உலகின் மிகச்சிறந்த இயக்குநர்களில் ஒருவர்தான் ஸ்பானிஷ் இயக்குநர் பெட்ரோ அல்மோதோவர். வாழ்வின் நுண்ணிய் தருணங்களை படைப்பது போன்ற்தொரு கலை சினிமா தவிர வேறில்லை என்பதை நிருபித்தவர்.
இவரது All about my mother திரைப்படத்தை பார்த்து சிலாகித்த பிறகு இவரை பற்றிய தேடுதல் எனக்குள் தொடங்கியது.
இவரது வாழ்க்கை பற்றியும் படைப்புகளை பற்றியும் இதோ உங்களுக்காக.
Pedro Almodovar 25 செப்டம்பர் 1951ல் ஸ்பெயினில் பிறந்தார்.
துறவிகளுக்கான பள்ளியில் கல்வி பயின்றார். 12வயது வயதில் ரிட்சர்ட் புரட்சியின் திரைப்படத்தை பார்த்து தானும் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று தீராக்காதல் கொண்டார்.
1968 ல் மேட்ரிட்கு இடம்பெயர்ந்தார். பழைய பொருட்களை வைத்து வியாபாரம் செய்து காலத்தை ஒட்டினார். வறுமை வாட்டியது. ஸ்பானிஷ் டெலிபோன் கம்பெனியில் வேலை கிடைத்தது. சொற்ப சம்பளத்தில் இருந்தாலும் சினிமா ஆசையால் சிறிது சிறிதாக பணம் சேர்த்து ஒரு காமராவை விலைக்கு வாங்கினார். அந்த சந்தோஷத்தில் நண்பர்களின் துணையோடு சிறு சிறு குறும்படங்களை உருவாக்கினார்.
பத்து வருட போராட்டத்திற்கு பிறகு 1978ல் தனது முதல் படத்தை உருவாக்கினார்.
Pepi, Luci, Bom இந்த திரைப்படம் போலிஸ்காரர் ஒருவரால் கற்பழிக்கப்ப்ட்ட ஒரு பெண்ணின் கதை. ஸ்பெயினில் இருந்த ஆடம்பர பகட்டினை கேலி செய்யும் விதமாகவும் இருந்தது.
Labyrinth of Passion 1982ல் வெளிவந்தது. இதுவும் செக்ஸிலா என்ற பெண்ணை பற்றியது.
1983ல் வெளியான Dark Habits பாலியல் ஒடுக்குமுறை குறித்து தீவிர கேள்விகளை எழுப்புவதாய் அமைந்த படங்களாய் இருந்தது. தொடர்ந்து பெண்களை மையமாக கொண்ட இவரது திரைப்படங்கள் மிகுந்த வரவேற்பை பெற்றது.
What Have I Done to Deserve This? என்று சமூகத்தில் அனைவரும தன்னை தானே கேள்வி கேட்பது போல ஒரு திரைப்ப்டத்தை 1984ல் உருவாக்கினார். இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை தேடிதந்தது.
இவரது திரைப்டகாதல் தொடர்ந்தது.......
Matador {1986}
Law of Desire {1987}
Women on the Verge of a Nervous Breakdown {1988}
Tie Me Up! Tie Me Down! இவரது மிகச்சிறந்த படைப்புகளுள் ஒன்று.
மன நல காப்பகத்திலிருந்து சிகிச்சை முடிந்து வெளியேறும் ஒருவன் தனக்கு பிடித்த சினிமா நாயகி அவள் மேலுள்ள அதீத காதலால அவளை கடத்துகிறான். தன்னையே திருமணம் செய்யவே அவளை கடத்தியதாகவும் கூற அவளோ மறுக்கிறாள். வீட்டில் அடைத்து வைத்து சிறிது சிறிதாக அவளை மன மாற்றமடைய செய்து அதில் வெற்றியும் பெறுகிறான். Antonio Banderas நடித்தது. 1990 வெளிவந்த இத்திரைப்படம் உலக அரங்கில் இவரை உற்று நோக்க வைத்தததுடன் பல விருதுகளை வாரி வழங்கியது.
மற்ற படைப்புகள்:
ஸ்பெயினில் வாழும் ஒரு சில குடும்பங்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களின் தொகுப்பே இந்த திரைப்படம்.தாயின் பெருமைகளை சார்ந்து எடுக்கப்ப்ட்டதாலும் ஒரு மகனை மையப்ப்டுத்தியதாலும் திரைப்பட பெயர் All about my mother. 47 உலக விருதுகளுடன் 2000ம் ஆண்டு ஆஸ்கர் வென்றது.
Talk to her { 2002 }
காதல் வலியின் தனிமை, சோகம், நெருக்கம் பற்றிய அற்புத படைப்பு.
இந்த ஒரே திரைப்படத்திற்கு மட்டும் கிடைத்த விருதுளின் பட்டியல் :
( Courtesy : wikipedia )
2003 BAFTA விருதுகள்
Best Film Not in the English Language
Best Original Screenplay
2003 Bangkok International Film Festival ("Golden Kinnaree Award"): Best Film, Best Director
Bodil Awards Best Non-American Film
Bogey Awards Bogey Award
Cinema Brazil Grand Prize Best Foreign Language Film
Cinema Writers Circle Awards (Spain):
Best Original Score (Alberto Iglesias)
Czech Lions Best Foreign Language Film
2003 César Awards Best European Union Film
European Film Awards Best Film, Best Director
Best Screenwriter
2003 Golden Globe Awards
Best Foreign Language Film
Goya Awards (Spain): Best Original Score (Alberto Iglesias)
Los Angeles Film Critics Association Best Director
Mexican Cinema Journalists ("Silver Goddess"): Best Foreign Film
National Board of Review Best Foreign Language Film
Russian Guild of Film Critics ("Golden Aries"): Best Foreign Film
Satellite Awards : Best Motion Picture - Foreign Language, Best Original Screenplay
Sofia International Film Festival : Audience Award - Best Film
Spanish Actors Union : Performance in a Minor Role - Female (Mariola Fuentes)
TIME Magazine : Best Film
Uruguayan Film Critics Association : Best Film (tie)
Vancouver Film Critics Circle : Best Foreign Film
2002 Academy விருதுகள்.
Best Director
British Independent Film Awards : Best Foreign Film - Foreign Language
Broadcast Film Critics Association Awards : Best Foreign Language Film
Chicago Film Critics Association : Best Foreign Language Film
Chlotrudis Awards : Best Director
David di Donatello Awards : Best Foreign Film
European Film Awards : Best Actor (Javier Cámara), Best Cinematographer (Javier Aguirresarobe)
Satellite Awards : Best Director
அடுத்த படைப்பான Bad Education { 2004 } Volver { 2006 } என்று இவரின் திரையுலக வாழ்க்கை இன்றும் தொடருகிறது.
எழுத்திலும் நாடகத்திலும் அளவில்லாத வேட்கையோடு தனது வாழ்க்கையை தொடங்கிய் இவர் அடைந்த துன்பங்களும் துயரங்களும் சொல்லி மாளாது. அத்துடன் வறுமை வேறு. துன்பங்களை தாண்டியவர்களே ஜெயித்தவர்கள் என்று வரலாறு சொல்கிறது.
சினிமா மீது கற்பனை மட்டும் இல்லாது அளவு க்டந்த காதலும் இருக்க வேண்டும் என்று இவர் சொல்வது எத்தனை உண்மை என்பதற்கு இவரது திரைப்டங்களே சாட்சி.
இவரை திரைப்பட காதலன் என்பதில் மிகுந்த மகிழ்ச்சியே.
16 comments:
Hello Vannathupoochiyar.......Can you please review "What Have I Done to Deserve This?"...After reading your post,I am really curious about the storyline..Probably i wl try to pick up a DVD..
திரைப்படக் க்லையின் மேல் தங்களுக்கு இருக்கும் காதல்,அதனால் வரும் ஈடுபாடு,அதனால் வரும் தூய ரசனை,அதனால் வரும் ஆழம்.
பரிபூரண ரசிகரே பரிபூரணப் படைப்பாளி ஆக மாறுவார் என்பதால் உங்களை இப்போதே வாழ்த்துகிறேன் வண்ணத்துபூச்சியாரே.
Hi Viji.Long time No see. Sure.
I will try to post one by one shortly.
Thanx for your visit and valuable comments.
Tala All Detailu Superu.
Pinni Pedal Edukuthu./
Tie Me up! Tie Me Down! மட்டுமே இந்த வரிசையில் பார்த்திருக்கிறேன் பூச்சி! ஒரு தமிழ் படம் இதே கருவில் வந்திருக்கு (சத்யராஜ்?). ஆனா இந்த படம் வருவதற்கு முன்பா, பின்பா-ன்னு தெரியலை!
அப்படியே எங்க ஹாலிவுட் இயக்குனர்கள் பத்தியும் எழுதுங்க தல! :-)
ஷண்முகப்பிரியன் சார். எவ்வளவு பெரிய எழுத்தாளராகவும் இயக்குநருமாகிய தாங்கள் என்னை போன்ற சாதாரண ரசிகரை ஊக்குவிப்பதும் பாராட்டுவதும் எனக்கு அளவு கடந்த மகிழ்ச்சியை தருகிறது.
மட்டற்ற மகிழ்ச்சியுடன் நன்றிகள் கோடி..
Tala All Detailu Superu.
Pinni Pedal Edukuthu./////
நன்றி கெளதம். இயக்குநர்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் நல்ல படங்களையும் மற்றவர்களுக்கும் தெரிய செய்யலாமே என்றுதான் பொறுமையாக இப்பதிவினை இட்டேன்.
தொடர்ந்து தங்களை போன்ற நண்பர்களின் ஊக்குவித்தலால் தான் இன்னும் எழுத தூண்டுகிறது. நன்றிகள் பல.
வாங்க பாலா.. சென்ற முறை கேட்டதற்காக ஒரு மசாலா பதிவிட்டு(Women on Top) மூன்றே நாட்களில் இரண்டாயிரம் ஹிட்டுக்கு காரணமே நீங்கள் தான்.
ஹாலிவுட் பாலா கேட்டு போடலேன்னா எப்படி?
கண்டிப்பாக விரைவில்....
You've given a detail of the Spanish Director,apart from the stories.Nalla pathivu Vannaththupoochiar.Thank u for ur info in my post stating my post has been listed in youthful vikatan.com.Nandri.
Thank you so much Dr. for your encouraging comments.
அருமையான ஆய்வுக் கட்டுரை.திரைப்படங்களைப் பொழுது போக்குக்காக பார்க்கும் என்னைப் போல் பலரை ஆழ்ந்து சிந்திக்க வைக்கிறது உங்கள் பதிவு.
ஒரு விஷயத்தை எவ்வளவு அழகாக ஆழமாக ஆய்ந்து எழுதியிருக்கிறீர்கள்!!!
கிரேட்
வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி கோமதி அம்மா.
மிக்க நன்றி.உங்கள் கட்டுரைகள் அருமை.பெட்ரோ என் மனம் கவர்ந்த டைரக்டர்.
நன்றி திரு. சங்கர். திரைத்துறை வித்தகர்களின் வருகையும் வாழ்த்தும் மிகுந்த மகிழ்ச்சியும் ஊக்கமும் அளிக்கிறது.
இவரது படங்களையும் நான் பார்த்ததில்லை. ஆனால் கேள்விப்பட்டிருக்கிறேன். பார்க்க முயற்சி செய்கிறேன்.
Thanx RV for your visit and wishes.
Post a Comment