Kim Ki-duk உலகம் முழுவதும் உள்ள சினிமா ஆர்வலர்கள் இன்று உச்சரிக்கும் பெயர் இது. யார் இந்த Kim Ki-duk....????
Kim Ki-duk 1969 ம் ஆண்டு டிசம்பர் 20ம் தேதி தென் கொரியாவின் போங்வா என்ற சிற்றூரில் பிறந்தார்.
பள்ளி படிப்பை கொரியாவில் முடித்தார். சிறு வயது முதலே கலை, இலக்கியத்தில் பேரார்வம் கொண்ட அவர் 1990 ல் பாரிஸ் பயணமானார்
மூன்றாண்டுகள் பயின்று கொரியா திரும்பிய அவர் கதையாசிரியராக வேண்டும் என்ற ஆர்வத்தில் 1995 ஆண்டு கொரியாவில் நடைபெற்ற கொரிய திரைப்பட ஆய்வு குழு நடத்திய போட்டியில் முதல் பரிசு பெற்றார்.
Crocodile என்ற தனது முதல் படத்தை 1996 ல் இயக்கினார். இது வெளி வந்ததும் அனைத்து சினிமா ஆர்வலர்களின் கவனம் இவர் பக்கம் திரும்பியது.
கொரியாவின் ஹான் நதிக்கரையில் சாவை முத்தமிட தற்கொலைக்கு காத்திருக்கும் ஒரு இளம் பெண்ணை ஒருவன் காப்பாற்றி பின் அவளை கற்பழித்து ஒரு அதீத உறவுடன் அவளுடன் வாழ்வதே Crocodile திரைப்படம். மிக பரபரப்பாக கொரியா முழுவதும் பேசப்பட்ட படம்.
2000 ஆண்டில் வெளிவந்த The Isle பெரும் சர்ச்சையை கிளப்பியது.
விலங்குகளை குரூரமாக சித்தரித்து கொடுமை படுத்துவதாக கூறி British Board of Film Classification பிரிட்டிஷில் அனுமதி அளிக்க மறுத்தது.
தனது தவறுகளை ஒப்பு கொண்ட Kim Ki-duk அதற்காக மிகவும் வருந்துவதாக கூறினார். பின்னரே திரையிடப்பட்டது.
அடுத்தடுத்து 2001 ல் வெளியான Address Unknown, Bad Guy இரு திரைப்படங்கள் உலக அளவில் பேசப்பட்டன.
Address Unknown வெனிஸ் திரைப்படவிழாவிலும் Bad Guy பெர்லின் திரைப்படவிழாவிலும் பங்கு பெற்று அவர் உலக திரைப்பட இயக்குநர்களில் ஒருவரானார்.
2002ல் வெளிவந்த "The Coast Guard" நாட்டின் எல்லையில் பணிபுரியும் கப்பற்படை ராணுவவீரர்களின் மன அழுத்தத்தை பதிவாக்கிய ஒரு திரைப்படம். கொரிய திரைப்பட விழாவில் துவக்க நாள் நிகழ்ச்சியில் இடம் பெற்று இவருக்கு மேலும் பெருமை சேர்த்தது..
Spring, Summer, Fall, Winter... and Spring {2003} இந்த திரைப்படம் இவரது திரை உலக வாழ்க்கையை திருப்பி போட்டது. மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் ஒரு திரைக்காவியமாக விளங்கியது. மனித வாழ்க்கை சுழற்ச்சியை மையமாக கொண்டு 5 பாகங்களாக பிரித்து ஒவ்வொரு காலத்தையும் கண் முன் காவியமாக அமைத்திருந்தார். இப்படி ஒரு அற்புதமான சூழலை, நாம் நேரில் பார்த்ததுபோல ஓவியமாக வரைந்து காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் டாங் ஹையோன் பேக் (Dong-hyeon Back).
இந்த ஒளிப்பதிவை பற்றி பேசாதவர்களே இல்லை. இதுதான் Team work. பத்திற்கும் மேற்பட்ட உலக விருதுகளை அள்ளி சென்றது.
2004ல் வெளிவந்த 3 iron இந்த திரைப்படமும் அழகியல், செய்நேர்த்தி, கதை சொல்லும் முறை, என்று அந்தப் படம் ஒரு திரை ஓவியமாக இருந்ததாக பார்த்தவர்கள் பரவசமானர்கள். சாதரண கதையினூடே அற்புதமான மன எழுச்சியை அப்படம் தோற்றுவித்தது. மிகப்பெரிய இயக்குநர் அந்தஸ்த்தை பெற்று தந்தது.
Time { 2006 } திரைப்படம் Plastic Surgery பற்றிய ஒரு காதல் கதை. அழகியலையும் குரூரத்தையும் கொண்ட ஒரு திகில் படம் போலவும் இருந்து ரசிகர்களின் பேராதரவை பெற்றது.
Breath {2007} சாவை எதிர் நோக்கும் ஒரு தூக்கு தண்டனை கைதியின் பழைய காதலிக்குமான உறவை அற்புதமாக வெளிகாட்டிய திரைப்படம். கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கு பெற்றதுடன் போர்ச்சுகல் திரைப்பட விழாவில் பரிசை தட்டி சென்றது.
வருடத்திற்கு ஒரு படமோ அதிகபட்சம் இரண்டு திரைப்படங்களுக்கு மேல் இவர் எடுப்பதில்லை. ஆழ்ந்த சிந்தனையும் சிறந்த கதையும் அமையும் வரை நான் காத்திருக்கிறேன் என்கிறார்.
என்னதான் இவ்வளவு உலக சினிமா ரசிகர்களின் பேராதரவை பெற்ற இவரை அதீத புத்திகாரர் கொடுமைகளை சித்தரிக்கும் இவர் இயக்குனரே அல்ல என்று சில கொரிய ரசிகர்கள் இவர் மீது தீரா கோபத்திலும் உள்ளனர்.
ஆனால் இவரோ நான் சினிமா என்பதை முற்றிலும் வேறு விதமாகவே பார்க்கிறேன்.கொரியா மட்டுமே என் இலக்கு எல்லை..என் எல்லையும் இல்லை. எப்போதும் மற்ற திரைப்படங்களின் பாதிப்பு இல்லாத சினிமாவையே விரும்புகிறேன் . உலகமே வேறு மாதிரி எனக்கு தோன்றுகிறது அவையே என் படைப்புகள் என்கிறார். அவற்றிற்கும் மேலாக அனைவரையும் விருப்பத்தையும் பூர்த்தி செய்ய என்னால் இயலாது அது எனது வேலையும் இல்லை.. சற்று காட்டமாகவும் சொல்ல வேண்டுமென்றால் பன்றிக்கும் முத்துவிற்கும் என்ன சம்மந்தம் ..?? (Pearl has no meaning to a Pig) யார் முத்து? ??? யார் பன்றி????என்று நீங்களே முடிவு செய்யுங்கள் எப்படி இருந்தாலும் எனக்கு ஒன்றுதான் என்று தன் விமர்கர்களையும் வித்தியாசமாகவே கையாளும் Kim Ki-duk ஒரு வித்தியாசமான படைப்பாளிதான்.
Kim Ki-duk திரைப்பட்டியல்
Crocodile {1996}
Wild Animals (1997}
Birdcage Inn (1998}
The Isle {2000}
Real Fiction {2000}
Address Unknown {2001}
Bad Guy {2001}
The Coast Guard (2002}
Spring,Summer. Fall,Winter ....And Spring {2004}
3 - Iron {2004}
The Bow {2005}
Time {2006}
Breath {2007}

10 comments:
Kim-Ki-duk உள்ளூரில் மிகவும் விமர்சிக்கப்பட்ட இயக்குனர்..எனக்கு அவரின் கதை சொல்லல், காட்சியமைப்பின் விதம், படத்தின் ஒளிப்பதிவு..இவை மிகப் பிடிக்கும்.ரசனைகளின் அடி ஆழம் வரை சென்று காட்சிகளின் பரவசங்களை அனுபவிக்கலாம்..நன்றி சூர்யா. நல்ல பதிவு.
கருத்துகளுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி உமா.
நன்றி. உங்கள் தயவில் பல படங்களின் பெயரைத் தெரிந்துகொண்டேன்.
டிவிடியிலாவது பார்க்கப் பழகிக் கொள்வேன்.
நன்றி
வருகைக்கு நன்றி. அடிக்கடி வாருங்கள்.
வாழ்த்துக்கள்
அருமையான தொகுப்பு..டீவிடீயில் தேடிப்பார்க்க முயற்சிக்கிறேன்..
வருக சிவா. நன்றி..
பாருங்கள். அனுபவியுங்கள். ரசனை மாறினால் வாழ்க்கை மாறும்.
வாழ்த்துக்கள்.
நன்றி உமா.
நல்ல அறிமுகம் சூர்யா..கிம்-கி யின் 5 படங்கள் பார்த்துள்ளேன்.எந்த படமும் சோடையில்லை..பிறவற்றையும் தேடிப்பிடிக்க வேண்டும்...
நன்றி ரெளத்ரன்.
// Spring, Summer, Fall, Winter... and Spring {2003} இந்த திரைப்படம் இவரது திரை உலக வாழ்க்கையை திருப்பி போட்டது. மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் ஒரு திரைக்காவியமாக விளங்கியது.//
கண்டிப்பாக.இந்தப்படத்தை பற்றிய செழியனின் விமர்சனமும் மிக அருமையாக இருக்கும்.
அது போலவே 33 iron பற்றிய உமா அவர்களின் விமர்சனமும்.
இவரது மற்ற படங்கள் இன்னும் பாக்கவில்லை.
// Bad Guy //
இந்தப்படத்த கேட்டதுக்கு கடைக்காரர் old boy கொடுத்துவிட்டார்.படம் பார்தபிறகு ஒரு ரண்டு நாட்கள் சினிமா மேலையே ஒரு வெருப்பு ஏப்பட்டதுதான் மிச்சம்
திரைப்படங்கள் மட்டும் இன்றி அதன் இயக்குனர்கள் பற்றிய விமர்சனமும் அருமை சூர்யா.
Post a Comment