தியா புத்தக பதிப்பக கம்பெனியில் முதலாளியின் காரியதரிசியாக வேலை பார்த்து வருகிறாள். அவன் என்னவோ அவள் மீது இருக்கும் கோபத்தில் அவனது செல்ல நாய் குட்டியை குளிப்பாட்டும் வேலையை ஒரு நாள் கொடுக்கவே அவன் மீது கடுப்பாகி தனது அலுவலக தோழியிடம் முதலாளியை கண்டபடி திட்டி தீர்க்கிறாள்.
இதை பக்கத்து பாத்ரூமில் இருந்த படியே ஒட்டு கேட்ட முதலாளி அவளது சீட்டை கிழிக்க அதிர்ந்து போகிறாள் தியா.
தனது தங்கையை படிக்க வைக்கவும் தனது வேலையை பாதுகாக்கவும் தான் கர்ப்பமாக இருப்பதாக சமயோசிதமாக பொய் சொல்கிறாள் தியா. கர்பத்திற்கு காரணம் தனது சீன காதலன் என்று ஒருவனையும் கூறிவிடுகிறாள். அதனால் கர்பிணியாக இருக்கும் போது பெண்களை வேலையை விட்டு தூக்க கூடாது என்ற அமெரிக்காவின் அரசாங்க விதிப்படி வேலையும் தப்பிக்கிறது.
தான் கூறிய பொய்யை காப்பாற்ற எப்படி எல்லாம் நாடகமாடுகிறாள் தனது பொய்யான கர்பத்தை எப்படி காப்பாற்றுகிறாள் என்பதே சற்றும் ஆபாசமில்லாத நகைச்சுவை மிகுந்த LABOR PAINS ஹாலிவுட் திரைப்படம்.
100% காமெடிக்கு நான் கிராண்டி. இந்த ஆண்டு தான் வெளிவந்துள்ளது
அமெரிக்க விதிப்படி வேலையை தக்க வைத்து கொண்ட தியா,
அலுவலக தோழியின் ஆலோசனைப் படி சிறு தலையணையை வயிற்றில் கட்டி கொண்டு தினமும் அலுவலகம் செல்லவும் ஆரம்பிக்கிறாள்.
அமெரிக்க விதிப்படி வேலையை தக்க வைத்து கொண்ட தியா,
அலுவலக தோழியின் ஆலோசனைப் படி சிறு தலையணையை வயிற்றில் கட்டி கொண்டு தினமும் அலுவலகம் செல்லவும் ஆரம்பிக்கிறாள்.
அவள் மீது கடுப்பான முதலாளியும் தன் செல்ல நாய் குட்டியின் உடல் நிலை குறித்து கவலை பட்டு அதற்கு சிகிச்சையளிக்க வேண்டி, தனது பொறுப்புகளை தனது தம்பியான நிக்கிடம் ஒப்படைத்து விட்டு வெளியூர் செல்கிறான்.
நிக் வசீகர தோற்றம் கொண்ட வாலிபன். தொழிலில் ஏதாவது புதுமை செய்ய வேண்டும் என்ற தீரா தாகம் கொண்டவன்.
கர்ப்பிணி பெண்களின் மன நிலையும் பேறு காலத்தில் கிடைக்கும் சந்தோஷங்களையும் அவர்கள் படும் அவஸ்தைகளையும் குறித்த புத்தகம் ஒன்று வெளியிட்டால் விற்பனை சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறான். இந்த நேரத்தில் கர்பிணியாக இருக்கும் தியாவே இதற்கு ஏற்ற ஆளாக நினைத்து அவளுக்கு பதவியுயர்வும் தனி அறையும் அளித்து அவளை இந்த Parenting Division என்று ஒன்று ஏற்படுத்தி அவளை அதற்கு எடிட்டராகவும் நியமிக்கிறான்.
இந்த கர்பிணி நாடகத்தால் அவளுக்கு கிடைத்த மரியாதையும் பதவியுயர்வும் தியாவிற்கு அளவற்ற மகிழ்ச்சியளிக்கிறது. அதை ரசிக்கவும் கொண்டாடவும் செய்கிறாள். எல்லா இடங்களிலும் அவளை தனி மரியாதையுடன் நடத்துவதையும் சலுகைகள் கிடைப்பதையும் நினைத்து நாடகத்தை தொடரவும் விரும்புகிறாள்.
புத்தக பதிப்பகம் நிமித்தமாக நிக்கும் தியாவும் நெருங்கி பழகுகின்றனர். அதுவே காதலாகிறது. ஆனால் தனது சகோதரியின் கர்ப்பிணி நாடகம் தியாவின் தங்கைக்கு சிறிதும் பிடிக்கவில்லை. பொய் சொல்லி தன்னை காப்பாற்ற வேண்டாமென்று கூறி அவளது பாதுகாப்பாய் வைத்திருந்த தலையணைகளையெல்லாம் கிழித்து போடுகிறாள்.
புத்தகம் வெளியாகி வசூலில் சக்கை போடு போடுகிறது. இது சம்மந்தமாக அன்று இரவு ஒரு மீட்டிங். நிக் கண்டிப்பாக வருமாறு தியாவை அழைக்க வயிற்றில் பலூனை கட்டி கொண்டு போக அங்கு ஏறபட்ட ஒரு சிறு சண்டையில் பலூன் வெடித்து தியா கர்ப்பம் இல்லை என்று தெரியவர தியா நொறுங்கி போகிறாள்.
பின்னர் நடந்த டிவி பேட்டியில் தனது அனைத்து தவறுகளுக்கும் தான் வருந்தவதாகவும் நிக்கிடம் மன்னிப்பும் கோருகிறாள் தியா.
தியாவை மன்னித்து ஏற்று கொண்டு அவளை திருமணமும் செய்து கொள்கிறான் நிக்.
இரண்டு வருடம் கழித்து நிஜமாகவே ஒரு நாள் தியா அலுவலகத்தில் பிரவச வலியில் துடிக்க அவளை தூக்கி கொண்டு மருத்துவமனைக்கு ஒடுகிறான் நிக். சுபம்.
தியாவாக நடித்திருப்பது 23 வயதான Lindsay Lohan. கொஞ்சும் இளமை துள்ளல், துறு துறு நடிப்பு என கலக்கியிருக்கிறார். குழந்தை நட்சத்திரமாய் அறிமுகமாகி பல அமெரிக்க தொலைகாட்சிகளில் நடித்தவர் என்பதால் நடிப்பில் அவ்வளவு இயல்பு. நடிப்பு மட்டுமல்ல பாப் பாடகர், மாடலிங், பேஷன் டிசைனர் என்ற பல துறைகளிலும் தனிதிற்மை வாய்ந்தவர். படத்தில் இல்லாத Lindsay Lohan கொடுத்த ஒரு போஸ் இங்கே.
நிக்காக நடித்திருப்பவர் Luke Kirby. இவரும் தொலைகாட்சி நடிகரே. நடிப்பில் சில விருதுகளையும் பெற்றுள்ளார். இயக்கம் Lara Shapiro. கதையென்று சொல்ல முடியாத ஒரு ஒன் லைனரை வைத்து ஒரு அட்டகாச காமெடியை தந்திருக்கிறார். பாராட்டுகள்.
குடும்பத்துடன் கண்டிப்பாக பார்க்கலாம்.
வழக்கப்படி உடனே பார்க்க டிரைலர் இங்கே
டிஸ்கி: தவிர்க்க முடியாத சில காரணங்களால் பல நாட்களாக இங்கு எழுத முடியாமல் போனது. அது பற்றி மின்னஞ்சல் மூலவும் தொலைபேசியிலும் தொடர்பு கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் உங்கள் அளவற்ற அன்பிற்கும் நன்றிகள் பல. இனி தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன்.
65 comments:
அன்பு சூர்யா நலமா ...
நீண்ட நாட்கள் கழித்து வந்துள்ள உங்களுக்கு
ஒரு GRAND WELCOME BACK..
அதுவும் ஒரு காமெடி படத்துடன் வந்ததற்கு
மிக்க நன்றி. அழகான கதாநாயகி வேறு
தவறாமல் பார்த்துவிடுகிறேன். தொடர்ந்து பதிவிடுங்கள் ...
வாழ்த்துகள்
வேல் கண்ணன்
டெஸ்ட் பாஸ்..
வணக்கம். வேல் கண்ணன்.நலம். உங்கள் அன்புக்கும் மடலுக்கும் நன்றிகள் பல.
அடடா. செந்தழலாரே.. நலமா..??
கவித எழுதினாதான் பெயிலா..??
அவ்வ்வ்வ்வ்...
அந்த விளையாட்டுக்கு நான் வரல..
நமக்கு வரவும் வராது...
நன்றி செந்தழலாரே.. உங்கள் நண்பர் உண்மை தமிழன் நலம்.
தான் கூறிய பொய்யை காப்பாற்ற எப்படி எல்லாம் நாடகமாடுகிறாள் தனது பொய்யான கர்பத்தை எப்படி காப்பாற்றுகிறாள் ]]
ஆச்சர்யம் தான்
நானும் சிரியஸா படிக்க வந்தேன்.
எப்ப்டி எல்லாமோ சிந்திச்சி படம் எடுக்குறாங்கப்பா ...
Welcome back, surya ji
சூர்யா, விமர்சனத்தை படிக்கும் போது அந்த படத்தை பார்க்க வேண்டுமென்ற ஆர்வம் தோன்ற வேண்டுமே தவிர முழு கதையும் சொல்லிவிட்ட பிறகு பார்க்க எந்த எதிர்பார்ப்புக்கும் மிச்சமில்லாமல் போகுமே?
//100% காமெடிக்கு நான் கிராண்டி// கிராண்டி என்றால்? உத்திரவாதமென்று சொல்ல வரீங்க புரியுது. அப்படி அந்த நகைச்சுவைக்கு எனக்கு சிரிப்பு வராட்டி செலவு செய்த நேரத்தை திருப்பி தர இயலுமா? :-))))))
அண்ணே வணக்கம். திரும்பி இந்த ஏரியாவுக்கு வந்ததுக்கு வாழ்த்துகள்! :) :)
ஆனா.. லின்ஸி லோகனை, நல்ல நடிகை-ன்னு சொன்னதுக்கு ஒரு குட்டு! :( :(
குடிச்சிட்டு (போதை மருந்தையும் சேர்த்துக்கங்க) காரை ஓட்டி, வேணும்னே... போலீஸை கூப்பிட்டு சீனெல்லாம் போட்ட ஆளு இது. சுருக்கமா சொன்னா ‘அரைலூசு’.
நம்ம ஊர்ல ஜெய்சங்கர் நடிச்ச, ‘குழந்தையும் தெய்வமும்’ (-னு ஒரு பாட்டு வருமே)படத்தோட ஆங்கில காப்பியில் (The Parent Trap)-ல் (1961-ல் வந்த படத்தின் ரீமேக்) அறிமுகமாகி, அப்பிடி இப்பிடின்னு காலத்தை ஓட்டிகிட்டு இருக்கு.
இதுக்கெல்லாம்... இம்புட்டு விளம்பரம் ஜாஸ்தி! :) :)
பாத்துடுவோம்.....
இடையில் சில காலம் காணாமல் போயிருந்தாலும், அருமையான படத்துடன் வந்த தங்களுக்கு என் வாழ்த்துக்கள். கதையைப் புரியும் விதத்தில் எளிமையாகப் போட்டிருந்தீர்கள். படத்தைப் பார்க்க வேண்டும் என்கிற ஆர்வத்தைத் தூண்டிவிட்டது.
நன்றி ஜமால்.
நன்றி முரளி...
நன்றி ஜெஸி. இதுவரை சொல்லாத கதைன்னு எல்லா தமிழ் படத்திலேயும் சொல்றாங்க. அதுக்காக அப்படியா..??
அரசியல்ல இதெல்லாம் சகஜம். Take it easy..
பாலா, நீ ஏதாவது சொல்லுவன்னு தெரியும். அந்த ஜெயில் மேட்டர் அதுவும் 80 நிமிடம் மட்டுமே இருந்ததெல்லாம் படித்தேன். அதெல்லாம் இங்கு தேவையில்லைன்னு சாய்ஸ்ல விட்டு விட்டேன்.
என்றைக்கும் இக்கரைக்கு அக்கரை பச்சை தான் கண்ணா....
பாலா, சொல்ல மற்ந்துட்டேன். ரொம்ப நாளைக்கு பிறகு வந்ததினால் மட்டுமே இந்த படம்.
வாங்க ஸ்ரீ.. நலமா..?? சென்னை விசிட் எப்போது..??
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கிருபாநந்தினி.
படம் சூப்பர். :)
வாருங்கள் சூர்யா... வலையுலகமே புத்துணர்வு பெற்றார் போல் இருக்கிறது. நல்ல விமர்சனம். விமர்சனத்திற்கு எனது கேபிள் அண்ணாவும், நீங்களும்தான்... மிக அருமை. பார்த்துவிடுகிறேன்...
பிரபாகர்...
சூப்பர்
நன்றி பெஸ்கி.
நன்றி பிரபா. உங்கள் அன்பிற்கு அளவேயில்லை.
வணக்கம் வண்ணத்துப்பூச்சியாரே.உங்களில் எனக்குப் பெரிய பொறாமை.எங்கதான் இப்படியான படங்களெல்லாம் தேடிப்பார்ப்பீர்களோ !
ஆமா நானும் கேள்வி பட்டேன். இத பொண்ணு rehabilitation ல எல்லா இருந்த பொண்ணாமே!
உபரி ஸ்டில் நல்லாருந்துச்சு!
தலிவரே... நாளைனைக்கு எல்லாத்தையும் எடுத்திட்டு வந்திருங்க..:_)
ஜோதிஜி.. நன்றி ஜி..
நன்றி ஹேமா. நலமா..??
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி பப்பு.
கேபிள்ஜி, நீங்க கேட்டு இல்லைன்னு சொல்ல முடியுமா..??
உங்களுக்கு இல்லாமல் வேறு யாருக்கு தலைவா..??
கேபிள்ஜீ...
இதை விட அடுத்த பதிவு எழுத போற படம் நீங்க கண்டிப்பா பார்க்கணும்.. ONLY FOR யூத்.. யூத்.. யூத்..
//கேபிள்ஜீ...
இதை விட அடுத்த பதிவு எழுத போற படம் நீங்க கண்டிப்பா பார்க்கணும்.. ONLY FOR யூத்.. யூத்.. யூத்.. //
புரியுது புரியுது...
பெஸ்கி.. உனக்கு புரிந்து விட்டதா..??
நீங்க தான் உண்மையான யூத்..
இன்னும் உண்மை தமிழன் இங்கு வரவில்லை..??
Really Interesting Story
இந்தப் படத்தைப் பற்றிய அறிமுகத்துக்கு மிக்க நன்றி. கண்டிப்பாக பார்க்கவேண்டும்.. :)
very detailed review
good keep it up
உங்கள் விமர்சனம் மிகத் தெளிவாக உள்ளது. இனி அடிக்கடி உங்கள் பக்கம் வருவேன்.
தொடர்ந்து எழுதுங்கள்
நன்றி கோபிநாத்.
இசையமைப்பாளர் விவேக்ஜி. வணக்கம். தங்கள் வருகையும் வாழ்த்தும் எனக்கு மிக்க மகிழ்ச்சி.
நன்றி செல்வா. உங்களது அனைத்து முயற்ச்சிக்கும் எனது வாழ்த்துகள்.
அடிக்கடி வாருங்கள். நிறை / குறை சொல்லுங்கள்.
யார் சாமி என்னை இங்கே கூப்பிட்டது?
ஒரு மனுஷன் எத்தனை பதிவுக்குத்தான் போறது..?
அவங்களே டிவிடி வாங்கி அவங்களே பார்த்துட்டு பின்னூட்டம் போட மட்டும் வாடான்னா வர்றதுக்கு நான் என்ன ரோஷமில்லாத திராவிடனா..
இனிமே என் கைக்கு டிவிடி வந்தாத்தான் இது மாதிரி சினிமா பதிவுக்கு என் பின்னூட்டம் வரும்..!
சொல்லிப்புட்டேன்..
லிண்ட்சே லோகன்.. அப்படியென்ன பெரிய நடிகையா..? முகத்துல அட்ராக்ஷனே இல்லையே..!
present sir..
நான் என்ன ரோஷமில்லாத திராவிடனா..??/////// சரியானெ கேள்விதான்.
இனிமே என் கைக்கு டிவிடி வந்தாத்தான் இது மாதிரி சினிமா பதிவுக்கு என் பின்னூட்டம் வரும்..!
சொல்லிப்புட்டேன்..////////
சரி .. ஏற்பாடு பண்றேன்.
லிண்ட்சே லோகன்.. அப்படியென்ன பெரிய நடிகையா..? முகத்துல அட்ராக்ஷனே இல்லையே..!////////
முகமா.. பெஸ்கி.. இவரு யூத்தா..?? இப்போ புரியுதா..??
என்ன உ.த. அண்ணே,
யூத்து பத்தி பேசிட்டு இருக்கோமேன்னு உங்களைக் கூப்டேன். இங்க வந்து பதிவப் பாத்து பின்னூட்டமா போடச் சொன்னேன்....?
அப்புறம், நீங்க சூர்யா குடுத்த அந்த லிங்க கிளிக் பண்ணி பாக்கவே இல்லையா?
//முகமா.. பெஸ்கி.. இவரு யூத்தா..?? இப்போ புரியுதா..??//
இப்படி சொல்ல வச்சிட்டீங்களே?
பல நாட்கள் கழித்து வந்தாலும் நல்ல படத்துடன் வந்ததற்கு நன்றி சூர்யா.
அருமையான லைட்டர் வெயின் கதை.இந்த ஹாலிவுட் காரர்களுக்கு எப்படித்தான் knots கிடைக்கிறதோ தெரியவில்லை.
தேடிப் பிடித்துக் கொடுக்கும் உங்களுக்கு நன்றியோ நன்றி.
லின்ட்ஸேவுக்காகவே பார்க்கனும் தல!
அந்த ஸ்பெஷல் படத்துக்கு நன்றி!
நன்றி சஞ்சய்.
மிக்க நன்றி ஷண்முகப்பிரியன் சார்.
நன்றி வாலு. நலமா..??
மொபைல் நம்பர்கள் எல்லாம் கிடைத்து விட்டதா..??
Interesting. டிரைலர் சுவாரஸ்யமாக இருக்கு :)
அனுஜன்யா
நன்றி அனுஜன்யா. படமும் interesting தான். நுண்ணரசியல் இல்லாம ஜாலியா பார்க்கலாம்.
Good to see your post after a long time!
I will definitely watch this movie:-).
Thanx Viji.
அற்புதமான பதிவு ........ஆனால் நான் சூரியாவிடம் இருந்து மனதை நெகிழ வைக்கும் படங்களை எதிர்பார்கிறேன் ....S ராமகிருஷ்ணன் பிறகு தேர்ந்த விமர்சகர் சூர்யா
Nice story Surya.
நன்றி கார்த்திக்.
நீங்கள் எதிர்பார்க்கும் பதிவுகள் விரைவில் வரும்.
நன்றி டாக்டர்.
தங்கள் விமர்சனமும், 100 வீத கரண்டியும் படத்தை பார்க்கத்தூண்டுகின்றன. கண்டிப்பாக நாளையே பார்த்துவிடுவேன். அப்புறம் அன்று சந்தித்தும் பேசமுடியவில்லை. இன்று சந்தித்து பேசியமை மிகவும் சந்தோசம். நட்பு தொடரும்.
வணக்கம் சூர்யா,
நாளாச்சே...... நம்ம கம்பெனி மாதிரி அபார ஓய்வுக்குப் போய் விட்டீர்களோ என்று பார்த்தேன்.yesterday today tomorrow என்று சோஃபியா லாரென் படம் அந்தக் காலத்தில் உண்டு. அதில் ஜெயில் தண்டனையிலிருந்து தப்பிக்க சோஃபியா தொடர்ந்து கர்ப்பமாகிக் கொண்டே இருப்பாள்....அது நிஜக் கர்ப்பம். அந்த நினைவு வந்தது.
நன்றி ஜனா. எனக்கும் மிக்க மகிழ்ச்சி. அவசியம் தொடரட்டும். வாழ்த்துகள். குட்டிக்கு எனது ஆசிகள்.
நன்றி கலாப்பிரியா சார். தங்கள் வரவு என்னை மிகுந்த உற்சாகமூட்டுகிறது.
அற்புதமான படைப்புகள் வாழ்த்துக்கள் !
நண்பர்களே இதுவரை திருடப்படாதா உங்கள் குட்டி இதயங்களையும் சத்தம் இல்லாமல் திருடி செல்ல விரைவில் வருகிறது இந்த சங்கரின் அதிரடி படைப்பான கரை தொடாத கனவுகள் உண்மை சம்பவங்கள் ஒரு தொடர்கதையாக ,,,,
http://wwwrasigancom.blogspot.com/
shankarp071@gmail.com
நன்றி சங்கர்.. கண்டிப்பாக பார்க்கிறேன்.
Really its good comedy movie.
இன்னும் இந்தப்படம் பாக்கலை. பார்த்திடறேன்.
Post a Comment