அப்பாவும் அம்மாவும்
தராத அரவணைப்பை
பொம்மைக்கு தந்தபடி
உறங்கிக்கொண்டிருந்தது குழந்தை.
கனவில் தோன்றிய கடவுள்கள்
அச்சிறு குழந்தையின் அரவணைப்பை
வரமாய் கேட்டனர்.
வரிசையில் நின்றிருந்த
கடவுள்களுக்கு உறக்கப்புன்னகையை
தந்துவிட்டு பொம்மையை
இறுக்கி அணைத்துக்கொண்டதது.
பொம்மையாதலின் வழிமுறைகள்
அறியாமல் விழித்தபடிநின்றனர்
கடவுள்கள்.
-நிலாரசிகன்.
குழந்தைகளின் உலகம் பரந்து விரிந்து கிடக்கிறது. அது தனித்துவமானது. எல்லையற்ற பாதையில் முடிவில்லாத பயணமாய் செல்ல அவர்களை தூண்டுகிறது. நட்பும் சந்தோஷமும் மட்டுமே அவர்களின் ஆசை, விருப்பம் மகிழ்ச்சி.
அப்படி எல்லையில்லா பேரானந்தத்தை விரும்பிய இரண்டு பாலினம் புரியாத பால்ய நட்பு சிறார்களின் கதையே விவா கியூபா என்றும் ஸ்பானிஷ் திரைப்படம்.
மாலு உயர்குடியில் பிற்ந்த செல்வந்தரான சிறுமி. அவளது தந்தையோ அவளது குடும்பத்தை விட்டு விலகி வெகுதூரம் வாழ்ந்து வருபவன். தாயுடனும் தனது முதிர்ந்த பாட்டியுடன் வசித்து வருகிறாள்.
மாலுவுக்கு சம வயதுடைய ஜார்ஜி எதிர் வீட்டில் பெற்றோருடன் வசிக்கும் சிறுவன். கம்யூனிச சித்தாந்த கொள்கைகளுடைய குடும்பத்தில் பிறந்தவன்.
இருவரும் ஒரே பள்ளியில் படிக்கும் இணை பிரியா நண்பர்கள். துள்ளி திரிவதும் சிறு சிறு சண்டைகளுடன் சதா விளையாடி மகிழ்வதும் ஒருவருக்கொருவர் உதவி செய்வதுமாய் பொழுதுகள் போகின்றது. இது இரு வீட்டாருக்கும் பிடிப்பதில்லை. மாலுவை அவள் தாய் ஆண்பிள்ளைகளுடன் விளையாடுவது தவறென்றும் பெண் குழந்தைகள் வீட்டின் உள்ளேயே தான் விளையாட வேண்டும் என்றும் நச்சரித்து கொண்டே இருக்கிறாள். இதனால் மாலுவுக்கோ தாயின் மீது அளவற்ற கோவம். ஆனால் அவளின் ஒரே ஆறுதல் வயதான பாட்டி மட்டுமே.
இதே நிலைதான் ஜார்ஜிக்கும். ஜார்ஜியின் தந்தை மாலுவினுடனான நட்பை துண்டிக்க வேண்டுமென்றும் சக ஆண் நண்பர்களுடன் விளையாட அறிவுறுத்துகிறார். அப்பாவை கண்டாலே அவனுக்கு வேப்பங்காயாய் கசக்கிறது. மாலு & ஜார்ஜியாவின் நட்பால் இரு குடும்பமும் இந்தியா பாகிஸ்தானாய் முறைத்து கொள்கிறது.
நிலைமை இப்படி இருக்க மாலுவின் தாய் வேறொருவனை மணமுடிக்க எண்ணுகிறாள். ஜெர்மனியில் வசிக்கும் அவனிடம் சேர்ந்து வாழ விருப்பமும் தெரிவிக்கிறாள். இதற்காக சட்டப்படி மாலுவின் தந்தைக்கு அவர் கையெழுத்திட வேண்டி ஒப்புதல் படிவத்தையும் அனுப்பி வைக்கிறாள். மனமுடைந்து போகிறாள் மாலு.
ஒரு புதிய வாழ்க்கை வருகிறதென்றும் ஜெர்மனியில் சுகமாய் வாழலாம் என்று மாலுவை தேற்றுகிறாள் தாய். சோகத்திலும் சோகமாய் பாட்டியும் திடிரென்று மரணித்து விட சொல்லமுடியாத வேதனையுடன் இருக்கிறாள் மாலு. விளையாடவோ பாடத்திலோ விருப்பமின்றி இருப்பதை பார்த்து ஜார்ஜியாவும் மிகவும் வருத்தப்படுகிறான்.
தாயின் விருப்பத்தையும் இடம் பெயர்வது பற்றியும் மற்றும் அனைத்து விபரங்களையும் நண்பன் ஜார்ஜியாவிடம் அழுதபடியே சொல்கிறாள். தற்போதைய பள்ளி கூடத்தையோ ஜார்ஜியாவையோ பிரிய ஒரு போதும் இயலாது என்றும் வருந்துகிறாள். அவளை தேற்றுகிறான் ஜார்ஜியோ.
இதற்கு ஒரே வழி மாலுவின் தந்தையை சந்தித்து அவரை அந்த ஒப்புதல் படிவத்தில் கையெழுத்திடாமல் செய்தால் மட்டுமே அனைத்து பிரச்சினைகளையும் என்றும் இருவரும் தனியே கிளம்பி போய் அவரை சந்திக்கலாம் என்று முடிவும் செய்கின்றனர்.
இரவோடு இரவாக வேண்டிய துணிகளையும், ஊருக்கு செல்ல வரைப்படம் சேர்த்து வைத்த உண்டியலையும் எடுத்து கொண்டு பள்ளி செல்வது போல காலையில் கிளம்பி இருவரும் உற்சாகமாகவும் அதீத சந்தோஷத்துடனும் பயணத்தை தொடங்குகின்றனர்.
படகில் ஆரம்பித்த பயணம் கார், மோட்டர் சைக்கிள், மாட்டுவண்டி, இரயில் என்று சகலவித பாதைகளிலும் பயணிக்கிறது.
பசியும் சோர்வும் வாட்டுகிறது. தொலை தூர கிராமத்தில் பார்வையிழந்த பெண்ணொருத்தியின் வீட்டிலிருந்து ரொட்டியையும் பாலையும் திருட முற்பட அவள் நாயின் துணையோடு இருவரையும் விரட்டி பிடிக்க செய்வதறியாது திகைக்கின்றனர். அங்கிருந்து தப்பித்து ஒட இரவில் காட்டில் பேய் நடமாட்டம் இருப்பதாக வழி போக்கன் சொன்னதை நம்பி பயந்து ஜார்ஜியாவிற்கு கடுமையான காய்ச்சல்.
டாக்டரிடம் சென்று காண்பிக்க ஊர் மக்கள் உதவினாலும் ஊசிக்கு பயந்து ஜார்ஜியா ஒடுவதும் நகைச்சுவையாய் காட்சிகள்.
இதனிடையே இரு வீட்டாரும் போலிஸில் புகார் கொடுக்க இரு குடும்பமும் ஒத்துழைத்தால் மட்டுமே குழந்தைகளை மீட்க முடியும் என்கிறார் அதிகாரி. சண்டையிட்டு கொண்டிருந்த இருவரின் குடும்பம் சிறிது சிறிதாய் நட்பாகி ஒருவருகொருவர் ஆறுதலாய் இருந்து வர குழந்தைகள் இருவரும் ஒரு பக்கம் போலிஸ் துரத்திலில் இருந்தும் மறைந்து மறைந்து ஒடுவதும் பல புதிய மனிதர்களை சந்திப்பதுடன் ஒவ்வொரு சந்திப்பும் அவர்களுக்க் பல வித அனுபவத்தையும் புத்துணர்வையும் அளிக்கிறது.
ஒரிடத்தில் தவறுதலாய் விட்டு சென்ற ஜார்ஜியாவின் கைப்பையை வைத்து போலிஸ் அவர்களின் இருப்பிடம் தெரிவிக்க இரு குடும்பமும் குழந்தைகளை தேடி புறப்படுகின்றனர்.
கடைசியில் மலை குகைகளை ஆராய்ச்சி செய்யும் ஒருவனின் துணையோடு மாலுவின் தந்தையிருக்குமிடத்தை சென்றடைந்து விடுகின்றனர் மாலுவும் ஜார்ஜியாவும்.
அதற்கு முன் அங்கு வந்த் சேர்ந்த மாலுவின் தாயும் ஜார்ஜியாவின் பெற்றோர்களும் குழந்தைகளை கண்ட அனைவரும் முதலில் சந்தோஷத்திலும் பரவசத்தில் திளைத்தாலும் சிறிது நேரத்தில் யார் மீது குற்றம் என்று சண்டை பிடிக்க தொடங்கியவுடன் அருகே இருக்கும் கடற்கரையை பார்த்ததும் எதையும் பொருட்படுத்தாது அளவில்லா ஆனந்தத்துடன் விளையாட செல்கின்றனர் மாலுவும் ஜார்ஜியாவும்.
தூரத்தில் பெற்றோர்கள் சண்டையிட மணலில் குழந்தைகள் விளையாட அற்புத காட்சியாய் திரைப்படம் நிறைவு பெறுகிறது.
2005ல் வெளியான இத்திரைப்படம் பல சர்வதேச விழாக்களில் பங்கு பெற்றதுடன் 34 உலக விருதுகளை வாரி குவித்துள்ளது. 2005 கேன்ஸ் குழந்தைகள் சர்வதேச விழாவில் முதன் முதலில் பரிசு பெற்ற கியூபா திரைப்படம் என்ற பெருமையும் பெற்றது. இயல்பான நடிப்பும் அருமையான ஒளிபதிவும் கூடுதல் சிறப்பு.
வானொலியில் காணாமல் போனவர்களின் பற்றிய அறிவிப்பை கேட்டவுடன் ஜார்ஜியா பெண் வேடமிட்டு திரிவதும், வழி நெடுகிலும் ஒருவருக்கு ஒருவர் மாற்றி மாற்றி பொய்யுரைப்பதும் பிறகு மாட்டி கொண்டு முழிப்பதும் சிறு சிறு சண்டையிடுவதும் மீண்டும் நட்பாவதும் இயல்பான நகைச்சுவையுடன் நெகிழ வைக்கும் காட்சிகள்.
இத்திரைப்பட்த்தை எழுதி இயக்கியிருப்பவர் கியூபா திரைப்பட துறையில் மிகவும் போற்றதக்க Juan Carlos Cremata. கியூபா இனத்தவரான இவர் குழந்தைகளுக்கான தொலைகாட்சி நிகழ்ச்சிகளை பல ஆண்டுகள் இயக்கிய அனுபவம் பெற்றவர். இயக்குநர் மற்றும் எடிட்டிங் பயிற்ச்சி பள்ளியில் ஆசிரியராகவும் இருந்து பல மாணவர்களுக்கு பயிற்ச்சியும் அளித்துள்ளார்.
2001ல் இவரது முதல் திரைப்படம் Nada Mas வெளிவந்தது. தொடர்ந்து அற்புதமான திரைப்படங்களை இயக்கியும் பரிசுகளையும் வென்று வருகிறார். விமான பணியாளராக பணியாற்றிய இவரது தந்தை
1976 ம் ஆண்டு உலகையே உலுக்கிய கியூபா விமான வெடிகுண்டு விபத்தில் பலியானவர் என்ற சோகமும் உண்டு.
யாருக்கும் கிடைக்காத அதிர்ஷ்டம் தனக்கு கிடைத்ததாக Juan Carlos Cremata சொல்வது Viva Cuba திரைப்படத்தின் துணையியக்குனர் இவரது அம்மாவே என்பது தான்.
குழந்தைகளை பற்றிய இத்திரைப்படம் பார்பவர் அனைவருக்கும் தமது பாலர் பருவத்தை கிளர செய்யும் என்பதில் ஐயமில்லை. குழந்தைகளுடனும் குடுமபத்துடனும் பார்க்க வேண்டிய சிறந்த திரைப்படம்.
வழக்கப்படி உடனே பார்க்க டிரைலர் இங்கே
குழந்தைகள் குறித்த எந்தவித சிந்தனையில்லாமல் சென்னை போன்ற பெரு நகரங்களில் அவசர உலகம் ஒடிக்கொண்டு இருக்கிறது. பெரிய பெரிய புத்தகப்பைக்களுக்குள் அவர்கள் நசுங்கி கிடப்பதும் சதாராணமான நிகழ்வுகள். இன்று ஞாயிற்று கிழமைகளில் கூட தெருக்களில் விளையாடும் பிள்ளைகளை பார்க்க முடிவதில்லை.
நமது சிறு வயதில் நூற்றுகணக்கான விளையாட்டுகளில் உலகம் விரிந்து கிடந்ததை நினைத்து சந்தோஷப்படும் வேளையில் “தொலைக்காட்சி” பூதம் அந்த விளையாட்டுகளையெல்லாம் விழுங்கி விட்டதை நினைத்து வேதனை படாமல் இருக்க முடிவதில்லை.
Labels:
Canes Film Festival,
Entertainment,
Juan Carlos Cremata,
Kids Collection,
Kids Movie,
Viva Cuba
|
Estou lendo: Viva CubaTweet this! | Assine o Feed |
Subscribe to:
Post Comments (Atom)
64 comments:
நன்றி
நல்ல காலம் 'அப்படியே கட் பண்ணினா ரெண்டு பேரும் ஆஸ்த்ரேலியாவுல டூயட் பாடுறீங்கன்னு' எடுக்காம ..::))
தகவலுக்கு நன்றி சூர்யா ஜி ...::) (கூகுளாண்டவரே லிங்க் குடுப்பா ..)
//“தொலைக்காட்சி” பூதம் //
சரியாக சொன்னீர்கள் நண்பரே
அருமை பகிவுக்கு நன்றி
puthukottaiyilirunthu saravanan
அருமை அண்ணா....
படமும் அதை நீங்கள் வர்ணித்த விதமும்....
நிச்சயம் பார்க்க தூண்டுகிறது...
:-)))
நன்றி கதிர். புதிய புகைப்படம் அசத்தல்.
நன்றி ஷங்கர். டூயெட்டெல்லாம் கோடம்பாக்கம் To சிட்னி..
நன்றி வேல் கண்ணன்.
நன்றி அக்னி.
நலமா..??
நன்றி அகல் விளக்கு.
இந்தப்பதிவின் புகைப்படத்தை பார்த்ததுமே மனது அளவில்லா மகிழ்ச்சியில் திளைத்தது, ஏனெனில் நானும் சமீபத்தில் தான் இந்தத் திரைப்படத்தை பார்த்தேன், அந்தக் குழந்தைகள் இரண்டும் பயணத்தின் இடையில் சண்டையிட்டுக் கொண்டு நட்பாகும் காட்சிகள் எல்லாம் அருமை, கடைசியில் பெற்றோர்கள் சண்டையிட்டபடியிருக்க, குழந்தைகள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு கை கோர்த்து கடலைப் பார்த்து ஓட திரை உறையும். இந்தப் படத்தை மிக மிக ரசித்தேன். இது குறித்த தங்கள் பதிவை தற்போது வாசிக்கும் போது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது.
நன்றி யாத்ரா.
///குழந்தைகள் குறித்த எந்தவித சிந்தனையில்லாமல் சென்னை போன்ற பெரு நகரங்களில் அவசர உலகம் ஒடிக்கொண்டு இருக்கிறது. பெரிய பெரிய புத்தகப்பைக்களுக்குள் அவர்கள் நசுங்கி கிடப்பதும் சதாராணமான நிக்ழ்வுகள். இன்று ஞாயிற்று கிழமைகளில் கூட தெருக்களில் விளையாடும் பிள்ளைகளை பார்க்க முடிவதில்லை.
நமது சிறு வயதில் நூற்றுகணக்கான விளையாட்டுகளில் உலகம் விரிந்து கிடந்ததை நினைத்து சந்தோஷப்படும் வேளையில் “தொலைக்காட்சி” பூதம் அந்த விளையாட்டுகளையெல்லாம் விழுங்கி விட்டதை நினைத்து வேதனை படாமல் இருக்க முடிவதில்லை.///
as usual..,you adorn the blog page with your simple and PULLING words..
the poem at the beginning is a wonderful selection..
nandrippaa..
ultimately...
parents shud always remember that
children come through us and not from us..
lovely share...
அருமையான படத்தை அருமையா விமர்சனம் செய்து இருக்கீங்க. முதல் முறை, தங்களது தளத்துக்கு வருகிறேன். நல்லா இருக்குங்க.
நன்றி தமிழினி.
தொடர்ந்து வரும் உங்கள் ஊக்கம் என்னை மிகவும் உற்சாகப்படுத்துகிறது.
நன்றிகள் பல.
நன்றி சித்ரா.
அழகான வர்ணனை சூர்யா
நல்லா இருக்கு விமர்சனம்
:-)
வழமை போல் பார்க்க தூண்டும் விமர்சணம்.
பார்க்க வேண்டிய லிஸ்ட்டில் இதையும் சேர்த்துடுவோம்.
------------------------
லொள்ளு: விஜய் பையனை வச்சி இப்படி முயற்சிக்கலாம் ;) :P
சூர்யா, உங்கள் விமர்சனங்களை தொடர்ந்து படித்து வருபவன் நான். இப்பொழுது தான் பின்னூட்டம் இடுகிறேன். உங்கள் எல்லா விமர்சனமும் சூப்பர். இந்த விமர்சனமும் டாப். நன்றி.
நன்றி ஜமால். லொள்ளு சூப்பர்.
நன்றி கோபிநாத்.
ஒரு நல்ல படத்தை அறிமுகம் செய்தமைக்கு நன்றி..
குழந்தைகளின் உலகம் என்றுமே கள்ளம் கபடமில்லாத்து..
dear surya, i need top 20 films ( except indian and hollywood films)list should see from your list. if you have idea please post in blog, or i will ask you when i meet you. just i want to inform before i meet you!
மிக அருமையான விமர்சனம்.
படியில் நிற்கும்வரை பயப்படும் நாம் படி ஏறியதும் படியில் நிற்பவரை மறந்துவிடுவதுபோல நாம் மகிழ்ந்த நம் குழந்தை பருவத்தை நம் குழந்தைகள் மகிழ இடம்கொடுக்காத குருர பெற்றோர்களாக மாறியிருப்பதை படம்பிடித்து இருக்கிறீர்கள் அருமை
படமும் அருமை உங்கள் விமர்ச்சனமும் அருமை...
நல்ல பகிர்வு ஈரோடு பதிவர் சந்திப்புக்கு பிறகு
நான் வாசிக்கும் போது ஒரு ஈர்ப்பு இருக்கிறது
உங்கள் எழுத்தில்
http://vittalankavithaigal.blogspot.com/
நல்ல படம் பார்த்த உணர்வு. பகிர்வுக்கு நன்றி.
நன்றி ராஜேஸ்வரி.
Dear Sharaf, I will prepare and send it to your mail ASAP.
Thanx.
நன்றி சரவணகுமார்.
சரளா,
இதே நேரத்தில் தமிழில் குழந்தைகளுக்கான திரைப்படம் என்பது அறவே இல்லை என்பது எஅன்க்கு எப்போதும் வருத்தம்.
தமிழகத்தில் எல்லா குழந்தைகளும் அழுது வடியும் சீரியல்களையும் சினிமா, போட்டிகள் என்ற பெயரில் ஆபாச நடனங்களையும் அருவருக்கதக்க நிகழ்வுகளையும் நடு ஹாலில் உட்கார்ந்து மணிகணக்கில் பார்ப்பது என்பது கொடுமையிலும் கொடுமை.
அந்த ஆதங்கத்தில் தான் குழந்தைகளுக்கான திரைப்படங்களை தேடி தேடி பார்த்து பதிவு செய்கிறேன்.
உங்கள் பாராட்டுதலுக்கு நன்றி.
நன்றி விட்டிலான்.
நன்றி சங்கவி.
இப்பொழுதே பார்க்க ஆவலைத் தூண்டுகிறது.. கண்டிப்பாகப் பார்த்து விட வேண்டியதுதான் . . (நேற்றுதான் கைட் ரன்னர் பார்த்தேன்). .
thanks surya, if you can please reeady the top 20 film list and keep in your pocket , i will get you from in saturday meet in book fair.
I watched this film and your comments made me remember this film once again. As you said no good child films in tamil :-(
ரொம்ப அருமையா எழுதியிருக்கிறீங்க.
உங்க பிளாக்ல இருக்குற எல்லா படங்களையும் பார்க்க வைத்துவிடுகிறீர்கள்.தொடர்க உங்கள் தொண்டு..
padam paartha niraivai ungal vimarsanam thanthathu Surya... mikka nandri...
Priyamudan
Dyena
இறுதிக்காட்சி சிறு வயதில் பாடத்தில் படித்த ஒரு சிறுகதையில், சிறுவர்களுக்காக இரு பேற்றோர்களும் சண்டை போட்டுக்கொண்டிருக்க சம்மந்தப்பட்ட இருவரும் கப்பல் விட்டு விளையாடிக்கொண்டிருக்க அதைப் பார்த்து ஒருவர் அவர்களின் பெற்றோரைத் திட்டி திருத்துவதாய் அமைந்த ஒரு கதையை நினைவிற்கு கொண்டுவருகிறது.
மிக அழிகிய விளக்கங்களுடன் கூடிய விமர்சனம். அருமை சூர்யா...
வேலைப்பளு, தாமதாய் படிக்கிறேன். மன்னிக்கவும்.
பிரபாகர்.
நன்றி ராஜேஷ். கைட்ரன்னரும் எழுத வேண்டிய லிஸ்டில் இருக்கிறது.
Yes Sharaf. Sure I will..
நன்றி மயில் ராவணன்.
சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.
நன்றி டயானா.
நன்றி பிரபா.
ரொம்ப நல்ல விமர்சனம்ங்க. முடிந்தால் அவசியம் பார்க்க நினைக்கும் படம்.
very good review....
இது கியூபா நாட்டுப் படம் மாதிரி தெரியவில்லை. அப்படியே நம்ம ஊரில் நடக்கிற கதைதான்! உலகெங்கும் மனிதர்கள் ஒரே மனோபாவத்துடன்தான் இருப்பார்கள்போலும்!
Such an intriguing review..Luvd it..Will watch it soon :)
நன்றி விக்னேஷ்வரி. அவசியம் பாருங்க..
நன்றி மகா.
நன்றி ரவி சார். அப்படிதான்.
நன்றி வாணி.
சூர்யா,
அருமையான நடை. நல்ல படம். தொடர்ந்து எழுதுங்கள்.
சொல்ல மறந்து விட்டேனே, மீ த பேக்.
வாங்க விஸ்வா. என்னையெல்லாம் மறந்துடீங்கன்னு நினைச்சேன்.
மிக்க மகிழ்ச்சி. சென்னை புத்தக விழாவில் நிறைய காமிக்ஸ் புக் கிடைக்குது. பார்த்தீர்களா..??
தல,
உங்களை எல்லாம் எப்படி மறப்பேன்? இதெல்லாம் கொஞ்சம் இல்ல, ரொம்ப ஓவர்.
பதிவுகளும் அந்த வண்ணக் கலவையும் சூப்பர்.
அந்த காமிக்ஸ் எல்லாம் நம்மகிட்ட டபுள்ஸ், திரிபுல்ஸ் இருக்குங்க சூர்யா. அதனால சும்மா பார்ப்பதோட சரி.
எப்பவுமே ஒரு காமிக்ஸ் தமிழ்ல வந்த முதல் பிரதி நம்மகிட்ட வந்துடும். அதனால் நாம இப்ப தேடுறது பழைய (அறுபது, எழுவதுகளில் வந்த) சிறுவர் இலக்கிய புத்தகங்களை தான்.
Welcome back விஸ்வா. உங்களையெல்லாம் ரொம்ப மிஸ் பண்ணின ஆதங்கத்தில் சொன்னேன்.
காமிக்ஸ் புத்தகங்கள் உங்களிடம் இருக்கும் என்று தெரியும்.
ஆனால் புத்தகத்தையெல்லாம் பார்த்தவுடன் உங்கள் நினைவுதான் வந்தது என்று சொல்ல நினைச்சேன்.
உங்கள் தேடலை நண்பர் லக்கியிடம் கேட்டு பாருங்கள். கிடைக்கலாம்.
இனிய பொங்கல் வாழ்த்துக்கள் தல
மஜித்துக்கப்புறம் உங்களுக்கு ரொம்ப புடிச்ச இயக்குனர்(குழந்தைகளுக்கான) வரிசைல இவர் நிப்பார் போல :-))
நல்ல விமர்சனம் தல
நிச்சையம் பாக்கவேணும்.
Thanks "Butterfly" surya shall try to write of my own
unga vimarsanam arumai
நன்றி புலிகேசி.
மஜித் மஜிதிக்கு பிறகு எனக்கு பிடித்தவர் அப்பாஸ் கிராஸ்தமியும் இவரும் தான்.
நன்றி ராஜா சுப்ரமணியன்
எழுதுங்கள் நண்பா.
இந்த பெருசுங்களே இப்படிதாங்க... பாருங்க குழந்தைங்க அவங்க பாட்டுக்கு போய் விளையாடுறாங்க...இதுக சண்டை போடுதுங்க...நல்ல இருந்தது உங்க விமர்சனம். :)
Post a Comment