ஜகோ 52 வயதான கட்டை பிரம்மச்சாரி. தொழிற்ச்சாலை மூட்பட்டதால் பக்கத்தில் இருக்கும் ஒரு உணவு விடுதியில் வேலை பார்த்து காலத்தை ஒட்டுகிறார். ஆனாலும் பல முறை காதல் முயற்ச்சியில் தோல்வியுற்று இன்னும் தன் கனவுலக தேவதையை தேடி வருகிறார். கையில் காசில்லாத இவரை யார் கல்யாணம் பண்ணுவார்கள். எப்படியாவது பணம் சேர்க்க தனது சீடன் ஒருவனிடம் ஆலோசனை கேட்கிறார்.
அவனும் தொழிற்சாலை பக்கத்தில் இருக்கும் மைதானத்தில் பல ஜோடிகள் ஜொள்ளு விட்டு திரிந்து கொண்டிருப்பதை பார்த்ததும் பல ஆண்டுகளாக ஒடாது பாழைடைந்து கிடக்கும் பேருந்தை புதுப்பித்து காதலர் தங்கும் ஒய்வறையாக {பச்சையாய் சொன்னா பலான அறை} மாற்றி அதற்கு “Happy Times Hotel" என்று பெயரிட்டு நல்ல காசு பார்க்கலாம் என்று ஐடியா கூறுகிறான்.
தன் வயதுக்கு இதெல்லாம் தேவையா என்று நினைத்தாலும் கல்யாண ஆசையால் அரை மனதுடன் சம்மதிக்கிறார். இருவரும் இரவு பகலாக உழைத்ததால் “Happy Times Hotel" ரெடி.....
வெயிட்.... கல்யாண மேட்டருக்கு வருவோம்.
இதுவரை எவரும் சிக்காத நிலையில் மணமுறிவு ஏற்பட்ட 40 வயது இளம் பெண்ணுக்கு மணமகன் தேவை என்று தரகர் ஒருவர் கூறவே ஒரு ரெஸ்டாரண்டில் டேட்டிங் ஏற்பாடாகிறது. ஆயிரம் பொய்ய சொல்லி ஒரு கல்யாணத்தை பண்ணலாம் என்பது அகில உலக பழமொழியோ என்னவோ, ஜகோ அந்த உணவு விடுதி தனக்கு சொந்தமாதென்றும் இன்னும் நிறைய சொத்து உள்ளதென்றும் சும்மா அளந்து விடுகிறார். உடனே அவளும் சம்மதிக்கிறாள்.
பட்சி சிக்கிடுச்சுடான்னு சந்தோஷமாக சீடனிடம் சொல்ல அண்ணாமலை போல சைக்கிளில் பறக்கிறார். அவனும் தலைவா,,Happy Times வந்த வேளை... எப்படியாவது செட்டில் ஆயிடனும் சொல்லி வாழ்த்துகிறான்.
டேட்டிங் முடிந்து மீட்டிங். தன் வீட்டுக்கு விருந்து வருமாறு சொல்கிறாள் அவள். பூங்கொத்து ஒன்றை பலத்த பேரம் பேசி வாங்கி கொண்டு
பெண்மணி இருக்கும் வீட்டை கண்டு பிடிக்கிறார். அங்கோ அவளது 10வயது குண்டு மகன் சதா சாப்பிட்டு கொண்டே வீடியோ கேம்ஸ் ஆடி கொண்டு இருக்கிறான்.
மூவரும் சாப்பிட உட்கார்ந்ததும் “அந்த சனியனையும் சாப்பிட கூப்பிடு என்கிறாள் பெண்மணி”.. கைகளே கண்களாய் தட்டு தடுமாறி வந்து அமர்கிறாள் யிங்.
என் கணவனின் முதல் மனைவியின் பார்வையிழந்த பெண் என்றும் இத்தையும் என் தலையில் கட்டி விட்டு விவாகரத்தும் கொடுத்து விட்டு ஒடிவிட்டான் என்று புலம்புகிறாள். ஆனால் நான் தான் கண்ணும் கருத்துமாய் வளர்த்து வருவதாய் அவளும் தன் பாட்டுக்கு அளந்து விடுகிறாள். விருந்து முடித்து தன் விடுதி வேலைக்கு திரும்புகிறார் ஜகோ.
அவர் சென்றதும் யிங்கை படாத பாடு படுத்துகிறாள். சமையல் பாத்திரம் அனைத்தையும் கழுவினால் தான் அடுத்த வேளை உணவு என்கிறாள். அத்துடன் உன்னை விரைவில் தலை முழுகினால் தான் எனக்கு நிம்மதி என்று பொரிந்து தள்ளுகிறாள். தன் விதியை நொந்த படியே
பார்வை வற்றி போனாலும் கண்ணீல் நீர் வற்றாது அழுது கொண்டே அத்தனை பாத்திரங்களையும் தேய்த்து முடிக்கிறாள் யிங்.
மறு நாளும் ஜகோ சந்திக்க சென்றதும் இந்த பெண்ணுக்கு ஏதாவது வேலை வாங்கி கொடுத்தால் மட்டுமே கல்யாண்ம் என்று குண்டை தூக்கி போடுகிறாள் குண்டு பெண்மணி. குழம்பி போய் செய்வதறியாது சீடனிடம் விஷயத்தை சொல்லவே அவனும் சரி.. இட்டுகினு வாங்க ஏதாவது ஏற்பாடு செய்யலாம். குருட்டு பெண் தானே.. இருக்கவே இருக்கு Happy Times Hotel. அதுக்கு இந்த மாதிரி ஆள் தான் தேவைன்னு அவரை சமரசம் செய்கிறான்.
மறு நாள் வந்த வேகத்தோடு யிங்கை அழைத்து கொண்டு செல்கிறார். வரும் வழியில் பேருந்தில் அவள் கண்கள் குளமாக அமர்ந்து வருவதை காண்கிறார். சித்தி செய்யும் கொடுமைகளை போட்டு உடைக்கிறாள் யிங். தான் யாரையும் நம்ப தயாரில்லை என்கிறாள் யங்.
அந்த மாதிரி ஆள் நான் இல்லை. உனக்கு கண்டிப்பாக முடிந்த உதவிகளை செய்வேன் என்று உறுதியளித்து அவளை மகிழ்ச்சி படுத்த ஐஸ்கீருமும் வாங்கி கொடுக்கிறார் ஜகோ.
தனது அறையில் தங்க வைத்து விட்டு பாழடைந்த தொழிற்சாலையில் போய் படுத்துகிடக்கிறார். மாற்று உடை கூட இல்லாத பெண்ணுக்கு தனது பழைய தொலைகாட்சி பெட்டியை விற்று புதிய உடையும் வாங்கி கொடுக்கிறார்.
மிகுந்த சந்தோஷத்துடன் மறு நாள் மைதானத்திற்கு சென்று பார்த்தால் Happy Times Hotel அம்பேல். முட் செடியும் புதரும் மண்டி கிடப்பதால் நகராட்சி ஊழியர்கள் அனைத்தையும் சுத்தம் செய்ததுடன் பஸ்ஸையும் தூக்கி கொண்டு சென்று விட்டார்கள்.
சீடனும் ஜகோவும் கையில் இருந்த காசையெல்லாம் போட்டு புதுப்பித்த பஸ் பறி போனதை எண்ணி சோகமே உருவாய் செய்வதறியாவது திகைகின்றனர். யிங்கை திருப்ப கொண்டு வந்து விடுதாய் கூற அடியோடு மறுக்கிறாள் பெண்மணி. அவளுக்கு மசாஜ் செய்வது தெறியும். அதை வைத்து மசாஜ் பார்லரில் சேர்த்து விடுமாறு கூறுகிறாள்.
நாட்கள் செல்ல செல்ல பார்வையற்ற யிங் மீது இனம் புரியாத பாசமாகிறார். மனைவியை தேடிய தனக்கு ஒரு மகள் கிடைத்ததாக எண்ணி மகிழ்கிறார்.
அவளை மீண்டும் கொடுமை படுத்தும் பெண்மணியிடம் திருப்பியனுப்ப மனமில்லாமல் அவளை சந்தோஷப்படுத்த தொழிற்சாலையிலேயே மசாஜ் போன்று ஒரு இடத்தை நண்பர்களுடன் சேர்ந்து உருவாக்குகிறார்.
நண்பர்களையே தினசரி கஸ்டமர்கள் போன்று சென்று வர ஏற்பாடு செய்து கையில் உள்ள காசையெல்லாம் டிப்ஸ் போல அளித்தும் வரவே தன்க்கு ஒரு நிரந்தர வேலை கிடைத்த்தாகவும் நல்ல வருமானம் வருவதாகவும் மகிழ்கிறாள் யிங்.
ஆனால் ஒரு நாள் தட்டு தடுமாறி செல்லும் போது இந்த இடம் பார்லரா என்று சிறிது சந்தேகமும் கொள்கிறாள். கையில் இருந்த பணமெல்லாம் காலியாகவே டிப்ஸ் அளிக்க பணமில்லாத நிலையில் போலி நோட்டுகளை தயார் செய்து அளிக்கிறார் ஜகோ.
நிறைய டிப்ஸ் சேர்ந்த்தால் இன்றைக்கு நல்ல ஒட்டலில் போய் உணவருந்தாலாம் என்கிறாள் ஜகோ. அய்யோ அந்த பணத்தையெல்லாம் நீ செலவழிக்காதே.. அதை பத்திராமாக சேர்த்து வை என்று சமாளிக்கிறார். யிங்கும் ஆமாம் பணம் முழுவதையும் சேமித்து எனக்கு பார்வை கிடைத்தால் என் தந்தையை தேடி கண்டு பிடிப்பேன் என்கிறாள். அது தவிர பெற்ற தந்தையே புறக்கணித்த என்னை மகளாய் நினைக்கும் உங்களை காண வேண்டும் என்று அன்பாய் கூறவே நெகிழ்ந்து போகிறார் ஜகோ.
தனது தந்தையிடமிருந்து வந்திருந்த ஒரு கடிதத்தை கொடுக்கிறாள். அதை தனக்காக படிக்குமாறும் கூறுகிறாள். படித்து முடித்ததும் தன்னை பற்றி ஒரு வரியும் எழுத வில்லையா என்று ஆதங்கமாய் அவள் கேட்கவும் எழுத்துக்கள் சிறியதாய் இருப்பதாய் தெரியவில்லை. நாளை காலை நிதானமாய் படித்து சொல்வதாய் சொல்லி சமாளிக்கிறார் ஜகோ. ஆனால் பொறுப்பில்லாத தக்ப்பன் இந்த பார்வையில்லாத பெண்ணை மற்ந்தே விட்டான் போலும்.
திருமண நாள் குறிக்க பெண்மணியின் வீட்டிற்கு சென்ற ஜகோ மிக்ப்பெரிய பூச்செண்டுடன் ஒருவன் அமர்ந்திருப்பதை பார்த்ததும் அலறி துடிக்கிறார். பெண்மணியிடம் சண்டையிடுகிறார். அவளோ... நீயே அந்த ஒட்டல்ல வேலை பார்க்கிற நாய். உனக்கெல்லாம் கல்யாணமா.?? என்னையே பொய் சொல்லி ஏமாத்தவா பார்க்கிற.. என்று திட்டி ஜகோவை அடித்து விரட்டுகிறார்.
நினைத்து பார்க்க முடியாத ஏமாற்றத்துடனும் மிகுந்த பசியுடனும் ஒரு ஹோட்டலில் சாப்பிட போகிறார். ஒரு பேப்பரை எடுத்து என்னவோ எழுதியும் தள்ளுகிறார். சாப்பிட கூட பிடிக்காமல் வாழ்க்கையே வெறுத்து போய் ஒரு Full வாங்கி கொண்டு ரோட்டோரமாய் உட்கார்ந்து கொண்டு பெண்மணியை கண்டபடி திட்டியபடியே புலம்பி தீர்க்கிறார்.
இரவும் நேரமாகி பாட்டிலும் காலியாகி விடவே தட்டு தடுமாறி ரோட்டில் நடந்து செல்லும் போது வேகமாக வந்த டிரக் ஜகோ மீது மோத தலையில் பலத்த அடி பட்டு வீழ்ந்து கிடக்கிறார். ஆள் அரவம்ற்ற சாலையில் பயந்து போன டிரைவர் முதலில் ஒடி விட நினைத்து பின்னர் மனிதாபிமானத்துடன் ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளிக்கிறான்.
தகவல் அறிந்து நண்பர்கள் அனைவரும் மருத்துவமனைக்கு ஒடி வருகின்றனர். மருத்துவரும் நிலைமை பரவாயில்லை. அவரது மகளுக்கு முதலில் தகவல் தெரிவியுங்கள் என்கிறார்.
மகளா.. ?? அவருக்கு திருமணமே ஆகவில்லை என்கின்றனர் நண்பர்கள். அவர் மகள் யிங்கிற்கு எழுதிய கடிதம் அவர் சட்டை பையில் எப்படி வந்தது என்று கேட்கிறார் மருத்துவர். அவளை முதலில் அழைத்து வாருங்கள் என்றும் கூறுகிறார்.
நிலைமையை புரிந்து கொண்ட நண்பர்கள் யிங்கை அழைத்து வர ஜகோவின் அறைக்கு விரைகின்றனர். ஆனால் அங்கோ அதிர்ச்சியாய் அவள் இல்லை.
தான் வாழ்நாளில் தனக்கு கிடைத்த மிக மிக சந்தோஷமான நாட்களாய் ஜகோவிடம் இருந்த நாட்களே என்றும் அவருக்கும் நண்பர்களுக்கும் மிகுந்த கடைமை பட்டவளாய் இருப்பேன் என்றும் அவளை மகிழ்விக்கவும் அவளுக்கு மன உறுதியளிக்கவும் அவ்ர்கள் செய்த தந்திரங்கள் அனைத்தும் தனக்கு தெரியுமென்றும் தெரிந்தே அவளும் முழு மனதுடன் அனைத்தையும் சந்தோஷமாக அனுபவித்த்தாக கூறி ஒரு டேப் ரிகார்டரில் தனது நன்றியை பதிந்து வைத்து விட்டு எங்கோ சென்று விட்டாள் யிங்...
கையில் இருந்த மகளுக்கான லெட்டரில் ஜ்கோ, அருமை மகளுக்காக தான் பணம் சேமித்து வருவதாயும் விரைவில் அவள் கண்பார்வை அடைய அனைத்து ஏற்பாடுகளையும் செயவதாயும் அதுவரை மன உறுதியுடன் இருக்குமாறு எழுதி இருப்பதை படித்து சிலையாய் நிற்கின்றனர் நண்பர்கள்....
நகைச்சுவையுடன் ஆரம்பித்து நெகிழ்வாய் முடிகிறது திரைப்படம்.
Yan Mo என்பவரின் நாவலை தழுவி எடுக்கப்பட்ட இத்திரைப்படம் 2000ம் ஆண்டில் வெளியானதுடன் பல பரிசுகளை வென்றது.
இயக்கம் Yimou Zhang. மிகச்சிறந்த சீன இயக்குநர். பார்வையற்ற பெண்ணாக நடித்த Jie Dong சிறந்த நடிப்புக்கான விருதையும் பெற்று தந்த திரைப்படம்.
விவரிக்க முடியாத தனித்துவமான வசீகரத்தை தன்னுள் கொண்டிருக்கிறது இந்த திரைப்ப்டம். நல்ல கதையே ஒரு சிறந்த திரைப்படத்தை உருவாக்குகிறது. கதையை காட்சிகள் மூலமும், வசனங்கள் வாயிலாகவும் பார்வையாளர்களுககு புரியும்படியும், அவர்கள் உணர்வுளை தூண்டும்படியும் யார் உச்சத்துக்கு எடுத்துச் செல்கிறார்களோ அவர்களே சிறந்த இயக்குனர்கள். அப்படி ஒரு அலாதி நிகழ்வுகளை அமைதியாக அதே சமய்த்தில் அழுத்தமாக சொன்ன Yimou Zhang இயக்குநரை பாராட்ட வார்த்தைகளில்லை.
சந்தர்ப்பம் கிடைத்தால் அனைவரும் நிச்சயம் பார்க்க வேண்டிய திரைப்படம்.
Plz Don't Miss it.....
39 comments:
TEST...
சமீபமாகத்தான் உங்கள் பதிவுகளைப் படித்து வருகிறேன். வித்தியாசமாகவும், பயனுள்ளதாகவும், ரசனைக்குரியதாகவும் இருக்கின்றன. சரி, நீங்கள் குறிப்பிட்டிருக்கும் படங்களை எப்படி பார்ப்பது?
இப்படித்தான் விரிவாய் அலசனும் ஜ லைக் இட்
நன்றி மாதவராஜ். சென்னையில் சில டிவிடிக்கள் கிடைக்கும். வெளி நாட்டு நண்பர்கள் உதவியாலும் பார்த்து வருகிறேன்.
நன்றி ஜாக்கி. தங்கள் விருப்பம் என் பாக்கியம்...
//பார்வை வற்றி போனாலும் கண்ணீல் நீர் வற்றாது.... //
super ...
நன்றி ராமன். ரொம்ப நாளா இந்த பக்கமே காணவில்லை..?? வருகைக்கு நன்றி.
தேடித் தேடிக் கண்டு பிடிச்சுப் போடறீங்களே, அருமையான கதையம்சத்துடன் கூடிய திரைப்படங்களாக. உங்கள் அருமையான ரசனைக்கும், உங்கள் கனவு நனவாவதற்கும் வாழ்த்துகள்.
வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி கீதா மேடம்.
வணக்கம் சூர்யா, நல்ல விவரிப்பு.தொடரட்டும் பணி.
நன்றி செந்தில்.
Blind girl character is impressive.
நல்லா எழுதி இருக்கீங்க சூர்யா. இந்த மாதிரி படங்கள் தமிழ்லையும் எடுத்தா எவ்வளோ அழகா இருக்கும். கடைசியா நான் விரும்பிப் பார்த்த இந்த மாதிரி ஒரு படம் 'மொழி' மற்றும் 'பசங்க'.
நீங்க எப்படி பல மொழி படங்களையும் புரிஞ்சிகிறீங்க?
தங்களை 'பள்ளிக்கூடம் போகலாமா ?' தொடர் பதிவிற்கு அழைத்துள்ளேன். நன்றி.....!
உங்கள் வரிகளிலேயே நெகிழ்ந்துவிட்டேன் படத்தை பார்க்க வேண்டும் என்று ஆசையாக உள்ளது. எங்கு கிடைக்கும் ?
Thanx Dr.
வருகைக்கு நன்றி கிருஷ்ணா. மொழி, பசங்க படம் ரசித்து பார்த்தது.
எல்லா உலக படங்களுக்கும் பெரும்பாலும் ஆங்கிலத்தில் சப் டைட்டில் இருக்கும். தவிர கதையின் கருவை படித்து விட்டே படங்களை தேடி பிடிப்பதால் புரிந்து கொள்வதும் பெரிய கஷ்டமாக இருக்காது.
அழைப்பிற்கு நன்றி சுகுமார். வேலைப்பளு அதிகமாகி விட்டது. விரைவில் பதிவிட முயற்ச்சிக்கிறேன்.
வாங்க கட்டபொம்மன்.
பல டிவிடிக்கள் சென்னையில் பர்மா பஜாரிலும் தி.நகர் சத்யா பஜாரிலும் கிடைக்கும். சென்னை வரும் போது சொல்லுங்கள். வாங்கி தருகிறேன். சென்னை வரும் முன் எனக்கு ஈமெயில் அனுப்பவும்.
Nice post and zhang imau is my favourite director.
Thanks for introducing the movie. I couldn't type in tamil here.
Nilamukilan
சுவாரசியமாக இருக்கிறது. வாழ்த்துக்கள் வண்ணத்துப்பூச்சியார்! கடைசி பத்தியை ரசித்தேன்.
நன்றி நிலா முகிலன்..
நன்றி ஜெகநாதன்..அடிக்கடி வாருங்கள். ஆலோசனை தாருங்கள்.
அருமையான விமர்சனம். ரசித்தேன்.
வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி தீபா.
சூர்யா,
உங்களின் விவரித்தல் மிக அழகாக இருக்கிறது. உங்களது விமர்சனங்கள் மிகவும் பாசிட்டிவாக இருக்கிறது. எந்த ஒரு அதகளமும் செய்யாமல் அழகாய் உங்களின் கிரீடத்தை அலங்கரித்து வருகிறீர்கள். தேர்ந்து பார்த்து தெளிவாய் எழுதுகிறீர்கள். நன்றி சூர்யா...
பிரபாகர்.
தொடர்ந்த ஊக்கமும் ஆதரவும் தான் எழுத தூண்டுகிறது. நன்றிகள் பல பிராபாகர்.
படத்தை போல் உங்கள் விமர்சனமும் அருமை. வாழ்த்துகள்
படத்தை போல் உங்கள் விமர்சனமும் அருமை. வாழ்த்துகள்
நன்றி Sridhar Sir.
மீட்டிங் எப்போ..??
உங்களுக்கு திருமண(நாள்) வாழ்த்து சொல்ல வந்தால் இங்கே தலைப்பில் Happy Times.
சரி தான் ...
திருமண நாள் வாழ்த்துக்கள்!
நன்றி ஜமால். நீங்கள் வாழ்த்து சொல்ல வந்ததே Happy Times தான்.
நன்றிகள் பல..
நன்றி கிருஷ்ணமூர்த்தி சார்.
மற்ற பதிவுகளையும் பாருங்கள். நிறை / குறை சொல்லுங்கள்.
பார்க்கவேண்டிய படம். நல்ல விமர்சனம்!
உலகப் படங்கள்... ஏன், பொதுவாகத் திரைப்படங்களிலேயே அதிக நாட்டமிராத என்னைப் போன்றவர்களையும் உலகப் படங்களைப் பார்க்கவேண்டும் என்று ஆவலைத் தூண்டிவிடுகிற அளவுக்கு அருமையான ஸ்டில்களோடு, அதன் கதையை அழகுற, தெளிவாக விவரிக்கிறீர்கள். வேடிக்கை என்னவென்றால், ஸ்டில்ஸ்+வர்ணனை என உங்கள் பதிவைப் படிக்கும்போது அந்தத் திரைப்படத்தையே பார்த்து ரசித்த திருப்தி கிடைத்துவிடுவதால்,மீண்டும் ஒருமுறை பார்க்கும் எண்ணமே வருவதில்லை.
நன்றி ஜெகநாதன். கண்டிப்பாக பார்க்கலாம்.
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ரவிபிரகாஷ் சார்.
அடடா, நோக்கமே எல்லோரும பார்க்க வேண்டும் என்பது தான்.
superb...:)
Post a Comment