இது முதலில் Horror படமில்லை. ஆனால் பயமுறுத்துகிறது. சாதாரண வாழ்க்கையின் அசாதாரண பயங்கள் தான். பிரமாண்டமாய் யோசிக்காமல், எளிமையான script. ஆனால் நிகழ்வுகள் அழுத்தமானவை.
இந்தப் படத்தில் மூன்று வெவ்வேறு சூழ்நிலைகளில், ஆனால் ஏதோ ஒரு விதத்தில் ஒன்றுக்கொன்று சம்பந்தமான நடக்கும் சம்பவங்கள் காட்டப்படுகின்றன. அதில் வரும் கதாப்பாத்திரங்கள் தீவிரமாக அலசப்படுகின்றன.தனி தனி கதைகளாய் சொல்லபட்டு வருபவற்றை, கொஞ்சம் கொஞ்சமாய் முடிச்சு போட்டு ஒரே கதை தான் என தெளிவாக்கபடும் ஒரு திரைப்படம்.
யார் கதாநாயகன். ???? கதையே இங்கு ஆக்ஷன் ஹீரோ. அதனால் தான் என்னவோ கேன்ஸ் உட்பட 51 விருதுகளை வாரி குவித்த திரைப்படம்.
அதிவேகத்தில் வரும் கார். அதை துரத்தி வரும் மற்றொரு கார். ஒரு நிமிடம் உயிரை உலைய வைக்கும் பயங்கர சாலை விபத்தின் காட்சிகள் ஒன்றோடு தொடங்குகிறது திரைப்படம்.
இனி கதைகளுக்கு வருவோம்.
கதை ஒன்று:
சூசானாவின் கணவன் ராமிரோ. சந்தேகத்தால் சதா அவளை அடிப்பதும் இழிவாக பேசுவதும் அவளுக்கு பிடிக்கவில்லை. இதே நேரம் கணவனின் தம்பி ஒக்டோவியோ அவள் மீது அவள் அழகில் மயங்கி அதீத அன்பு செலுத்தி அவளை அடைய துடிக்கிறான். அன்பிற்கு ஏங்கும் சூசானாவினும் நெருங்கி பழக பஞ்சும் நெருப்பும் அருகருகே இருந்தால்.... ஒரு நாள் பற்றி கொள்கிறது. ராமிரோ ஒரு வணிக வளாகத்தின் சிறு கேஷியர் வேலையில் போதிய வருமானம் இல்லாததால் நண்பனோடு சேர்ந்து கொண்டு சிறு சிறு திருட்டுகளையும் செய்கிறான்.
ஒக்டோவியோவிற்கோ வருமானம் இல்லை. வீட்டில் வளர்க்கும் நாயை வைத்து நாய் சண்டை சூதாட்ட போட்டியில் கொஞ்சம் பணம் சம்பாதிக்கவே அதுவே அவனுக்கு பிடித்து போய் விட நாயை வைத்து நிறைய பணம் சம்பாதிக்க ஆரம்பிக்கிறான். சூசனாவையும் தன்னுடன் அழைத்து கொண்டு வேறு ஊருக்கு ஒடிப்போய் ஏதாவது தொழில் செயது இருவரும் இனிமையாய் வாழவும் எண்ணம். ஆனால் சூசானாவின் மனம் அவனுடன் செல்ல மறுக்கிறது. ஆனால் அவனை விட்டு விலகவும் முடியவில்லை.
பெரும் போட்டி ஒன்றில் அளவிற்கு அதிகமான பணத்தை சம்பாதித்து ஒரு நாள் வீடு வந்து அடைகிறான். இது நாள் வரை சேர்த்து வைத்த பணத்தை காணவில்லை. அண்ணனையும் சூசானாவையும் காணவில்லை. இருவரும் மொத்த பணத்தோடு எஸ்கேப் ஆகி விட்டார்கள் என்று தெரிய வரவே பெரும் ஏமாற்றமும் கோவமும் கொள்கிறான்.
ஒக்டோவியோ நாய் சண்டை சூதாட்டத்தில் எக்கசக்க பணம் அள்ளவே ஏற்கனவே பணம் சம்பாதித்தவர்கள் வெறுப்பில் அவனையும் நாயையும் தீர்த்து கட்ட முடிவு செய்கின்றனர்.
கதை இரண்டு:
டேனியல் ஒரு பண்க்காரனும் புகழ்பெற்ற பத்திரிகையாளனும். ஆனால் மனைவியை பிரிந்து மாடல் அழகி வலேரியாவின் அழகில் மயங்கி புது வீடு வாங்கி அவளுடன் தனிகுடித்தனம் வந்து விடுகிறான். அவளின் செல்ல நாயுடன் பணக்கார டேனியலுடன் குதூகலித்து வாழ்ந்து வருகிறாள். ஒரு நாள் ஷாப்பிங் போன வலேரியா கார் விபத்தில் சிக்க காலை இழக்கிறாள். மாடலிங்கில் கொடிகட்டி பறந்த அவள் வாழ்வே அஸ்தமனமாகிறது. வீல் சேருடன் வாழ்க்கையை கழிக்க அதே நேரத்தில் வீட்டின் அடிப்பாகத்தில் சிறு பொந்திற்குள் அவளின் செல்ல நாய் சிக்கி கொள்ள அங்குள்ள எலிகள் நாயை கடித்து குதறி கொல்கிறது. நாயையும் இழந்த சோகத்தில் சொல்ல முடியாத வேதனை அடைகிறாள்.
கதை மூன்று:
சிவோ ஒரு பள்ளி கூட ஆசிரியராய் இருந்த போது பயங்கரவாதிகளுக்கு உதவியதாக இருபது வருட சிறை தண்டனைக்கு ஆளாகிறான். சிறைக்கு சென்று விட்ட கணவனை இறந்து விட்டதாக மனைவி கூறி விடவே சிறை வாசம் முடிந்ததும் தான் பெற்ற மகளுடனும் மனைவியுடன் சேர்ந்து வாழ முடியாமல் நாய்களுடன் தெருவிலேயே பிச்சைகாரன் போல் சுற்றி திருகிறான்.
வாழ்க்கையே வெறுத்து போனதால் பிழைப்புக்காக கூலிக்கு கொலை செய்பனாகவும் மாறுகிறான்.
தனது வியாபார போட்டியில் தனது பங்கு தாரனையே போட்டு தள்ள முடிவெடுத்து சிவோவின் உதவியை நாடுகிறான் ஒருவன். சிவோவும் சம்மதித்து முழுத்தொகையும் பெறுகிறான். பல நாட்கள் பின் தொடர்ந்து அவன் பங்கு தாரன் அல்ல, கொலை செய்ய சொன்னவனின் சகோதரன் என்று அறிகிறான்.
பின் தொடரும் ஒரு நாளில் சாலை விபத்தில் காரில் ஒருவன் இறந்து கிடக்க மற்றொருவருடன் உயிருக்கு போராடும் நிலையில் காரின் பின் புற சீட்டில் இருக்கும் நாயை கொண்டு வந்து தானே சிகிச்சை செய்து உயிருக்கு உயிராய் வளர்க்கவும் செய்கிறான்.
இருவருக்கும் தெரியாமல் தனித்தனியே அழைத்து வந்து இருவரையும் கட்டிப்போட்டு இருவருமே அவரவர்களின் முடிவை தீர்மானிக்க விட்டு விட்டு ஒரு கை துப்பாக்கியை இருவருக்கும் இடையே வைத்து விட்டு நடையை கட்டுகிறான்.
அருமை மகளை அடைய முடியாததால் இவ்வளவு நாள் சம்பாதித்த் பணத்தையும் மகளின் வீட்டிற்கு சென்று அவளின் படுக்கையறையில் மொத்த பணத்தையும் வைத்து விட்டு தான் அவளுக்கு சொல்ல வேண்டியதையும் டெலிபோனில் பதிய வைக்கிறான்.
கிளைமாக்ஸ்:
(1) கையில் பணமிருந்தும் செய்து வந்த திருட்டு தொழிலை விட முடியாமல் மொத்தமாக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்து நண்பன் ஒருவனுடன் வங்கியை கொள்ளையடிக்க திட்டமிடுகிறான் ராமிரா. ஆனால் விதியின் வசத்தால் வங்கி கொள்ளையில் ஈடுபடும் போது காவலாளியால் சுடப்பட்டு உயிரிழக்கிறான். ஒக்டோவியாவையும் அவனது நண்பனையும் தீர்த்து கட்ட முடிவெடுத்து எதிரிகள் அவனை துரத்தி செல்லும் போது நடந்த பயங்கர விபத்தில் நணபன் அங்கேயே உயிரிழக்க உயிருக்கு போராடும் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கபடுகிறான் ஒக்டோவியோ. சிறிது உடல் நிலை தேறியதும் சூசனாவை ஒரிடத்திற்கு அழைத்து அங்கேயே காத்து கிடக்கிறான்.... அவள் வருவதாக தெரியவில்லை.
(2) மீளாதுயரில் சிக்கி தவிக்கும் வலேரியாவை அன்புடன் அணைத்த அவளை கடைசி வரை காப்பாற்றுவதாக வாக்குறுதி அளிக்கிறான் டேனியல்.
(3) மனைவி வெறுத்ததுடன் ஆசை மகளுடன் வாழ இயலாததால் எவரும் துணையில்லாது தான் காப்பாற்றிய நாயே துணையாக எங்கோ பயணமாகிறான் சிவோ.
வெவ்வேறு கதையாக சொல்லி அனைத்தும் ஒரிடத்தில் இணையுமாறு பதிய வைக்கிறார் இயக்குநர். ஒவ்வொரு கதையிலும் செல்ல பிராணியான நாய் ஒரு குறீயீடாகவும் உடன் வரும் பாத்திரமாகவே படைத்திருப்பது மிகச்சிறப்பு.
அதிர வைக்கும் காட்சிகளின் ஊடே அழுத்தமான கதையும், துல்லியமான ஒளிப்பதிவும், கோர்வான இசையும், ஈடுபாடுள்ள நடிப்பும் அத்தனையையும் வெளி கொணர இயக்குநரின் பங்களிப்பு எவ்வளவு அவசியம் என்பதை உணர வைக்கும் திரைப்படம்.
சந்தேகங்கள், பேராசைகள், அதீத காமங்கள் என வாழ்க்கைக்கு ஒவ்வாத நாட்டங்களினால் ஒவ்வொருவருக்கும் ஏற்படும் துன்பங்கள், அவைகளை விபத்தாக எண்ணி அதிலிருந்து விடுபட நினைக்கும் போது வாழ்க்கை நம்மை விட்டு வெகு தூரம் விலகி போயிருக்கும் என ஒரு விபத்தில் ஆரம்பித்து சொல்லாமல் சொல்லி முடிக்கிறார் இயக்குநர் Alejandro.
2001ம் ஆண்டு ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டதுடன் உலக அளவில் பல பரிசுகளை வென்றது.
கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஸ்பானிஷ் மொழி திரைப்படம்.
உடனே பார்க்க டிரைலர் இங்கே
23 comments:
Dear Followers / Readers... வேலைப்பளு சற்று அதிகமாகிவிட்டாலும் கூடிய விரைவில் பதிவிடுகிறேன்.. பொறுமைக்கு நன்றி...
I am looking forward,Soorya.
சிறந்த பின்நவீனத்துவப் படம்,
விமர்சனத்தை சிறப்பாக பதிவிடுங்கள்.
படங்கள் ஆர்வமூட்டுகின்றன..கூடிய விரைவில் பதிவிடுங்கள்.
அப்புறம் படத்தில் இருக்கும் இளைய நாயகன் Motor cycle diaries படத்தில் ’சே குவேரா’ வாக நடித்தவர் தானே?
படங்கள் ஆர்வமூட்டுகின்றன..கூடிய விரைவில் பதிவிடுங்கள்.
அப்புறம் படத்தில் இருக்கும் இளைய நாயகன் Motor cycle diaries படத்தில் ’சே குவேரா’ வாக நடித்தவர் தானே?
வண்ணத்து பூச்சியாரே,
//Dear Followers / Readers... வேலைப்பளு சற்று அதிகமாகிவிட்டாலும் கூடிய விரைவில் பதிவிடுகிறேன்.. பொறுமைக்கு நன்றி// இதை நீங்கள் சொல்லவே தேவை இல்லை. உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது பதிவிடுங்கள்.
தீபா,
//படத்தில் இருக்கும் இளைய நாயகன் Motor cycle diaries படத்தில் ’சே குவேரா’ வாக நடித்தவர் தானே?// . படத்தில் இவர் ஒக்டேவியோ என்ற பாத்திரத்தில் நடித்து இருப்பார்.
இந்த படத்தின் கதை வேறாக இருந்தாலும் தீம் நம்ம மணி ரத்தினம் எடுத்த ஆய்த எழுத்து இதில் இருந்து தான் இன்ஸ்பைர் ஆனது.
கிங் விஸ்வா.
Carpe Diem.
தமிழ் காமிக்ஸ் உலகம்
// இந்த படத்தின் கதை வேறாக இருந்தாலும் தீம் நம்ம மணி ரத்தினம் எடுத்த ஆய்த எழுத்து இதில் இருந்து தான் இன்ஸ்பைர் ஆனது.//
ஆமாம் ஆயுத எழுத்துல பைக் விபத்தாகும் இதுல கார் விபத்தாகும்.
படங்கள் ஆர்வமூட்டுகின்றன..கூடிய விரைவில் பதிவிடுங்கள்.
Waiting..:))
படிக்க ஆவலாய் உள்ளேன் ஐயா
இந்தப்படத்தில் டிவிடி வாங்கி வைத்திருக்கிறேன். ஆறு மாதங்களாகிவிட்டது. இன்னும் பார்க்கத்தோன்றவில்லை. உங்கள் பதிவைப் படித்தபிறகுதான் பார்க்கத் தோன்றும்போல! ;)
An aggressive story?
ஹலோ பாஸ்!
நான் உங்கள மாட்டி விடலாமுன்னு நினைசேன்...
ஆனா முடியல ஜஸ்ட் மிஸ்சு!
எதுக்கா? அப்படியே நம்ம பக்கம் வாங்க...
எதுக்குன்னு தெரிஞ்சுகுங்க..
http://kalakalkalai.blogspot.com/2009/05/blog-post_28.html
வண்ணத்து பூச்சியாரே,
நல்ல அருமையான பதிவு. கதையை ரத்தின சுருக்கமாக கூறியதால் முதல் தடவையாக இந்த படத்தை பார்ப்பவர்கள் பயனடைவார்கள்.
தொடர்ந்து எழுதுங்கள், நேரம் கிடைக்கின்.
கிங் விஸ்வா.
Carpe Diem.
தமிழ் காமிக்ஸ் உலகம்
நன்றி விஸ்வா. தொடர் காட்சிகளாக சொல்ல இயலாது. படம் பார்த்தாலே அது புரியும். அதனாலேயே மூன்று பகுதியாக சொன்னேன்.
தங்களின் ஊக்கம் எனக்கு டானிக்.
நன்றி.
முகில். கண்டிப்பாக பார்க்கலாம். உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன்.
யாருடைய ஓட்டும் தங்களுக்குத் தேவையில்லை.
யாருடைய பின்னூட்டமும் தேவையில்லை.
படைப்பின் வலிமையை மட்டும் நம்பும்
“வாரம்” இணைய இதழ் (லிங்க் க்ளிக்கி இதழைப் படிக்கவும்)
வெளிவந்துவிட்டது. தங்கள் ஆதரவைத் தாரீர்!!!
அருமையான விமர்சனங்க சூர்யா
இன்னொரு விசையம் கவனிசீங்களா
ஆயுத எழுத்துல மொத சீன்ல பைக் ஆக்சிடண்ட் இதுல கார்.அத தொட்டு கதை பின்னாடி போகும்.
Hello Surya,
It is one of my favorite movie..Excellent screenplay with sizziling spanish music BGM's and mainly with the directors surealism with the use of dogs which is awesome...
Also I have tried something from my end about Sir ALfred hitch cock.Please let me know your comment :)
நன்றி கார்த்திக்.
நன்றி பாலா. கண்டிப்பாக பார்க்கிறேன்.
SITE IS GOOD NEED FLASH MOVEMENTS IN SITE
GOOD WISHES
SATHISHKUMAR
site is good need flash movements in site
good wishes
sathishkumar
Post a Comment