1990 களில் கல்லூரி நாட்களில் அரசுக்கு எதிரான போராட்டங்களில் பங்கு பெற்றதற்காக பத்தாண்டு சிறை வாசம் பெறுகிறான் யூசூப். நுரையீரல் பாதிக்கப்பட்டதால் உடல் நிலையின் பொருட்டு விடுதலையாகிறான்.
சிறையில் இருக்கும் போது தந்தையும் இறந்து விடவே, தன்னையே எண்ணி வாடி இருக்கும் தாயுடன் வந்து சேருகிறான். விடுதலையாகி வீடு வந்து சேர்ந்தவுடன் குடும்பத்தினர் அனைவரும் யூசுப்பை சந்தித்து பல அறிவுரைகளை வழங்குகின்றனர். பல வித வேலைக்கும் சிபாரிசு செய்கின்றனர். தாயின் உடல் நலம் கருதி எங்கும் செல்ல அவன் மனம் இடமளிக்கவில்லை.
தனது ஒரே நண்பனான மிக்காயிலின் தச்சு பட்டறையில் அவனுக்கு உதவியாய் சில வேலைகளை மட்டும் செய்து சிறிது பணம் சம்பாதிக்கிறான். இருவரும் சேர்ந்து ஆடி பாடி மகிழ்வதும் மலையூச்சிக்கு சென்று இரவுகளை கொண்டாடுவதுமாக பொழுதை கழிக்கிறான்.
கல்லூரி நாட்களில் கணிதத்தில் அதிக ஆர்வமுள்ளவனாய் இருந்ததால் உறவுக்கார சிறுவன் ஒருவனுக்கு கணித பாடங்களை சொல்லி தருகிறான். அவனும் கணிதத்தில் அதிக மதிப்பெண்கள் பெற்றால் அவனுக்கு சைக்கிள் பரிசளிப்பதாகவும் உறுதியளிக்கிறான்.
எதிலும் பற்றவனாக திரிந்து வரும் வேளையில் புத்தக கடையில் ஒரு பெண்ணை சந்திக்கிறான். அவள் பெயர் இகாவை சந்திக்கிறான். அவள் ஜார்ஜியாவிலிருந்து பிழைப்பு தேடி வந்து எந்த வேலையும் கிடைக்காமல் விலை மாதுவாகிவிடுகிறாள். தன் ஒரே நான்கு வயது பெண்ணுக்காக அந்த தொழிலை செய்து பணம் ஈட்டுகிறாள்.
சிறைவாசத்தின் கொடுமைகளையும் அவன் அனுபவித்த வேதனைகளையும் தாயிடம் சொல்ல முடியாமல் தவிக்கிறான். பல இரவுகள் தூக்கமின்றி அலறி எழும் காட்சி திரைப்படம் பார்ப்பவர்களை மிரள வைக்கிறது.
இகாவின் நிலையை எண்ணி வருத்தம் கொள்கிறான் யூசுப். இருவரும் நெருங்கி பழகுகின்றனர். என்னதான் மனங்கள் நெருங்கினாலும் வெவ்வேறு தேசத்தவரானதால் இகாவால் துருக்கியில் தங்க முடியவில்லை. அவளின் விசா இன்னும் 15 நாட்களேயுள்ளது. சொல்ல முடியாத வேதனையுடன் யூசுப்பை தன் நாட்டுக்கு வந்து விடுமாறும் அங்கு சென்று இனிமையான வாழ்க்கை வாழ வேண்டுகிறாள். ஆனால் தனக்காக பத்து வருடங்களாக அத்தனை துயரங்களையும் தாங்கி கொண்டு வயது முதிர்ந்த தாயை விட்டு வர முடியாமல் தவிக்கிறான்.
இகாவின் விசா பூர்த்தியாகும் நாளும் நெருங்குகிறது.
அன்று புதிய சைக்கிளுடன் வீடு வந்து சேருகிறான் யூசூப். சிறு வயதில் அவன் ஆசையுடன் வாசிக்கும் பேக்பைப்பர் இசை கருவியை எடுத்து வாசிக்குமாறு தாய் யூசுப்பை வேண்டவே கனவு காண்பது வேண்டுமானால் நமது ஆசையாய் இருக்கலாம் ஆனால் இறைவன் அருளிலிருந்தால் மட்டுமே விரும்பியது கிடைக்கும் இல்லாவிட்டால் கிடைத்ததை விரும்பி ஏற்று கொள்வதே சிறந்தது என்ற பாடலை இசைப்பதாக படம் நிறைவடைகிறது.
இந்த துருக்கி திரைப்படம் மிககுறைவான பாத்திரங்களை கொண்டு படைக்கப்பட்ட அற்புத படைப்பு கண்கள் வியக்கும் ஒளிப்பதிவும் இழையோடி வரும் அற்புத இசையும் கூடுதல் சிறப்பு.
வட துருக்கியின் மலைப்பிரேதசங்களையும் ஒளிப்பதிவான காட்சிகளை விவரிக்க வார்த்தைகளில்லை. கருங்கடலின் சீற்றம் யூசூப் இகாவின் மனதின் ஏற்படும் உள்ள குமுறலாய் குறீயீடாய் சித்தரித்திருப்பது அத்தனை அழகு.
சென்ற ஆண்டு {2008} வெளியாகி விருதுகளை வாரி குவித்துள்ளது.
- Adana Golden Boll Film Festival, Turkey (2008): Best Film, Best Supporting Female Actor (Megi Kobaladze),
- Special Jury Prize Locarno Film Festival, Switzerland (2008): The Art and Essay Cicae Prize
- SIYAD (Turkish Film Critics’ Association) Awards, Turkey: Best Film, Best Script, Best Director, Best Cinematography (Feza Çaldıran), Best Actor (Onur Saylak)
- Eurasia Film Festival, Antalya, Turkey (2008): Netpac Jury Award
- Tiblisi Film Festival, Georgia (2008): Silver Prometheus Award
- Premiers Plans Angers European First Film Festival, France (2008): Soundtrack Award
- Festival on Wheels, Turkey (2008): Silver Goose and Critics’ Awards
- Montreal World Film Festival, Canada (2008)
The Winning Team
திரைக்கதை இயக்கம் Ozcan Alper. இஸ்தான்புல் பல்கலைகழகத்தில் வரலாறும் அறிவியலும் பயின்ற இவர் மாற்று சினிமா மீதுள்ள அதீத ஆசையால் சினிமா தொழில் நுட்பம் பயின்றார். பின்னர் சிறு தொலைகாட்சி சீரியல்களை இயக்கினார். இவரது முதல் குறும்படம் Momi (Grandmother) இவரது சொந்த மண்ணின் மொழியான ஹெம்சின் மொழியில் உருவாக்கப்பட்ட முதல் படம். இவையெல்லாவற்றையும் விட தனி சிறப்பு இது இவரது முதல் திரைப்படம்.
கிம் கிடக்கின் Spring, Summer, Fall, Winter... and Spring போலவே இயற்கையின் பருவங்களை ஒளிப்பதிவின் மூலமும் குறீயீடுகள் மூலமும் கதை சொல்லியிருக்கிறார் என்று பாராட்டுகிறது லண்டனிலிருந்து வெளியாகும் ஸ்கீரின் டெய்லி பத்திரிகை. Autumn பருவ காலத்தை இதில் அழகாக சொல்லிவிட்டார் என்றும் இந்த இளம் இயக்குநருக்கு மகுடம் சூட்டுகிறது.
ஒளிப்பதிவு Feza Çaldiran. இவரை எத்தனை பாராட்டினாலும் தகும் என்பதை டிரைலர் பார்த்ததும் புரிந்து கொள்வீர்கள்.
சந்தர்ப்பம் கிடைத்தால் நிச்சயம் பாருங்கள்.
டிரைலரை உடனே பாருங்கள்.
டிஸ்கி: பதிவையும் படித்து விட்டு டிரைலரையும் பார்த்து விட்டு பின்னூட்டம் போடாமல் சென்றால் அடுத்த பதிவு ஆகஸ்ட் 15 தான். அப்புறம் உங்க இஷ்டம்.
25 comments:
அடுத்த வாரம் முயற்சி செய்யுறேன்...
அடப்போங்க.. தல..!! எங்க சந்தர்ப்பம் கிடைக்கிறது. சந்தர்ப்பத்தை விடுங்க. இந்த டிவிடி எல்லாம்.. இங்க எட்டிக்கூட பார்க்காது.
இதெல்லாம் நம்ம ஊரு.. டைரக்டருங்க பார்க்க, இந்தியாவுக்கு வரும்போல..!! :)
நீங்க ஹேங்ஓவர் பாருங்க!!! கிம்-கிடுக்காவது ஒன்னாவது!! நாங்க பின்னி பெடலெடுத்திருக்கோமில்ல...!! :) :) :)
நீங்கள் சொன்னதைப் போல ட்ரெயிலரே அற்புதமாக இருக்கிறது.படம் பார்த்துவிட்டுச் சொல்கிறேன்.நன்றி,சூர்யா.
nalla iruku sir
டிஸ்கி: பதிவையும் படித்து விட்டு டிரைலரையும் பார்த்து விட்டு பின்னூட்டம் போடாமல் சென்றால் அடுத்த பதிவு ஆகஸ்ட் 15 தான். அப்புறம் உங்க இஷ்டம்.
வேனாம் சாமி நான் பின்னட்டும் போட்டுடறேன்....
அருமையான விமர்சனம் தலைவா.. அப்படியே கொஞ்சம் படத்தின் டிவிடியை எடுத்து வந்து போன் செய்தால் நன்றாக இருக்கும்:)
GOOD JOB-NANDRI ......-sila pala salarangalayum vaasalhalayum thirandhu vaithukkondiruppadhrku.idhu oru seivai-in a different form.meeendum nandri.
நன்றி பழைமை பேசி.
பாலா, ஹேங்ஓவர் கலக்கல் விமர்சனம். பார்த்தேன். சூப்பர்.
நன்றி ஷண்முகப்பிரியான் சார்.
நன்றி ஜாக்கி... அது...
கேபிளாரே டிவிடி கிடைத்தால் கண்டிப்பாக தருகிறேன்.
நன்றி அனானி. அடிக்கடி வாருங்கள்.
///பதிவையும் படித்து விட்டு டிரைலரையும் பார்த்து விட்டு பின்னூட்டம் போடாமல் சென்றால் அடுத்த பதிவு ஆகஸ்ட் 15 தான். அப்புறம் உங்க இஷ்டம்.///
ம்ஹும் உங்களால முடியாது. ஏதாவது ஒரு நல்ல படத்தைப் பார்த்ததும் கைதுறுதுறுன்னு வரும்... ச்சும்மா இருப்பீங்களா என்ன!
நண்பர் முகில்,சிறந்த எழுத்தாளர் மட்டுமல்ல. மனோதத்துவம் அறிந்தவர். சரியா சொன்னீங்க.. இன்றிரவே இன்னொரு பதிவு ரெடி...
ட்ரைலர் அருமை..
படம் பாத்துட்டு சொல்றேன்..
டவுன்லோடு லிங்க் இருந்தா சொல்லுங்க தல
துருக்கில கூட பல நல்ல படங்கள் வரத்தான் செய்து.
ரத்தின சுருக்கமான விமர்சனம் அழகு.
// பதிவையும் படித்து விட்டு டிரைலரையும் பார்த்து விட்டு பின்னூட்டம் போடாமல் சென்றால் அடுத்த பதிவு ஆகஸ்ட் 15 தான். அப்புறம் உங்க இஷ்டம்.//
தல இது கொடும :-))
டிரைலர் அருமை வர லேட் ஆகிவிட்டது
மிக சிறப்பான உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.. உங்கள் தளம் நல்ல படங்களை மக்களுக்கு அறிமுகம் செய்து வைக்கிறது. தொடருங்கள்..வாழ்த்துகள்
சூர்யா,
விமர்சனம் அருமை. நீங்கள் ஏன் கிளாசிக் ஆங்கில படங்களுக்கும் விமர்சனம் எழுதக்கூடாது?
பிரபாகர்.
We have to go by God's will-this aspect is 100 % right Surya.
கடைக்குட்டி, இந்த டவுன் லோட் விஷயம் எல்லாம் நமக்கு பூஜ்ஜியம்தான். தம்பி ஹாலிவுட் பாலாவை கேட்டு பாருங்க. அவர் தான் டவுன் லோட் குரு.
நன்றி வேழாம்பல். அழகான பெயர்.
பிராபகர், சில ஹாலிவுட் படங்களும் எழுதி இருக்கேன். பார்க்கவும்.
அடுத்த ரவுண்ட ஹாலிவுட் தான்.
Thanx Dr. M
Post a Comment