வாழ்வை நமக்கு மிக நெருக்கமாகக் காட்டுகின்றது சினிமா. அதனால் தான் அதன் மேல் ஒரு தீரா மோகம் நம்மை எப்போதும் ஆட்டி படைக்கிறது.
நம்மை திரையில் பார்ப்பது போன்ற உணர்வுகளால் அடையும் மகிழ்ச்சிக்கு அளவில்லை. அதனால் தான் ஆனால் உலக சினிமாவிலிருந்து ஈரானிய சினிமா எப்போதும் தனித்தே நிற்கின்றது.
அனைத்து விதமான சினிமா வகை மாதிரிகளை விடவும் ஈரானிய சினிமாவில் வாழ்வும் சமூக பொறுப்பும் எப்போதும் பனித்துளியைப் போல் பதிவு செய்யப்படுகின்றது. அதனால் தான் மிக குறுகிய காலத்தில் உலகம் முழுவது ஒரு சொல்ல முடியாத ஈர்ப்பையும் தன்னகத்தே கொண்டு உயர்ந்து நிற்கிறது.
அப்படி பெண்களின் வாழ்வியலை மையமாக கொண்ட Jafar Panahi யின் மற்றொருமொரு அதி உன்னத படைப்பு The Circle. ஆனால் மிக கடுமையான தணிக்கை முறை உள்ள ஈரானியில் தடை செய்யப்பட்ட இந்த திரைப்படம் 2000ம் ஆண்டு வெளிவந்தது. மொழி பெர்சியன்.
மருத்துவமனையில் பிரசவ வார்டில் சொல்மாஸ் என்ற நடுத்தர வயது பெண்மணியை அழைத்து அவளுடைய மகளுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்திருபதாக கூறுகிறாள் செவிலி. மனமுடைந்து போகிறாள் சொல்மாஸ். மகன் பிறக்காவிட்டால் தனது மகளை விவாகரத்து செய்ய நேரிடும் என்று மருமகனின் பெற்றோர் சொல்லியிருப்பதை செவிலியிடம் கூறுகிறாள். தனது இன்னொரு மகளை கூப்பிட்டு குழந்தை பிறந்த விஷயத்தை அனைவருக்கும் தெரிவிக்க சொல்கிறாள்.
தொலைபேசியில் தகவல சொல்ல நேரும் போது அங்கு மூன்று பெண்களை காண்கிறாள். அவர்கள் பேசுவதிலிருந்து அவர்கள் மூவரும் சிறையிலிருந்து சில நாட்கள் முன் தான் வெளியே வந்திருப்பதையும் அறிகிறாள். அவர்கள் மீண்டும் ஊருக்கு செல்ல பணம் இல்லாமல் தவிக்கின்றனர். சில நகைகள் விற்று ஊர் செல்லவும் முயலும் போது ஒருத்தி போலிசாரால் கைது செய்யப்படுகிறாள்.
மற்ற இருவரான எரிசோவும் நர்கீஸும் பயந்து ஒடி விடுகின்றனர். ஒரு விபசார புரோக்கர் மூலம் சிறிது பணம் சம்பாதித்து எரிசோவை ஊருக்கு அனுப்ப முயன்று பணத்தையும் தந்து விட்டு ஊருக்குள் போய் விடுகிறாள்.
எரிசோ விற்கு ஊருக்கு செல்ல முற்படும் போது பெண்கள் தனியே பயணிக்க கூடாதென்றும் அப்படி போவதென்றால் தகுந்த பத்திரங்கள் வேண்டுமென்று கூறகிறார் நிலைய அதிகாரி. தான் மீண்டும் கைது செய்யப்படுவோம் என்று அஞ்சி நடுங்குகிறாள் எரிசோ.
சொல்ல முடியாத வேதனையுடன் சுற்றி திரிகிறாள். அப்போது சிறையிலிருந்து அன்று தான் வெளியான பாரி என்பவளை சந்திக்கிறாள். பாரி திருமணமாகாமல் கர்ப்பமானவள். அதற்கு காரணமானவனுக்கு மரண தண்டளை விதிக்கப்ப்ட்டு நிறைவேற்றப்பட்டும் விட்டது. சிறையிலிருந்து விடுதலையானவள் எங்கு போவாள்...??
ஆனால் சிறையிலிருந்து வெளி வந்த அவளை வீட்டின் உள்ளே கூட சேர்க்காமல் அடித்து விரட்டுகிறான் அவளின் தந்தை. அவளது சகோதர்களை பார்க்க கூட அனுமதியளிக்க மறுக்கிறார் அவளின் தந்தை. உயிர் தப்பித்தால் போதும் என்று வீட்டை விட்டு ஒடி வந்து விடுகிறாள்.
தனது சிறைத்தோழியான எல்ஹாம் என்பவளை சந்தித்து கருக்கலைப்பு செய்ய உதவுமாறு கேட்கிறாள். ஆனால் அவளோ தான் சிறையில் இருந்ததும் கடந்த கால வாழ்வும் தனது தனது மருத்துவனான கணவனுக்கு தெரியாதென்றும் அவளால் எந்த உதவியும் செய்ய இயலாத நிலைமையும் விவரிக்கிறாள்.
மீண்டும் வேறு எங்காவது சென்று பிழைக்க வழி தேடும் நேரத்தில் ஒரு பெண்மணி தனது மூன்று வயது குழந்தையை ரோட்டிலே தனியே விட்டு விட்டு ஒட முயற்ச்சி செய்வதை பார்க்கிறாள்.
அவளை விசாரித்த போது அவளது விதவையென்றும் வறுமை அவளை வாட்டுவதால் குழந்தயை விட்டு சென்றால் யாராவது எடுத்து சென்று வளர்ப்பார்கள் என்று நம்புவதாய் கூறுகிறாள்.
ஏற்கனவே மூன்று முறை விட்டு சென்றதும் ஆனால் அது நிறைவேறவில்லை என்றும் வருத்ததுடன் கூறுகிறாள். அந்த நேரம் போலிஸ் வந்து குழந்தையை தூக்கி செல்லவே தெருவிலேயே சுற்றி திரிகிறாள் அந்த பெண். விபச்சாரி என்று கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்படுகிறாள்.
சிறிது நேரத்தில் வேறு ஒரு பெண்ணும் விபச்சாரம் செய்ததற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறாள். இரும்பு சுவர்களாலான வட்ட வடிவ சிறையில் உள்ளே நுழைநததும் திரையில் முன்னர் பார்த்த பெண்களும் இருக்கிறார்கள்..
கனமான வாயில்களுக்கு வெளியே காவலாளியிடம் சொல்மாஸ் அங்கு இருக்கிறாளா..?? என்று தொலைபேசியில் கேட்கிறார் அதிகாரி. அவள் மற்றொரு பிரிவில் இருப்பதாக கூறுகிறான் காவலாளி. முதல் காட்சியில் ஆரம்பித்த புள்ளியிலிருந்து இத்துடன் வட்டம் நிறைவடைவதாய் திரைப்படமும் நிறைவு பெறுகிறது.
திரைப்படத்தை ஒரு முழுநீள கதையாக சொல்லாமல் தனி தனி காட்சிகளாக சொல்லி ஒரு வட்டமாக முடிக்கிறார் இயக்குநர். மிகவும் குறைந்த கதாபாத்திரங்கள். ஐந்து பெண்களை மையப்படுத்திய சில காட்சிகள் நிறைவு பெறாமலும் நம் எண்ணத்திற்கு விட்டு விடுவதும் சிறப்பு. ஒவ்வொர் கதையும் பெண்களின் வாழ்வியலில் முற்று பெறாத துயங்களை போல முற்று பெற்றதாக இல்லை.
அது தவிர சில காட்சிகள் யூகிக்க தக்க குறீடுகளால் நிரம்பியுள்ளது தனிச்சிறப்பு.
சிறு பெண் குழந்தையை விட்டு விட்டு தாய் ஒட முற்படும் போது மணவிழாவில் ஒரு பெண் சிரித்து மகிழ்வதாய் அமைத்திருப்பதும் பேருந்து நிலையத்திலும் மருத்துவம்னைகளிலும் பெரிய ஹால்களில் வட்ட வடிவ சித்திரங்கள் வரையப்பட்டுள்ளது பெண் ஒரு வட்டத்தில் எப்போதும் அடைக்கப்பட்ட்வள் என்பதை சொல்லாமல் சொல்கிறார் இயக்குநர்.
ஈரானில் பெண்களுக்கு எதிரான கடுமையான சட்டங்களும் வன் கொடுமைகளையும் சித்தரிப்பதால் தானோ அங்கு தடை செய்யப்பட்டுள்ளது..
சிங்கப்பூர், உருகுவே உட்பட பத்திற்கும் மேற்பட்ட உலக திரைப்பட விழாக்களில் பரிசையும் பாராட்டையும் பெற்றதுடன் வெனிஸ் திரைப்பட விழாவில் தங்க சிங்கம் விருதையும் வென்றது.
சந்தர்ப்பம் கிடைத்தால் பார்க்க வேண்டிய திரைப்படம்.
உடனே பார்க்க டிரைலர் இங்கே
இவரது மற்றொரு படைப்பான The White Baloon
62 comments:
TEST..
suuper padam thalaivaree..
U R PASS
நன்றி கேபிள் ஜீ..
நன்றி.. முரளி, உன் மனம் கவந்த இய்க்குநராச்சே..???
Just pass பண்ணிட்டேனா..??
விமர்சனம் அருமை நண்பரே...
நன்றாக இருந்தது சூர்யா..
//
பேருந்து நிலையத்திலும் மருத்துவம்னைகளிலும் பெரிய ஹால்களில் வட்ட வடிவ சித்திரங்கள் வரையப்பட்டுள்ளது பெண் ஒரு வட்டத்தில் எப்போதும் அடைக்கப்பட்ட்வள் என்பதை சொல்லாமல் சொல்கிறார் இயக்குநர்.
//
உங்களுடைய நுன்னிய கவனிப்புகள் என்னை ஆச்சரியப்படுத்துகின்றன.
”அவர்” திரைப்படத்தின் குழுவினர் சம்மதித்தால் உங்களிடம் ”அவர்” திரைப்படத்திற்கான ஒரு ஸ்கிரி்ப்ட் ரீடிங் செஷனுக்கு உங்களை அழைக்கலாம் என்று கூட எனக்குத் தோன்றுகிறது.
உங்கள் பணி தொடரட்டும்.!
சூர்யா .நடை அருமை..விமர்சனம் மட்டுமில்லாமல் பிறவும் எழுதலாமே..
வழக்கம்போலவே நல்ல விமர்சனம் ஜி
இத்திரைப்படத்தின் இயக்குனர் சிறந்த இயக்குனர் என்பதில் உங்களின் பதிவில் தெரிகிறது சூர்யா
பகிர்விற்கு நன்றி
இங்க தமிழ்நாட்டுலதான் பெண்கள் நிலை இப்படின்னா அங்கேயும்கூட அப்படித்தானா! சினிமா கதையைப் படிச்சுப் பெருமூச்சுதாங்க வருது! அப்புறங்ணா... இந்தச் சின்னவளும் ஒரு பிளாக் எழுத ஆரம்பிச்சிருக்கேன். படிச்சு, உங்க கருத்தையும் ஆலோசனைகளையும் சொன்னீங்கன்னா ரொம்ப உதவியா இருக்கும்.
வெல்கம் பேக் பூச்சி! :) :) :)
அப்படியே XXY படத்தையும், Y Tu Mama படத்தையும்.. கொஞ்சம் கவனிங்கோவ்.
தாங்கள் சொல்லியிருப்பதால் அவசியம் பார்க்கின்றேன் ...
ஈரானிய திரைப்படங்களின்மேல் அபரிதமான பெருமதிப்பும், ஏக்கமும் உடையவன் நான். வாழ்வியலின் தத்துவங்களையும், தாபங்கள் ஏக்கங்களை மிகத்துல்லியமாக காட்டும் திரைப்படங்களின் உலக வரிசைகளில் முதன்மையானது ஈரானியத் திரைப்படங்களே. அனால் பெண்கள் மீதான தடைகளும் கட்டுப்பாடுகளும் மிகவும் அதிகம் என்பதும் கசப்பானதொரு உண்மை. இதன் காரணமாகவே மிகச்சிறந்த ஈரானிய திரைப்பட இயக்குனர்கள் சிறுவர்களின் பக்கம் அதிகமாக தமது கவனத்தை செலுத்துபவர்களாக உள்ளனர்.(அது கூட அருமையான பல திரைப்படங்களை தந்தது "த பாதர்", "கலர் ஒவ் பரடைஸ்" போன்ற திரைப்படங்களை கூறலாம்) இந்த விதத்தில் தாங்கள் அருமையாக விமர்சனம் செய்துள்ள "த சேக்கிளும்" ஒரு சிறசந்தபடமாகவே தெரிகின்றது. பார்க்கும் ஆர்வத்தை கூட்டிவிட்டீர்கள். கண்டிப்பாக பார்த்துவிடுவேன்.
அருமையான பதிவு.
plan to see the movie soon...
thanks !!
பூச்சி...,
இந்த ஆர்க்கைவ் கேட்ஜட்டையும் இணைக்க முடியுமா? பழைய பதிவுகளை தேட வசதியா இருக்குமே..!
நன்றி அகல்விளக்கு..
இந்த ஆர்க்கைவ் கேட்ஜட்டையும் இணைக்க முடியுமா? பழைய பதிவுகளை தேட வசதியா இருக்குமே..!/////////// நன்றி பாலா.. தம்பி அதிபிராதபனின் உதவியோடு செய்து விடுகிறேன்..
நன்றி ராஜேஸ்வரி
ஹாலிவுட் பாலா said...வெல்கம் பேக் பூச்சி! :) :) :)
அப்படியே XXY படத்தையும், Y Tu Mama படத்தையும்.. கொஞ்சம் கவனிங்கோவ்./////
அடங்க மாட்டியே நீ.. புது ஊருக்கு போனதிலேந்து ஒரு மார்க்க மாதான் இருக்க..
Sex with Lucia பாதி எழுதி வைத்து ஒரு மாசமாச்சு.. அடுத்த வாரம் ரிலீஸ்..
நன்றி ஜமால்.. வாழ்த்துகள்.. குழந்தை நலமா..??
”அவர்” திரைப்படத்தின் குழுவினர் சம்மதித்தால் உங்களிடம் ”அவர்” திரைப்படத்திற்கான ஒரு ஸ்கிரி்ப்ட் ரீடிங் செஷனுக்கு உங்களை அழைக்கலாம் என்று கூட எனக்குத் தோன்றுகிறது.////
நன்றி செல்வா சார்.. “அவர்” கிட்ட நீங்க தான் சொல்லணும்.. நானும் முயற்ச்சி செய்கிறேன்..
white ballon சமீபமாகத்தான் பார்த்தேன், ஜாபர் மற்றும் அப்பாஸ் கிராஸ்தமி படங்களைத் தேடிப் பார்க்க வேண்டும் என நினைத்திருந்தேன். மிக நல்ல அறிமுகம்.
நன்றி ஜனா.
ஈரானிய படங்கள் மீது எனக்கு மிகுந்த ஆவலும் காதலும் உண்டு..
அதற்கு முக்கிய காரணம் நமது கோடம்பாக்கத்து பெருந்தகைகளே.. எப்படியெல்லாம் சினிமா இருக்க கூடாதென்று தொடர்ந்து சொல்லி வந்ததால் வெறுத்து போய் எனது தேடல் ஆறேழு வருடங்களுக்கு முன்னால் ஆரம்பித்து இன்று வரை தொடர்கிற்து..
My all time Fav தமிழில் ஸ்ரீதர்.
உலக சினிமாவில் மஜித் மஜிதி.. Jafar Panahi அவரின் சீடரே...
சினிமா ரசிகர்கள் அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படம்..
நன்றி அசோக்.. உங்களின் தொடர்ந்த ஆதரவும் ஊக்கமும் மிக்க மகிழ்ச்சி..
நன்றி கிருபாநந்தினி.. வலையுலகத்துக்கு நல்வரவு. அவசியம் பார்க்கிறேன்..
நன்றி மணிஜீ. நிறைய எழுதணும்ன்னு தான் ரொம்ப ஆவல். கண்டிப்பாக முயற்ச்சி பண்றேன்.
நன்றி வேல்கண்ணன். ஈரானிய மிகச்சிறந்த இயக்குநர்களில் ஒருவர் என்பது உண்மைதான்.
நன்றி யாத்ரா. அவசியம் பாருங்கள். உங்களை போன்ற கவிஞர்ளை கண்டிப்பாக கவரும்.
தல எப்பொழுதும் போல் ஈரனிய படத்தின் முடிவு.,இப்பொழுது எல்லாம் எப்பொழுதவது எழுதுறிங்களா..
ஈரானியப் படங்கள் நிறைய என்னை கவர்ந்திருக்கின்றன.... அந்த வரிசையில் இதுவும்.
சூர்யா, சினிமா விமர்சனம் எழுதவேண்டும் என நினைப்பவர்களுக்கு ஒரு பாடமாய் இருக்கிறீர்கள்...
எவரையும் புண்படுத்தாமல் எழுதுபவர் யார்? இதோ எங்கள் சூர்யா!
வாழ்க்கை ஒரு வட்டம் என நிரூபிக்கும் இந்த படத்தைப் பற்றிய விமர்சனமும் இந்த படத்தைப்போல.... நிறைய எழுதுங்கள் சூர்யா!
பிரபாகர்.
நன்றி வினோத்..வேலை பளுவால் சின்ன Break. இனி தொடர்ந்து எழுத எண்ணம்.
நன்றி பிரபா. உங்கள் அன்பும் ஊக்கமும் எனக்கு எப்போதும் மகிழ்ச்சியே.. குழந்தைகள் நலமா..??
நன்றி, சூர்யா. இந்த படம் பார்த்திருக்கிறேன். பதிவு படிக்கும்போது இன்னொருமுறை பார்த்தமாதிரி இருந்தது.
அன்புடன்,
பாரதி மணி
பாரதி மணி said...
நன்றி, சூர்யா. இந்த படம் பார்த்திருக்கிறேன். பதிவு படிக்கும்போது இன்னொருமுறை பார்த்தமாதிரி இருந்தது./////
நன்றி அய்யா. தங்கள் வருகையும் கருத்தும் எனக்கு அளவில்லாத மகிழ்ச்சி..
வேதனையான கதையம்சம், என்றாலும் பலர் வாழ்வில் நடப்பதும் உண்மை. மறுக்கமுடியாத உண்மைகளைப் பதிந்துள்ளார் இயக்குநர்.
மிக அருமை.
நன்றி கீதா மேடம்..
நன்றி சரவண குமார்..
நன்றி surya..back to the pavilion???? after a long interval?? மகிழ்ச்சி...by the way-repetition of words (சில இடங்களில் )கொஞ்சம் avoid பண்ணலாம்..i second R.SELVAKUMARS observation////-உங்களுடைய நுன்னிய கவனிப்புகள் என்னை ஆச்சரியப்படுத்துகின்றன///-So happy to see u "COME IN FULL CIRCLE."..Nice and gud..Keep writing..Wishes..
நல்ல பதிவு...வாரம் 2 பதிவாச்சும் போடுங்க..தினமும் வந்து உங்க blog பார்த்துட்டு ஏமாந்து போறோம்.
நன்றி தமிழினி. சுட்டி காட்டியமைக்கு நன்றி. இதுவே என் எழுத்தை செம்மை படுத்தும். தொடர்ந்து வாருங்கள்..
நன்றி மயில் ராவணன். உங்களின் ஏமாற்றத்திற்காக வருந்துகிறேன். Very Sorry. சில பல காரணங்களால் நடுவில் சிறிது விட்டு போனது.. மீண்டும் தொடருவேன். உங்கள் அன்புக்கும் ஆதரவிற்கும் நன்றி.
\\அது தவிர சில காட்சிகள் யூகிக்க தக்க குறீடுகளால் நிரம்பியுள்ளது தனிச்சிறப்பு. சிறு பெண் குழந்தையை விட்டு விட்டு தாய் ஒட முற்படும் போது மணவிழாவில் ஒரு பெண் சிரித்து மகிழ்வதாய் அமைத்திருப்பதும் பேருந்து நிலையத்திலும் மருத்துவம்னைகளிலும் பெரிய ஹால்களில் வட்ட வடிவ சித்திரங்கள் வரையப்பட்டுள்ளது பெண் ஒரு வட்டத்தில் எப்போதும் அடைக்கப்பட்ட்வள் என்பதை சொல்லாமல் சொல்கிறார் இயக்குநர்.// ஒரு படத்தைப் பார்க்கும்போது இவ்வளவு தூரத்துக்கா ஊன்றிக் கவனிக்க முடியும்? ஆச்சரியப்படுத்துகிறீர்கள் சூர்யா!
And happy once again for being in VIKADANs good books...vaazhththukkal....keep going..with all good vibes from us..
I have seen this movie....Very touchy one!
சமூகத்தில் எதுமாறினாலும் மாறாது இருப்பது பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளும் அதை இளைக்கும் ஆண்களின் வக்கிர மனமும்தான் இதை அழகாக சொன்ன இயக்குனரும் அந்த கருத்தை தெரியபடுத்திய சூர்யாவும் ஆண்களாக இருப்பதால் ஆண்களின் மனதிலும் ஈரம் கசிகிறது என்பதை அறியும்போது மகிழ தொடங்குகிறது மனம்
நன்றி சரளா.
தொடர்ந்து வந்து ஊக்கப்படுத்துவதற்கு நன்றி தமிழினி..
Thanx Viji. Hope you like this movie..??
உங்க பாராட்டுக்கு நன்றி ரவி பிரகாஷ் சார்.
மிக எளிமையான ஆனால் ஆழமான அவதானிப்பு நண்பரே. தமிழில் சினிமா விமர்சனங்கள் அதிகமாக அதே சமயம் சினிமாவிற்கான புரிதல்களை முன்னிறுத்தும் கட்டுரைகள் வெளிவர வேண்டும்.
தமிழில் எழுதப்படும் சினிமா கட்டுரைகள் பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறேன். காண்க:
http://bala-balamurugan.blogspot.com/2009/11/blog-post_09.html
ஈரானிய சினிமா அவர்களின் நிலப்பரப்பையும் அதன் மனிதர்களையும் வர்ணங்களினாலேயே காட்சிப்படுத்தும் ஆளுமை பிரமிக்கத்தக்கவை. முக்கியமாக ஈரானிய பெண்களின் உலர்ந்த வாழ்வைப் போல காட்சிகளும் அதே போல கதையின் ஆழத்தை நோக்கி இழுத்துக் கொண்டு போகும்.
நன்றி பாலமுருகன். எளிமையாக எழுதவே விரும்புகிறேன். கடுமையான சொற்களையும் இலக்கிய ஆளுமையும் தவிர்க்கிறேன். (அது வருமா என்பது கூட தெரியவில்லை)
நீங்கள் சொல்வது போல் இந்த முழுக்க முழுக்க வணிக குத்தாட்ட மசாலா வன்முறை சினிமாவிலிருந்து அயல் சினிமா எப்படி வேறு படுகிறது என்பதையும் அதனை ரசித்து அனுபவித்ததை மற்றவர்களுக்கு பகிரவே விரும்புகிறேன்.
இன்று காலையில் தான் "வார்த்தை" இதழில் தங்கள் SSFWS விமர்சனம் கண்டேன். அருமை. வாழ்த்துகள்.
மிக அருமையான ஒரு படம், நண்பர் சூர்யா . . உங்கள் வலைப்பூவைப் பலகாலமாகப் படித்துவரும் ஒரு ரசிகனின் நல்வாழ்த்துகள். . .
வெங்கி.. ம்.. புது பிளாக் பற்றி என்னிடம் கூட சொல்லவில்லையே..??
பாலா சொல்லிதான் தெரியும்.
வாழ்த்துகள்.
சூர்யா . . நான் வெங்கி இல்லை.. நான் நிஜமாகவே தமிழுக்குப் புதியவன் தான். . என் பெயர் ராஜேஷ். . இதுதான் என் ஆங்கில ப்ளாக்கின் முகவரி - http://giriraajan.blogspot.com/. . . இப்போது தான் தமிழுக்கு வந்துள்ளேன். . தங்களது வாசகன் நான். .
Sorry Rajesh. Cool. Welcome my dear.. உங்கள் வலைபார்த்தேன். அருமை..
தொடரட்டும்..
நன்றாக இருந்தது சூர்யா..
//
பேருந்து நிலையத்திலும் மருத்துவம்னைகளிலும் பெரிய ஹால்களில் வட்ட வடிவ சித்திரங்கள் வரையப்பட்டுள்ளது பெண் ஒரு வட்டத்தில் எப்போதும் அடைக்கப்பட்ட்வள் என்பதை சொல்லாமல் சொல்கிறார் இயக்குநர்.
//
உங்களுடைய நுன்னிய கவனிப்புகள் என்னை ஆச்சரியப்படுத்துகின்றன.
ss Surya i agree with Selva
he said it correctly
ungkal nunniya paarvai matrum intha iraniya thirapada vimarsanam superb
நல்லதொரு விமர்சனம்,
நேரம்கிடைக்கும்போது வந்துபார்க்கவும்
http://niroodai.blogspor.com
உங்ள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி தேனம்மை.
வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி மலிக்கா.
நிச்சயம் பார்க்கிறேன்.
nalla vemarsanam
நல்ல படம். சில நேரங்களில் இது மாதிரி நல்ல படங்கள் பார்க்க எனக்கும் வாய்ப்புகள் கிடைத்துள்ளன. உங்கள் பகிர்வுக்கு நன்றி.
Post a Comment