"The smallest children are nearest to God, as the smallest planets are nearest the sun" -- Jean Paul Richter
சார்லி ஒரு பொறுப்பான குடும்ப தலைவன். மனைவி கிம் வக்கீல், நாலு வயது மகன் பென் படு சுட்டி. சந்தோஷமாக வாழ்க்கை.
இப்படியாக போய் கொண்டிருக்கும் வேளையில் எதிர்பாராத நேரத்தில் சார்லி வேலை செய்யும் நிறுவனம், அவன் வேலை பார்க்கும் டிவிஷனையே மூட முடிவெடுக்க சார்லிக்கு வேலை காலி.
அதே சமயத்தில் அன்று தான் மகனை கிம்மை Play school ல் சேர்க்க எல்லா ஏற்பாடுகளும் செய்கிறான். அதை நடத்துபவர் ஹாரிடான் என்ற பெண்மணி. குழந்தைகளுக்கு ராணுவம் போன்று பயிற்ச்சியளித்தால் தான் அவர்கள் பொறுப்பான குடிமகன்களாக வருவார்கள் என்ற எண்ணம் கொண்டவள். அந்த பள்ளியில் கட்டணமும் எக்கசக்கம்.
வேலை இழந்த சார்லி எப்படி மகனை அவ்வளவு செலவுள்ள பள்ளியில் படிக்க வைப்பது என்று நினைத்து வருந்துகிறான். சில நாட்கள் தானும் நண்பர்களுடன் சேர்ந்து வேலை தேடி முயற்ச்சிக்கிறான். ஒன்றும் வேலைக்கு ஆகவில்லை.
பூங்காவில் குழந்தைகளுடன் விளையாடி வரும் நேரத்தில் ஒவ்வொரு பெற்றோரும் குழந்தைகளை வைத்து கொண்டு படும் பாட்டை எண்ணி தானே நண்பர்கள் பில் மற்றும் மார்ட்டினுடன் சேர்ந்து Play school தொடங்கினால் என்ன என்ற விபரீத ஆசை வரவே, தொடக்கமாகிறது Daddy Day Care.
குழந்தைகளை பராமரிக்க அவர்கள் படும் கஷ்டமும் குழந்தைகள் அடிக்கும் லூட்டியும் தான் இந்த திரைப்படம்.
100 % பொழுது போக்குடன் கூடிய அமெரிக்க முழு நீள காமெடி திரைப்படம்
முதலில் வீட்டிலேயே தொடங்க முடிவெடுத்து ஒரு சுப யோக நன்னாளில் படு அமர்களமாக தொடங்கப்படுகிறது. ஆனால் யாரும் ஆண்கள் பராமரிக்கும் பள்ளிக்கு குழந்தைகளை அனுப்ப முன் வருவதில்லை. ஒரு நாள் இலவச சலுகை என விளம்பரம் செய்யவே, சிறிது சூடு பிடிக்கிறது.
ஹாரிடான் நடத்தும் பள்ளியை விட மிக குறைந்த கட்டணமும் வசூலிக்கவே சிறிது சிறிதாக குழந்தைகளை சேர்க்கின்றனர் பெற்றோர்கள். ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு ரகமாக இவர்களை படுத்தி எடுக்கிறது.
பொறுமையுடனும் பெற்றொருக்குரிய அன்புடனுமே பராமரிக்க குழந்தைகள் சந்தோஷமாக வந்து குவிகின்றனர். குழந்தைகளை மகிழ்விக்க சார்லியும் அவனது நண்பர்களும் செய்யும் சேஷ்டைகளும் ஆடல் பாடலும் திரைப்படம் பார்க்கும் நம்மையும் மகிழ வைக்கும்.
ஹார்டான் கடுப்பாகி அரசாங்க அதிகாரியை அனுப்பி பல விதத்தில் தொல்லை கொடுக்கிறாள். அதையும் சமாளித்து செல்கின்றனர் மூவரும்.
இறுதியில் குறிப்பிட்ட குழந்தைகளுக்கு மேல் இருந்தால் வீட்டில் நடத்த கூடாதென்றும் தனியாக இடத்தை தேர்வு செய்ய வேண்டுமென்றி கூறி செல்கிறார் அதிகாரி.
அதற்க்காக பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்தி பணம் சேர்க்க முயலுவே அதிலும் புகுந்து கெடுக்க நினைக்கிறாள் ஹார்டான்.
திடீரென கம்பெனியில் வேலையில் மீண்டும் சேர சார்லிக்கு அழைப்பு வரவே அரை மனதுடன் நண்பருடன் வேலையில் சேருகிறான் சார்லி.
மீண்டும் வேலையில் சேர்ந்த முதல் நாள் மனிதன் ஒவ்வொருவருக்கும் சந்தோஷமானவை எது என்று கேட்கவே சார்லி என் குழந்தையே என்று சொல்லி அன்றே வேலையை விட்டு விட்டு புது இடத்தில் மீண்டும் தனது Daddy Day Care பள்ளியை பெரிய அளவில் மிகுந்த உற்சாகத்தோடு ஆரம்பிக்க அனைவரும் மகிழ்ச்சியில் திளைக்கின்றனர்.
குழந்தைகள் சார்லி திரும்பி வந்த்தை பார்த்து குதித்து கும்மாளமிட திரைப்படம் இனிதே முடிகிறது.
எடிமர்பியின் துள்ளலான நடிப்பும் குழந்தைகளின் லூட்டியும் படு சூப்பர்.
2003 ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் இயக்கம்: Steve Carr
குழந்தைகள் மட்டுமல்லாது அனைவரும் சந்தோஷமாக பார்க்க வேண்டிய அருமையான நகைச்சுவை திரைப்படம்.
இதன் இரண்டாம் பாகமும் Daddy Day Camp என்று 2007 ல் வெளியானது.
சந்தர்ப்பம் கிடைத்தால் நிச்சயம் பாருங்கள்.
உடனே பார்க்க வழக்கப்படி டிரைலர்
டிஸ்கி: திரைப்படம் முடிந்ததும் டிவிடியில் behind the scenes காண தவறாதீர்கள்.
26 comments:
தமிழில் தொடர்ந்து வெளிவரும் மொக்கை படங்களையும் கருமமே கண்ணாயினாராக பார்த்து பதிவிட்டு வரும் அன்பு நண்பர் வருங்கால இயக்குநர் கேபிள் சங்கர் மன அமைதி வேண்டி பார்க்க வேண்டிய திரைப்படம்.
நல்ல படம்
நன்றி அக்னி பார்வை. சும்மா ஜாலியா பார்க்கலாம்.
superb movie.... and LOL for comment for cable shankar :-) paavam avar..
Surya sir.. there seems to be some javascript problem in your page, it happens when i try to go to the comments page.. the page stops loading completely and IE says cannot load the page.. can you please check it..
சூர்யா,
விமர்சனத்தில் கலக்குகிறீர்கள். பார்க்க வேண்டும் போல் இருக்கிறது. இந்த முறை ஊருக்கு வருபோது, உங்களால் விமர்சிக்கப்பட்ட, நன்கு பரிந்துரைக்கப்பட்டஇருபது படங்களை வாங்கி வர உத்தேசம். நன்றி, நல்ல படங்களை பார்க்க வைப்பதற்கு.
பிரபாகர்.
"The smallest children are nearest to God, as the smallest planets are nearest the sun" -- Jean Paul Richter//
மனித மூளை ஒரு வற்றாத் கருவூலம் என்று திரும்பத் திரும்ப ஊர்ஜிதமாவது இது போன்ற வரிகளால்தான்.
இந்தப் படத்தை நம்ம ஊர்ப் பெரிய ஹீரோக்கள் எடுத்தால் எவ்வளவு மகிழ்வார்கள்,நம் குழந்தைகள்.
சான்ஸே இல்லை.
தமிழ் நாட்டின் தலைஎழுத்தை இறைவன் தப்பாகவே எழுதித் தொலைத்து விட்டான்,என்ன செய்ய?
அருமையான படத்தை அறிமுகம் செய்ததற்கு மகிழ்ச்சி,சூர்யா.
வேலை இழந்த சார்லி எப்படி மகனை அவ்வளவு செலவுள்ள பள்ளியில் படிக்க வைப்பது என்று நினைத்து வருந்துகிறான். சில நாட்கள் தானும் நண்பர்களுடன் சேர்ந்து வேலை தேடி முயற்ச்சிக்கிறான். ஒன்றும் வேலைக்கு ஆகவில்லை.//
எல்லா ஊர்லயும் கல்வி வியாபாரம்தான் போல?? இல்லை தலைவா??
வேலை இழந்த சார்லி எப்படி மகனை அவ்வளவு செலவுள்ள பள்ளியில் படிக்க வைப்பது என்று நினைத்து வருந்துகிறான். சில நாட்கள் தானும் நண்பர்களுடன் சேர்ந்து வேலை தேடி முயற்ச்சிக்கிறான். ஒன்றும் வேலைக்கு ஆகவில்லை.//
எல்லா ஊர்லயும் இதே பிரச்சனைதான் போல இருக்கு..
கலக்கலான அறிமுகம் தலைவரே
நல்ல விமர்சனம்ங்க
தோஸ்தானாவுக்கு அப்புறம் நல்ல காமடிப்படம் இன்னும் ஒன்னுகோட பாக்கல.தேடிப்பாக்குறேன் இதாவது கிடைக்குதான்னு
நன்றி யாத்ரீகன். அதான் தெரியுது. என்னன்னு பார்க்கறேன். உதவியும் தேவை.
வாங்க பிராபாகர். கண்டிப்பாக வாங்குங்கள். முன்னரே சொல்லுங்கள். நானும் உடன் வருகிறேன். போயி வாங்கலாம்.
நன்றி ஷண்முகப்பிரியன் சார்.
சூர்யா,
உங்களின் மின்னஞ்சல் மற்றும் தொடர்பு விவரங்களை தாருங்களேன்...
பிரபாகர்.
You have touched an interesting film.Eddie Murphy with children & as house keeper-fantastic Surya.
நன்றி ஜாக்கி. கல்வி சற்று கூடுதலான விஷயம் தான். ஆனால் நம்ம ஊர் போல இல்லை. இங்கு வியாபாரம் இல்லை, “அரசு ஆதரவுடன் பகல் கொள்ளை”
நன்றி முரளி.. நலமா..?
பிராபாகர், Mail: butterflysurya@gmail.com
Thanx Dr for your motivating comments.
எனக்கு மிகவும் பிடித்த படம் இது. உங்கள் விமர்சனம் மீண்டும் படம் பார்த்த அனுவத்தை ஏற்படுத்தியது. Great job Surya!
நன்றி தீபா. எனக்கும் மிகவும் பிடித்திருந்தது. பார்த்ததும் மகிழ்ச்சி. என் மனைவி ரொம்ப ரொம்ப ரசித்து பார்த்தது அதைவிட மகிழ்ச்சி.
அருமையான விமர்சனம் சூர்யா,
மனமார்ந்த பாராட்டுக்கள்
எனக்கு KIKUJIRO படம் பார்க்க வேண்டும் போல் இருக்கிறது. சென்னையில் எங்கு விலைக்கு வாங்க முடியும் என்று தெரிந்து கொள்ள முடியுமா?
நன்றி புதுகை. இந்த படத்தை பரிந்துரைத்ததே நீங்கள் தான். அதற்கும் நன்றி.
நன்றி கிருஷ்ணா. தகவல்களை உங்களுக்கு மின் அஞ்சலில் அனுப்புகிறேன்.
கிருஷ்ணா உங்களின் வாசிப்பும் பகிர்வும் அருமை. வாழ்த்துகள்.
Post a Comment