கெளசிக்கும் மிட்டாவும் வார விடுமுறையை ஒரு அழகிய ஹோட்டலில் கழித்து ஊருக்கு திரும்புகின்றனர்.
வரும் வழியில் பயங்கர விபத்து... மிட்டா உயிரிழக்க, அவள் இறந்த விபரம் கூட தெரியாமல் உயிருக்கு போராடும் நிலையில் மருத்துவமனையில் அட்மிட் ஆகிறான் கெளசிக்.
மிட்டா அவன் மனைவியல்ல... அவனுடன் அலுவலகத்தில் வேலை பார்ப்பவள். அவளுக்கு ஏற்கனவே திருமணமாகி எழு வயது மகனும் இருக்கிறான். ஆனாலும் இருவரும் உயிருக்கு உயிராய் நேசிக்கிறார்கள்..
விபத்து பற்றிய செய்தி கெளசிக்கின் மனைவி காவேரிக்கு ( கொங்கனா சென் ) தெரியப்படுத்துகிறார் காவல் துறை அதிகாரி.
அவனுக்கு உள்ள அந்நிய தொடர்புகள் அரசல் புரசலாய் தான் அவளுக்கு தெரியும். வெட்ட வெளிச்சமாய் உள்ளூர் கேபிள் வரை தொலைகாட்சி முழுவதும் செய்தியாய் பரவ நிலை குலைந்து போகிறாள் காவேரி.
காவேரிக்கு உதவ வருபவள் பிருந்தா. இவர்களின் தோழன் பாபி.பிருந்தாவை விட வயது குறைந்த இளம் பேச்சிலர். ஆனால் பாபி விர்ஜின் இல்லை. பிருந்தாவுக்கும் பாபிக்கும் அதீத உறவு. இவர்கள் அனைவரும் ஒரு நாடக குழுவை நடத்துவதன் மூலம் நட்பு வட்டத்தில் சிக்கியவர்கள்...
அடிபட்டு ஆஸ்பத்திரியில் விழுந்து கிடக்கும் கணவன் கெளசிக் மீது கடும் கோபத்துடன் இருக்கிறாள் காவேரி. தன்னை வஞ்சித்து ஏமாற்றியவனுக்கு எந்த பணிவிடையும் செய்ய இயலாதென வீட்டோடு ஒரு நர்ஸை நியமிக்கிறாள்.
தன் செயலுக்கு வருந்துகிறான் கெளசிக். முதலில் எதற்கும் மசிவதாய் இல்லை காவேரி.
இதற்கிடையில் பிருந்தா கர்ப்பம் உண்டாகி பிறக்க போகும் குழந்தைக்கு அப்பா யாரென அவளே குழம்புகிறாள். பாபி கடுப்பாகிறான்.
பிறகு பாபி அவளுக்கு புத்திமதி சொல்லி கணவனுடனே வாழ வேண்டும் என்றும், தோழி காவேரி படும் வேதனையும் துரோக எண்ணமும் அவள் கணவனுக்கும் வந்தால் நிலைமை என்னவாகும் ..?? என்று சொல்லி மனம் திருந்தி சென்று விடுகிறான்.
தான் உயிருக்கு உயிராய் நேசித்த மிட்டாவின் பிரிவை எப்படி தாங்க முடியவில்லையோ அப்படியே தன் மனைவியும் நேசிக்கும் கணவன் இழக்க சம்மதிப்பாள் என்று வருந்தி ஒரு விபத்து அவன் வாழ்க்கையில் வந்த விபத்தாக எண்ணி மனம் திருந்தி காவேரியுடன் இணைகிறான் கெளசிக்.
காவேரியும் மெல்ல மெல்ல கணவனை நெருங்குகிறாள். கவிதையாய் இத்துடன் முடிகிறது திரைப்படம்.
தேவையற்ற அதீத உறவுகளால் வரும் நிகழ்வுகளயும் குடும்பத்தில் ஏற்படும் பிளவுகளையும் பிரச்சினைகளையும் மிக யதார்த்தமாக சித்தரித்துள்ளார் இயக்குநர் ரிதுபர்னோ கோஷ்..
2006 ஆண்டு வெளிவந்த கருப்பு வெள்ளை திரைப்படம்.
கொங்கனா சென்னின் நடிப்பே படத்தின் மிகப்பெரிய பலம். கணவனின் துரோகத்தை நினைத்து துடிப்பதும், தனக்கே உரிய தன்னம்பிக்கையுடன் வாழ முற்படுவதும், கணவன் மீதுள்ள அளவிட முடியாத அன்பால் அவனை இழக்க முடியாமல் தவிப்பதும், நடிப்பால் நம்மை மிரள வைக்கிறார்.
மனைவியை இழந்த மிட்டாவின் கணவனை கண்டு ஆறுதல் சொன்ன போன இடத்தில் அவன் உங்கள் கணவனின் பொருள் ஒன்று தவறுதலாக என்னிடம் வந்து சேர்ந்துள்ளது என்று சொல்லி ஒரு Condom பாக்கெட்டை கொண்டு வந்து கொடுக்கும் போது தர்ம சங்கடத்தில் நெளியும் போதும், கணவனின் கைப்பேசியில் கணவனுக்கும் மிட்டாவிற்கும் இடையே நடைபெற்ற குறுஞ்செய்திகளை படித்து வேதனையில் துடிப்பதும் அத்தனை வேதனைகளையும் தன் தாயிடம் காட்டி கொள்ளாது இயல்பாக இருப்பது போல் பாவிப்பதும் கொங்கனா சென்னின் நடிப்புக்கு இந்த திரைப்படம் ஒரு மாஸ்டர் பீஸ்...
சிறந்த நடிகர், நடிகை, இயக்குநர் என்று பல்வேறு பிரிவுகளில் விருதுகளை தட்டி சென்ற திரைப்படம். கேன்ஸ் திரைப்பட விழாவிலும் பங்கு பெற்றது.
பத்திரிகைகளின் பாராட்டு மழையை பெற்ற திரைப்படம்.
“Another stunner by Rituparno Ghosh!” - The Times of India
“An exceptional creation. Probably the best film ever by Rituparno Ghosh” - Pratidin
Rituparno, with his able hands, has painted an ideal woman in a male-dominated society” - Taslima Nasreen, Anand Bazaar Patrika
“With Dosar, Rituparno comes across as a master craftsman”- The Times of India, Sunday Times
சந்தர்ப்பம் கிடைத்தால் நிச்சயம் பாருங்கள்.
உடனே பார்க்க டிரைலர் இங்கே
28 comments:
ஆஹா... திரும்பவும்.. Coming Soon போஸ்டா? :) :)
இருக்கட்டும்.. இருக்கட்டும்...! வெயிட் பண்ணுறோம். :)
Is the producer the same Arindam chaudri who is running gop class B School ?
எங்கே சூர்யா,ரொம்ப நாளா உங்களைக் காணோம்?!
தலைவர் வண்ணத்து பூச்சியாரே,
இந்த பட போஸ்டரில் உள்ள முதல் பெயரை )Arindam chaudhuri) பார்த்து பயந்து விட்டேன். ஆம், நான்கு வருடங்களுக்கு முன்பு Rok sake to rok lo என்ற பெயரில் ஒரு உலக மகா மொக்கை படத்தை (Hindhi) எடுத்தவர் இவர்.
ஆனால் இந்த படத்தின் இயக்குனர் Rituparno Ghosh என்று தெரிந்ததும் நிம்மதி அடைந்தேன். விரைவில் பதிவை எதிர்பார்க்கிறேன்.
வாழ்த்துக்கள்.
கிங் விஸ்வா.
Carpe Diem.
தமிழ் காமிக்ஸ் உலகம்
//Is the producer the same Arindam chaudri who is running gop class B School?//
Yes, he is the one who Runs IIPM in Various Locations across India (Including chennai - Egmore).
He has written 3 books (Only 1 is good = count your chickens before they hatch) and runs 4 magazines also.
ventured into films with ROK SAKE TO ROK Lo being the 1st film and it had Sunny deiol in guest role and was hyped beyond it's capacity and deservedly flopped once released.
King Viswa
Carpe Diem.
Tamil Comics Ulagam
We all know trailers for movies!! And you have trailers for moview reviews!!!!! Cool!!
But i cant stand this woman,Konkana Sen...though..
நல்ல படம். உங்கள் திறனாய்வுக்காக காத்திருக்கும் அன்பன்.
வாங்க பாலா.. நலமா..??
வாங்க விஸ்வா.. ஊர்ல தான் இருக்கீங்களா..??
வருகைக்கு மிக்க மகிழ்ச்சி..
வணக்கம் ஷண்முகப்பிரியன் சார். அம்மாவிற்கு கடந்த 15 நாட்களாக உடல் நலமில்லை. அதனால் தான் எழுதவும் முடியவில்லை..
Hey Viji. Thanx for your visit..
...though..????? what..???
வணக்கம் Sridhar சார்.
திரைப்படம் பார்த்ததும் ஷோபாவிற்கு பிறகு தமிழில் எந்த ஒரு நடிகையும் நடிப்பை நம்புவதில்லையே என்ற உணர்வே ஏற்பட்டது.
வண்ணத்து பூச்சியாரே,
வணக்கம். சில பல பிரயாணங்களை முடித்து கொண்டு சென்னைக்கு திரும்பி விட்டேன்.
//வணக்கம் ஷண்முகப்பிரியன் சார். அம்மாவிற்கு கடந்த 15 நாட்களாக உடல் நலமில்லை. அதனால் தான் எழுதவும் முடியவில்லை// அம்மாவின் உடல்நலன் இப்போது முன்னேற்றம் கண்டுள்ளதா? அதுதான் முக்கியம். மற்றவை எல்லாம் இரண்டாம் பட்சமே.
அவர் உடல் நலன் சீக்கிரமே குணமடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
கிங் விஸ்வா.
Carpe Diem.
தமிழ் காமிக்ஸ் உலகம்
அடடே,
முழு விமர்சனத்துக்கு நான்தான் மீ த பஸ்ட்டா?
இந்த படத்தின் கதையை படிக்கும் நமது சின்னத்திரை எழுத்தாளர்கள் மிகவும் சந்தோஷப் படுவார்கள். இதை வைத்தே அடுத்த பத்து வருஷத்திற்கு ஒரு மெகா சீரியலுக்கு திரைக்கதை ரெடி.
//இதற்கிடையில் பிருந்தா கர்ப்பம் உண்டாகி பிறக்க போகும் குழந்தைக்கு அப்பா யாரென அவளே குழம்புகிறாள்// என்ன கொடுமை சார் இது?
//மனைவியை இழந்த மிட்டாவின் கணவனை கண்டு ஆறுதல் சொன்ன போன இடத்தில் அவன் உங்கள் கணவனின் பொருள் ஒன்று தவறுதலாக என்னிடம் வந்து சேர்ந்துள்ளது என்று சொல்லி ஒரு Condom பாக்கெட்டை கொண்டு வந்து கொடுக்கும் போது தர்ம சங்கடத்தில் நெளியும் போதும்// சூப்பர் சீன.
//ருபேந்திரா கோஷ்// தல, அது ரிதுபர்னோ கோஷ். நீங்க அவசரத்துல தப்ப டைப் அடிச்சுட்டீங்க.
நல்ல விமர்சனத்துக்கு நன்றி.
கிங் விஸ்வா.
Carpe Diem.
தமிழ் காமிக்ஸ் உலகம்
Welcome Back Viswa...hahaha... சீரியலையும் நன்கு புரிந்து வைத்துள்ளீர்கள்.
இந்த திரைப்படத்தில் சில சீன்கள் மிகவும் அருமை..
உங்கள் வேண்டுதலுக்கு மிக்க நன்றி விஸ்வா. போனவாரமெல்லாம் மிகவும் வருத்தப்பட்ட்டு விட்டேன். Thank God... தற்போது அம்மாவின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம். She is recovering slowly..
ரிதுபர்னோ கோஷ்... சுட்டி காட்டியமைக்கும் நன்றி. திருத்தி விடுகிறேன்.
வாழ்த்துகள்..
Hey.. Te la ma Maria .. Thanx for your visit and comments.
Cheers.
வாழ்த்துக்கள் உங்கள் இந்த பதிவு யூதஃபுல் விகடனில் வந்துள்ளது
வாழ்த்துக்கள் உங்கள் இந்த பதிவு யூதஃபுல் விகடனில் வந்துள்ளது
நல்லா இருக்கு. சில காட்சிகளில் வசனமே தேவையில்லாத அளவு இயல்பான நடிப்பு. நீங்க சொன்னது நிஜம். இப்போ எல்லாரும் கதைக்கு பதில் சதையதான் நம்புராங்க. அப்புறம் யாருக்கு நடித்து காட்ட ஆசை வரும்.
அம்மா எப்படி இருக்காங்க. உடல் நலன் சீக்கிரமே குணமடைய வேண்டுகிறேன்
நல்ல விமர்சனம் தலைவரே.. நானும் படத்தை தேடி கொண்டிருக்கிறேன். கிடைக்க மாட்டேன் என்கிறது..
Nice story of illegal sex,handled properly.
வாழ்த்துக்கள் உங்கள் இந்த பதிவு யூதஃபுல் விகடனில் வந்துள்ளது
A black & white film,itz fantastic-muniappan.
story sounds bizarre... why go to the trouble of marrying in the first place? seems like teh only reason is to cheat on the other! Konkana is sweet! The only thind I liked was "Bobby kaduppagiraan" - I guess you wanted to replay Mr and Mrs Iyer what? "suriya"?
நல்ல விமர்சனம். கட்டாயம் பாரக்க வேண்டிய லிஸ்டில் அடக்கம். Mr& Mrs Iyer ல் கொங்கனா சென் நடிப்பை ரசித்திருக்கிறேன். பதிவுக்கு நன்றி
Thanx everyone...
அருமையான வர்ணனை. ஆஹா, எனக்கும் பார்க்க வேண்டும் போலிருக்கிறது.
கொன்கொனா சென்னை எனக்கு மிகவும் பிடிக்கும்.
Such a good review..I'm looking for the dvd to watch it soon.:)
Post a Comment