"Observing nature is better than playing backgammon or doing nothing,"
இத்திரைப்படத்தில் ஏதோ பெரிய கதை இருப்பதாக தெரியவில்லை. வாழ்வின் சிறிய சிறிய நிகழ்வுகளும் அதை சொல்லியிருக்கும் விதமே அழகுதான்.
The Wind Will Carry us கவித்துவமான இந்த பெயர் Forough Farrokhzad என்ற ஈரானிய பெண் கவிஞரின் கவிதையின் பெயர். அதை தலைப்பிட்டு இந்த திரைப்படத்தை இயக்கியிருப்பவர் ஈரானிய இயக்குநர் அப்பாஸ் கிராஸ்தமி. செதுக்கியிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.
கம்யூட்டர் யூகங்களின் கரிய நிழல் படாத அழகிய கிராமங்களின் கதை. வார்த்தைகளால் விவரிக்க முடியாத வாழ்வின் நிகழ்வுகளும் மனித தன்மை இன்னும் உயிரோடு இருப்பதை அழகாக சொல்லியிருக்கும் ஒர் அற்புத படைப்பு.
ஒருவரின் மரணத்திற்கு பிறகு செய்யப்படும் ஈமச்சடங்குகளை பற்றியும் அவர்களது வாழ்க்கை முறை பற்றியும் புகைப்படமும் ஆவணப்படம் எடுப்பதற்காக டெஹ்ரானின் தொலை தூர கிராமத்திற்கு வருகிறார் பெஸாட்டும் அவரது இரு உதவியாளர்களும். இறக்கும் தருவாயில் இருக்கும் ஒரு முதிர்ந்த மூதாட்டியின் இறப்புக்காக காத்திருக்கிறார்கள்.
ஒருவரின் மரணத்திற்கு பிறகு செய்யப்படும் ஈமச்சடங்குகளை பற்றியும் அவர்களது வாழ்க்கை முறை பற்றியும் புகைப்படமும் ஆவணப்படம் எடுப்பதற்காக டெஹ்ரானின் தொலை தூர கிராமத்திற்கு வருகிறார் பெஸாட்டும் அவரது இரு உதவியாளர்களும். இறக்கும் தருவாயில் இருக்கும் ஒரு முதிர்ந்த மூதாட்டியின் இறப்புக்காக காத்திருக்கிறார்கள்.
அவர்களுக்கு உதவுவதற்காக பணிக்கப்பட்டவன் ஒரு சிறுவன் மட்டுமே. அவன் துணையோடு கிராமங்களை சுற்றி வருகிறார் பெஸாட்.
அவர் சந்திக்கும் பாத்திரங்கள் ஒவ்வொருவரும் வித்தியசமானவர்கள். தினசரி உணவுக்காக மாட்டு பாலை அவருக்கு அளிக்கும் பதின்ம வயது பெண். தான் மட்டுமே தனித்து வேலை செய்து கிணறு தோண்டும் வாலிபன். அந்த பதின்ம வயது பெண்ணின் காதலன். அங்கு டீ கடை நடத்தும் ஒரு பெண்மணி. அவளோடு எல்லாவற்றிற்க்கும் தினசரி வாக்குவாதம் செய்யும் கணவன். பக்கத்து வீட்டில் குடியிருக்கும் பத்து குழந்தைகளுக்கு தாயான பெண்மணி, என யதார்த்த கதாபாத்திரங்கள். ஒவ்வொருவரின் விருப்பு வெறுப்புகள், கலப்படமில்லாத அன்பு, கிராமத்திற்கே உண்டான கிண்டல், நையாண்டி என படம் முழுக்க சின்ன சின்ன நிகழ்வுகள்.
தொலை தொடர்பு சிறிதும் இல்லாத அந்த கிராமத்தில் செல்போன் பேச மலை மேடுகளுக்கு அருகே சென்றால்தான் பேச முடியும். ஒவ்வொரு முறை தனக்கு அழைப்பு வரும் போதும் பெஸாட் ஜீப்பை எடுத்து கொண்டு அந்த இடத்திற்கு ஒடுவதும் பேசி முடித்ததும் இருப்பிடத்திற்கு வருவதும் வழியில் காணும் கிராம மக்களிடம் உரையாடுவது நல்ல நகைச்சுவை.
தனியாக கிணறு தோண்டும் வாலிபன் மண் சரிவு ஏற்பட்டு உயிருக்கு போராடும் போது எதேச்சையாக அங்கு வரும் பெஸாட் அவனை காப்பாற்ற முயலுகிறார். கண்ணில் காணும் ஊர் மக்கள் அனைவரிடமும் விபரம் தெரிவிக்கிறார். அவர்களும் ஒரு மருத்துவரை அழைத்து வருகின்றனர்.
ஊர் மக்கள் அனைவருக்கும் சேவை செய்யும் மருத்துவர் வாலிபனையும் காப்பாற்றுகிறார். இறப்புக்காக கடைசி காத்திருந்த பெண்மணி கடைசிவரை இறக்கவேயில்லை. ஆவணப்படம் பிடிக்க முடியாத ஏமாற்றம் இருந்தாலும் சில புகைப்படங்களை எடுத்து கொண்டு கிராம மக்களையும் அவர்களின் அன்பையும் வாழ்க்கை முறையையும் அறிந்த பெஸாட் ஊர் திரும்ப்புகிறார் என்றே நாம் முடிவு செய்து கொள்ள வேண்டியதுதான்.
படம் முழுவதும் ஆங்காங்கே கிராமத்தார் பாடும் பாடல் போன்ற கவிதை வரிகளும் அருமை. மலை பிரதேடங்களிலும் பசுமை நிற்ந்த வயல் வெளிகளிலும் மனதிற்கு ரம்மியமான சூழல்களிலும் மலை மீதுள்ள வீடுகளிலும் எடுக்கப்பட்ட காட்சியமைப்பு அற்புதம்.
" Prefer the Present" என்று தொலை தூரத்தில் சென்று கொண்டிருக்கும் மருத்துவர் முணுமுணுப்பதாய் திரைப்படம் நிறைவு பெறுகிறது.
1999 ல் வெளியாகி பல சிகாகோ, வெனீஸ் திரைப்பட விருதுகளை அள்ளியது. பல உலக திரைப்பட விழாக்களில் பங்கு பெற்றது தனிச்சிறப்பு.
சந்தர்ப்பம் கிடைத்தால் நிச்சயம பாருங்கள்.
உடனே பார்க்க வழக்கப்படி டிரைலர்.
1999 ல் வெளியாகி பல சிகாகோ, வெனீஸ் திரைப்பட விருதுகளை அள்ளியது. பல உலக திரைப்பட விழாக்களில் பங்கு பெற்றது தனிச்சிறப்பு.
சந்தர்ப்பம் கிடைத்தால் நிச்சயம பாருங்கள்.
உடனே பார்க்க வழக்கப்படி டிரைலர்.
முக்கியமான டிஸ்கி: பின்னூட்டத்தில் காண்க.
32 comments:
டிஸ்கி: பெஸாட்டின் இரு உதவியாளர்கள், இறக்கும் தருவாயில் இருக்கும் மூதாட்டி, கிணறு தோண்டும் வாலிபன், நித்தம் உணவுக்காக பால் கொடுக்கும் பதின்ம வயது பெண் என்று எவரும் திரைப்படம் முடியும் வரை திரையில் காட்டப்படுவதேயில்லை.
வெறும் குரல்களாலும் தொலை தூர உருவங்களாலும் சொல்லியிருப்பது அருமையிலும் அருமை.
சூர்யா...
படத்தினை பற்றிய உங்களின் விமர்சனம் மிகவும் அற்புதம். பாராட்டுக்காக சொல்லவில்லை. இன்றைய காலையை உங்களின் விமர்சனத்தை படித்து சந்தோஷமாக துவக்குகிறேன்... இப்போதே படம் பார்த்த நிறைவு.
//ஒருவரின் மரணத்திற்கு பிறகு செய்யப்படும் ஈமச்சடங்குகளை பற்றியும் அவர்களது வாழ்க்கை முறை பற்றியும் புகைப்படமும் ஆவணப்படம் எடுப்பதற்காக டெஹ்ரானின் தொலை தூர கிராமத்திற்கு வருகிறார் //
// இறப்புக்காக கடைசி காத்திருந்த பெண்மணி கடைசிவரை இறக்கவேயில்லை. //
இறப்பினை பதிவு செய்ய வரும் அவர் அதை தவிர மற்றவற்றை எல்லாம் பதிவு செய்வார் என கணித்திருந்தேன்... சரியாக இருந்தவுடன் சந்தோஷமாக இருக்கிறது...
நன்றி சூர்யா...
பிரபாகர்.
சூர்யா...
படத்தினை பற்றிய உங்களின் விமர்சனம் மிகவும் அற்புதம். பாராட்டுக்காக சொல்லவில்லை. இன்றைய காலையை உங்களின் விமர்சனத்தை படித்து சந்தோஷமாக துவக்குகிறேன்... இப்போதே படம் பார்த்த நிறைவு.
//ஒருவரின் மரணத்திற்கு பிறகு செய்யப்படும் ஈமச்சடங்குகளை பற்றியும் அவர்களது வாழ்க்கை முறை பற்றியும் புகைப்படமும் ஆவணப்படம் எடுப்பதற்காக டெஹ்ரானின் தொலை தூர கிராமத்திற்கு வருகிறார் //
// இறப்புக்காக கடைசி காத்திருந்த பெண்மணி கடைசிவரை இறக்கவேயில்லை. //
இறப்பினை பதிவு செய்ய வரும் அவர் அதை தவிர மற்றவற்றை எல்லாம் பதிவு செய்வார் என கணித்திருந்தேன்... சரியாக இருந்தவுடன் சந்தோஷமாக இருக்கிறது...
நன்றி சூர்யா...
பிரபாகர்.
வாவ்...!! டிஸ்கி.. தான்.. இந்த படத்தோட மதிப்பை.. இன்னும் கூட்டுது பூச்சி!! அப்ப இத வச்சிதான்.. ‘அந்த’ தமிழ் படங்கள் எல்லாம் வந்துச்சா...??!!!
ட்ரெயிலர் பார்த்தேன்,சூர்யா.படத்தின் போக்கு புரிந்தது.
ட்ரெயிலரில் வரும் காட்சியில் சொல்லப் படுபவதைப் போல எல்லாச் சடங்குகளையும் பொருளாதாரம்தான் தீர்மானிக்கிற்து.
நன்றி பிராபாகர்.
நன்றி பாலா. படம் முதலில் புரியவேயில்லை. முழுவதும் பார்த்ததும் தான் அருமையாக இருந்தது.
ஆமாம்.. அந்த படம் இயக்குநர் பற்றி பெரிய கதையே இருக்கு...
நன்றி ஷண்முகப்பிரியன் சார்.
பார்க்கிறேன் முடிந்தால். நல்ல விமர்சனம் சூர்யா
நன்றி ஜாக்கி.
தொடருங்கள் உங்கள் பயணத்தை....
சென்ற மாதம் இந்தப் படத்தை நான் யதேச்சையாய்ப் பார்த்தேன் சூர்யா..
தங்க மகுடத்தில் மாணிக்கக் கற்களைப் பதித்தது போல அந்த மலையில் 'பதிக்க'ப்
பட்டிருக்கும் வீடுகளைக் காட்டும் அந்த ஷாட்... தங்க நிறமான அந்த கிராமம் ....
நமக்கு பிடித்தமான ஒரு ஆழம் நிலவும் காட்சிகள் .... ரசிக்கத் தக்க படம்
வருகைக்கு நன்றி அபூ பக்கர்.
நன்றி செந்தில். ஆமாம் மொத்தம் எழுதினால் பெரிய பதிவாகி விடும். ஷாட்டுகளும் அனைத்தும் அருமை. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
சொல்லும் போதே பாக்கணும்னு தோணுது.
நன்றி பப்பு. ரொம்ப நாட்களாக இந்த பக்கமே காணவில்லை.
புதிய முகவரிக்கு வருகிறேன்.
நன்றி. வாழ்த்துகள்.
சந்தர்ப்பம் கிடைத்தால் நிச்சயம பாருங்கள்.//
நிச்சயம் பார்க்கிறேன்
சந்தர்ப்பம் கிடைத்தால் நிச்சயம பாருங்கள்.//
நிச்சயம் பார்க்கிறேன். நன்றி
நன்றி புதுகை.
புது டெம்பிளேட் எப்படி இருக்கு..??
Nice story & u'r mesmerising with the changes in ur site.
Surya,
Vimarsaname kavithaya irukku.. intha padamum enkitta irukku intha vaaram partharen.
Neenga Fritz lang oda ‘M’ Paarthirupeengannu nenaikaren, but avaroda ‘Metropolis’ [http://en.wikipedia.org/wiki/Metropolis_(film)] paarunga 1927 la release aana padam. Enna futuristic a padam edutirukkar. Enna special effects enna bramaandam, bramandathukku intha padam oru bench mark nu kooda sollalaam., iththanaikkum athu vasanangal atra silent movie thaan. Kandippa paarunga
appuram nethu 'Perfume' padam parthen olipathivum isayum azhagiyalodu iruntha oru thriller.. ithu patri cable shankar oru pathivu ittirundhaar. neram kidaithaal paarungalen. http://cablesankar.blogspot.com/2009/03/perfume2006.html
Thanks Dr. You are the one always encouraging me from early days. Thank you so much.
நன்றி பாலா.
கண்டிப்பாக பார்கிறேன். பார்க்க வேண்டிய லிஸ்ட் கூடி கிட்டே போகுது. நேரம் தான் இல்லை. கேபிளோட விமர்சனம் படிச்சிருக்கேன். அந்த படமும் பார்க்க வேண்டும்.
நல்ல பரிந்துரைக்கும் நன்றி.
அடிக்கடி வாருங்கள். அனுபவம் பகிருங்கள்.
வண்ணத்து பூச்சியாரே,
புதிய சட்டை பிரம்மாதமாக இருக்கிறது.
பதிவை பற்றி சொல்லவே வேண்டாம். இப்போதெல்லாம் உங்கள் தளத்தில் பார்க்காத படங்களே வருகின்றன. மகிழ்ச்சி.
இறப்பையும், அதனை சார்ந்த சடங்குகளையும் பற்றி சென்ற ஆண்டு ஆஸ்கார் விருது வாங்கிய The Departures என்ற Japanese படத்தை பாருங்கள். உங்கள் ரசனைக்கு சரியான தீனியாக இருக்கும்.
கிங் விஸ்வா.
Carpe Diem.
ஐம்பதாவது ஸ்பெஷல் காமிக்ஸ் பதிவு
வண்ணத்து பூச்சியாரே,
//Not best... but not like the rest ...!//
புது Tag Line கூட பிரம்மாதம்.
புது டெம்பிளேட், புது Tag Line, கலக்குறீங்க.
கிங் விஸ்வா.
Carpe Diem.
ஐம்பதாவது ஸ்பெஷல் காமிக்ஸ் பதிவு
நீங்க கலக்குங்க தல....
"வார்த்தைகளால் விவரிக்க முடியாத வாழ்வின் நிகழ்வுகளும் மனித தன்மை இன்னும் உயிரோடு இருப்பதை அழகாக சொல்லியிருக்கும் ஒர் அற்புத படைப்பு."
நிச்சயம் பார்க்க வேண்டிய படம். நன்றி
நன்றி கிங் விஸ்வா.
அந்த படத்தையும் பார்க்கிறேன். ஒரு லிஸ்ட் அனுப்புங்களேன். புது சட்டை அமைத்து கொடுத்தவர் "வலைமனை" நண்பர் சுகுமார் சுவாமிநாதன். அவருக்கு தான் உங்கள் பாராட்டும் எனது நன்றிகளும்.
நன்றி என்பது சிறிய வார்த்தை சுகுமார். உங்கள் அன்புக்கும் உதவிக்கும் என்ன சொல்வதென்றே தெரியவில்லை. மனதார வாழ்த்துகள்.
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி டொக்டர்
surya,
I have mailed you in your gmail ID regarding movies collection and expecting your reply :)
Thanx Bala.
Post a Comment