" இப்பிரபஞ்சத்தின் முடிவில்லா விரிவின் முன், இழந்த தேசத்திற்கான மன்னனின் கவலைக்கும் உடைந்த பொம்மைக்கான குழந்தையின் கண்ணீருக்கும் அதிக வித்தியாசம் இல்லை "
அமெரிக்காவின் மிகப்பெரும் இலக்கிய கர்த்தாக்களில் ஒருவரான மார்க் ட்வைன்.
--------------------------------------------------------
உலக திரைப்பட இலக்கணமும் அறிமுகம் இல்லாத எவரையும் மஜித் மஜிதியின் திரைப்படங்கள் கவர்ந்து விடும் என்பதை சொல்ல தேவையில்லை.
சிறிதும் நாடகத்தன்மை இல்லாது அதிகமான இயல்பும் எளிமையும் குழந்தைகளின் உளவியலை மாறுபட்ட வாழ்வியலை நெகிழ்ச்சியான திரைப்படங்களாக வடிவமைத்தைலையே வழக்கமாக கொண்ட மஜித் மஜீதியின் மற்றொருமோர் உன்னத படைப்பு Pedar.
நாம் எல்லோரும் நம் குடும்பத்தோடு மகிழ்ச்சியுடன் வாழும் இந்த வேளையில் எத்துனையோ பேர் இந்த பிரபஞ்சத்தின் ஒவ்வொரு மூலையிலும் இல்லாத அல்லது இழந்து விட்ட தத்தம் உறவுக்காக ஏங்கி கொண்டுதான் இருப்பார்கள்.
அப்படி தந்தையின் பிரிவால் துடிக்கும் ஒரு சிறுவனின் கதை தான் இந்த திரைப்படம்.
---------------------------------------------------------
Pedar { Father }
சிறுவன் மெஹ்ரோலா கடந்த நாலு மாதமாக துறைமுகத்தையொட்டிய மொத்த வியாபார கடையில் கடுமையாக உழைத்து விடுமுறையில் ஊருக்கு கிளம்புகிறான். நாலு மாத சம்பளத்தில் பாதியை மட்டும் கொடுக்கிறான் முதலாளி. மீதியை விடுமுறையில் இருந்து வந்தததும் தருவதாகவும் இல்லாட்டி நீ திரும்பி வரமாட்டாய் என்கிறான்.
முதலாளி மீது கோபம் கொண்டாலும் அதை மறந்து ஊருக்கு போகப்போகும் மகிழ்ச்சியில் மார்கெட்டுகளில் தேடித்தேடி பொருட்களை வாங்குகிறான். எதுவுமே தனக்கில்லை. ஆறுமாத்திற்கு முன் ஒரு விபத்தில் தந்தையையிழந்த அவன் மூன்று தங்கைகளுக்கும் அம்மாவுக்கும் மட்டுமே .
தொலை தூர பயணத்தின் முடிவில் ஊர் சென்றடைகிறான். ஒடையில் முகம் கழுவும் போது அவனது தந்தையுடன் எடுத்த புகைப்படம் ஒடை நீரில் விழுந்து அடித்து செல்கிறது. எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை.
அதையும் மறந்து தாயையும் தங்கைகளையும் காண மகிழ்ச்சியோடு வீட்டை நோக்கி ஒடும் போது வழியில் நண்பன் லத்தீப்பை சந்திக்கிறான்.
அம்மாவும் தங்கைகளும் உன் வீட்டில் இல்லை. அந்த போலீஸ்காரனுக்கும் உங்க அம்மாவிற்கும் கல்யாணமாகிவிட்டது, எல்லோருமே அவர் வீட்டில் தான் வசிக்கிறாங்க என்ற அதிர்ச்சியை மெஹ்ரோலாவால் நம்பவும் முடியவில்லை. தாங்கி கொள்ளவும் இயலவில்லை.
சிறுவன் மெஹ்ரோலா கடந்த நாலு மாதமாக துறைமுகத்தையொட்டிய மொத்த வியாபார கடையில் கடுமையாக உழைத்து விடுமுறையில் ஊருக்கு கிளம்புகிறான். நாலு மாத சம்பளத்தில் பாதியை மட்டும் கொடுக்கிறான் முதலாளி. மீதியை விடுமுறையில் இருந்து வந்தததும் தருவதாகவும் இல்லாட்டி நீ திரும்பி வரமாட்டாய் என்கிறான்.
முதலாளி மீது கோபம் கொண்டாலும் அதை மறந்து ஊருக்கு போகப்போகும் மகிழ்ச்சியில் மார்கெட்டுகளில் தேடித்தேடி பொருட்களை வாங்குகிறான். எதுவுமே தனக்கில்லை. ஆறுமாத்திற்கு முன் ஒரு விபத்தில் தந்தையையிழந்த அவன் மூன்று தங்கைகளுக்கும் அம்மாவுக்கும் மட்டுமே .
தொலை தூர பயணத்தின் முடிவில் ஊர் சென்றடைகிறான். ஒடையில் முகம் கழுவும் போது அவனது தந்தையுடன் எடுத்த புகைப்படம் ஒடை நீரில் விழுந்து அடித்து செல்கிறது. எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை.
அதையும் மறந்து தாயையும் தங்கைகளையும் காண மகிழ்ச்சியோடு வீட்டை நோக்கி ஒடும் போது வழியில் நண்பன் லத்தீப்பை சந்திக்கிறான்.
அம்மாவும் தங்கைகளும் உன் வீட்டில் இல்லை. அந்த போலீஸ்காரனுக்கும் உங்க அம்மாவிற்கும் கல்யாணமாகிவிட்டது, எல்லோருமே அவர் வீட்டில் தான் வசிக்கிறாங்க என்ற அதிர்ச்சியை மெஹ்ரோலாவால் நம்பவும் முடியவில்லை. தாங்கி கொள்ளவும் இயலவில்லை.
இரண்டு மாதங்களுக்கு முன் அவனது தங்கைக்கு ஏற்பட்ட நோய்க்கு அதிக செலவிட்டதாகவும் அதனாலேயே உங்கம்மாவை அந்த போலிஸ்காரன் கல்யாணம் செய்ததாகவும் ஊரெல்லாம் பேசிக்கிறாங்க என்கிறான் லத்தீப்.
போலீஸ்காரருக்கு சரியான பாடம் புகட்டுகிறேன் என்கிறான் மெஹ்ரோலா.
தாயை பார்த்து கடும் கோபம் கொண்டு அவளை கண்டபடி திட்டுகிறான். ஒரு தந்தையின் பொறுப்போடு பணம் சம்பாதிக்க போன நேரத்தில் தான் ஏமாற்றப்பட்டு போனதாய் வருந்துகிறான்.
ஆனால் தாயோ அவர் மிகவும் நல்லவர். இக்கட்டான நேரத்தில் ஆறுதல் தந்தவர் என்று எவ்வளவு எடுத்து கூறியும் ஆழ்மனத்தில் இருக்கும் தந்தையும் பொறுப்பும் பதின்ம வயதிற்குண்டான கோவமும் முரட்டுதனமும் அவனை எதையும் ஏற்று கொள்ள மறுக்கிறது.
கோவித்து கொண்டு தங்கள் வீட்டிலேயே தனியாக தங்குகிறான். நண்பன் லத்தீப் மூலம் இரவு உணவை கொடுத்தனுப்புகிறாள் தாய்.
கோவம் குறையாதவனாய் மறுநாள் போலீஸ்காரரை சந்த்திது பணத்தை அவர் முகத்தில் விட்டெறிகிறான் மெஹ்ரோலா. அவரோ உன் தாய்க்கு கொடு இந்த பணத்தை எனக்கு வேண்டாம், நான் பணத்திற்காகவும் சுகத்திற்காகவும் எதுவும் செய்யவில்லை. மன அமைதிக்காகவே எதையும் செய்வதாய் கூறுகிறார்.
இள இரத்தம் எதையும் புரிந்து கொள்வாதையில்லை.
தான் சம்பாதித்த பணத்தை கொண்டு தனது வீட்டை அலங்கரித்து மூன்று தங்கைகளையும் ஒரு நாள் யாருக்கும் தெரியாமல் கூட்டி கொண்டு வந்து விடுகிறான்.
பதறியடித்து ஒடி வருகிறார்கள் தாயும் போலிஸ்காரரும். பயந்து போய் காட்டி கொடுக்கிறான் லத்தீப். குழந்தைகளை அழைத்து சென்று விடுகின்றனர்.
மறு நாள் வீட்டில் மாடிப்படிகளில் விழுந்து அடி பட்டு கடும் காய்ச்சாலால் அவதி படுகிறான் மெஹ்ரோலா. மருத்துவ மனைக்கு தூக்கி கொண்டு ஒடுகிறார் போலிஸ்காரர். தன் வீட்டிலேயே தங்க வைத்து அவனை குணப்படுத்த சொல்கிறார். தாயும் அன்போடும் அரவணைப்புடன் அவனை காக்கிறாள்.
ஒரு நாள் இரவு யாருக்கும் தெரியாமல் காவல் பணியின் சின்னமான போலிஸ்காரரின் கைத்துப்பாக்கியை எடுத்து அவரை கொல்ல நினைக்கிறான். அது நடக்காமல் போகவே தன்னையும் அழைத்து கொண்டு போகும் படி கெஞ்சிய நண்பன் லத்தீப்புடன் தான் வேலை செய்யும் நகரத்தை நோக்கி கைத்துப்பாக்கியோடு இரவோடு இரவாக ஒடிப்போகிறார்கள் இருவரும்.
விடிந்ததும் தன் துப்பாக்கியையும் இரண்டு சிறுவர்களையும் காணாத போலிஸ்காரர் எரிச்சலும் ஆத்திரமும் அடைகிறார்.
நாலு நாள் லீவு சொல்லிவிட்டு நகரத்தை நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் பயணமாகிறார். அலைந்து திரிந்து கண்டும் பிடித்து விடுகிறார்.
லத்தீப்பை ஊருக்கு அனுப்பிவைத்து விட்டு மெஹ்ரோலா.கை விலங்கிட்டு தனது மோட்டார் சைக்கிளிலேயே அழைத்து வருகிறார்.
இருவருக்கும் பேச எவ்வளவோ இருந்தும் இருவரும் முறைப்பும் வெறுப்பும் கலந்த பார்வை. சில நேரங்களில் இகழ்ச்சி கலந்த புன்னகை. மட்டுமே.
போலிஸ்காரர் ஏமாந்த தருணத்தில் மோட்டார் சைக்கிளோடு தப்பிக்கிறான் மெஹ்ரோலா. பல கைதிகளை வளைத்து பிடித்த தனது தொழில் முறையால் குறுக்கு வழியில் ஒடி மீண்டும் பிடித்தும் விடுகிறார்.
கண்டபடி திரிந்ததாலும் இருவரும் வழியை தவற விட்டு விடுகின்றனர். கொடிய பாலைவன கோடையில் மோட்டார் சைக்கிளும் பழுதடைய கடும் கோவம் கொள்கிறார் போலிஸ்காரர்.
கை விலங்கை அவிழ்த்து விட்டு “ உன் இஷ்டப்படி ஓடு.” வழி தெரியாது எங்கு வேண்டுமானாலும் போ என்கிறார்.
அதுவரை காத்திருந்த மெஹ்ரோலா அவரை விட்டு விலகாமல் அருகிலேயே நடக்கிறான்.
திடீரென பாலைவன்ப்புயல் அடிக்கிறது. சூறாவளியாய் சுற்றும் அந்த புழுதி கலந்த மண்ணில் செய்வதாறியாது திகைக்கின்றனர் இருவரும். நாக்கு வறண்டு தாங்கி கொள்ள முடியாமல் மயங்கி விழுகிறார் போலிஸ்காரர்.
செய்வதறியாது திகைக்கிறான் மெஹ்ரோலா. கண்ணுக்கெட்டிய தூரத்தில் ஒட்டகங்கள் தெரிகின்றது. ஒட்டகங்கள் திரிந்தால் அவ்விடத்தில் தண்ணீர் இருக்கும் என யூகிக்கிறான். அந்த ஒரு புள்ளியை குறி வைத்து ஒடுகிறான். அவன் யூகம் வீணாகவில்லை. சள சளவென்று ஒடும் ஒரு மெல்லிய நீரோடையை காண்கிறான்.
ஒரு நிமிடமும் தயங்காமல் மீண்டும் ஒடி வந்து போலீஸ்காரரை கைகளை பிடித்து ஒடை வரை இழுத்து வருகிறான். இருவரும் ஒடையில் சரிந்து விழுகின்றனர்.
தண்ணீரின் குளுமை அவனுக்கு இதமாய் இருக்கிறது. தனது தந்தையின் பாதுகாப்பான கரங்களில் வீழ்ந்தது போல் தண்ணீரை பருககூட தோன்றாமல் சில நேரம் வீழ்ந்து கிடக்கிறான்.
அவ்வளவு குளிர்ந்த தண்ணீரில் வீழ்ந்து கிடந்தாலும் சுய உணர்வின்றி கிடக்கும் போலீஸ்காரரின் சட்டைபையிலிருந்து ஒரு புகைப்படம் தண்ணீரில் மிதந்து மெஹ்ரோலா முகத்தில் மோதுகிறது.
தான் தனிமையில் இருக்கும் போது போலிஸ்காரர் பார்த்து புன்னகைக்கும் புகைப்படம்.
மெஹ்ரோலாவின் தாயும் அவளது குழந்தைகளுமான புகைப்படம் அது.
அதை பார்த்ததும் மெஹ்ரோலாவின் கண்கள் ஒளிர்கிறது.
இந்த காட்சியோடு நிறைவடைகிறது திரைப்படம்.
சுட்டெரிக்கும் பாலைவனத்திற்குள்ளும் கடவுள் அளித்த நீரோடையாய் சொல்லணா வேதனையுடன் வாழ்ந்த தாய்க்கு கடவுள் அளித்த ஆதரவாய் போலீஸ்காரர் இருந்த்தை சொல்லாமல் சொல்லி முடித்திருக்கிறார் மஜித் மஜீதி.
ஊரை நோக்கி ஒடும்போது தொலைத்த தனது தந்தையின் புகைப்படைத்தை ஆரம்ப காட்சிகளில் பொறுத்தியிருப்பதை சொல்ல வார்த்தைகளில்லை.
தந்தையின் பொறுப்பு பிள்ளைகளை பெற்று விட்டதால் மட்டும் வந்து விடுவதில்லை என்பதை சிறுவன் மெஹ்ரோலா பாத்திர படைப்பின் மூலம் சித்தரித்திருக்கும் இயக்குனரின் உணர்வும் கற்பனை திறனும் அனைத்து தந்தையர்களுக்கும் இத்திரைப்படம் ஒரு பாடம்.
பார்க்க பார்க்க திகட்டாத அழகான மலைகளும் நீரோடைகளும் குளுமையில் கற்பனைகெட்டாத இடங்களிலெல்லாம் சென்று ஒரு திரைப்படைத்தை படைத்து ஒவ்வொரு காட்சியையும் ஒரு கவிதையாய் சொல்ல முற்படும் மஜித் மஜீதியை எத்தனை பாராட்டினாலும் தகும்.
மெஹ்ரோலா நடித்த சிறுவன் Hassan Sadeghi நடிப்பு மிகுந்த பாராட்டுகுரியது.
1996 ம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்ப்டம் உலக பல திரை விழாக்களில் பங்கு பெற்றதுடன் ஒன்பது உலக விருதுகளை அள்ளியது.
நல்ல சினிமா ரசிகர்கள் கண்டிப்பாக பார்கக வேண்டிய திரைப்படம்.
36 comments:
TEST....
இவரு தான் சில்ரன் ஆஃப் ஹெவன் எடுத்தாரு.
A nice stepfather story of passion marking the value of Human relationship.Majidmajid has touched a nice theme.Nandri Butterfly.
நான் மிக மிக ரசித்த படம்.போலீஸ்காரர்,மகன்,தாய் இவர்களின் பாத்திரப் படைப்பிற்கு ஏற்ற முகங்களைத் தேர்நதெடுத்ததிலேயே இயக்குநரின் ஆளுமை புரியும்.
எப்பொழுதோ ஜெயகாந்தன் எழுதிய 'உன்னைப் போல் ஒருவன்'கதையும் இதேதான்.
இரண்டு உன்னதப் படைப்பாளிகள் ஒரே மாதிரி சிந்தித்த விந்தை நடந்திருக்கிறது.
உங்கள் விமர்சனமும் தூள்.
எழுந்து நின்று கைதட்டுகிறேன்.பாராட்டுக்கள் சூர்யா.
மிக நீண்ட விமர்சணம்
ரொம்ப நாள் ஆச்சி இப்படி படிச்சி.
மிக நீண்ட விமர்சணம்
ரொம்ப நாள் ஆச்சி இப்படி படிச்சி.
அருமை. உங்கள் திறனாய்வு திரைப்படத்தை கண்முன் நிறுத்தியது.
osama by Siddiq Barmak
goodbye bafana by billie august
trade by Marco Kreuzpaintner
These are some of the good movies i have.
Would like u to review them if not done already.
அருமை.
படம் பார்த்தது போல் ஒரு உணர்வு.
நன்றி.
நன்றி பப்பூ.
Thanx Dr for your visit and comments.
ஷண்முகப்ரியன் said...
நான் மிக மிக ரசித்த படம்.போலீஸ்காரர்,மகன்,தாய் இவர்களின் பாத்திரப் படைப்பிற்கு ஏற்ற முகங்களைத் தேர்நதெடுத்ததிலேயே இயக்குநரின் ஆளுமை புரியும்.//////
100% உண்மையான வார்த்தை சார்.
எப்பொழுதோ ஜெயகாந்தன் எழுதிய 'உன்னைப் போல் ஒருவன்'கதையும் இதேதான்.
இரண்டு உன்னதப் படைப்பாளிகள் ஒரே மாதிரி சிந்தித்த விந்தை நடந்திருக்கிறது./// இதுவரை படிக்கவில்லை சார். கண்டிப்பாக படிக்கணும்.
உங்கள் விமர்சனமும் தூள்.
எழுந்து நின்று கைதட்டுகிறேன்.பாராட்டுக்கள் சூர்யா.//// நன்றி சார்.
நன்றி ஜமால். ஒவ்வொரு காட்சியும் எழுதலாம் அப்படி கவிதையாய் இருக்கிறது. ஆனால் இன்னும் எழுதினால் மிகவும் நீண்டு விடும் என சிலவற்றை குறைத்து விட்டேன். கண்டிப்பாக பாருங்க..
Dear Sridhar
Thanx for your visit and comments. Sure I will try my best.
நன்றி தமிழ் வாலிபன்.
அப்பாடா ஒரு திரைப்படம் பார்த்தது போன்ற நிறைவு ஏற்படுகிறது உங்களது எழுத்துநடையில்
நல்ல திறனாய்வுப் பார்வையுடன் எழுதியுள்ளீர்கள்
<<1996 ம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்ப்டம் உலக பல திரை விழாக்களில் பங்கு பெற்றதுடன் ஒன்பது உலக விருதுகளை அள்ளியது.>>
வாழ்த்துக்கள்!
வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி பால முரளி.
திரும்ப உங்க பழைய ஸ்டைல் படங்களுக்கே வந்துட்டீங்க. :)
என்னோட உலகப்பட அனுபவம் எல்லாம் உங்க ப்ளாகோட முடிஞ்சிடுது. இருந்தாலும் a-z நீங்களே சொல்லிடுறதால பார்த்த மாதிரியே ஃபீலிங் கொண்டு வந்துக்க வேண்டியதுதான். ;)
நன்றி பாலா. படம் பார்த்த மாதிரி இல்லையா..??
"பாலுக்குச் சர்க்கரை இல்லை என்பார்க்கும்
பருக்கை அற்ற
கூழுக்குப் போட உப்பு இல்லை என்பார்க்கும் - முள்
குத்தித் தைத்த
காலுக்குத் தோல் செருப்பு இல்லை என்பார்க்கும்
கனக தண்டி
மேலுக்குப் பஞ்சணை இல்லை என்பார்க்கும்
விசனம் ஒன்றே"
என்று மார்க் டைவன் சொன்னதை தமிழிலக்கியம் வேறொரு விதமாகச் சொல்லி இருக்கிறது.
உங்கள் விமர்சனமும் நன்றாக இருக்கிறது.
கவிதையான கருத்திற்கும் வாழ்த்திற்கும் நன்றி மணிமேகலா.
சூர்யா, இந்தப்படமாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். மிக அருமையான படம். உங்களின் விமர்சன நடையிலும் சிறு மாற்றத்தை காண்கிறேன். அபாரமான விவரணை நடை. பயணத்தை தொடருங்கள்.
- “அகநாழிகை“ பொன். வாசுதேவன்
நன்றி வாசுதேவன். எத்தனையோ திரைப்ப்டங்களை பார்த்தாலும் இரானிய திரைப்படங்கள் என்றுமே தனித்துவம் வாய்ந்த்து.
அதுவும் என் மனம் கவர்ந்த இயக்குநரில் முதலிடம் மஜித் மஜீதிக்கு தான்.
இறைவன் அருளினால் பயணம் தொடரும்.
படிக்கும்போதே நெகிழ வைக்கிறது நண்பா.. பார்க்க வேண்டும் என்ற ஆசையைத் தூண்டுகிறது.. அருமையான விமர்சனம்.. வாழ்த்துக்கள்..
நன்றி கார்த்திகை பாண்டியன். நிச்சயம் பார்க்க வேண்டிய திரைப்படம்.
நன்றி கார்த்திகை பாண்டியன். விகடன்.காமில் வந்திருப்பதாக நீங்களும் இன்னும் 5 பின்னூட்டங்களும் வந்தன. Publish ன்னு செலக்ட் பண்ணவுடன் எல்லாம் delete ஆகி விட்டது. இது போல் ஏற்கனெவே ஒரு முறையும் ஆகியுள்ளது.
இதற்கு யார் உதவுவார்கள்..??
http://youthful.vikatan.com/youth/index.asp.
வெளியாகியதை விபரம் தெரிவித்த வாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.
தொடர்ந்து வாருங்கள். நிறைய எழுத விருப்பம்.
நன்றி.
நல்ல விமர்சனம் சூர்யா...அற்புதமான படமல்லவா இது...லத்தீப் பாத்திரத்தில் நடித்த சிறுவன் பிறகு பரான் எனும் படத்தில் கதாநாயகனாக நடித்திருப்பான்...எனக்கு மிகவும் பிடித்திருந்தது இவனது இயல்பான நடிப்பு..இப்படத்தில் லத்தீஃ பாடியபடி வரும் ஒரு நாட்டுப்புற பாடல் மிக நன்றாக இருக்கும் ...
ஆமாம் ரொளத்ரன். எத்தனையோ திரைப்ப்டங்களை பார்த்தாலும் இரானிய திரைப்படங்கள் தனித்துவம் வாய்ந்த்து.
பாரன் எப்பவோ பார்த்திட்டேன். அதுவும் அற்புதமான திரைப்படம். என் மனம் கவர்ந்த இயக்குநரில் என்றுமே முதலிடம் மஜித் மஜீதிக்கு தான்.
சிறப்பான பதிவு.
உங்கள் பதிவுகளைப் பார்க்கும்போது அவற்றைத் தேடிப்பிடித்து பார்க்க வேண்டும் என்ற ஆவல் பொங்குகிறது. ஆனால் தொழிலால் நேரத்தை கண்டுபிடிக்க முடிவதில்லை.
Sans Maison .. பற்றிய என் பதிவைப் பார்த்தீர்களா? உங்கள் கருத்து என்ன?
கருத்துக்கும் வாழ்த்திற்கும் நன்றி டொக்டர்.
இப்போதுதான் பார்த்தேன். அருமை.
மஜித் மஜீதியின் திரைப்படங்களுக்கு நான் அடிமை. அவரது 'children of heaven','the willow tree','colour of paradise' போன்ற படங்களை பார்த்திருக்கிறீர்களா?. அவற்றை பற்றிய பதிவுகள் எனது இணையத்தில் காண்க. இந்த படம் நான் பார்க்கவில்லை. அறிமுகத்திற்கு நன்றி.
மஜித் மஜீதியின் திரைப்படங்களுக்கு நான் அடிமை. அவரது 'children of heaven','the willow tree','colour of paradise' போன்ற படங்களை பார்த்திருக்கிறீர்களா?. அவற்றை பற்றிய பதிவுகள் எனது இணையத்தில் காண்க. இந்த படம் நான் பார்க்கவில்லை. அறிமுகத்திற்கு நன்றி.
நண்பர் கேபிளும் புறா செத்து போச்சின்னு சொன்னார்.
நீங்க இரங்கல் பா பாடிவிட்டீர்கள்.
சரோஜாவில் சம்பாதித்ததை சரண் மறுபடியும் விட்டு விட்டார் போல இருக்கு.
that's not saroja movie. that is chennai 600 028. saroja movie producer is T.Siva "mariyadai" movie producer. don't make mistake again.
நன்றி நிலா முகிலன்.
Mariyadai...wow.. what a film..
Thanx Raja for the information.
nice film; I liked it very much.
Post a Comment