Love is the answer, but while you are waiting for the answer, sex raises some pretty good questions.
சிமோ தொலை தூர அரபு தேசமொன்றில் தன் தாயோடு வசித்து வருபவன். வேலையுமில்லை. மேலே படிக்க வசதியுமில்லை. ஆனால் நல்ல எழுத்து வளம் உள்ளவன். பெரிய எழுத்தாளனாக வரவேண்டும் என்று கொஞ்சம் ஆவல் உண்டு.ஆனால் சகவாச தோஷத்தால் ஊர் சுற்றி திரிகிறான். சதா நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு ஊர் சுற்றுவதும் வெட்டி பேச்சும் சிமோவின் அம்மாவுக்கு பிடிக்கவில்லை.
சிமோவின் டீச்சர் பாரிஸீல் எழுத்தாளர்கள் இணைந்து ஒரு பயிற்சி பட்டறை நடத்துவதாகவும் அதற்கு தன்னால் ஏற்பாடு செய்ய முடியும் என்று வீடு தேடி வந்து கூறுகிறாள். அந்த பயிற்சி கிடைத்தால் சிமோ நிச்சயம் நல்ல எழுத்தாளனாக முடியும் என்று தான் நம்புவதாக கூறுகிறாள். ஆனால் பயிற்சியில் சேர சிமோ ஒரு நல்ல சிறுகதையை எழுதி கொடுக்க வேண்டும் என்று அதை அனுப்பி வைத்து அவள் ஆவன செய்வதாகவும் கூறுகிறாள்.
ஆனால் சிமோவின் தாயிடம் அதிகம் பணமில்லை. சிமோவவை அனுப்பி வைக்கவும் மற்ற செலவுக்கும் தனக்கு வசதியில்லை என்று கூறுகிறாள். தன் முனைப்பும் நாட்டமும் இல்லாமல் நண்பர்களுடன் கும்மாளமிடுவதிலேயே காலத்தை கழிக்கிறான் சிமோ. நண்பர்களில் மெளலத் முக்கியமானவன். நல்ல பணக்காரன். சிமோவிற்கு அவனே சதா செலவு செய்கிறான்.
அந்த ஊருக்கு மேற்கத்திய தேசத்திலிருந்து தனது அத்தையுடன் வந்து சேருகிறாள் லைலா. இளமையும் அழகும் கொண்ட தேவதையாக இருக்கிறாள்.
அவள் தெருவில் வலம் வரும் போதெல்லாம் இளைஞர்கள் ஒருமாதிரியாகத்தான் பார்க்கிறார்க்ள். ஏனென்றால் முந்தைய நாட்களில் அவளது அத்தையின் தொழில் அப்படி என்று கிசு கிசுக்கிறார்கள். இவளும் அப்படிதான் என்றும் எண்ணுகின்றனர்.
ஒரு நாள் சிமோ தனிமையில் பூங்கா ஒன்றில் அமர்ந்திருக்கும் போது அங்கே வருகிறாள் லைலா. அவனிடம் பேசவும் செய்கிறார்கள். பூங்கா ஊஞ்சலில் ஆடும் போது அவள் அழகை ரசிக்கவும் அதற்கு காசு கொடுக்கவும் வேண்டுமென்கிறாள். சிமோ சம்மதிக்கிறான்.
சிறிது நேரம் உரையாடிவிட்டு பட்டாம்பூச்சியாய் பறக்கிறாள். காமம் பற்றி லைலா அதிகம் பேசுகிறாள். பல வித உணர்ச்சிகளை குறிப்பிட்டு தனது முந்தைய அனுபவங்களையெல்லாம் சொல்லவே குழம்பி போகிறான். சிமோ. ஆனாலும் அவள் நினைவுகள் அவனை சுற்றிய வண்ணமே இருக்கிறது.
நண்பர்களிடம் அதிக நேரம் செலவிட முடியாது தவிக்கிறான். ஆனால் நண்பர்களோ அவளை அடைந்தே தீர வேண்டும் என்று சபதம் செய்கின்றனர்.
அதிலும் சிமோவின் நண்பன் மெளலத்திற்கு அவள் மீதுள்ள அதீத இச்சை அதிகரித்து கொண்டேயிருக்கிறது. அவள் தெருவில் வரும் போதெல்லாம் லைலாவை சீண்டி கொண்டே இருக்கிறான். பல வித கொச்சை கேள்விகளையும் தைரியமாக கேட்டு கொண்டேயிருக்கிறான். கூடவே இருக்கும் சிமோவிற்கு இது கொஞ்சமும் பிடிக்கவில்லை. லைலா வெறுப்பாக விலகி ஒடுகிறாள். அவளை சீண்டுவதை சிமோ துளியும் விரும்புவதில்லை. அவள் மீது அவனுக்கு அன்பே அதிகமாகிறது. சிமோவிற்கும் மெளலத்திற்கும் மோதல் முற்றுகிறது. நண்பர்களை சந்திப்பதையும் தவிர்க்கிறான்.
சிமோவும் லைலாவும் அடிக்கடி சந்திக்கின்ற்னர். சந்திக்கும் போதெல்லாம் லைலா காமம் பற்றியே அதிகம் பேசுகிறாள். அதெல்லாம் உண்மையா இருக்குமோ என்று சிமோ அஞ்சுகிறான். சிமோ லைலாவை காதலிப்பதாக எண்ணி தாய் சிமோவை கண்டிக்கிறாள். அது மாதிரி பெண் உனக்கு தேவையா..?? அவளை சந்திக்க வேண்டாமென்றும் வேலைக்கு போகவும் வற்புறுத்தி இனி தன்னால் ஒரு பைசா கூட கொடுக்க் இயலாதென்றும் கூறுகிறாள். நண்பர்களிடம் பழகுவதை நிறுத்தியதாலும் தாயிடம் காசு கேட்க மனமில்லாததாலும் ரத்த தானம் செய்து செலவிற்கு பணத்தை ஏற்பாடு செய்கிறான்.
ஒவ்வொரு வார விடுமுறையிலும் ஒரு கார் வந்து லைலாவை ஏற்றி செல்கிறது. அதை மறைந்திருந்து பார்க்கிறான் சிமோ. அவன் குழப்பமும் கவலையும் அதிகரிக்கிறது. அவளிடம் தொடர்ந்து பழகுவதா வேண்டாமா என்று சிமோவின் மனம் துடிக்கிறது.
இதற்கிடையே ஒரு நாள் சிமோவும் லைலாவும் பேசுவதை ஒட்டு கேட்கிறான் மெளலத். அவளது பேச்சு அவள் அப்படி பட்ட பெண் தான் என்று உறுதியாகிவிட்டதாகவும் ஆனால் சிமோ மட்டும் அவளை அடைந்து விட்டதாகவும் நண்பர்களிடம் கூறுகிறான்.
சிமோ லைலா சந்திப்பில் ஒரு நாள் எப்போதும் காமம் பற்றி தான் பேசுவியா என்று லைலாவை கோபித்து கொள்கிறான் சிமோ. அழுத படியே வீடு நோக்கி ஒடுகிறாள் லைலா. அவளை சந்திப்பதையும் தவிர்க்கிறான்.
அன்று இரவு நண்பர்க்ள் வழக்கமாக சந்திக்கும் கிளப்புக்கு செல்கிறான். அடித்து நொறுக்கப்பட்ட கிளப் அலங்கோலமாக காட்சியளிக்கிறது. ஆனால் நண்பர்கள் எவருமில்லை. கிளப் முதலாளி மெளலத்தும் மற்ற நண்பர்க்ளும் நன்றாக குடித்து விட்டு லைலா வீட்டிற்கு செல்ல முயன்றதாகவும் அதை தடுத்ததால் இப்படி அடித்து நொறுக்கி தன்னையும் தாக்கியதாகவும் கூறுகிறான்.
பதைத்து போய் லைலா வீடு நோக்கி ஒடுகிறான் சிமோ. சிமோவின் நண்பர்கள் லைலாவின் அத்தையை கட்டி போட்டு விட்டு அடுத்த கட்டத்திற்கு ஆயுத்தமாகும் வேளையில் லைலாவை காப்பாற்ற போராடுகிறான் சிமோ.
அதற்குள் போலிஸ் வந்து விடவே அனைவரையும் கைது செய்து சிறையில் அடைத்து விடுகின்றனர். சிமோ தான் மட்டும் காப்பாற்ற வந்ததாக கதறுகிறான். ஆனால் போலீஸ் நம்ப மறுக்கிறது.
ஒரு சில நாட்கள் சிறையிலிருந்ததும் சிமோ மட்டும் குற்றவாளியல்ல என்று அறியப்பட்டு விடுதலையாகிறான். லைலாவை காண ஓடுகிறான். ஆனால் வீடு காலி செய்ய பட்டதாகவும் அவள் அத்தையுடன் இரண்டு நாட்கள் முன் போலந்து நாட்டிற்கு சென்று விட்டதாகவும் அறிகிறான். சொல்ல முடியாத வேதனையில் தவிக்கிறான் சிமோ.
வீட்டில் கிடந்தை பழைய குறிப்பேடுகளில் லைலா அவனிடம் சொல்லியதெல்லாம் வெறும் போலிப்புனைவுகள் என்று அறிகிறான். அவனை சீண்டி விளையாடவே அவ்வாறெல்லாம் செய்த்தாக குறிப்பெழுதியிருக்கிறாள் லைலா. அது மட்டுமல்லாது வார விடுமுறையில் பக்கத்து ஊரில் ஒரு குழந்தையையும் பார்த்து கொள்ள (baby sitting) வேலைக்கு அவள் சென்றதாக விஷயம் கேள்வி படுகிறான். சிமோவிற்கு வேதனையும் அழுகையும் அதிகரிக்கிறது.
லைலாவின் இருப்பிடம் பற்றி அறிய போலீஸ்காரரின் உதவியை நாடுகிறான். கடுமையாக முடியாது என்று முதலில் மறுத்தாலும் சிமோவின் வருத்தம் அவரை சற்று உருக வைக்கிறது. அட்ரெஸ் எல்லாம் கொடுக்க மாட்டேன். வேண்டுமென்றால் போன் செய்து தருகிறேன். லைலா விரும்பினால் அவளே உனக்கு முகவரி கொடுக்கட்டும் என்கிறார். அது போதும் என்று மகிழ்ச்சியோடு சம்மதிக்கிறான் சிமோ.
சிமோவால் லைலாவிடம் பேச முடியவில்லை. அவனது மனவெழுச்சி ஒன்று அதிக சந்தோஷமாகவும் அதே நேரம் துக்கமாகவும் இருக்கிறது.
I love you so much என்று முதல் முறையாக தன் காதலை சொல்கிறான் சிமோ. I know என்று ஆமோதிக்கிறாள் லைலா. போலிஸ்காரருக்கு நன்றி தெரிவித்து விட்டு செல்கிறான்.
லைலாவை பினனணியாக கொண்டு ஒரு அற்புத சிறுகதையை இரண்டே நாட்களில் எழுதி டீச்சரிடம் கொண்டு போய் மகிழ்ச்சியுடன் கொடுக்கிறான் சிமோ. டீச்சரும் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து பயிற்ச்சி பட்டறையிடமிருந்து ஸ்காலர்ஷிப் ஒப்புதல் கடிதத்தையும் கொண்டு வந்து கொடுக்கிறாள்.
பாரிஸிக்கு பயணமாகவும் வேளையில் பயிற்ச்சி முடிந்ததும் லைலாவை சந்திக்க போவதாக தாயிடம் கூறுகிறான். தாயும் சம்மதித்து ஆசியோடு அனுப்பி வைக்கிறாள்.
லைலாவால் தான் தன் வாழ்க்கை மாறியதாகவும் அவளை பற்றியே எண்ணி கொண்டு பயணிக்கிறான். லைலாவும் சிமோவால் தன் வாழ்க்கையும் மாறியதாக எண்ணி சிமோவிற்காக காத்திருக்கிறாள்.
2004ல் சிமோ என்ற பெயரில் பிரெஞ்சு நாவலாக எழுதிய Ziad Doueiri என்பவரே இத்திரைப்படத்தையும் எழுதி இயக்கியிருக்கிறார்.
அன்பாக பழக முயன்றது இயற்கைதான். ஆனால் தேவையில்லாத பொய்கள் ஏற்படுத்தும் சிக்கல்களை கொண்டு கதையை நகர்த்தியுள்ளார் இயக்குநர். வயதின் ஏக்கத்தால் காமம் பற்றி லைலா நிறைய பேசினாலும் அது ஆபாசமாக தெரியவில்லை. ஒரே வயதுடைய சிமோவிற்கும் குழப்பங்கள் வருவதும் தவிர்க முடியாததுதான்.
லைலாவாக நடிக்கும் Vahina Giocante கொள்ளை அழகு. அவளது வயதுகேற்ற இயல்பான ஆசைகள், இச்சைகள், கனவுகள் இவையே திரைப்படத்டை முன் நகர்த்துகினறன.பெரும்பாலும் குளாசப் ஷாட்டுகளால் இருவரின் நடிப்பையும் இயல்பாக சித்தரிக்கிறார் இயக்குநர். கதையின் நேர்த்தியாலும் காதல் பருவ வயதினாலும் சிமோ லைலா நடிப்பு அருமையாக மிளிர்கிறது. அதனால் தான் இருவருக்கும் சிறந்த நடிப்பிற்கான விருதுகளையும் பெற்று தந்துள்ளது.
பிரெஞ்சு சினிமாக்கள் எப்போதும் உலகெங்கிலும் ஒரு புதிய அலையை ஏற்படுத்தி கொண்டேயிருக்கிறது. இந்த திரைப்படமும் மான்ஸ், சூடான் திரைப்பட விழாக்களில் பங்கு பெற்றதுடன் பல பரிசுகளையும் வென்றுள்ளது.
சிமோவும் லைலாவும் ஒருவர் மீது ஒருவர் அதீத அன்பு செலுத்தினாலும் கடைசி வரை இருவரும் காதலை சொல்வதில்லை. இதுவும் பார்த்து மகிழ ஒரு வித்தியாசமான காதல் கதைதான்.
Lila Says = Erotic but not vulgar
சந்தர்ப்பம் கிடைத்தால் கண்டிப்பாக பாருங்கள்.
உடனே பார்க்க வழக்கப்படி டிரைலர்
தமது முதல் காதலை யாராலும் மறக்க இயலாது. மனதின் ஆழத்தில் எங்காவது யாருக்கும் தெரியாமல் ஒளிந்து கொண்டு உட்கிரக்கவும் முடியாமல் வெளியில் சொல்லவும் முடியாமல் நிழலாடி கொண்டுதானிருக்கும். அப்படிப்பட்ட பழைய நினைவுகளை கிளறி விட லைலாவின் காதல் கதை ஒரு காதலர் தின ஸ்பெஷல் என்று நான் சொல்லணுமா..?? நீங்க பின்னூட்டத்தில் சொல்லுங்க.
44 comments:
நண்பர்களே... I am back....
கண்டிப்பா பாக்க வேண்டிய படங்கள்ல இன்னொன்னு கூடிடிச்சு இப்ப. நல்ல பகிர்வுன்ணா.
Thanks for post. yes you back with a bang!
super review
thala back thala pola varuma....
thanks for sharing..
பார்க்க வேண்டிய படங்களின் வரிசையில் மற்றுமொன்று...
nice review!! thanks for sharing!!
இது ஏன் 18+?... மானாட மயிலாட குழந்தைகளுக்காக என்று இருக்கும் தமிழ் நாட்டில் இன்னும் பழமைகாரராய் இருக்கும் இந்த குழந்தைக்கு ( சூர்யா) எதை சொல்லி புரிய வைப்பது?!!
வழக்கம் போல் அருமையான விமர்சனம். சொல்லித் தெரியணுமா...
அருமை அருமை நண்பரே
பகிர்வுக்கு மிக்க நன்றி
முதல் காதல் மறக்க முடியாத ஒன்று தான் காதல் தின ஸ்பெசல் தான் இதன் படமும் உங்களின் இந்த பதிவும்
இதில் 18+ எங்கே இருக்கிறது? என்பதை நீங்கள் விளக்கவேண்டும். மக்களைப் பொறுத்த அளவில் இது ஒரு காதல் குடும்பச் சித்திரம். அருமையான கதை. தேர்ந்த விமர்சனம். இதுபோன்ற படங்களை தொரச்சியாக ரெவியூ செய்து எங்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தும்படி கேட்டுக்கொள்கிறோம். நன்றி.
//அன்பாக பழக முயன்றது இயற்கைதான். ஆனால் தேவையில்லாத பொய்கள் ஏற்படுத்தும் சிக்கல்களை கொண்டு கதையை நகர்த்தியுள்ளார் இயக்குநர்.//
உங்க டச் ங்குறது இதுதான் சூர்யா மிக அருமையன ரிவ்யூ நன்றி பகிர்வுக்கு
காதலர் தினம் வந்தாலும் வருது,
இந்த பதிவர்களின் காதல் தொல்லை தாங்க முடியவில்லை.
நல்ல, நேர்த்தியான விமர்சனம் சூர்யா.
வாழ்த்துக்கள்.
வழக்கம் போல் டிவிடி கொடுத்துடு!
வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி இராமசாமி.
நன்றி. ஜெ.ஜெ.
நன்றி ஜாக்கி. அப்பாவும் என்னை தலைன்னு சொல்லுவார். தறுதலை..
நன்றி ராஜி.
நன்றி சர்புதீன். மானாட மயிலாட பார்பதில்லை. வசனங்களுக்காக 18+ போட்டேன்.
நன்றி விக்கி. வழக்கம் போல் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி.
நன்றி வேல் கண்ணன்.
நன்றி திங்கள் சத்யா. அழகான காதல் கதைதான். ஆனால் சில காட்சிகளும் வசனங்களும் குழந்தைகளுக்கு ஏற்புடையதாயில்லை. அதானால் 18+
சில காட்சிகளை மிகை படுத்தாது எடிட் செய்து எழுதியிருக்கிறேன். திரைப்படம் பார்த்தால் உங்களுக்கே புரியும்.
தொடர்ந்து அன்பும் ஊக்கமும் அளித்து வ்ரும் நண்பர்களுக்காக கட்டாயம் தொடர்ந்து எழுத வேண்டும் என்று ஆவல் உண்டு.
முயற்சியும் செய்கிறேன்.
வாழ்த்துகள்.
நன்றி தேனம்மை.
நன்றி காவேரி கணேஷ். காதலர் தின சிறப்போ இல்லையோ .. இந்த படம் சிறப்பா இருக்கும்.
வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிங்கோ.
நன்றி மணிஜீ. வழக்கம் போல் தரேன். நீங்க வழக்கம் போல திருப்பி தராதீங்க..
படம் விமர்சனம் சூப்பர். நானெல்லாம் படம் பாத்து கத சொல்ல வந்ததே உங்களப் பாத்துதேன்.
@ தண்டோரா
அப்ப நானு உங்ககிட்ட இந்த டிவிடி வாங்கிக்கிறேன் தல.
நன்றி மயில். தண்டோரா திருப்பி தந்தால் உங்களுக்கு தருகிறேன்.
உங்கள் எழுத்து நடை மயக்கும் விதத்தில் உள்ளது.நான் படிக்கும் வலைகளிலேய உங்களுடயதுதான் மிக அருமையானது.வாரம் ஒரு முறையாவது கண்டிப்பாக பதிவிடவும்.
நன்றி ஜோஜோ.
நீங்கள் மற்ற வலைகளையும் படியுங்கள். அட்டகாசமாக எழுதுபவர்கள் ஆயிரம் பேர் இருக்கிறார்கள். நான் “ஆயிரத்தில் ஒருவன்” மட்டுமே.
வழக்கம் போல அற்புதமா எழுதி இருக்கிங்க..
நன்றி மாப்ளே.
பகிர்வுக்கு நன்றி.
இப்போதுதான் சம்சாரா பார்த்தேன்.இதையும் பார்த்து விடுகிறேன்.
சிமோ தொலை தூர அரபு தேசமொன்றில் தன் தாயோடு வசித்து வருபவன். வேலையுமில்லை. மேலே படிக்க வசதியுமில்லை. ஆனால் நல்ல எழுத்து வளம் உள்ளவன். பெரிய எழுத்தாளனாக வரவேண்டும் என்று கொஞ்சம் ஆவல் உண்டு.ஆனால் சகவாச தோஷத்தால் ஊர் சுற்றி திரிகிறான். சதா நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு ஊர் சுற்றுவதும் வெட்டி பேச்சும் சிமோவின் அம்மாவுக்கு பிடிக்கவில்லை. ]]
என்னைய பற்றி தானோன்னு நினைச்சிபுட்டேன்.
------------------
இரசிச்சி இயக்கியிருக்கின்றார் போல
Love is the answer, but while you are waiting for the answer, sex raises some pretty good questions
s s s
அழகாய் அற்புதமாய் காட்சிகள் கண்களுக்குள் விரிகிறது. ந.வி.
அற்புதமா எழுதிருக்கீங்க
படம் பாக்கனும்
// நீங்க வழக்கம் போல திருப்பி தராதீங்க..//
:-))
இங்கையும் அப்படி ஒருத்தர் இருக்கார்
உங்களின் விமர்சனமே படத்தை பார்க்க சொல்லி தூண்டுகிறது...மிக நல்ல பதிவு...உங்களின் பகிர்வுக்கு என் நன்றிகள்...
தலைவரே இந்த படத்த பஜார்ல பலான படம்ன்னு சொல்லி விக்கிறாங்க :(
எனக்கு படம் போரடித்தது சில எராடிக் காட்சிகளை தவிர்.. ஆரம்ப காட்சிகளில் ஹேண்டி காம் ஷாட்டுகள் அருமையாய் இருக்கும்
nice post .thanks for sharing
சூர்யா சௌக்கியமா? பதிவெல்லாம் செமையா இருக்கு.தொடர்ந்து கலக்குங்க..
விமர்சனம் அருமை..
Post a Comment