THE YELLOW HOUSE
{Algerian Film}
{Algerian Film}
இயற்கை எழில் கொட்டி கிடக்கும் கிழக்கு அல்ஜீரிய மலை பகுதிகளில் வாழும் ஒரு குடும்பத்தின போராட்ட கதை தான் "THE YELLOW HOUSE" .
பெருத்த வறுமையில் வாழும் ஒரு குடும்பத்தின் ஒரே மகன் ராணுவ விபத்தில் இறந்து விடவே அவனது சடலத்தை அடையாளம் கண்டு மீட்டு செல்லுமாறு ராணுவத்திடமிருந்து அழைப்பு வருகிறது.
சொல்ல முடியாத துயரத்துடன் தனது டிராக்டரில் மகளுடன் புறப்படுகிறார் தந்தை. மீளா துயருடன் திரும்பி தனது மகனின் ஈம சடங்குகளை முடித்து சற்று அமைதியாகிறார் தந்தை.
ஆனால் தாய் பாத்திமாவோ அமைதி இழந்து வாழ்க்கையே பறி கொடுத்த துயரத்தோடு அமைதியின்றி தவிக்கிறார். மஞ்ச்ள் நிறம் அமைதியை தரும் என்ற மருத்துவர் ஒருவரின் ஆலோசனையின் பேரில் சூழ்நிலையை மாற்ற வீட்டிற்கும் Yellow Paint அடித்து சூழ்நிலையை மாற்ற முயலுகிறார்.
அந்த வேளையில் அவரது மகன் நண்பன் ஒருவன் மூலம் அவரிடம் தருமாறு ஒரு வீடியோ கேசட்டை தருகிறான். உடனே வீட்டிற்கு ஒரு தொலைகாட்சி பெட்டியும், வீடியோ பிளேயரும் வாங்கி விடுகிறார்.
ஆனால் மின்சார இணைப்பு இல்லாமல் அதை எவ்வாறு பார்ப்பது...???
அவரது மகன் குடும்பத்தினருக்கு சொல்ல வந்தது என்ன??? அந்த டேப்பில் என்ன உள்ளது...???
விடை தெரிய நிச்சயம் பாருங்கள்
பயோடேட்டா:
இயக்கம்: Amor Hakkar
வகை: குடுப்பக்கதை (Drama)
வெளிவந்தது: 2007
மொழி: அரபி
காலம்: 84 நிமிடங்கள்
2 comments:
நல்ல படம். கேரள சர்வதேச திரைப்பட விழாவில் போன வாரம் பார்த்தேன்.
சென்னை திரைப்பட விழாவில் எதாவது படம் பார்த்தீர்களா?
ம்... திரைவிமர்சனம் கூட்டுப்பதிவில் பங்களிக்க வாங்களேன்!
நன்றி நண்பரே..
வீடு ,அலுவலகம் ,திரைப்பட விழா வீடு -->> பிளாக் என்று ஒரே அலைச்சல்தான். ஆனால் சந்தர்பம் கிடைத்ததில் மிகுந்த மகிழ்ச்சியே..
நிறைய எழுத விருப்ப்மே. நேரம் கிடைப்பதிலலை. முயற்ச்சிக்கிறேன்.
அடிக்கடி வாருங்கள்.
வாழ்த்துக்கள்.
Post a Comment