிப்பதிவும் இசையும் கலந்த லயத்தோடு கவிதை போல பதிவு செய்வதாலேயே மற்ற திரைப்ப்டங்களிலிருந்து எப்போதும் தன்னை நிலை நாட்டுகிறார்.
ஒவ்வொரு திரைக்கதைக்கும் முன்னும் மனித உறவுகள் குறித்த ஆழ்ந்த பரிசோதனையை மேற்கொண்டு குறிப்பாக இந்த பரபரப்பான அதிவேக உலகின் மக்கள் எப்படி அன்புக்காக ஏங்குகிறார்கள் என்பதை தனக்கே உரிய பாணியில் பதிவு செய்கிறார்.
தனிமையும் வெறுமையும் எப்படி எதிர்பாலரிடம் நட்பாக ஆரம்பித்து தொடரவும் முடியாமல் விடுபடவும் இயலாமல் சிக்கி தவிக்கின்றனர் என்பதை இசையுடன் படைக்கும் போது அனைவரின் உள்ள்த்தில் எங்கோ ஒட்டியிருக்கும் தன் பழைய அதீத நட்பையோ காதலையோ கிளறச்செய்து விடுகிறது.
நுகர்வோர் கலாச்சாரமும் உலகமயமாக்கலும் குடும்ப அமைப்புகளை சிறுக சிறுக மெல்ல சிதைந்து வருவதையும் இளைஞர்களும் யுவதிகளும் சதா கேளிக்கைகளிலும் பால் உணர்வு சார்ந்த நாட்டங்களிலும் ஈடுபடுவதையும் அதுவும் ஒருவித பழக்கமாகவும் மாறி வருவதை துல்லியமாக சித்தரிக்கிறார்.
ஹாங்காங்கில் மட்டுமல்ல எத்தனையோ புராதன அழிக்க முடியாது என்று நாமெல்லாம் நம்பி கொண்டிருக்கிற மிகப்பழ்மையான இந்திய கலாச்சாரத்திற்கும் இவரது படைப்புகள் பொருந்துவதென்றால் இவரை தன்க்கென தனி மொழியை உருவாக்கிய உலக இயக்குநர் என்றும்
கூறுவதும் சாலவும் பொருந்தும்.
மற்ற உலக திரை இயக்குநர்கள் பற்றி அறிய
35 comments:
TEST..
இந்த இயக்குனர் பற்றி.. ராமகிருஷ்ணன் எழுதிய ‘அயல் சினிமா’வில் படித்திருக்கிறேன். படம் பார்க்கும் தைரியம்தான் கிடைக்க மாட்டேங்குது! ;-)
அறிமுகத்திற்கு நன்றி.. பூச்சி.. சார். வீட்டுல.. இன்னும் சரியா 17 டிவிடி பார்க்காம இருக்கு. அதெல்லாம் முடிச்சி.. எப்ப.. நான் இந்த படங்களெல்லாம் பார்க்கப்போறேனோ?!
அருமையான அறிமுகம் வண்ணத்துபூச்சியாரே.நான் எப்படி ஐன்தப் படங்களைத் தவற விட்டேன் எனத் தெரியவில்லை.'ரோட் ஹோம் 'போலப் படங்கள் என்று நினைக்கிறேன். நன்றி வண்ணத்துபூச்சியாரே.Majid Majidi எனது அபிமான இயக்குநர்.
ஓகே.. எல்லா டிவிடியையும் மூட்டைக் கட்டி கொண்டு வந்திருங்க..
பார்த்திட்டு அப்புறமா சொல்றேன்..!
வாங்க பாலா.
யப்பா இன்னும் 17 டிவிடியா..?? அதான் சும்மா போட்டு தள்றிங்க போல..
கலக்குங்க..
வருகைக்கு நன்றி..
மதிப்பிற்குரிய இயக்குநர் ஷண்முகப்பிரியன்..
என்னுடைய அபிமான இயக்குநர் மஜித் மஜிதியும் கிம் கி டக் etc., etc.,
ஆனால் மிகவும் கவர்ந்தவர் மஜித் மஜீதி தான். அவரை பற்றியும் ஒரு சிறு குறிப்பு முன்னரே எழுதியுள்ளேன்.
இந்த பதிவின் கடைசியில் இருவரை பற்றிய பதிவின் லிங்க் கொடுத்துள்ளேன். பார்க்கவும்.
தொடர்ந்து வாசித்து ஊக்கப்படுத்துவதற்கு நன்றிகள் சார். I feel very happy.
Thanx a lot sir.
சூர்யா, ‘Wong Kar Wai’ இயக்குநர் பற்றிய நல்ல அறிமுகப் பதிவு.
‘As Tears Go By’ மற்றும் ‘Happy Together’ படங்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். கடந்த ஆண்டு ஆஸ்கர் பெற்ற ‘Brokeback Mountain’ படத்தின் கதை ‘Happy Together’ படத்தின் கதையை ஒத்தது. ‘Dostana’ இந்தி படமும் இது போன்றதொரு கதைதான். ‘Wong Kar Wai’ அடுத்த முறை சென்னை வரும் போது படங்களை வாங்கி பார்க்க முயற்சிக்கிறேன்.
(படங்கள் குறைவாக பதியலாமே...)
அதிசயம் ஆனால் உண்மை..
வணக்கம் உண்மைதமிழன்.. தங்களின் முதல் பின்னூட்டம் என நினைக்கிறேன்.
எனது நூறாவது பதிவிற்குள் உங்கள் முதல் பின்னூட்டம் வருமா என மருதமலை {உங்க} முருகனுக்கு பிரார்தனை செய்தேன்.
என் பிரார்தனை வீண் போகவில்லை.
முருகன் காப்பாத்திட்டான். கந்தன் கருணையே கருணை.
தொடர்ந்து பின்னூட்டம் இட்டால் மட்டுமே மூட்டை.. இல்லாவிட்டால் முட்டைதான்.
மகிழ்ச்சி தல...
தமிழ்ஸ்டுடியோ விருதிற்கு வாழ்த்துகள்.
வாங்க அகநாழிகை.
தகவல்களுக்கு நன்றி. பெரும்பாலும் இந்தி படங்கள் பார்ப்பதில்லை.
இவரது ஒரிரு படங்களை தவிர எல்லாவற்றையும் பார்த்துவிட்டேன். ஒவ்வொன்றாக பதிவிடலாம் என்ற எண்ணம்.
தொடர்ந்து வாசித்து நிறை / குறை சொல்லுங்கள்.
ஆலோசனைக்கும் நன்றி. Will consider.
// ஆச்சரிய்ம திரைக்கதையை எழுதி கொள்ள்வே மாட்டாராம்.//
நம்பவேமுடியல இதுக்காகவே இவரோட படங்கள பாக்கனும்.
// பெரும்பாலும் இந்தி படங்கள் பார்ப்பதில்லை.//
அப்படி சொல்லாதிங்க.ஹிந்தி படங்கள்லையும் மிக நல்ல படங்கள் வந்துகிட்டுதான் இருக்கு.பல படங்கள் சொல்லமுடியும்.
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி கார்த்திக்.
சார் எங்க இருந்து இவ்வளவு Informations gather பண்ணுரிங்க.
நல்ல இருக்கு.
எல்லாமே எனக்கு புதிய தகவல்கள்.
நன்றி கெளதம். மற்ற இயக்குநர்கள் பற்றியும் லிங்க் இருக்கு. பார்க்கவும்.
Wong Kar Wai படங்கள் எதுவும் பார்த்ததில்லை. இன் தி மூட் ஃபார் லவ் மட்டுமே கேள்விப்பட்டிருக்கிறேன். நண்பர் ச.ந. கண்ணனிடம் டிவிடி இருக்கும். வாங்கிப் பார்க்க வேண்டும்.
Wong Kar Wai - அவரது சினிமா வாழ்க்கையை நேர்த்தியாகத் தொகுத்து எழுதியிருக்கிறீர்கள். சுவாரசியம்.
உலக இயக்குநர்கள் வரிசையில் நான் தங்களிடம் அடுத்து எதிர்ப்பார்க்கும் பதிவு ‘இயக்குநர் பேரரசு.' ;)
முகில் said...
Wong Kar Wai படங்கள் எதுவும் பார்த்ததில்லை. இன் தி மூட் ஃபார் லவ் மட்டுமே கேள்விப்பட்டிருக்கிறேன். நண்பர் ச.ந. கண்ணனிடம் டிவிடி இருக்கும். வாங்கிப் பார்க்க வேண்டும்./////////////////////////////
பாருங்கள் முகில்.. நிச்சயம் பிடிக்கும்..
Wong Kar Wai - அவரது சினிமா வாழ்க்கையை நேர்த்தியாகத் தொகுத்து எழுதியிருக்கிறீர்கள். சுவாரசியம். /////////////////////
வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி முகில்
உலக இயக்குநர்கள் வரிசையில் நான் தங்களிடம் அடுத்து எதிர்ப்பார்க்கும் பதிவு ‘இயக்குநர் பேரரசு.' ;)//////////////////////////
haha ha
" என்னை வைச்சு காமெடி கீமடீ பண்ணலையே..??
பதிவு கூட போட்டுடலாம், ஆனா Background music க்கு என்ன பண்றது தெரியலையே..??
//ஷாங்காய் மொழியும் மேண்ட்ரின் மொழியும் மட்டுமே பேச தெரிந்த இவர் காண்டனோசி பேசும் ஹாங்காங்கில் சிறிது சிரம்ப்பட்டார்.//
I don't think there is a language called shanghai language. They speak mandarin with a specific shanghai dialect (just like Tamilians have different dialects in Madurai, Tirunelveli, Chennai, etc., it's all tamil anyway!)
Appreciate your efforts to write a detailed review of the movies, let me check 'em out sometime soon.
Thanx Joe for your visit and valuable comments. Keep coming. Cheers.
your reviews are very nice...keep going on...
நன்றி கிருஷ்ணா பிரபு..
Photos and information are very nice. Keep writing more about directors and other film personalities.
weldone vannaathuppoochiyaare...
thedalum pathivum .pala kodi kai thattalgal perum...
Priyamudan
Dyena
நன்றி அனானி.
நன்றி டயானா.
தங்களின் தொடர்ந்து ஊக்கத்திற்கும் அன்பிற்கும் நன்றிகள் கோடி..
வண்ணத்துப்பூச்சியாரே..நெடுநாளாய் தேடிக்கொண்டிருந்த ஒருவரை பகவான் ஓஷோவே காட்டிக்கொடுத்ததாய் மகிழ்கிறேன்.
thaayumaanavan@gmail.com
எனக்கு மெயில் செய்யவும் அல்லது கைபேசி 9840279035 தொடர்புகொள்ளவும். அல்லது உங்கள் பேசி எண்ணை எனக்கு தெரிவிக்கவும்.
உங்களோடு பேச விழைகிறேன்
வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி வெங்கட்.
தொடர்பு கொள்கிறேன்.
நிறைய பேசலாம்.
"Ahses of time" is fantastic
Thanx Sinthu for your visit and comments. Keep blogging.
Going thru ur posts is like reading a book,u r giving wonderful aricles Surya.
Thanx Dr.M. Past three days I was waiting for your comments. I gues you are busy this week.
இறைவன் அருளினால் புத்தகமாக வெளியிடலாம் என்று எண்ணமும் உள்ளது.
Thanx a lot for your precious time Dr.
வந்தியத்தேவன் உங்களை அறிமுகப்படுத்தினார்.உங்களின் தகவல்கள் புதியனவாக உள்ளன.நீங்கள் என்னைப்பாராட்டுகிறீர்கள்.சினிமாப்புத்தகங்கள் சஞ்சிகைகளிலிருந்து தகவல்கள் எடுக்கிறேன்
வர்மா
வந்தியத்தேவன் உங்களை அறிமுகப்படுத்தினார்.உங்களின் தகவல்கள் புதியனவாக உள்ளன.நீங்கள் என்னைப்பாராட்டுகிறீர்கள்.சினிமாப்புத்தகங்கள் சஞ்சிகைகளிலிருந்து தகவல்கள் எடுக்கிறேன்
வர்மா
// ‘Happy Together’ படத்தின் கதையை ஒத்தது. ‘Dostana’ இந்தி படமும் இது.//
அகநாழிகை நேத்துதாங்க தோஸ்த்தானா படம் பாத்தேன்.தமிழ் சப்டைட்டிலோட
அட்டகாசம்போங்க.ஒரு ஹிந்திப்படம் பாத்து இந்தளவுக்கு நான் ரசிச்சு சிரிச்சதே இல்லைங்க.
happy together இதே மாதிரி காமடி இருக்குமாங்க
கார்த்திக் தோஸ்தானா பார்த்ததில்லை
என்னது happy together .?? காமெடியா..?? .அப்படியெல்லாம் இல்லையே..
நன்றி வர்மா. தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும். வந்தியதேவனுக்கும் நன்றிகள் பல...
எப்படிங்க உங்களால இவ்வளவு படங்களை பார்க்க முடியுது..
Post a Comment