Sex and Lucia { Spanish }
இது 2001ம் ஆண்டு வெளியான் ஒரு ஸ்பானிஷ் மொழி திரைப்படம். சென்சார் இல்லாத திரைப்படம் என்று முதலில் எச்சரிக்கிறேன். ஏன் என்று கடைசியில் டிஸ்கியில் சொல்கிறேன்.
குழந்தைகளுடன் கண்டிப்பாக பார்க்க இயலாது.
இது 2001ம் ஆண்டு வெளியான் ஒரு ஸ்பானிஷ் மொழி திரைப்படம். சென்சார் இல்லாத திரைப்படம் என்று முதலில் எச்சரிக்கிறேன். ஏன் என்று கடைசியில் டிஸ்கியில் சொல்கிறேன்.
குழந்தைகளுடன் கண்டிப்பாக பார்க்க இயலாது.
லூசியா ஸ்பெயினில் ஒரு சிறிய ஹோட்டலில் பணி புரிகிறாள். திடீரென்று தொலை பேசி அழைப்பு. அவளது காதலனும் எழுத்தாளருமான லோரென்ஸோ கூப்பிடுகிறான். அவனுடன் சரியாக பேச மறுக்கிறாள். தொலைபேசியையும் துண்டிக்கிறாள்.
வீடு சென்று பார்த்தால் அவனை காணவில்லை. தன்னை தேட வேண்டாம் என சீட்டு எழுதி வைத்து விட்டு எங்கோ சென்று விடுவதாய் சொல்லியிருகிறான். போலிஸிடமிருந்து போன்... அவளது காதலன் லோரென்ஸோ கார் விபத்தில் இறந்திருக்ககூடும் என்ற செய்தியும் வரவே நிலை குலைந்து போகிறாள் லூசியா.
அவனை இழந்த துக்கத்துடன் அவன் வெகு நாட்களுக்கு முன்பு அவன் எழுதிய நாவல் உருவாக காரணமாக கூறிய அந்த தீவிற்கு பயணமாகிறாள். இயற்கை எழில் நிறைந்த அதிக மனித நடமாட்டம் இல்லாத தீவில் ஒருவனை சந்திக்கிறாள். அங்கு சில நாள் தங்கும்படியும் அவளுக்கு வேண்டிய உதவிகள் செய்வதாய் கூறுகிறான் அவன்.
தங்கவும் சம்மதிக்கிறாள். அவனிடம் லோரென்ஸோவை சந்தித்த முதல் தருணமும் அவனிடம் பழகிய நாட்களில் காமக்கூடலில் திளைத்த இரவுகளும் காட்சிகளாய் மன திரையில் ஒட அனைத்தையும் கூறுகிறாள்.
காட்சிகள் பின்னோக்கி பயணிக்கிறது.
அதே தீவில் லோரென்ஸோ ஒரு பெயர் தெரியாத பெண்ணுடன் ஆறு வருடங்களுக்கு உறவு கொண்டுள்ளான். அவளும் கர்ப்பமாகி ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்து வளர்ந்து வருவதாய் லோரென்ஸோவின் நண்பன் கூறுகிறான்.
அந்த குழந்தையை வளர்க்க ஒரு பணிப்பெண்ணை நியமிக்கிறாள். அவளை ஒரு நாள் எதேச்சையாக பூங்காவில் சந்திக்கிறான் லோரென்ஸோ. அந்த பணிப்பெண் லோரென்ஸோவை விரும்புகிறாள். அவனுடன் உறவு கொள்ளவும் துடிக்கிறாள். தனது மகளை வளர்த்து வரும் பணிப்பெண் என்று தெரியாமலே அவளை நிராகரிக்கிறான் லோரென்ஸோ.
பின்னர் ஒரு நாள் லோரென்ஸோ உயிரோடு இருப்பதாக நண்பன் மூலம் லூசியாவிற்கு மகிழ்ச்சியான செய்தி வருகிறது. லூசியா லோரென்ஸோ இணைந்தார்களா..? அந்த பெண்ணும் சிறுமியும் என்ன ஆனார்கள் என்பதே மீதிக்கதை.
இயற்கை எழில் கொஞ்சும் கடற்கரை, வெண்மேகங்கள், குளிர்ச்சியான நிலவொளி அந்த இனிமையான தருணங்களில் உடல் காமத்தின் சுழல்வெளி அது உருவாக்கும் சூறாவளி என்று ஒன்று கொன்று தொடர்பில்லாமல் ஆரம்பித்து ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு இடத்தில் கோர்த்து ஒரு அற்புத திரைக்கதை வடிவமைத்து இயக்கியிருக்கிறார் Julio Medem
இயல்பான விருப்பங்களில் தொடங்கி காமத்தில் அரங்கேற்றினாலும் முடிவில் உடலை கடந்து ஒரு காதல் கதையாய் முடித்திருப்பது மிகவும் அருமை.
காமத்தின் நுட்பங்கள் பற்றியும் அதை தூண்டவும் தணிக்கவும் லூசியா செய்யும் காட்சிகள் வார்த்தைகளில் அடங்காதவை. உடலை பற்றிய ஒரு புது அர்த்ததை தனது பாத்திர படைப்பான லூசியா மூலம் சொல்கிறார் இயக்குநர் Julio Medem.
அந்த குழந்தையை வளர்க்க ஒரு பணிப்பெண்ணை நியமிக்கிறாள். அவளை ஒரு நாள் எதேச்சையாக பூங்காவில் சந்திக்கிறான் லோரென்ஸோ. அந்த பணிப்பெண் லோரென்ஸோவை விரும்புகிறாள். அவனுடன் உறவு கொள்ளவும் துடிக்கிறாள். தனது மகளை வளர்த்து வரும் பணிப்பெண் என்று தெரியாமலே அவளை நிராகரிக்கிறான் லோரென்ஸோ.
பின்னர் ஒரு நாள் லோரென்ஸோ உயிரோடு இருப்பதாக நண்பன் மூலம் லூசியாவிற்கு மகிழ்ச்சியான செய்தி வருகிறது. லூசியா லோரென்ஸோ இணைந்தார்களா..? அந்த பெண்ணும் சிறுமியும் என்ன ஆனார்கள் என்பதே மீதிக்கதை.
இயற்கை எழில் கொஞ்சும் கடற்கரை, வெண்மேகங்கள், குளிர்ச்சியான நிலவொளி அந்த இனிமையான தருணங்களில் உடல் காமத்தின் சுழல்வெளி அது உருவாக்கும் சூறாவளி என்று ஒன்று கொன்று தொடர்பில்லாமல் ஆரம்பித்து ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு இடத்தில் கோர்த்து ஒரு அற்புத திரைக்கதை வடிவமைத்து இயக்கியிருக்கிறார் Julio Medem
இயல்பான விருப்பங்களில் தொடங்கி காமத்தில் அரங்கேற்றினாலும் முடிவில் உடலை கடந்து ஒரு காதல் கதையாய் முடித்திருப்பது மிகவும் அருமை.
காமத்தின் நுட்பங்கள் பற்றியும் அதை தூண்டவும் தணிக்கவும் லூசியா செய்யும் காட்சிகள் வார்த்தைகளில் அடங்காதவை. உடலை பற்றிய ஒரு புது அர்த்ததை தனது பாத்திர படைப்பான லூசியா மூலம் சொல்கிறார் இயக்குநர் Julio Medem.
ஸ்பானிஷ் திரைபடங்களில் மிக முக்கியமான இயக்குநர் Julio Medem. சிறு வயது முதல் திரைப்ப்டத்தின் தீராக்காதல் கொண்டவர். பள்ளி பருவத்திலேயே தனது தந்தையிடம் பரிசாக மூவிங் கேமிரா வேண்டும் என்று நச்சரித்து குறும்படங்களை எடுத்தவர். இதுவரை பல திரைப்படங்களுக்கு உலக அளவில் பல விருதுகளை வென்றவர். இவரது முந்தைய படமான LOVERS OF THE ARCTIC CIRCLE மிகவும் முக்கியமன திரைப்ப்டம்.
இந்த படம் திரைப்டத்திற்காக ஒரு படப்பிடிப்பில் சென்ற தீவில் தான் Sex and Lucia திரைக்கதை அவருடைய மனதில் உருவானதாம்.பின்னர் 18 மாதங்களில் 8 திரைக்கதைகளை எழுதி முடிவில் இந்த நாஸ்டால்ஜிக் வகை திரைக்கதையே பொருந்தும் என்று தீர்மானித்தாராம். நடிக்க பல பேரை பார்த்தும் எவரும் அவர் மனதிற்கு பொருந்தாமல் கடைசியில் லூசியா பாத்திரத்திற்கு Paz Vega வை தீர்மானித்திருக்கிறார்.
Paz Vega ஸ்பானிஷ் தொலைக்காட்சி சீரியல் நடிகை. ஆனால் நடிப்பை முறைப்படி நடிப்பு பள்ளியில் பயின்றவர். பல தொலைகாட்சி தொடர்களில் நடித்து அனுபவம் பெற்றவர். இத்திரைப்பட அனுபவம் பற்றி "What I liked the most about Lucia how pretty, positive and courageous she was. I would like to have some of that" என்று சொல்கிறார். இத்திரைபடத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதையும் பெற்றுள்ளார்.
பனிரெண்டு ஸ்பானிஷ் கோயா விருதுகளையும் பல உலக திரைப்பட விழாக்களிலும் பங்கு பெற்றதுடன் சூடான், டோரெண்டோ விருதுகளையும் அள்ளிய திரைப்படம்.
சந்தர்ப்பம் கிடைத்தால் நிச்சயம் பாருங்கள்.
உட்னே பார்க்க டிரைலர் இங்கே
டிஸ்கி: Why Strictly 18 + ..? இங்கே கிளிக்குங்க
58 comments:
ஒன்றரை மாதமாய் Draftல் கிடந்து நேற்று எழுதி முடித்தவுடன் டிராப்ட் காணாமல் போய் மீண்டும் ஹாலிவுட் பாலாவிற்காக எழுதியது.
ஆஹா.. பூச்சி!!! சூப்பர் படம்!! ஜாக்ஸன்வில் வந்த புதிதில் இதை ஆன் டிமாண்டில் பார்த்தேன்.
ரொம்ப நாளுக்கு அப்புறம் நான் பார்த்த படத்திற்கு விமர்சனம் எழுதியிருக்கீங்க! :) :) :)
=======
ட்ராஃப்ட் மேட்டருக்கு... ரியல்லி ஸாரி. உங்க பின்னூட்டம் படிச்சவுடனே... எழுதினதை எல்லாம்.. வேர்டில் காப்பி பண்ணிகிட்டேன்.
நன்றி பாலா. முதல் பின்னூட்டமே நீதான். So happy now.
Totally upset yesterday. பிளாக் விதியை விட வலியது
எழுதினதை எல்லாம்.. வேர்டில் காப்பி பண்ணிகிட்டேன்./// Good.Nice Job.
Gud review...
Thanks for the movie...Downloading now.. :))
உங்கள் விமர்சனத்திற்கு ஏது விமர்சனம்.
-------------------
குழந்தைகளுடன் கண்டிப்பாக பார்க்க இயலாது.]]
அப்படின்னா குழந்தைகளும் பார்க்கப்படாதோ ...
விமர்சனம் நல்லாயிருக்கே பார்க்கலோமோன்னு நினைச்சேன் - சரி போகுது விடுங்க
(சர்வ நிச்சியமாக உங்கள் டிஸ்கியை கிளிக்கிவிட்டு நொடியில் மூடிவிட்டேன் எதையும் பார்க்கலை)
ரொம்ப காலம் கழிச்சு உங்க பதிவ படிக்கிற சந்தோஷம்!
வாய்ப்பு கிடைச்சா பார்க்கலாம்ண்ணே.
படம் சூப்ப்ர்.. நான் சொன்னது நீங்க லிங்க் கொடுத்த படங்களை சொன்னேன். ஹி..ஹி
நான் பார்த்து ரசித்த படத்தை, ரசித்து படிக்கும்படி செய்துவிட்டீர்கள். இன்னும் விரிவாக எழுதியிருக்கலாம் என்று தோன்றுகிறது.
தோழமையுடன்
பைத்தியக்காரன்
எனக்கு மிகவும் பிடித்த நடிகைகளில் ஒருவர் paz Vega . அவரது spanglish திரைப்படத்தில் தான் அவரை முதலில் பார்த்தேன். மிக அருமையான நடிப்புக்குச் சொந்தக்காரர். . இந்தப்படத்தைக் கண்டிப்பாகப் பார்க்கிறேன். நன்றி சூர்யா.
பி.கு - அன்று சாருவுடன் அமர்ந்திருந்த ஒரு உயரமான நீல கலர் சட்டைக்காரன் தான் நான். உங்களை அன்று சந்திக்காமல் போனதில் எனக்கு மிகவும் வருத்தம் :(
///இயல்பான விருப்பங்களில் தொடங்கி காமத்தில் அரங்கேற்றினாலும் முடிவில் உடலை கடந்து ஒரு காதல் கதையாய் முடித்திருப்பது மிகவும் அருமை.///
-வார்த்தைகள் WELL PLACED..நிறைய இடங்களில் செய்தியாக இருக்கும் சில விஷயங்கள் சில இடங்களில் செய்தி விமர்சனமாக மாறுவது அழகு..for example..your descriptions on the locale and on the heroine..அதீதமாய் ரசித்தால்தான் இத்தகையதை எழுத முடியும்..And i know that keeps you going..முதலில் blogil நுழையும் போது சின்னதாய் ஒரு பயம் இருந்தது..whether it wont be comfortableலோ என்று..but your words added the charm and the softness..ஒரு பெண்ணின் மனதினை அது தீராத காமம் சார்ந்ததாகவே இருப்பினும் அதை வேறு எல்லைகளுக்கு எடுத்துச் சென்று எழுதக் கூடிய பக்குவம்சில பேருக்கு மட்டுமே உண்டு..glad that you are a owner of it..and your hands do a justice to it..ஒரு பெண்ணாய் மகிழ்ச்சி அடைகிறேன்..தோழமையுடன்.........
And sorry for the ABSCONDED WORDS..can feel the pain.. word copy WILL MAKE THINGS ALRIGHT..wishing always the best for you..tc
நானும் படம் பார்த்திருக்கிறேன். சிறப்பான பதிவு தான் ஆனாலும் ஏதோ குறைவது போல் உள்ளது
உங்களின் வரிகளில் (என்பது எனது தாழ்மையான கருத்து).
//Totally upset yesterday. பிளாக் விதியை விட வலியது //
இது தான் காரணமோ.. விட்டு தள்ளுங்கள். உங்களின் உழைப்பை நாங்கள் அறிவோம்.
எச்சரிக்கை: அந்த கடைசி லிங்கை யாரும் ஆபீஸில் வைத்து ஓபன் செய்ய வேண்டாம் (என்னை மாதிரி).
அண்ணே,
ஏற்கனவே சம்சாரா படம் நீங்க இன்னும் தரல...
இதையாவது குடுங்க.
Hey Surya good work! keep going......
மிக அருமையான விமர்சனம்.
இதெல்லாம் இங்க கிடைக்கிறது கஷ்டம் தலைவரே.அதுவும் போக படம் பேர் சொன்னம்னு வையுங்க xxx புதுசா நிறைய வந்திருக்கு வேணுமான்னு கேப்பான்.இருந்தாலும் மைண்ட்ல வச்சுக்கறேன் ,ட்ரை பண்ணுறேன் பாக்க.இன்னும் சம்சாராவேகிடைக்கல.
:)
Thanx Sridevi.
Thanks Pradeep. Watch and enjoy..
நன்றி ஜமால்.
குழந்தைகளுக்கு அல்ல என்று தான் முதலில் Warning போட்டிருக்கேன்.
தொலைபேசி அழைப்பில் மகிழ்ந்தேன்.
நன்றி பப்பு.
இனி தொடர முயற்ச்சிக்கிறேன்.
நன்றி ராஜீ. பாருங்க.
கேபிள்ஜி.. உங்க மாதிரி யூத்துக்காக தான் அந்த டிஸ்கி.
ஆனா பதிவை படிக்காம டிஸ்கிய மட்டும் பார்த்துட்டு போயிட்டிங்களே..??
நன்றி சிவராமன். பத்திரிகை துறை சார்ந்த சரியான விமர்சர் நீங்கள்.
ஒரு முறை மெனக்கெட்டு எழுதிவிட்டு டிராப்ட் காணமல் போனது. அதனால் முடிந்த வரை எழுதினேன்.
நாஸ்டால்ஜிக் வகை கதையானதால் முழுவதும் சொன்னால் சுவாரசியம் குறைந்து விடும் என்று எண்ணி விட்டு விட்டேன்.
நன்றி ராஜேஷ்.
விரைவில் சந்திக்கலாம்.
நன்றி தமிழினி. உங்கள் கருத்தும் தொடர்ந்து வரும் ஊக்கங்களும் தோழமையும் அளவில்லாத மகிழ்ச்சியளிக்கிறது.
நன்றி வேல் கண்ணன். உங்கள் கருத்துக்கு மதிப்பளிக்கிறேன். இனி வரும் பதிவுகளில் கூடுதல் முயற்ச்சியுடன் செய்கிறேன்.
நன்றி பெஸ்கி. hahahaha.. ஆபிஸ்ல யாரும் பார்க்கலையே..??
தரேன்.
Thank you Akshy..
நன்றி சரவணகுமார்.
நன்றி Sri. அனுப்பிட்டா போச்சு..
என்ன அசோக்.?? டிஸ்கிய மட்டும் பார்த்தா இப்படிதான். பேச்சே வராது...
சூர்யா நான் இந்தப் படம் தற்செயலாகப் பார்க்கக் கிடைத்தது.
உங்கள் விமர்சனம் எப்பவும்போல.
ஈரோடு வரும்போது சிடியை கையோடு கொண்டு வாங்க :)
டிஸ்கி-கே ஒரு டிஸ்கி போட்டிருக்க வேண்டும்......
நன்றி ஹேமா..
நன்றி செல்வா. அது ஒன்று மட்டும் போதுமா..??
இணையம் வந்து விட்டதா..??
இனி அதிரடிதான்.
டிஸ்கி-கே ஒரு டிஸ்கி போட்டிருக்க வேண்டும்...////
மேலேந்துதான் டிஸ்கிதான்.
நன்றி நண்பரே.
surya said //பிளாக் விதியை விட வலியது//
:-))))
hi SURYA
vazakkam poola ungka amarkalamana varikalla saralama irukku
//இயற்கை எழில் கொஞ்சும் கடற்கரை, வெண்மேகங்கள், குளிர்ச்சியான நிலவொளி அந்த இனிமையான தருணங்களில் உடல் காமத்தின் சுழல்வெளி அது உருவாக்கும் சூறாவளி /
intha iam ellam super aa ezuthi irukkiinga
//இயல்பான விருப்பங்களில் தொடங்கி காமத்தில் அரங்கேற்றினாலும் முடிவில் உடலை கடந்து ஒரு காதல் கதையாய் முடித்திருப்பது மிகவும் அருமை.//
unga review intha mathiri words il than magic mathiri jolikkuthu surya
fine
:-)))
super appu
நன்றி தேனம்மை. உங்க கருத்துகளுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க மகிழ்ச்சி.
நன்றி வாசுதேவன்.
அந்த தீவின் அடியிலிருக்கும் பாறைகள் போலவே காமம் படமெங்கும் வியாபித்திருக்கிறதெனினும் கூடவே இழையோடும் சோகம் அடர்த்தியாய் பற்றிக்கொள்கிறது. குளிர்ந்த இரவொன்றில் தீவின் தனிமையில் (சற்று நடுக்கத்துடனே) அமர்ந்திருக்கும் உணர்வளித்தது இப்படம். தாங்கள் எழுதியிருப்பது போலவே காட்சிகளின் கோர்வை மிக நேர்த்தி. லூசியாவைவிட எலேனாவின் காமமும் பதற்றமும் கேவலும் குழப்பங்களும் நெடு நாட்கள் நினைவிலிருக்கும்.
பகிர்தலுக்கும் விமர்சனத்திற்கும் நன்றி.
நன்றி அனிதா.
உங்களின் ரசனையும் கவிதையான பின்னூட்டமும் மகிழ்ச்சி.
உங்களின் வழக்கமான பாணியில் தெளிவான நடையில் விமர்சனம். கதையுடன் இயைந்த காமம் நிறைந்த படங்களில் இதுவும் ஒன்றென தெரிகிறது. வாய்ப்பிருப்பின் பார்க்கிறேன். விமர்சனத்தை உடன் படித்தாலும் அலுவலகத்தில் படித்து விமர்சிக்க இயலவில்லை, அதனால் தான் இப்போது தாமதமாய்...
அருமை சூர்யா...
பிரபாகர்.
நான் 2006இல் பார்த்து விட்டேன்.
Superb review. Rocking!
Bala & Kannayiram - Be aware....
:)
நன்றி பிரபா.
உங்கள் பின்னூட்டம் இல்லாமல் எனக்கு ஏதோ ஒரு வெறுமை.
மகிழ்ச்சி பிரபா.
நன்றி மருதமூரான்.
நன்றி கோழிப்பையன்.
என்ன சொல்றீங்க பாலாவுக்கும் ராஜேஷீக்கும்..?
உங்க கலைச்சேவைக்கு நாங்கள் நன்றிக் கடன் பட்டிருக்கிறோம் மாம்ஸ் :)
6 மாத காலமாக கையிலேயே இருந்தும் அவ்வப்போது 'ஓட்டி ஓட்டி' :) பார்க்கும் படமாகவே இருக்கிறது இப்படம்.இன்று பார்த்து விடுகிறேன்.
பகிர்வுக்கு நன்றி சூர்யா..
அற்புதமான பகிர்வு ,
உங்களது பதிவில் இணைத்துள்ள அனைத்து புகைப்படங்களும் அற்புதம் . படத்தை நேரில் பார்த்த ஒரு உணர்வை ஏற்படுத்தி இருக்கிறது .
வாழ்த்துக்கள் நண்பரே !!!
புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!
வாசகனாய் ஒரு கவிஞன் ,
பனித்துளி சங்கர்
http://wwwrasigancom.blogspot.com
டிஸ்கி பார்த்தவுடன் முடிவு பண்ணியாச்சு படம் என்ன போல யூத்துக பாக்க வேண்டிய படம்னு....அறிமுகம் செய்ததற்கு நன்றி...:)
Post a Comment