In food as in life, sometimes the missing ingredient is love.
காதலனுக்காக அமெரிக்காலேந்து ஜப்பான் போயி அவனோட குஜாலா இருக்காலான்னா அவன் என்னவோ வேற வேலையோ இல்லை வேற செட்டப்போ இவளை எந்த கூட்டணியிலும் சேர்க்காத கார்த்திக்கை போல அம்போன்னு விட்டுவிட்டு போயிடறான். நம்ம ஊரா இருந்தா “காதலன் கை விட்டதால் இளம் பெண் தற்கொலை” ன்னு தந்தியில் செய்தி வந்தாலும் வரலாம்.
ஆனா சுட்டி Britney Murphy சமையல் கத்துக்க போய் நொந்து நூடுல்ஸ் ஆகி கடைசியில் சுயேச்சையாய் ஜெயிச்ச கதைதான் The Ramen Girl.
அபி ( கோலங்கள் அபி இல்ல அது கர்ணன் அபி.. அப்படின்னா..?? கர்ணன் எப்போதும் கவச குண்டலத்தோட இருந்தது போல் அபி Hand Bag கழட்டவே மாட்டாங்கன்னு தமிழ் கடல் நெல்லை கண்ணன் சொல்லுவார். கடலென்ன சுனாமியே வந்து சொன்னாலும் 9 மணிக்கு டிவி முன்னாடி உட்கார்ந்து 41 விளம்பரத்தையும் சேர்த்து கர்ண அபியை கண்ணு கொட்டாம பார்ப்பார்கள் நம்ம மக்கள்... அது வேற கதை)
சரி நம்ம கதைக்கு வருவோம்.
இந்த படத்துல Britney Murphy பேரும் அபி.
அபி நிர்கதியாய் நின்ற நாள் பின்னிரவில் பசி வயிற்றை கிள்ள தன் வீட்டிற்கு எதிரே உள்ள ரெஸ்டாரண்ட்டுக்கு வருகிறாள்.
ரெஸ்டாரண்ட் என்னமோ சின்னதுதான். ஆனால் ரெஸ்டாரண்டின் நூடுல்ஸ் + கறிக்கு ஏக கிராக்கி. சும்மா கூட்டம் அலை மோதும்.
கஸ்டமர் அனைவரும் ஒய்ந்த பின் அப்போதான் கதவடைக்கப்பட்டது.
பூட்டியிருக்கும் கதவை டமார் டமார்ன்னு தட்ட மாஸ்டர் எட்டி பார்க்கிறார். ஜப்பான்னா குங்பூ மாஸ்டர் இல்லை. சரக்கு மாஸ்டர் cum owner.
சரக்கு அடித்து கொண்டே எல்லாம் குளோஸ் போயிட்டு வா என்கிறார்.
ஏமாற்றமும் பசியும் ஒண்ணா சேர்ந்தா குழந்தை என்ன பண்ணும்..?? அபி அழ ஆரம்பிக்கிறாள்.
இது என்னடா வம்பா போச்சுன்னு உட்கார வெச்சு கறியும் நூடுல்ஸ் கொடுக்க செம பசியில் எல்லாத்தையும் single stroke ல காலி பண்ணுகிறாள்.
இப்பவாவது கிளம்பறியா என்கிறார் மாஸ்டர்.
ரெஸ்டாரண்டிலுள்ள பூனை பொம்மை அபியை வா.. வான்னு கூப்பிடுது. கதையில டைரக்டர் வெச்சாரு பாருங்க டூவிஸ்ட்.
மறுநாள் ரெஸ்டாரண்டில் தொழில் கற்றுக் கொள்வதற்க்காக வேலைக்கு சேர விருப்பம் தெரிவிக்க உனக்கு என்ன பைத்தியமான்னு கேட்டு மாஸ்டர் கழுத்தை பிடித்து வெளியில் தள்ளுகிறார்.
பல வித போராட்டங்களுக்கு பிறகு பாத்திரம் தேய்க்கிற வேலைக்கு மட்டும் சேர்ப்பதாக கூறுகிறார்.
என்னா வைராக்கியம்...??? அதையும் செய்வேன்னு சம்மதிக்கிறாள் அபி. பாத்திரத்தோட கக்கூஸையும் கழுவ வைக்கிறார்.
எல்லாத்தையும் சகிச்சுகிட்டு எப்படியாவது நூடுல்ஸ் செய்யும் கலையை கற்றுக்கொள்ள முனைகிறாள். காலை 5 மணிக்கெல்லாம் வந்து வித விதமாய் சமைத்து பார்க்கிறாள். ஒண்ணும் வேலைக்காகவில்லை.
மாஸ்டரின் மனைவி எல்லார் கிட்டேயும் ஏன் தான் இப்படி எரிஞ்சு விழறிங்க.. இப்படிதான் பெற்ற பிள்ளையை கரிச்சு கொட்டியதால் தான் அவன் நீயும் வேண்டாம் உங்க தொழிலும் வேண்டாம்ன்னு பிரான்ஸ்க்கு போயிட்டான் என்கிறாள்.
தன் தொழிலுக்கு வாரிசு இல்லையென்பதாலும் போட்டி ரெஸ்டாரண்ட் காரன் தன் மகனை வாரிசாக அறிமுகப்படுத்தியதாலும் கடுப்பாகி ஒரு வழியாக அபிக்கு தொழிலை சொல்லி கொடுக்க சம்மதிக்கிறார்.
மாஸ்டருக்கோ ஆங்கிலம் தெரியாது. அபிக்கோ ஜப்பான் மொழி வராது. இரண்டு பேரும் பேசிக் கொள்வது சரியான காமெடி.
இதற்கிடையே ஒரு நாள் ஒரு ஜப்பானிய இளைஞனை சந்திக்கிறாள். அவன் ஆங்கிலம் பேசுவதால் நட்பும் உண்டாகி காதலாகிறது. சதா அவனுடன் பேசிக்கொண்டே இருப்பதால் மொபைல் போனை போட்டுடைக்கிறார் மாஸ்டர்.
எவ்வளவு சொல்லி கொடுத்தும் இவளுக்கு கைப்பக்குவம் வரவில்லையே என்று நினைத்து தன் வயதான தாயிடம் அழைத்து சென்று விபரம் அனைத்தையும் கூறுகிறார்.
மாஸ்டரின் தாயும் அவளை சமைக்க வைத்து இத பாரும்மா
“ சமையல் ஒரு தெய்வீகமான கலை “ நம்ம ரெஸ்டாருக்கு வரவங்க வீட்டுக்கு வரும் விருந்தாளிகளை போல மிகவும் அன்புடன் பக்தியுடன் ஒரு தவமாய் செய்தால் தான் அறுசுவையும் வரும். புரிஞ்சு நடந்துக்கோ “” என்று புத்திமதியும் சொல்ல கண்டிப்பாய் செய்கிறேன் என்கிறாள் அபி.
இதற்கிடையில் ஜப்பான் காதலனக்கு வேலை கிடைத்து வெளியூர் போகின்றான். அவனை பிரிந்து இருக்க முடியாது என்கிறாள் அபி. படித்த படிப்பையும் கிடைத்த வேலையையும் விட முடியாது என்கிறான் காதலன்.
ஊருக்கும் கிளம்பி விடுகிறான். எடுத்த காரியத்தை முடித்தே தீருவது என்று கர்ம சிரத்தையுடன் தொழிலை கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக்கொண்டும் விடுகிறாள்.
மாஸ்டருக்கெல்லாம் மாஸ்டர் தாத்தா மாஸ்டர் டேஸ்ட் பார்த்து அங்கீகரிக்க வருகிறார். முதலில் போட்டியாளன் ரெஸ்டாரண்டுக்கு போயி வாரிசின் உணவுகளை சுவைத்து O.K. Granted என்கிறார்.
அடுத்தது அபி. டென்ஷடனுடன் காத்து கிடக்க. தாத்தா மாஸ்டர் உணவை சுவைத்து நல்லாயிருக்கு. முடிவை விரைவில் என்று சொல்லி விட்டு செல்கிறார். உன் அமெரிக்க அதி மேதாவிதனத்துடன் புது வகையாக ஏன் சமைத்தாய் என்று கோவிக்கிறார் மாஸ்டர்.
மறு நாள் சூப்பர் டேஸ்ட்டான புது வகை உணவே மிகச்சிறந்தது என இறுதி தீர்ப்பு அளிக்க ஊரே அபியை கொண்டாடுகிறது. தன் திறமைக்கும் தொழிலுக்கும் வாரிசு உருவானதை நினைத்து சந்தோஷப்படுகிறார் மாஸ்டர். ரெஸ்டாரண்ட் விரிவு படுத்தப்பட்டு பிஸினஸ் சக்கை போடு போடுகிறது.
சில மாதங்கள் கழித்து என்னாலேயும் உன்னை விட்டு இருக்க முடியவில்லைன்னு என்று வந்து சேருகிறான் ஜப்பான் காதலன். சுபம்.

சென்ற ஆண்டு (2008 ) ஹாலிவுட்டிலும் ஜப்பானிலும் வெளிவந்து ஒரளவு வசூலை அள்ளியது.
குட்டி பொண்ணா சின்னதிரை தாரகையாய் பதிமூணு வயசிலேந்து நடிச்சிகிட்டு இருந்தாலும் ஒரிரண்டு படங்களை தவிர Britney Murphy பெரிய அளவில் இன்னும் பேசப்படவில்லை.
Britt க்கு பேர் சொல்ல போகும் Sin City 2 அடுத்த வருடம் காத்திருக்கு.
தயாரிப்பு & இயக்கம் Robert Allan Ackerman. நிறைய தொலைக்காட்சி சீரியலகளை இயக்கியிருந்தாலும் இது இவரது முதல் திரைப்ப்டம்.
திருமுருகன் எம்மகன் ஜெயித்தது போல முதல் படத்தில் ஜெயித்து விட்டார். இவராவது அடுத்த படம் முனியாண்டி போல போண்டியாகாம இருக்க AVM பிள்ளையாரை பிரார்த்திக்கிறேன்.
23 comments:
TEST
A tasty review,Soorya.Have you reviewed 'Brittany Murphy's ' Just married'.
A very nice love story.
Nice review. I liked the comment about the Karnan Abhi. Its true indeed!
தலைவரே.. விமர்சனத்தைவிட உங்க ஸ்டைல் சூப்பர்..
You've selected a nice story,Abi's determination & hard work for success are imperssive.
Shanmugapriyan Sir, Thanx for your comments and compliments. "Just married" is awaiting for review..
Thanx notenquote.
Thanx shortfilmindia & vmtamilcine.
எந்த கூட்டணியிலும் சேர்க்காத கார்த்திக்கை போல அம்போன்னு விட்டுவிட்டு போயிடறான்
அருமை. நன்றாக ரசித்தேன்.
எந்த கூட்டணியிலும் சேர்க்காத கார்த்திக்கை போல அம்போன்னு விட்டுவிட்டு போயிடறான்
இதுரசிக்கும்படி உள்ளது. இருந்தாலும்..
கார்த்திக்குன்னு அதே போல ஒதுக்கப்பட்ட பிஜேபி, சரத்குமார் கட்சிகளும் இருக்குதே சார்!:))
நன்றி ஸ்ரீதர் சார்.
நன்றி பால முரளி.
தான் பி.ஜே.பி கூட்டணியில் இருப்பதாக நேற்று அவரே "தெளிவாக" கூறியிருக்கிறார்.
லேட்டஸ்ட் அப்டேட் அளித்தமைக்கும் நன்றி.
நல்லதொரு விமர்சனம்.
வீடியோ லைப்ரரி-ல தேடிப் பிடிச்சி வாங்கி பாத்திட வேண்டியது தான்.
நன்றி ஜோ.
அருமையான விம்ர்சனம் மச்சான் ரொம்ப மெனக்கெட்டு எழுதிருக்க வெரி குட் நானும் தேடிப் பிடிச்சி பாக்குறேன்
உங்கள் விமர்சனம் படம் பார்த்த மாதிரியே இருந்தது .
நன்றி சுரேஷ்.
பார்க்க வேண்டிய படம் தான்.
நன்றி மலர். அடிக்கடி வாங்க..
பூச்சி..., ரொம்ப மசாலா.. போடுறீங்கோ..! :)) பார்த்துக்கங்க...!! முதுகு சவுக்கியமா...?? :)))
haha... நீ வராம கடை டல் அடிக்குது.
இப்பதான் களை கட்டுது...
மசாலா இல்லாம எப்படி நூடுல்ஸ் செய்றதுன்னு வீட்டிலே கேட்டு சொல்லுமா..
வீட்டுல வேற கேட்கனுமா? நீங்க இந்த பதிவை.. அண்ணி கிட்ட காட்டுங்க. மசாலா இல்லாம உங்களை எப்படி ‘நூடுல்ஸ்’ போடுறாங்கன்னு அப்புறம் தெரியும்! :)
hahaha.. பாலா, ஏன் இந்த கொலைவெறி.??
கொஞ்சம் க்ளிஷே அங்காங்கே இருந்தாலும் ஒரு நல்ல feel good movie.. நன்றி வண்ணத்துபூச்சியாரே :-) .. இறுதியில் பல்லக்கில் இருக்கும்போது சென்ஷே வந்து தன் பரிசை குடுத்துட்டு ஒரு பார்வை பாக்குறாரு பாருங்க.. அந்த நேரத்துல வந்த இசையும் என்னமோ பண்ணிடிச்சு :-)
Post a Comment