இது வரை விடுவிக்க முடியாத கணித புதிரை கண்டுபிடிக்க நான்கு கணித மேதைகளை ஒரிடத்திற்கு வருமாறு அழைப்பு வருகிறது. Condition: யாரும் மொபைல் போன் மட்டும் எடுத்து வரக்கூடாது.
அழைத்தவர் Mr. Fermat.
தங்களுக்குள் முன்பின் அறிமுகமில்லாத அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள புனை பெயர்கள் Hilbert, Pascal, Galois and Oliva.
நிகழ போகும் அதி பயங்கரம் அறியாது நால்வரும் சொன்ன இடத்திற்கு வந்து சேருகிறார்கள்.
நகரித்திலிருந்து வெகு தூரம் கடந்த ஒரு ஏரியை ஒட்டிய காலியான பிரும்மாண்ட பங்களா.
அதில் ஒரு அழகான அறை. அனைவரும் காத்திருக்கின்றனர். Fermat வருகிறார். அனைவருக்கும் விருந்தும் அளிக்கிறார்.
Fermat ன் மொபைல் அடிக்கிறது. அவரது மகள் மருத்துவமனையில் சீரியஸாக இருப்பதாகவும் உடனே வர வேண்டும் என்று சொல்லி போன் பாதியிலேயே கட்டாகி விட ஒரு மணி நேரத்தில் திரும்பி விடுவதாக சொல்லி கிளம்புகிறார் Fermat.
அவர் சென்றதும் விபரீதம் ஆரம்பிக்கிறது.
அங்குள்ள PDA வில் கணக்கு புதிர் வருகிறது. ஒரு நிமிடத்திற்குள் அதற்கு விடை கண்டுபிடித்தாக வேண்டும். விடையளிக்க தவறினாலும் தவறான விடையளித்தாலும் அறை நாலா பக்கத்திலிருந்தும் நகர ஆரம்பிக்கும்.
அவசரமாய் போன Fermat வருவதாய் காணோம்.
புதிர்கள் மட்டும் வந்து கொண்டே இருக்க நால்வரும் சிக்கி திணருகிறார்கள். விடையளிக்க முடியாவிட்டல் அறைக்குள்ளேயே மாட்டி கொண்டு இறக்க வேண்டியதுதான்.
இதையெல்லாம் செய்தது யாராக இருக்கும்..??????
ஏன் சென்றவர் வரவில்லை..??????
ஏன் புனைப்பெயர் அளிக்கப்பட்டது..??????
கண்டிஷன் போட்டதன் நோக்கமென்ன..???????
நால்வரும் தப்பித்தார்களா ..??????
கண்டிப்பாக திரைப்படத்தை பார்க்க வேண்டும். சஸ்பென்ஸ் திரில்லர் விரும்பிகளுக்கு சரியான விருந்து.
இப்படத்தை எழுதி இயக்கியவர்கள் இரட்டையர்களான Luis Piedrahita & Rodrigo Sopena. அற்புதமான ஒளிப்பதிவும் மிரட்டும் இசையும் கூடுதல் சிறப்பு.
காலம்: 90 நிமிடங்கள் மட்டுமே
வெளிவந்தது: 2007
மொழி: ஸ்பானிஷ்.
உடனடியாக படத்தை பார்க்க முடியாதவர்களுக்கு டிரைலர் இங்கே.
டிஸ்கி: மேலே உள்ள படங்களில் Fermat இல்லை. டிரைலரில் தான் இருக்கிறார்
56 comments:
நிச்சயம் பார்த்தாக வேண்டும் இத்திரைப்படத்தை..
உங்க விமர்சனம் அருமை... பார்க்க துண்டுகிறது... பார்க்கிறேன்...
நன்றாக படங்களை அறிமுகபடுத்துகின்றீங்க
நீங்கள் சொல்லும் படங்களை பார்க்க ஆர்வம் உள்ளது
உங்கள் எழுத்தை நடை நன்றாக உள்ளது
நன்றி சரவணகுமார்.
நன்றி கிஷோர்.
நன்றி முத்துராமலிங்கம். தங்களின் அன்பெழும் பொழுதில் அருமை.
வாழ்த்துகள்.
பூச்சி.. உங்க கதை சொல்லும் ஸ்டைல், ஸ்டைலா மாறிடுச்சி..! :-) :-)
கேள்விப்படாத பேரா இருக்கேன்னு பார்த்தேன். ஸ்பானிஷ்-ஆ..., பார்த்துடுறேன்.
மூச்சோ.. க்ராஸியாஸ்!!! (மூச்சா இல்லீங்கோ)
பாலா. கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும். பார்க்கலாம்.
திட்றதா இருந்தா நேரடியாக திட்டவும். Please.
Interesting introduction sir.Storyline is also enchanting.Thank you வண்ணத்துபூச்சியார்!
திட்றதா இருந்தா நேரடியாக திட்டவும்
ஹா.. ஹா.. ஸ்பானிஷ் படம் பார்க்கவருக்கு மூச்சோ க்ராஸியாஸ்-ன்னா தெரியாதாக்கும்? யாருகிட்ட வுடுறீங்க ரீலு?! :-)))))
இந்த படம் லைப்ரரியில் இல்லை. வேறு எங்காவது கிடைக்குதான்னு பார்த்துடுறேன்.
வுமன் ஆன் டாப், டிவிடி கைக்கு வந்துடுச்சி. நாளைக்கு பார்த்துடுறேன். :-)
ஷண்முகப்பிரியன் சார். மீண்டும் நன்றி.
Humble Request: இனிமேல் சார் கூப்பிடாதிங்க Please.
வுமன் ஆன் டாப், டிவிடி கைக்கு வந்துடுச்சி. நாளைக்கு பார்த்துடுறேன். :-)
opening shot எத்தனை முறை ரீவைண்ட பண்ணன்னு கண்டிப்பா சொல்லணும்.
என்னது “அதி பயங்கர அறை”யா...??? வோட்டு போடணுமா வேணாமா? :-))
மன்னிச்சி விடுறேன்..! :-))
பாலா.
அதான் உங்க பதிவிலேயே சொன்னேனே. "muchas" gracias...
மீண்டும் Thanx my dear..
excellent review
made me tempted
keep going
senthil
நன்றி உலவு.காம்.
நன்றி செந்தில். தொடரும்.
வோட்டுக்கு மூச்சோ க்ராஸியாஸ்.
அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா..
இப்படிப் பாதியில் விட்டுப்போவது நியாயமா?
வாங்க ரிஷான். நலமா..??
மொத்தத்தையும் போட்டாலும் திட்றாங்க.. பாதியிலை விட்டாலும் நியாயமில்லைதான். என்ன பண்ண..??
My request.. எப்படியாவது படத்தை பாருங்க.
எங்க கெடைக்கும் இந்த டி.வி.டி...?????. நீங்க விவரிச்சுள்ள முறை ரொம்ம்ப சூப்பர்... ஸ்சுப்பர்ர்.. ஸ்ஸ்சூப்பர்... ( சுந்தரம் மாஸ்டர் ஸ்டைலில் படிக்கவும்..)
படம் பார்க்கணுமே! :-( லிங்க் ஏதாவது இருக்கிறதா?
வாங்க கடைக்குட்டி. ha ha ha.. Thanx Dear..
சென்னையில் பர்மா பஜார், (opp: Beach station ) தி.நகர் அன்னை சத்யா பஜாரில் கிடைக்கும்.
கொஞ்சம் பொறுமையாக தேடணும்.
வருகைக்கு நன்றி.
Dear Giri.
I watched this movie in a festival. I doubt this will be available on internet. Any have plz try.
Thanx for your visit and valuable comments.
வீட்ல நாலு சுவத்துக்குள்ளே உக்காந்து ,ஸ்டோர் ,பால் கணக்கு கணக்கு,சுடோகு ,போடக்கூட பயமா இருக்கு .....
வீட்ல நாலு சுவத்துக்குள்ளே உக்காந்து ,ஸ்டோர் ,பால் கணக்கு கணக்கு,சுடோகு ,போடக்கூட பயமா இருக்கு .....
கோமதிம்மா வருகைக்கு நன்றி.
அவ்வளவு பயமா..?? துப்பாக்கி சத்தம் இல்லாத சஸ்பென்ஸ் படம். அவ்வளவுதான்.
ரசித்து பார்க்கலாம்.
/அங்குள்ள PDA வில் கணக்கு புதிர் வருகிறது. ஒரு நிமிடத்திற்குள் அதற்கு விடை கண்டுபிடித்தாக வேண்டும். விடையளிக்க தவறினாலும் தவறான விடையளித்தாலும் அறை நாலா பக்கத்திலிருந்தும் நகர ஆரம்பிக்கும்.//
அருமை ... உங்கள் எழுத்துக்கள் இந்த படத்தை பர்க்க தூண்டுகிறது
உங்கள் சினிமா ரசிப்புதன்மை பார்த்து மெய்சிலிர்த்து போனேன் .... நிங்க என்ன செய்ரிங்க ? ... நானும் ஒரு சினிமா வெரியன்
நன்றி சுரேஷ் உங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும்.
நான் நல்ல சினிமா ரசிகன் மட்டுமே. வயிற்றுப்பாட்டுக்கு ஏதோ ஒரு வேலை.
தங்களையும் சந்தோஷபடுத்தியிருந்தால் உலக சினிமாவை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியே.
சூர்யா, அருமையான நடை. நான் இன்னும் பார்க்கவில்லை. Saw, Phone Booth இரண்டு படங்களின் கதையை நினைவுபடுத்தியது. (பார்த்திருப்பீர்கள் என நம்புகிறேன்). இரண்டுமே திகில் படங்களுக்கு சிறந்த உதாரணம். உங்களது அயராத எழுத்து வேகம் என்னை மயக்கமடையச் செய்கிறது. நானும் வாரத்திற்கு 3 படங்கள் பார்க்கிறேன். எழுதுவது மிகவும் குறைவு. நிறைய படங்கள் எழுத வேண்டியிருக்கிறது.
வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி வாசு.
எழுதுங்கள். ஆவலாய் காத்திருக்கிறேன்.
நண்பரே உங்களுக்காக ஒரு விருது என் பக்கத்தில்
தந்துள்ளேன்.
http://muthu5.blogspot.com/2009/04/blog-post.html
அதை பெற்றுக்கொள்ளுமாறு அன்போடு அழைக்கிறேன்.
நன்றி திரு. முத்துராமலிங்கம். இந்த விருது ஏற்கனவே அமுதா அவர்களாலும் வழங்கப்பட்டுவிட்டது. இருந்தாலும் உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றிகள் பல.
A real suspense story,but u've stopped in the middle.It'll b helpful for people like me who don't have time for movies,if u give it in full.
தலீவா... நீங்க சொன்னீங்கன்னு கொஞ்சம் பெருசா ஒரு பதிவு போட்டு இருக்கேன்.. பாத்துட்டு சொல்லுங்க!!! (உங்களோட புது ரிலீஸ் ஏதாவது இருக்கான்னு பாக்க வந்தேன்..)
இந்தப்படம் இன்னும் பார்க்கலை,பார்க்கணும்.
விமர்சனம் செய்யும் விதம் ரொம்ப நல்லாருக்கு.
என் வாசகசாலைக்கு வந்து சென்றதற்கு வண்ணத்துபூச்சியாருக்கு ரொம்ப நன்றி.
I wish I were there. I love maths & puzzles!
நல்லா கதை சொல்றீங்க:)
ரொம்ப உபயோகமான பக்கமா இருக்கு, உங்களைப் பற்றி தெரிந்து கொள்ள நானும் என் துணைவியாரும் ஆவலாக உள்ளோம்.
கலாப்ரியா
Thanx Dr Muniappan for your wishes and comments.
வாங்க கடைக்குட்டி. வீட்டில் என் தம்பியை குட்டின்னு தான் கூப்பிடுவேன். கண்டிப்பாக பார்க்கிறேன்.
முன்பெல்லாம் 4 நாட்கள் வரை டிரைலர் போடுவேன். மதிப்பிற்குரிய இயக்குநர் ஷண்முகப்பிரியன் அதையும் ரசிப்பார்.ஊக்கப்படுத்துவார்.
வேலை பளுவில் எழுத முடியவில்லையென்றால் நண்பர்கள் கோவிப்பார்கள். அதனால் போடுவதில்லை. மற்ற பதிவுகளையும் பின்னூட்டங்களையும் படித்து பாருங்கள் புரியும்.
அடுத்த படம் விரைவில் ரிலீஸ்.
வாங்க மீனா. வரவிற்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் பல.
வாசகசாலை அருமை. வாழ்த்துகள்.
வாங்க சுகிர்தா. நானும் 16ம் வகுப்பு வரை படித்திருக்கேன். இளநிலை கணிதம் தான்.வரவிற்கும் வாழ்த்திற்கும் நன்றிகள். நிறைய எழுதுங்கள்.
கலைமாமணி கலாப்பிரியா அவர்களுக்கு வணக்கம். தங்கள் வரவு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
என்னை பற்றி: நல்ல திரைப்படங்களின் ரசிகன். உலக சினிமா காதலன். மற்றவை கேளுங்கள்.. சொல்ல காத்திருக்கிறேன்.
தங்கள் துணைவியாருக்கும் எனது சிரம் தாழ்த்திய வணக்கங்கள்.
உங்கள் பதிவுகள் நன்றாக இருக்கிறது ..நீங்கள் எனது பதிவுக்கு பின்நூட்டம்யிட்டதற்கு நன்றி!
மேலும் ஒரு பதிவு போட்டுள்ளேன் .
நன்றி மலர். பார்க்கிறேன். வாழ்த்துகள்.
ரொம்ப விருப்பான விமர்சணம்
அவசியம் பார்க்கனும் இத்திரைப்படத்தை
நன்றி பகிர்தலுக்கு
அன்புடனக்கு நன்றி.
அன்புடன்
சூர்யா.
piratebay மூலமா torrent-ஆ இப்போதான் இறக்கி பார்த்து முடிச்சேன்... whew !!!! பேப்பரும் பேனாவுமா உட்காந்து, படத்தை பொறுமையா பார்த்துட்டு இருந்தேன்.. அட்டகாசமா இருந்தது.. சூப்ப்பர்.... இந்த படத்தோட அறிமுகத்துக்கு ரொம்ப ரொம்ப நன்றி :-) எங்க இருந்து பிடிச்சீங்க இந்த படத்தை அட்டகாசம்..
நன்றி யாத்ரீகன். I watched this movie in a festival.
அடிக்கடி வாருங்கள்.
Hello Vannathu-p-poochiyaar,
I liked this movie review very much. It has the same style as the suspense film. I will try to see this film soon.
I wish you had added a tamil writing gadget Can you add one?
unable to find the DVD, can u tell me where I can get this in Chennai? (except cinema paradiso or one of the ****** parlours).
Shuba, As said earlier I watched this movie in film festival. I will try for the DVD for you. Thanx.
Mail me: butterflysurya@gmail.com
sir where we could get this dvd in chennai would you pls advice us
Dear Arn Shuba, As said earlier I watched this movie in film festival..
Post a Comment