கல்வி பயிற்ச்சி பள்ளியை தனது நண்பன் ஒருவனுடன் கூட்டாக நடத்தி வருகிறார். அதில் படிக்கும் பலர் பணக்கார மாணவர்களே.
ஒரு நாள் மருத்துவமனையிலிருந்துவீடு திரும்பும் போது பதினாறு வயதுள்ள
மகி என்ற பள்ளி மாணவியை சந்திக்கிறார்.அவள் கடைக்காரரிடம் சில்லறை யென்னுக்காக சர்ச்சையில் ஈடுபட்டிருப்பதை பார்க்கிறான் இக்கார்ஷி.
அவளை பற்றியும் அவளின் கணக்கு அறிவையும் தெரிந்து கொள்கிறான்.
அவளுக்கோ படிப்பின் மீது தீராக்காதல். ஆனால் அவளோ குடும்ப சூழ்நிலை காரணமாக பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டதையும் அவளின் தாயையும் கவனிக்க வேண்டிய பொறுப்பும் உள்ளதாக கூறுகிறாள்.
தாயோ சிறு சிறு திருட்டுகளை செய்து ஒரு கட்டிங் சாப்பிட்டு வீடு சேரும் நல்ல கேரக்டர்.
டோக்கியோ பல்கலைகழகம் நுழைவு தேர்வு அவ்வளவு எளிதானதல்ல. கடுமையாக இருக்கும் என்றும் அதற்கு பயிற்ச்சியும் உழைப்பும் தேவை என்பதை அறிந்தும் தன் வாழ்க்கை சூழ்நிலையாலும் எந்த பொறுப்பும் அக்கறையுமற்ற தாயை நினைத்து நொந்து கொள்கிறாள்.
இக்கார்ஷிக்கு இந்த பெண்ணுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கவே தான் இதுவரை கண்டுபிடித்த நுண்ணிய கணித பயிற்ச்சி முறைகளையும் அவளுக்கு இலவசமாக சொல்லி கொடுக்க முடிவெடுக்கிறான்.
மகி ஆனந்த பரவசம் அடைகிறாள். ஆனால் அவள் வசிக்கும் இடத்தில் தாய் சம்மதிக்க மாட்டாள் எனவும் இக்கார்ஷியின் இடத்திற்கு வரவும் விரும்பவில்லை எனவும் கூறுகிறாள். அது தவிர பயிற்ச்சி கட்டணமாக ஏதாவது பெற்று கொள்ள் வேண்டும் எனவும் வற்புறுத்துகிறாள்.
ஒவ்வொரு நாளும் ஒரே ஒரு டிப்ஸ் மட்டுமே சொல்லி கொடுக்கிறான் இக்கார்ஷி. மகியோ மகிழ்ச்சியாலும் படிப்பின் மீதுள்ள ஆர்வத்தாலும் நிறைய டிப்ஸ் கேட்கிறாள். ஆனால் இக்கார்ஷி தான் சொல்லும் ஒவ்வொரு டிப்ஸையும் முழுவது புரிந்து கொண்டு பொறுமையாக கடைபிடித்தால் மட்டுமே வெற்றி உறுதி எனவும் கூறுகிறான்.
மகிக்காக நிறைய நேரம் செலவிட்டு நுழைவு தேர்விற்க்காக பல வித
இக்கதையில் வரும் இக்கார்ஷி போல ஒரு பிரபல பயிற்ச்சி பள்ளியில் வேலை பார்த்தவர். .
பள்ளி மாணவர்களின் முன்னேற்றத்திற்கும் அவர்களை பாடங்களையும் தேர்வுகளையும் எதிர் கொள்ள வேண்டிய முறைகளை மிக அழகாக பல புத்தகங்களை எழுதியுள்ளார். அது தவிர ஜப்பானில் பல தொலைகாட்சிகளிலும் மாணவர்களுக்காக பல பயனுள்ள நிகழ்ச்சிகளையும் தருகிறார்.
தனது வாழ்க்கை அனுபவங்களை திரப்படமாக எடுத்ததும் இல்லாமல் பல வித துறையில் உள்ளவர்களும் திரைபடங்கள் மூலம் நல்ல கருத்துகளை மக்களுக்கு சென்றடைய செய்ய வேண்டும் என்ற நல்லெண்ண்ணத்தில் சிறந்த திரப்படங்களை எடுக்க பண உதவியும் செய்பவர்.
திரைப்பட ஸ்டில்களை காண Enter
இத்திரைப்படம் பார்த்ததும் பதின்ம வயது பள்ளி / கல்லூரி மாணவ மாணவிகளையெல்லாம் வைத்து தமிழில் எப்படியெல்லாம் படமெடுத்துள்ளார்கள் என்பதை நினைத்து பார்த்து வெட்கப்பட்டேன்...
36 comments:
உங்கள் மற்றய படைப்பை வாசித்து வருகிறேன் அருமையாக இருக்கிறது...
நன்றி ராஸா..
விமர்சனம் எப்போது?...
பரீட்சைக்கு படித்து முடித்தவுடன்.. மிக விரைவில்.
//இத்திரைப்படம் பார்த்ததும் பதின்ம வயது பள்ளி / கல்லூரி மாணவ மாணவிகளையெல்லாம் வைத்து தமிழில் எப்படியெல்லாம் படமெடுத்துள்ளார்கள் என்பதை நினைத்து பார்த்து வெட்கப்பட்டேன்...//
வண்ணத்துப்பூச்சியாரே உண்ணமையாக சொன்னீர்
உண்மையில் நாம் வருத்தப்பபடவும் சிந்திக்கப்பட வேண்டி விசயம் கூட
வண்ணத்துப்பூச்சியாருக்கு ஒரு வேண்டுகோள்
the mission 1986. இந்த படத்தை பற்றிய
விமர்சனம் போடுமாறு வேண்டுகின்றேன்.
நண்பரே, நானும் ஒரு பதிவு போட்டு இருகிறேன் கண்டிபாக பிடிக்கும்,
படித்து பிடித்தால் வோட்ட போடுங்க :-)
அதிலும் கலைஞர் பத்தின பதிவை கண்டிப்பாக பாருங்கள்
http://sureshstories.blogspot.com/
நன்றி சுரேஷ். தங்கள் வலை பார்த்தேன். அருமை.
அருமை நண்பர் உண்மைதமிழன் அவர்களின் பதிவுகளையும் தொடர்ந்து படிக்கவும்.
உங்கள் எழுத்தும் எண்ணமும் சிறக்க வாழ்த்துகள்.
நன்றி முத்துராமலிங்கம். ஆமாம். மிகவும் வருத்தமாகவும் சில சமயம் கடும் கோபமும் வருகிறது.
நன்றி மு.ரா. கண்டிப்பாக முயற்ச்சிக்கிறேன்.
//இத்திரைப்படம் பார்த்ததும் பதின்ம வயது பள்ளி / கல்லூரி மாணவ மாணவிகளையெல்லாம் வைத்து தமிழில் எப்படியெல்லாம் படமெடுத்துள்ளார்கள் என்பதை நினைத்து பார்த்து வெட்கப்பட்டேன்...//
நான் இன்னும் பார்க்கல பாத்திட்டு நானும் வெக்கப்பட்டுக்கிறேன்.. நல்லா எழுதறீங்க பாஸ்..அதுவும் குறைந்த சொற்களுக்குள்ள படம் பற்றின சித்திரத்தை எழுப்பிவிட முடிகிறது உங்களால்(எல்லாம் நம்மால முடியலேயே என்ற கடுப்புதான்)
முத்து மஹராஜ்’ பார்த்தபின், டைரக்டர் நிறைய தமிழ் படங்களை பார்த்திருப்பாரோ? மேக்கிங்கில் வேறுபாடு காட்டியிருந்தாலேயொழிய.. கதை அதர பழசு. யோசித்தால் இதுபோல இன்னும் 10 படங்களாவது கிடைக்கலாம்.
ஆனா.. உங்க செண்டிமெண்ட் ஸ்டைல் எழுத்து.. படத்தின் கதையை விட இண்ட்ரஸ்டிங்!!! :-)
கலக்குங்க... தல.!
அகிலன். நூறு படம் பார்த்துவிட்டு விமர்சனம் எழுதலாம்.
தங்களை போன்று ஒரு கவிதை எழுத வருமா என்னால்.
எழுத முயற்ச்சித்தேன். எனக்கே கோபம் வந்து விட்டது.. இதல்லெம் கவிதையான்னு..??
எனக்கு கடுப்பே இல்லை. ஒரு கவிஞர் எனது சகோதரன் என்ற பெருமையும் சந்தோஷமும் உண்டு..
வாழ்க கவிஞர் அகிலன்..
நன்றி பாலா..
எனது ஆருயிர் நண்பன் ஹாலிவுட் பாலாவின் அன்பு கட்டளைக்கு இணங்க அடுத்ததாக ஒரு Gharam மசாலா..........
A nice film butterfly Surya. The characters of Ikarshi & Mahi are nice.you have provided surprise by mentioning Ikarshi is really a teacher associated with student welfare.Nandri Surya for giving nice films.
மிகவும் சிறப்பாக இருந்தது...
ஒரு முழு திரைப்படத்தை பார்த்த மகிழ்ச்சி...
எளிமையான தமிழில் உங்கள் பணி மேலும் தொடரட்டும்...
வாழ்த்துக்கள் வண்ணத்துப்பூச்சியாரே...
நன்றி சிவக்குமார் நேதாஜி.
படத்தைப் பார்த்த ஒரு எஃபெக்டை உங்கள் விமரிசனம் உண்டாக்கியது. அதிக வார்த்தைச் செலவில்லாமல் நச்சென்று விமரிசனம் செய்ய உங்களிடம் ட்யூஷன் எடுத்துக்கணும்.... வாழ்த்துகள்
Thanx Dr for your valuable comments. Hope you are enjoying all the movies. Thanx again..
வாங்க மைதிலி மேடம்.
வாழ்த்திற்கு நன்றி.
சிறுவயது முதல் அதிகம் பாட்டியிடம் தான் வளர்ந்தேன்.
அவள் ஒரு அற்புத கதை சொல்லி..அவளுக்கு தெரிந்தது அன்பு மட்டுமே... அவளுக்கு கோபம் வந்தோ யாரையாவது திட்டியோ வாழ்நாளில் நான் பார்த்ததே இல்லை.
எந்த நாளும் எந்த நோயும் இல்லாமல் முதல் நாள் இரவு வரை பால குமாரன் புத்தகத்தை படித்து விட்டு பேரப்பிள்ளைகளுடன் வீட்டில் சந்தோஷமாக இருந்து விட்டு வைகுண்ட ஏகாதசியான மறுநாள் காலை திடீரென 6 மணிக்கு இறைவன் திருவடி அடைந்தார்..
அந்த பாட்டியிடம் நிறைய கதை கேட்ட அனுபவத்தால் இருக்கலாம்.
I miss her a lot..
நெகிழ்ச்சியுடன் மீண்டும் நன்றி...
அருமையான விமர்சனம்
I was expecting something like the original "Cindrella" story....Hmmm..the end looks sad though..
Very nice post about a touching film. You are doing a great job here. Keep it up!
Nice post about a touching film. YOu are doing a great job here. Keep it up, Surya! - Deepa
வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி வினோத் கெளதம்.
Yes Viji. I too that it was a kid movie while seeing title.
Thanx for your visit.
Thanx Deepa for your visit and wishes.
Thanx again Deepa. Your comments motivating me to write more.
உங்கள் பதிவுகளை ஒவ்வொன்றாக படித்துக் கொண்டிருக்கிறேன். மிக அற்புதம். எப்படி பாஸ், இவ்வளவு எழுதினீங்க... நான் பிரிக் லேன் எழுத நான்கு நாள் ஆனது. நீங்க எழுதியிருக்கறத படிக்கவே ஒரு வாரம் ஆகும் போலிருக்கு... வாழ்த்துக்கள், தொடர்ந்து எழுதுங்கள்.
வில் ஸ்மித் நடித்த “The Pursuit of Happiness” படம் பற்றிய எனது கருத்தினை பதிவு செய்துள்ளேன். படித்து தங்கள் கருத்தினை கூறுமாறு அன்புடன் கோருகிறேன். நன்றி.
www.aganaazhigai.blogspot.com
- பொன். வாசுதேவன்
வருகைக்கு நன்றி வாசு.
நல்ல சினிமா பற்றிய ஆதங்கத்தாலும் தமிழ் சினிமா மீதுள்ள கடும் கோபத்தாலும் எழுத ஆரம்பித்தேன்.
கண்றாவியை விமர்சிப்பதை விட நல்லதை நாலு பேருக்கு சொல்வதில் ஒரு ஆனந்தம் என்று எழுதினேன். எவரும் எட்டிகூட பார்க்கவில்லை.
மனந்தளராத விக்கிரமாதித்தன் போல எந்த பின்னூட்டமும் இல்லாமல் சும்மா எழுதி கொண்டேயிருந்தேன்.
இப்போது அனைவரையும் பாராட்டுதலும் அளவிட முடியாத அன்பாலும் பொறுப்புடன் எழுதுகிறேன்.
தங்கள் பதிவை பார்த்தேன் அருமை.
தொடர்ந்து வாருங்கள்..
நிறைய எழுதுங்கள். வாழ்த்துகள்...
"நல்ல சினிமா பற்றிய ஆதங்கத்தாலும் தமிழ் சினிமா மீதுள்ள கடும் கோபத்தாலும்" நீங்கள் எழுதுவது எங்களுக்கு அல்வா போலிருக்கிறது.
என்னுடைய மதிப்பும் மரியாதைக்குரிய டொக்டர் எம்.கே.மு. அவர்களே..
தமிழ் சினிமா மீது எனக்குள்ள கோபம் மிக அதிகம். அதுதான் உலக சினிமா பக்கம் திரும்பியது. தங்களை போன்ற முகம் தெரியாத பெருமக்களாலும் அன்பு பெருக்கினாலும் என் உள்ளம் அடையும் ஆனந்தம் அளவிடமுடியாதது.. அதற்கு கோடான நன்றிகள்.
இந்த வருடம் நாகரீக கோமாளி ஆசான் நாகர்கோவில் சுடலைமுத்து கிருஷ்ணன் {NSK அவர்களின் முழுப்பெயர் } அவர்களின் நூற்றாண்டு என்பது எத்தனை பேருக்கு தெரியும் ..?? தெரிய வைத்தார்களா நிகழ்காலத்து கலைத்துறையினர்..??
தமிழே பேசத்தெரியாத நடிகைகள், காசு கொடுத்து விருதுகளை வாங்கும் நடிகர்கள், சதா நிகழ்காலத்து இரட்டை அர்த்த வசனங்களாலும் ஆபாச நடனங்களாலும் தனது நிகழ்ச்சிகளை நிரப்பும் தொலைகாட்சிகள், மிகப்பெரிய ஊடக கலையாக இருக்க வேண்டிய சினிமாவை வெறும் பொழுது போக்காகிய வணிக பத்திரிகைகள்,
வெற்று விளம்பரங்களால் தரமில்லாதவற்றை வைத்து காசாக்கும் தயாரிப்பளர்கள் என்று எவரையும் நான் இகழப்போவதில்லை. ஏனென்றால் இங்கு எல்லாமே வியாபாரம். Mercantile Era...
தனது நடிப்பாலும் நகைச்சுவையுடன் எல்லாவித கருத்துகளுடன் தேசபக்தியை ஊட்டிய அந்த மாபெரும் கலைஞனை மறந்த அதீத சமுகம் இது..
நானும் கண்றாவிகளை விமர்சிக்க ஆரம்பித்து விட்டானா ? என வருத்தப்படுகிறேன்.
எனவே எனது நந்தவனம் என்ற மற்றொரு வலையில் சில பதிவுகளை இடலாம் என நினைக்கிறேன். தங்களின் கருத்துகளையும் ஆலோசனைகளையும் ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.
வாழ்த்த வயதில்லை.. வணங்குகிறேன்.
Hello!
Sorry, been busy at work and had no time to update or read blogs....
But here I am....and its a wonderful write-up. Azhaga ezhudhareenga. Nandri.
Thanx Sowmya for your visit and wishes.
Cool and relax while dropping here. Wishes to Sri and Aditi.
Cheers.
netflix-லயும் இல்லை, torrent-லயும் கெடைக்கல :-(( , ஆசிரியர்/மாணவர்கள் வைத்து வரும் படங்கள் மிகவும் இன்ஸ்பைரிங்..
மகளிர் தினத்திற்க்காக திரைப்பட விழாவில் பார்த்தது. இணையத்தில் கிடைக்கும தெரியவில்லை.
நன்றி யாத்ரீகன்.
Post a Comment