சதா வேலை வேலைன்னா நீ அதையே பார்த்துக்கோன்னு கை கழுவிடறான் காதலன். அதுவும் அவனோட பிறந்த நாளன்று.
ஜேக்( Ashton Kutcher) டோன் கேர் மாஸ்டர். எதிலும் பொறுப்பில்லாதவன். இல்லாட்டி சொந்த அப்பா கம்பெனியிலிருந்தே கல்தா கொடுப்பாங்களா.?
மனமுடைந்த இருவரும் அதாங்க ஜாய் & ஜேக் சந்திப்பது லாஸ் வேகஸ். சாமியாரையும் மாமியார் தேடவைக்கும் அஜிலி குஜிலி அமெரிக்க நகரம். அங்கு சகலமும் கிடைக்கும்.
அளவு கடந்த மப்பில் ஜாயிற்கு மோதிரம் போட்டு இருவரும் ஒரே அறையில் அன்றிரவு தங்க நேரிட -------- ( சென்ஸார்)
மறு நாள் காலை சிற்றுண்டியுடன் சூதாட கிளப்பில் தமாஷாக சேர்ந்து விளையாட அடித்தது ஜாக்பாட். 3 மில்லியின் அமெரிக்க டாலர்.
இருவரும் பணத்தை சொந்தம் கொண்டாட ஜேக் தன்னுடையது என்கிறான். ஜாயி மோதிரத்தை காண்பித்து நான் உன் மனைவி என்கிறாள்.
விஷயம் கோர்ட் வரை செல்கிறது.
ஆறுமாதம் கணவன் மனைவியாக வாழ வேண்டும். அது தவிர வாராவாரம் குடும்ப ஆலோசனை மருத்துவரிடம் கவுன்சிலிங் செய்ய வேண்டும். 6 மாதம் கழித்து பணம் பற்றி முடிவு எடுக்கப்படும். அதுவரை பணத்தை முடக்கி வைக்கிறேன். ஆர்டர்.,ஆர்டர்., ஆர்டர். என்கிறார் நீதிபதி.
ஆறு மாதத்தில் நடந்தது என்ன..?? யாருக்கு கிடைத்தது பணம்..?? ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு கணவன் மனைவியாக வாழ்ந்தார்களா என்பதே நகைச்சுவையும் ரொமன்ஸ் கலந்த திரைக்கதை.
அவளை வெறுப்பேற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன் நம்ம ஊரு ஹவுசிங் குடியிருப்பு போல ஒரு அதர பழசு பிளாட்டை தேர்ந்தெடுக்கிறான் ஜேக். ஐடியா உபயம் ஜேக்கின் நண்பனும் வக்கீலுமான நண்பன்.
அதே பிளாட்டில் தனித்தனி கட்டில்களில் இரவை கழிக்கின்றனர் இருவரும்.
PKS ல கமல் நம்ம மைதாமாவு அப்பாஸிக்கு கொடுக்குற மாதிரி பல ஐடியாவை அள்ளி வீசுகிறான் வக்கீல்
ஒவ்வொரு முறையும் பல வித இம்சைகளை சந்திக்கிறாள் ஜாய். எல்லாவற்றையும் சமயோதிச புத்தியால் புஸ்ஸாக்கி விடுகிறாள் ஜாய். அவளும் தொடர்ந்து அவனிடம் சில பல சில்மிஷம் செய்கிறாள். ஒருவரையொருவர் போட்டு தாக்குவது செம காமெடி.
இந்நிலையில் அவனை வழிக்கு கொண்டுவர மாமானார் மாமியாரை விருந்துக்கு அழைக்கிறாள் ஜாய்.
அவர்களும் ஏண்டா இவ்வளவு நல்ல மருமகளை எங்க கண்ணுல காட்டாமல் வச்சிருந்தே?.. இனிமேலாவது நீ திருந்தி சமத்தா இரு என்று வாழ்த்தி விட்டு செல்கின்றனர். குழம்பி போகிறான் ஜேக்.
ஒவ்வொரு கவுன்சிலிங்கின் போதும் அணிமாறிய கட்சிகளாய் பரஸ்பர குற்றசாட்டுகளை கூற உண்மையான கணவன் மனைவியாக ஒரளவு முன்னேறி இருப்பதாய் கூறுகிறார் மருத்துவர்.
பதவி உயர்வு தரும் பொருட்டும் குடும்பத்துடன் ஒரு நிகழ்சிக்கு ஏற்பாடு செய்கிறார் ஜாயின் முதலாளி. அதில் கட்டாயம் கணவனுடன் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அன்பு கட்டளையிடுகிறார். முதலில் ஜேக் வருவதாக இல்லை என்றும் அவளை பழி வாங்க இது நல்ல தருணம் என்று நினைக்கிறான். பின்னர் வழக்கப்படி நண்பனின் ஆலோசனையின் பேரில் நிகழ்ச்சிக்கு செல்கிறான். அதாவது நிகழ்ச்சியில் அவளுக்கும் பணத்திற்கும் சம்மந்தம் இல்லை என்று கையெழுத்து வாங்குவதாக திட்டம்.
இருவரும் மிகவும் அந்நியோன்யமாக இருப்பதாக நடிக்கவும் முதலாளியை வெகுவாக கவருகிறான் ஜேக். அவனுக்கு பல பரிசுகளை வழங்கி பாராட்டுகிறார் முதலாளி. கையெழுத்து வாங்கும் எண்ணத்தையும் கைவிடுகிறான்.
மறுநாள் மருத்துவர் அய்யா போல பொதுக்குழுவை கூட்டி (ஏற்கெனவே முடிவு பண்ணியதுதானே!!!! ) ஜாயிற்கு பதவி உயர்வும் அளிக்கிறார்.
கணவனோடு தான் சந்தோஷமாக இல்லையென்றும் அதெல்லாம் வெறும் நடிப்பென்றும் அதற்காக வருந்தி வேலையே ராஜினாமா செய்வதாக கூறி தோழிக்கு பதவி உயர்வை விட்டு கொடுத்து வெளி நடப்பு செய்கிறாள் ஜாய்.
ஆர்டர் போட்ட ஆறுமாத கெடு முடிகிறது. கோர்ட் கூடுகிறது. கோர்ட் சீன் என்றதும் பராசக்தியோ பாசப்பறைவைகளோ மாதிரி மூச்சு பிடிக்கும் வசனமெல்லாம் இல்லை.
நீதிபதி கேட்டு கொள்ள கவுன்சிலிங் செய்த மருத்துவர் O.k. Can be considered. என்கிறார்.
ஜேக் வக்கீல் மூலம் பணத்தை ஆளுக்கு பாதியாக ( After TDS தான் ) பிரித்து கொடுத்தடுங்க எஜமான். பேசாம அவங்க அவங்க ஜோலிய பார்கிறோம் என்கிறான்
தடாலடியாக ஜாய் மொத்த பணத்தையும் ஜேக்கிற்கே கொடுக்குமாறும் தனக்கு விவாகரத்து மட்டும் அளிக்குமாறு வேதனையுடன் கூறவே அப்படியே ஆகட்டும் என்கிறார் நீதிபதி.
ஆறுமாதத்தில் அவனை உண்மையாக நேசிக்க தொடங்கியதும் அதை புரிந்து கொள்ளாத ஜேக்கிடம் சேர்ந்து வாழ்வதில் அர்த்தமில்லை என்று நினைக்கிறாள் ஜாய்.
ஆள் அறவமற்ற கடற்கரையில் விதியை நொந்த படியே காலாற நடக்கிறாள்.
ஊரெங்கும் தேடியலைந்து அவளை வந்தடைந்து தன்னை ஏற்று கொள்ளுமாறு மண்டியிட்டு கேட்கிறான் ஜேக்.
பிரிந்த கட்டில்கள் ஒன்று சேருகின்றன.
வெளிவந்தது 2008. இயக்கம் Tom Vaughan. நம்ம மெட்டி ஒலி திருமுருகன் போல தொலைக்காட்சி இயக்குனராய் இருந்து திரைப்பட இயக்குனராய் ஆனவர்.
லாஸ் வேகஸ் நிகழ்வுகள் சற்று Fast Fw ல் சென்றாலும் பச் பச் காட்சிகளுக்கு பஞ்சமில்லை.
சிரித்து மகிழ கண்டிப்பாக ஒரு தடவை பார்க்கலாம்.
Cameron Diaz க்காக பல தடவை பார்க்கறதுக்கு உங்க இஷ்டம்.
34 comments:
TEST...
Happy to see my fav, fav movie review!! Lovely movie!!
நீண்ட நாட்களுக்குப்பின்பு வரும் பதிவு...வாழ்த்துக்கள்...
வாழ்க வளமுடன்,
வேலன்.
Thanx Viji.
Cheers.
வேலன். said... நீண்ட நாட்களுக்குப்பின்பு வரும் பதிவு...வாழ்த்துக்கள்...///////////
புரியலை வேலன். இந்த மாதத்தில் இது மூன்றாவது பதிவு. இதை விட ஸ்பீடா என்னங்க செய்றது..??
மேலே போட்டிருக்கும் படங்கள் கண்ணை கவருது...
ஹி..ஹி
:)))
நன்றி வழிப்போக்கன். என்ஜாய்...
//
சிரித்து மகிழ கண்டிப்பாக ஒரு தடவை பார்க்கலாம்.
Cameron Diaz க்காக பல தடவை பார்க்கறதுக்கு உங்க இஷ்டம்.
//
இந்த வாரக் கடைசிக்குள்ள பாத்திருவோம்!
வருகைக்கு நன்றி ஜோ.
ஆங்கிலப் படங்களை உங்கள் பதிவில் படித்த பிறகு படம் பார்க்கும் ஆவல் அதிகரிக்கிறது.
நன்றி
தமிழ் மண நட்சத்திர பதிவராகிய தமிழ் நெஞ்சம்.. வாங்க.. வாங்க.. நன்றி.
வாழ்த்துகள்.
உங்கள் ஈமெயில் முகவரி வேண்டும் நண்பரே..
கதையை எப்படிக்கொண்டுவந்து எப்படிக் குத்தியிருக்கான் பாத்தீங்களா..! அதுதான் வெள்ளைக்காரன் படம்! ;)
இதெல்லாம் இங்க இருக்கிற சில தல மற்றும் தளபதிகளுக்கு எப்பவிளங்கிறது, அதுக்குப்பிறகு எப்ப தமிழ் சினிமா விளங்கிறது.. கஷ்டம்!!!
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி மயூரேசன்.
Nalla pathivu Butterfly.U r selecting good stories.Wishes Forever.
Thanx Dr for your encouraging comments.
I wanted to watch this film....
but didn get a chance.... so..Im happy with ur
informative article
padaththa appdiye kannu munnaala konduvanthu niruththiteenga poanga....
Thanx Dyena for your visit and wishes.
தமிழிலும் நமது பல மொழிகளிலும் சுடப் பட்டு வெளி வரப் போகும் கதை.யார் முந்திக் கொள்கிறார்களோ? நன்றி சூர்யா.
நன்றி ஷண்முகப்ரியன் சார்.
அப்படியே வந்தாலும் வந்தவுடன் இது தன்னோட கதை வேற யாரும் சொல்லாம இருக்கணும்.. அதுவும் நடக்க்கும் இல்லையா ..??
நல்லதொரு படத்தினைப் பற்றி நகைச்சுவை கலந்து எழுதப்பட்ட விமர்சனம் அருமை. படம் நேரில் பார்ப்பது போன்ற உணர்வு - அருமை அருமை
நன்றி சீனா சார்.
சூப்பர் படம். போன வாரம் தான் HBO ல போட்டான். உங்க review படிச்சுட்டு பார்த்து இருக்கணும். இன்னும் ரசித்து இருக்கலாம்.
Dear vannaththu poochiyare,
Vanakkam nalla tharamaana vivarippu. vaalththukkal.
Sridhar (Dubai)
நன்றி C ... பேரு என்ன நண்பரே..??
வணக்கம் துபாய் Sridhar சார்...
வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி .. இந்தியா வந்துட்டதாக கேள்வி பட்டேன்.
நானும் கராமாவில் கும்மி அடித்தவன் தான் சார்.
appadiya
very nice i was in karama and then burdubai and then moved to satwa. We will meet as i am back in India
நன்றி Sridhar சார். கண்டிப்பாக பார்க்கலாம்.
கேமரூனுக்கு எல்லாம் வயசாய்டுச்சிங்கோவ்..!
ஆனாலும் அந்த காதுவரைக்கும் சிரிக்கிற சிரிப்பு இருக்கே..! :) :) :)
படத்தை தியேட்டர்லயே பார்த்தாச்சி. 21 எழுதின பின்னாடி இதையும் எழுதலாமான்னு யோசிச்சா.. நீங்க எழுதிட்டீங்க..!!
ஆமா.. இந்த விமர்சனத்தில் ‘ஏதும் உள்குத்து’ இல்லையே? :) :) :) :)
What Happens In Vegas........ Stays in Vegas..! :)
ஹாலிவுட் பாலா said...
கேமரூனுக்கு எல்லாம் வயசாய்டுச்சிங்கோவ்..!/////////// அதானால என்னப்பா..???
ஆனாலும் அந்த காதுவரைக்கும் சிரிக்கிற சிரிப்பு இருக்கே..! :) :) :) ////// அது...
படத்தை தியேட்டர்லயே பார்த்தாச்சி. 21 எழுதின பின்னாடி இதையும் எழுதலாமான்னு யோசிச்சா.. நீங்க எழுதிட்டீங்க..!! //// 21 படித்தவுடன் நினைவுக்கு வந்தது இந்த படம். அதானால எழுதினேன்.
ஆமா.. இந்த விமர்சனத்தில் ‘ஏதும் உள்குத்து’ இல்லையே? :) :) :) :)////// அடப்பாவமே.. எந்த குத்தும் இல்லை பாலா...
What Happens In Vegas........ Stays in Vegas..! :) இது பாலா பன்ச்... சூப்பர்.
பாலா பின்னூட்டம் இல்லாம பதிவு களை கட்டவில்லை.
ஏங்கி போயிருந்தேன். அப்பாடா.. பாதி உயிர் வந்தது.
கிங் விஸ்வாவிற்காக காத்திருக்கிறேன்.
//What Happens In Vegas........ Stays in Vegas..! :) இது பாலா பன்ச்... சூப்பர். //
ஹைய்யோ.. இது நம்ப பன்ச் இல்லீங்க. வேகஸ் பன்ச்! :) அந்த சிட்டிக்காகவே ஸ்பெஸலா யாரோ தயாரிச்சது.
அதை வச்சிதான் இந்த படத்தோட தலைப்பே வச்சாங்க..! :) :) :)
இங்க மேட்டரை படிங்க..! நான் தூங்கிட்டு நாளைக்கு வர்றேன்.
http://answers.google.com/answers/threadview/id/607344.html
நன்றி பாலா. படித்தேன். இதுக்கு இப்படி ஒரு ஸ்தல புராணம் இருக்கா..??? சூப்பரு..
Thanks for the review. I enjoyed the movie. Ofcourse, it reminds our tamil movies, like Mouna ragam.
நன்றி கார்த்திகா.
ஆஹா எப்படி இந்த படத்தை மிஸ் பண்ணேன்..
Post a Comment