Deck The Halls (மீள் பதிவு)
கிறிஸ்மஸ் பண்டிகையை வித்தியாசமாக கொண்டாடுவதில் போட்டியும் பொறாமையும் கொண்ட இரு அண்டை வீட்டுகாரர்களின் பூசல்தான் நகைச்வை கலந்த குடுமப திரைப்படம் தான் Deck The Halls
100% பொழுது போக்கு மற்றும் நகைச்சுவைக்கு உத்திரவாதம்.
Steve தன் குடும்பத்தினருடன் கிறிஸ்மஸ் பண்டிகையை உற்சாகமாக கொண்டாட ஆயத்தமாகிறன். அப்போதுதான் அவன் பக்கத்துவீட்டிற்கு குடி வருகிறார்கள் Buddy Hall & family.
Buddy Hall ஒரு கார் விற்பனையாளன். மிக குறைந்த வருமானம். அவன் மனைவியோ எப்போதும் பணத்திற்காக அவனை நச்சரிக்கிறாள். அவனோ தான் எதாவது சாகசம் செய்து பெரிய புகழ் பெறவேண்டும் என நினைக்கிறான். அதனால் கிறிஸ்மஸ் பண்டிகையின் போது விளக்குகளால் வீட்டை அலங்கரித்து அது வானுலகத்திலிருந்து பார்த்தாலும் தெரியும் படி செய்ய பல முயற்சிகளை மேற் கொள்கிறான்.
ஆனால் பல ஆண்டுகளாய் வாழும் அவர்கள் குடியிருப்பு பகுதியில் Steve குடும்பமே கிறிஸ்மஸ் பண்டிகையை விமர்சனையாக கொண்டாடி புகழ் பெற்று வருகின்றனர். இந்த தருணத்தில் புதிதாக குடி வந்த Buddy யின் முயற்சிகளை கெடுக்க Steve செய்யும் குளறுபடிகளும் அதை Buddy எப்படி முறியடிக்கிறான் என்பதே மீதிக்கதை.
என்னதான் அவர்கள் இருவர்ம் போட்டி பொறாமையுடன் இருந்தாலும் குழந்தைகளும் இரு மனைவிகளும் இதை விரும்புவதில்லை. அவர்க்ள் ஒரே குடும்ப்மாக இருக்க வேண்டும் என எவ்வளவோ முயற்ச்சிகின்றனர்.
ஆனால் Buddy ,Steve இருவரும் அவர்களின் பேச்சை கேட்க மறுப்பதால் இரு மனைவிகளும் குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறி கிறிஸ்மஸ் பண்டிகையை விடுதியில் கொண்டாட போவதாய் சொல்லி விட்டு போய் விடுகின்றன்ர்.
இறுதியில் Buddy Hall தான் நினைத்ததை நிறைவேற்றி எல்லோரும் ஒன்று சேர்ந்து கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாட சுபம்.
குறிப்பாக கிறிஸ்மஸ் பாடல்கள் குறும்பாடல்களாக வந்து போவது இனிமை.நவம்பர் 2006ல் வெளிவந்த திரைப்படம். அந்த வருடத்தில் இந்த கிறிஸ்மஸ் பாடல்கள் மிக பிரபலம். நிஜமாகவே எவ்வளவு உவகையுடன் உற்சாகத்துடன் அமெரிக்கர்கள் அந்த ஆண்டு கிறிஸ்மஸ் கொண்டாடி இருப்பார்கள் என நினைக்கவே மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது.
குட்டையான உருவமும், குறுகுறுத்த கண்களும் வித்தியாசமான குரலும் கொண்ட Buddy Hall பாத்திரத்தில் நடித்து கலக்கியிருப்பவர் Danny De Vitto. அத்தனை இயல்பான நடிப்பும் நகைச்சுவையும் சூப்பர்.
64 வயதான DANNY DeVITO அமெரிக்காவில் முறைப்படநடிப்பு கலையை பயின்றவர். மிக பிரபலான பல தொலைகாட்சி தொடர்களில் நடித்து மக்களுடன் ஒன்றாக கலந்தவர். 1978 முதல் Danny De Vitto பல அவார்டுகளை அள்ளி குவித்தவர். 2001 ல் ஆஸ்கர் அவார்டுக்கும் பரிந்துரைக்கப்பட்டவர்.
ஒரு சமயத்தில் மோசமான நடிகர் என்று விமர்சிக்கபட்டாலும் தொலைகாட்சியிலும் திரைப்படங்களிலும் 40 வருடங்களாக தொடர்ந்து நடித்து வரும் அமெரிக்க மக்களுக்கு நிஜமாகவே இவர் அண்டை வீட்டுகாரர் போல தானாம். குழந்தைகளுக்கும் குடும்பத்திற்கும் ஏற்ற நல்ல நகைச்சுவை திரைப்படம்.
சந்தர்பம் கிடைத்தால் நிச்சயம் பாருங்கள்.
உடனே பார்க்க டிரைலர் இங்கே
அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்
27 comments:
அதானே.. முன்னாடியே எழுதிட்டீங்களேன்னு யோசிச்சேன்! :) :)
வாங்க பூச்சி. நாம.. The Hunter-ல கிறித்மஸ் கொண்டாடலாம்! :)
எப்படியெல்லாமோ சிந்திச்சி பொழுது போக்குக்காக எடுக்கிறாங்க அதிலும் ஒரு மெஸேஜோடு.
நம்ம ஆட்கள் எப்பதான் இப்படி சிந்திப்பாங்களோ தெரியலை...
மீ த ஃபர்ஸ்ட். உங்க கமெண்ட ஆட்டைக்கு சேத்துக்க முடியாது.
அங்க இந்த மாதிரி விழாகால அருமைகளை பற்றி படம் எடுக்கிறார்கள். இங்க அப்படியில்லையில்ல?
கிருஸ்மஸ் வாழ்த்துக்கள் !
உங்களுக்கும் மனமார்ந்த கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துகள் சூர்யா. . . கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துடனும் சந்தோஷத்துடனும் கழியட்டும் . .
நன்றி பாலா.
லாஸ் வேகாஸ் போலாமா..??
நன்றி ஜமால்.
யோசிச்சு.. சிந்திச்சு // note this point.
நன்றி TVR
Merry X mas.
நன்றி பப்பு..
Same to you.
நன்றி ராஜேஷ்.
உங்களுக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்.
அருமையான விமர்சனம்.
ஹாப்பி கிரிஸ்த்மஸ்
பாத்தாச்சு.
கிரிஸ்மஸ் நேரதிருக்கு பொருத்தமான பதிவு..வாழ்த்துக்கள்..பகிர்வுக்கு நன்றி...
நன்றி சரவணகுமார்.
நன்றி முத்துலட்சுமி. நத்தார் வாழ்த்துகள்.
நன்றி Sri.
நன்றி கமலேஷ். வாழ்த்துகள்.
Very good SURYA. That's very nice writting(Sorry tamil font not working)
நன்றி வேல் கண்ணன்.
Watched it already..Nice review!
Wish u a very merry christmas..Hope u had a great day..Hearty wishes to u for a great new year..:)
நன்றி வாணி.
இனிய நத்தார் வாழ்த்துகள்.
புத்தாண்டு செழிக்கட்டும்.
சூர்யா மீள்பதிவா நல்லாருக்கு
புத்தாண்டு வாழ்த்துக்கள்
நன்றி தேனம்மை.
புத்தாண்டு வாழ்த்துகள்.
இருவருமே எனக்கு பிடித்த நடிகர்கள், நிச்சயமாக பார்த்து விடுகிறேன்!
நன்றி அருண்.
புத்தாண்டு வாழ்த்துகள்.
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
அடிக்கடி வந்து ஏதாவது திட்டி தீர்த்துட்டு போனால் தானே தெரியும் ,, இனி என்ன பண்ண வேணும் எண்டு ...
கதவு திறந்தே இருக்குது ,,, வாங்க வந்து பாருங்க,,, நம்ம பதிவுட லட்சணத்த,,,
Post a Comment