தாய் தந்தையில்லாமல் தன் பாட்டியுடன் தனிமையில் வசிக்கிறான் சிறுவன் மாசோவ். தனிமை கொடுமை, அதிலும் இளம்பருவத்தில் பிஞ்சு மனசின் தனிமை... உள்ளத்தை உருகவைக்கும் கொடுமை.
நமக்கெல்லாம் துவக்கப்பள்ளி பருவத்தில் கோடை விடுமுறை விட்டால் எங்கே போவோம்... ?? உறவினர் வீட்டிற்கு அல்லது பாட்டி வீட்டிற்கு சென்று குதித்து கும்மாளமிடுவோம்.
அதேபோல் பள்ளியின் இறுதி நாளன்று துள்ளி குதித்து வீடு வந்து சேருகிறான் மாசோவ். தனக்காக வைக்கப்பட்டிருக்கும் உணவை சாப்பிட்டு விட்டு கால்பந்தை தூக்கி கொண்டு மைதானத்தை நோக்கி ஒடுகிறான். ஆனால் பயிற்ச்சியாளரோ விடுமுறையில் பயிற்ச்சி கிடையாதென்றும் எங்காவது சென்று விடுமுறையை கழிக்குமாறு சொல்லி விட்டு கிளம்புகிறார். விளையாட யார் துணையுமின்றி தன்னந்தனியே நிற்கிறான் மாசோவ்.
சோகமே உருவாகி வீட்டினுள் அடைந்து கிடக்கிறான். பாட்டி வேலை முடித்து வந்ததும் எங்கே போவது என்று கேட்கிறான். பாட்டியும் உன் தந்தை இறந்து விட்டார், தாயும் தொலை தூரத்தில் உனக்காக கஷ்டப்பட்டு வேலை பார்க்கிறாள், உன்னை எங்கேயும் கூட்டிப்போக யாரும் இல்லை என்கிறாள்.
மனமுடைந்து போகிறான் மாசோவ். மறு நாள் பாட்டி வேலைக்கு கிளம்பியதும் சிறிது பணத்தையும், தாயின் போட்டோக்களையும் முகவரியையும் எடுத்து கொண்டு தனியே கிளம்புகிறான்.
மாசோவ் தனது தாயை தேடிக்கண்டுபிடிக்க தயாராகிறான். வழியில் உறவினரான ஒரு தம்பதியினரை சந்திகிறான். அவர்களும் அவனிடம் இதமாக பேசி அவன் பயணத்தை அறிந்து கொண்டு அந்த பெண்மணி தனது கணவரையும் அனுப்பி வைக்கிறாள். அவர் பெயர் கிகுஜிரோ. கிகுஜிரோவோ சற்று போக்கிரி என்றும் மறை கழண்டு போனவர் என்றும் அனைவராலும் பாராட்டப்படுபவர்.
வேறும் யாரும் இல்லாத நிலையில் மாசோவும் கிகுஜிரோவின் துணையோடு எங்கோ தொலை தூரத்தில் இருக்கும் தாயை கண்டுபிடிக்க பயணமாகிறான். இந்த நீண்ட பயணத்தில் இருவருக்குள்ளும் இது நாள் வரை ஒளிந்துகிடந்த உணர்வுகளை வெளிப்படுத்துவதே இந்த ஜப்பானிய திரைப்படம்.
ஆரம்பத்திலேயே பணம் முழுவதையும் சைக்கிள் பந்தயத்தில் இழந்து விட்டு கையில் சல்லி காசில்லாமல் பயணத்தை தொடங்குகின்றனர் இருவரும்.
இந்த பயணத்தில் மகிழ்ச்சி, இன்பம், விளையாட்டு, நகைச்சுவை, சிறு சிறு ஆனந்தம், நடுநடுவே ஏமாற்றம் என ஆர்ப்பாட்டமில்லாத ஆனால் அதே நேரத்தில் சுவாரசியமாக கதையை நகர்த்தியுள்ளார் இயக்குநர். நிகழ்வுகளின் கோர்வையே நூறு சதவித சுவாரசியங்களுக்கு நான் கிராண்டி.
நீண்ட பயணத்திற்கு பிறகு விலாசத்தை அடைகின்றனர். வீட்டை நோக்கி நடக்கிறார் கிகுஜிரோ. அதிர்ச்சியாக அந்த விலாசத்திலுள்ள அம்மாவிற்கு வேறோரு குடும்பம் உள்ளது. இதை எப்படி அவன் ஜீரணிக்கப்போகிறான் என்று அவர் தவிக்கும் போது மாசோ அழுது கொண்டு இருக்கிறான்.
உண்மை நிலை அறிந்தால் அவன் துடித்து போவான் என்று நினைத்து அந்த விலாசத்தில் வேறு யாரோ இருக்கிறார்கள் என்று சொல்லி சமாளிக்கிறார் கிகுஜிரோ. மாசோவின் அழுகை நின்றபாடில்லை. அவனை எப்படியாவது தேற்ற எண்ணி ஒரு பொம்மை மணியை கொடுத்து உங்கம்மா நீ வந்தா உன்கிட்ட கொடுக்க சொல்லி கொடுத்துட்டு போயிருக்காங்க.. உனக்கு கவலை வந்தால் இந்த மணியை அடித்தால் தேவதை வந்து உனக்கு உதவும் என்று சொல்லி ஒரு வழியாக அவனை தேற்றுகிறார்.
மீண்டும் ஊருக்கு செல்ல ஆயத்தமாகி நட்க்க தொடங்குகிறார்கள். வழியில் அந்த பிஞ்சு மனதின் ஏமாற்றத்தை எண்ணி மாசோவை மகிழவைக்க பல உத்திகளை கையாள்கிறார். பெரிய இலைகளை வெயிலுக்கு குடையாக சட்டையில் சொருகியபடி நடப்பதும், சோளத்தோட்டத்தில் புகுந்து சோளங்களை உண்டு பசியாறுவதும் ஊர் சுற்றி திரியும் எழுத்தாளரை சந்திப்பதும் மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியுமான காட்சிகள்.
வரும் போது சந்தித்த பல வித மனிதர்களை மீண்டும் திரும்பி செல்லும் போது ஏதேச்சையாக சந்திப்பதும் அனைவரும் அவர்களுக்கு உதவுவதும் ஜப்பானின் ஒரு சாராரது வாழ்க்கை முறையை சமூகப் பார்வையுடன் பதிவு செய்துள்ளார் இயக்குநரும் கிகுஜிரோகவாக நடித்தவருமான டகேஷி கிட்டானோ.
குழந்தைகளின் தனிமை உலகத்தையும் நகர வாழ்க்கையில் அவர்கள் தொலைத்த கேளிக்கை விளையாட்டுகளையும் ஒவ்வொரு காட்சியிலும் அத்தனை தெளிவாக பதிய வைத்த ஒரு மிகச்சிறந்த திரைப்படம். என்னதான் நகைச்சுவையுடன் பதிய வைத்தாலும் அதுனுள் இழையோடியிருக்கும் சோகம் நம்மை கலங்க வைக்கிறது.
ஒவ்வொர் காட்சியும் குழந்தைக் கதைகளில் வருவது போல் ஒரு சிறு தலைப்புடன் தொடங்குவது புதுமையானதும் தனித்துவம் வாய்ந்ததாகும். குளோசப் ஷாட்டுகளை போன்றே லாங் ஷாட்டுகளிலும் கதாபாத்திரங்களின் உணர்வுகளை துல்லியமாக வெளிப்படுத்தி அசர வைக்கிறார் இயக்குநர்.
இறுதி காட்சிகளில் வசனங்கள் பேசாது இசையின் மூலமே படத்தை பேசவைப்பது அத்தனை அருமை.
ஒரு சிறுவனுக்கும் இரண்டாவது பாலக மனதில் இருக்கும் வயோதிகருக்கும் இடையேயான நட்பையும் ஆழ்ந்த அன்பையும் இதைவிட ஆழமாக சொல்ல இயலுமா..?? தெரியவில்லை..
1999ல் வெளியாகி கேன்ஸ் உலக திரப்ப்பட விழாவில் தங்கப்பனை விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டதுடன் உலக அரங்கில் பல விருதுகளை வாரிக் குவித்த திரைப்படம்.
நண்பர் நிலா ரசிகனின் அழகான கவிதையொன்று:
காய்ச்சலில் நெற்றிதொடும் போதும்,
ஒரு சிறுவனுக்கும் இரண்டாவது பாலக மனதில் இருக்கும் வயோதிகருக்கும் இடையேயான நட்பையும் ஆழ்ந்த அன்பையும் இதைவிட ஆழமாக சொல்ல இயலுமா..?? தெரியவில்லை..
தீவிர சினிமா ரசிகர்கள் ஒவ்வொருவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம் கிகுஜிரோ.
உடனே பார்க்க டிரைலர்
1999ல் வெளியாகி கேன்ஸ் உலக திரப்ப்பட விழாவில் தங்கப்பனை விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டதுடன் உலக அரங்கில் பல விருதுகளை வாரிக் குவித்த திரைப்படம்.
நண்பர் நிலா ரசிகனின் அழகான கவிதையொன்று:
காய்ச்சலில் நெற்றிதொடும் போதும்,
மழையில் நனைந்து தலைதுவட்டும் போதும்
தோல்விகளில் தட்டிக்கொடுத்து உற்சாகப்படுத்த ஆளில்லாத போதும்,
நினைவுகளில் நிழலாடுகிறது அம்மாவின் அன்புக்கை.......
என்று அம்மாவின் அருகாமை இல்லாத நிலையைச் சொல்லும் எளிய கவிதை தாயின் நினைவுகளைக் கிளறி விடுகிறது.
இன்று சென்னை போன்ற பெரு நகரங்களில் தேவையோ இல்லையோ குடும்ப வ்ருமானம் கருதியும் மிகைப்படுத்தப்ட்ட வாழ்க்கை முறை வேண்டி நுகர்வு கலாச்சாரத்தில் மூழ்கி பெற்றோர் இருவரும் வேலைக்கு போகும் வீடுகளில் தனிமையில் சிக்கி தவிக்கும் ஒவ்வொரு குழந்தையும் இந்த மாசோவை நினைவு படுத்துகின்றனர்.
47 comments:
சம்பந்தம் இருக்குன்னு, மிஷ்கினே ஒத்துகிட்டதா படிச்சனே...??!!!
படம் வரட்டும்..! உங்க விமர்சனமும்..!!:)
நம்ம ஆளுங்க எதையத்தான் காப்பி அடிக்காம உட்டுருக்காங்க........ சின்ன வயசுல இசுகூலுல இருந்தே பலகிக்கிறாங்க...... டையரக்டர் ஆனாலும் அதே புத்திதான்.........!!!!!
சூர்யா,
இந்த மாதிரியெல்லாம் உண்மையை சொல்லி எங்களை டெம்ப்ட் பண்ணக்கூடாது...
பிரபாகர்.
தலைவரே.. அருமையான படம். கடைசி காட்சிகளில் வெறும் பிண்ணனி இசையின் மூலமே படம்போகும்..
இந்த படம்தான் நந்தலாலா என்பது படம் பார்க்கும் ஆர்வம் இருக்கும் தமிழ் நண்பர்கள் அத்தனை பேருக்கும் தெரியும்
பதிவர் சந்திப்பு குறித்த எனது பதிவை வாசிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
ஸ்ரீ....
தல முதல்ல செண்ட்ரல் ஸ்டேசன் பட்த்துல இருந்து காப்பி அடிக்குராங்கன்னு சொல்லி அதவாங்கிப்பாத்தேன்.நல்ல படம் ஆனா அத இருக்க வாய்ப்பு இல்ல.சரி இதையும் வாங்கி பாத்துருவோம்.
ரண்டுக்கும் ஸ்டில்ஸ் ஒத்துப்போகுதே :-))
சரி விமர்சனத்த போடுங்க :-))
இரண்டு படங்களுக்கும் ஒன்றாகவே விமர்சனம் எழுதுங்கள்
அன்புடன்
வர்மா
watch the 6th picture and the last picture.. 6th - Color / last - Black & White,
6th - Kid is on right side/ last - Kid is on left side..
ivlo difference iruku..irundhum copy-nu solreengaley.. cha manasatchiyey ilaya ungalukelaam :-(
இதுவரை எழுதியதில்... பெஸ்ட்டுன்னு சொல்லலாமா...??!!!!! கலக்கலான எழுத்து பூச்சி..!!
ஆனா.. நாங்க எல்லாம் ஹேங் ஓவர்தான் பார்ப்போம்..!! கிகுஜிரோ.. எல்லாம் ஸ்ட்ரெய்ட்டா அவார்ட்டுக்குதான். :))
எங்கே பூத்தாலும் மலர்கள் மலர்கள்தான் என்பதை அந்த சிறுவனின் ஏக்கம் அழகாக உணர்த்துகிறது
அருமையான படம் என்று உங்கள் விமர்சனத்தைப் படித்தே புரிந்து கொண்டேன்,சூர்யா.
படத்தின் உணர்வுகளை நன்றாக எழுதி உள்ளீர்கள்.
பார்த்து விட்டுச் சொல்கிறேன்.
பாலா, மிஷ்கின் ஒத்துகிட்டாரா?? தெரியவில்லை.
நன்றி லவ்டேல் மேடி
நன்றி பிராபாகர்.
நன்றி கேபிளாரே..
ஸ்ரீ, பதிவர் சந்திப்பு பதிவை பார்த்தேன். அருமை. பின்னூட்டமும் இட்டுள்ளேன்.
வருகைக்கு நன்றி.
கார்த்தி.. போட்டாச்சு. படித்து விட்டு கருத்தை சொல்லவும். நன்றி
Enna solla??
Such a touchy story.....Though i have'nt watched any Jap movie, would certainly want to see this!
Kudos to you for bringing in the emotions live thru your writing!
Such a touchy & b'ful story:-).
Wish in India too we make some sensible movies!!
வர்மா, தமிழ் திரைப்படம் இன்னும் வெளிவரவில்லையே..?? வந்தால் எழுதறேன்.
யாத்ரீகன், இது நல்ல காமெடி..
இதுவரை எழுதியதில்... பெஸ்ட்டுன்னு சொல்லலாமா...??!!!!! கலக்கலான எழுத்து பூச்சி..!!////
பெஸ்ட் கண்ணா பெஸ்டா..???
Thanx Kanna Thanx...
ஆனா.. நாங்க எல்லாம் ஹேங் ஓவர்தான் பார்ப்போம்..!! /// அதான... பார்த்து விட்டு அதை தண்டோராக்கு காணிக்கை வேறு. நீ இந்தியா வா ராசா உனக்கு இருக்கு...We are all waiting..
நன்றி கோமதி மேடம். சந்தர்ப்பம் கிடைத்தால் நிச்சயம் பாருங்கள்.
நன்றி ஷண்முகப்பிரியன் சார். நீங்கள் அவசியம் பார்க்க வேண்டும்.
Hey Viji.. How is B'lore.? Thanx for your visit and encouraging comments.
நந்தலாலா வர்றதுக்கு முன்னாடியே இதைப் பார்த்துடணும். ஒரு கிக்குஜிரோ டிவிடி பார்சல்ல்ல்ல்ல்ல்!!!!!
நந்தலாலா வர்றதுக்கு முன்னாடியே இதைப் பார்த்துடணும். ஒரு கிக்குஜிரோ டிவிடி பார்சல்ல்ல்ல்ல்ல்!!!!! ////
50 ரூபா, 50 ரூபா, லேட்டா வந்தா 100 ரூபா...
பெருமூச்சு விடறதைத் தவிர வேறே ஒண்ணும் செய்ய முடியலை. கதையின் கருத்தை நினைத்தும், இந்தியாவின் இப்போதைய தாய்மார்களை நினைத்தும், ஒரே தலை சுத்தல்!
நல்லதொரு கருத்துள்ள படம், உறவுகளைக் கவிதையாகக் காட்டி இருப்பது உங்கள் விமரிசனத்தில் இருந்து புரிகின்றது. நன்றி, பகிர்தலுக்கு.
நன்றி கீதா மேடம் வருகைக்கும் கருத்திற்கும்.
சூர்யா - கொஞ்சம் பொறாமையாகவே இருக்கிறது :) நிறைய படங்கள் பார்த்திருக்கிறீர்கள். அழகாக பதிவும் செய்திருக்கிறீர்கள். நன்றிகள்.
Film Societyஇல் உறுப்பினராக இருக்கிறீர்களா? நானும். ஆனால் 6.30 மணிக்கு அங்கு வரத்தான் முடியவில்லை. வார இறுதிகளில் திரையிட்டார்கள் எனில் வசதியாக இருக்கும்.
தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துகள்!
நன்றி அரவிந்தன். நிறைய மெனக்கிட வேண்டியிருக்கிறது. இந்த கிகுஜிரோ விசிடி கிடைக்க இரண்டு மாதம் அலைய வேண்டி இருந்தது. இருந்தாலும் கிடைத்து பார்த்தவுடன் அந்த அலைச்சல் மறந்து போகும்.
வருகைக்கு நன்றி. தொடர்ந்து வாருங்கள். வாழ்த்துகள்.
சூர்யா,
வழக்கம் போல கலக்கல்... அப்போ நந்தலாலா வும் இந்த லாலா தானா ?
இந்த படமும் என்கிட்டே இருக்கு இந்த வாரம் பாத்துறேன். நீங்க சென்னை தான்னு நினைக்கிறேன். டி வி டி க்காக ரொம்ப அலைய வேண்டாம். உங்களுக்கு என்ன படம் வேணும்னு சொல்லுங்க. நான் முடிந்த அளவு ஏற்பாடு செய்யறேன்.
நல்லதொரு படத்துக்கு நல்லதொரு விமர்சனம்
நல்வாழ்த்துகள்
This is definitely Nandhalala. No doubt. Very well written review.
Thanx Bala for your visit and comments. Yes. I am at Chennai. Plz send your e mail.
Thanx Chenna. நல்வாழ்த்துகள்
Thanx Annai for your visit and wishes.
எங்கேயிர்ந்துதான் படங்களை பிடித்து விமர்சனம் போடுறீங்களோன்னு இன்னமும் ஆச்சரியாமாத்தான் இருக்கு எனக்கு!!!
தென்றால் வந்து வாழ்த்து வீசிய புதுகைக்கு நன்றி.
தென்றலாய் வந்து வாழ்த்து வீசிய புதுகைக்கு நன்றி.
Ovoru ilam thalirukkum thaayar enral evalvu aasai.Thaaiyai thedi vazhithudan alaiyum antha siruvanai,thaayar veru kudumbathil iruppathai sollaamal avanai meendum azhaithu varum Character Super Surya.
வணக்கம். தங்களைச் சந்திக்க விரும்புகிறேன்.விவரங்களுக்கு எனது வலைப்பூவில் நீங்கள் பின்னூட்டம் எழுதிய தளத்தை அவசியம் பார்க்கவும். நன்றி
நன்றி செந்தில்
Thanx Dr for your visit and comments.
படம் இப்போது கையில் இருக்கிறது.. பார்த்துவிட்டு சொல்கிறேன்.. பகிர்விக்கு நன்றி.
சூர்யா,
ஆங்கங்கே வரும் குழந்தையின் கனவு காட்சிகள் இதமான ஹைக்கூ...அதை குறிப்பிட மறந்து விட்டீர்களே....
நண்பர்களுக்கு,
http://www.behindwoods.com/features/Interviews/interview-5/director/mysskin-01.html
Is Nandalala inspired from a Japanese film?
Now, I cannot answer this question and convince anyone. When my film is released, you can take the DVD of the Japanese film and then compare and say. Of course, I am an ardent fan of Takeshi Kitano. In fact, you can call him my guru. In a way his Kikujiro stimulated me to take Nandalala but Nandalala is not Kikujiro. You can tell me this after you see the film.
சாந்தினி பார் இந்திப் படத்திலும் இதே போன்றதொரு கதைதானே. இருப்பினும் தங்கள் விமர்சனம் நன்று. தாங்கள் crossing over என்ற ஆங்கிலப் படம் பார்த்து விட்டு தங்கள் விமர்சனத்தை எழுதுங்கள்.
ஜப்பானிய படங்களே இனி பார்க்க கூடாது என்கிற எண்ணத்தில் இருந்தேன். "இட்சி த கில்லரால்"
நல்லதொரு பகிர்வு நண்பரே. என் கவிதையை சுட்டிகாட்டியமைக்கு நன்றிகளும். படம் பார்த்துவிட்டு பதிலிடுகிறேன். தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.
இதுதானா ஒரிஜினல் நந்தலாலா..!
வரட்டும்.. பிச்சிப்புடுறேன்..!
Post a Comment