இந்திய சினிமா சில குறிப்புகள்
இந்தியாவில் வெளியான முதல் மௌனத் திரைப் படம் ராஜா ஹரிச்சந்திரா. அந்தப் படத்தை தயாரித் வெளியிட்டவர் தாதா சாகிப் பால்கே (1913).
இந்தியாவில் வெளியான முதல் பேசும் படம் அர்தேஷ் இரானியின் ஆலம் ஆரா (1931).
தமிழில் முதல் மௌனப் படம் கீசகவதம் (1919). {Not confirmed}
தமிழில் முதல் பேசும் படம் காளிதாஸ் (1931).
தமிழின் முதல் கேவா கலர் திரைப்படம் அலிபாபாவும் 40 திருடர்களும்.
தமிழின் முதல் ஈஸ்ட்மென் கலர் திரைப்படம் காதலிக்க நேரமில்லை.
தமிழின் முதல் சினிமாஸ்கோப் திரைப்படம் ராஜராஜ சோழன்.
பாடல்களே இல்லாமல் தயாரிக்கப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் "அந்த நாள்." சிவாஜி கணேசன் இதில் anti roll. அதாவது வில்லன் & கதாநயாகன்.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் 3D திரைப்படம் மைடியர் குட்டிச்சாத்தான்.
ஆஸ்கர் விருபெற்ற ஒரே இந்திய இயக்குநர் சத்யஜித்ரே. இவரின் முதல் படம் 'பதேர் பாஞ்சாலி'.
பாரதி பாடல்கள் முதல் முதலாக இடம்பெற்ற தமிழ்ப்படம் "மேனகா"
இந்தியாவில் சினிமாவுக்கான உயர்ந்த விருது தாதா சாஹிப் பால்கே விருது.
முதல் முதலாக தாதா சாஹிப் பால்கே விருதைப் பெற்றவர் தேவிகா ராணி (1969).
தாதா சாஹிப் விரு பெற்ற முதல் தமிழ் நடிகர் சிவாஜி கணேசன் (1996).
சிறந்த நடிகருக்கான தேசிய விருது 'பாரத்'.
'பாரத்' விருது பெற்ற முதல் தமிழ் நடிகர் எம்.ஜி.ஆர். (ரிக்கஷாகாரன் 1971).
சிறந்த நடிகைக்கான தேசிய விருது 'ஊர்வசி'.
நடிகர் கமல்ஹாசன் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை மூன்று முறை பெற்றுள்ளார்.
நடிகர் விக்ரம் 'பிதாமகன்' படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றுள்ளார்
இந்தியாவிலேயே சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதை 5 முறை பெற்ற ஒரே பாடலாசிரியர் வைரமுத்து
.தேசிய ஒருமப்பாட்ட வலியுருத்தும் சிறந்த திரப்படங்களுக்கு வழங்கப்படும் தேசிய விருது 'நர்கீஸ் தத் விருது'. இயக்குநர் மணிரத்னத்தின் 'ரோஜா', 'பாம்பே' படங்கள் 'நர்கீஸ் தத் விருது' பெற்றுள்ளன.
புதுமுக இயக்குநரின் முதல் சிறந்த படத்திற்கான தேசிய விருது 'இந்திரா காந்தி விருது'. 'புதியபாதை' படத்திற்காக இந்த விருயைப் பெற்றவர் பார்த்திபன்.
சிறந்த படத்திற்கான 'தங்கத் தாமரை' விருது பெற்ற முதல் தமிழ் திரைப்படம் 'மறுபக்கம்'.
சிறந்த இயக்குநருக்கான தேசிய விருது பெற்ற ஒரே தமிழ் இயக்குநர் அகத்தியன் (காதல் கோட்டை)
1931 ஆம் ஆண்டு அக்ட்டோபர் மாதம் 31 ஆம் திததியில் வெளிவந்த காளிதாஸ் திரைப்படமே தமிழில் வெளிவந்த முதல் பேசும் திரைப்படமாகும்.
1944-ல் வெளிவந்த ஹரிதாஸ் திரைப்படமே தமிழில் அதிக நாட்கள் ஓடிய திரைப்படமாகும். தொடர்ந்து 110 வாரங்கள் திரையில் காண்பிக்கப்பட்ட மிகப்பெரும் சாதனைப்படமாக இத்திரைப்படம் விளங்குகின்றது.
1937-ல் லண்டன் மாநகரில் எடுக்கப்பட்ட நவயுவன் என்னும் படமே முதன்முதலாக வெளிநாட்டில் எடுக்கப்பட்ட தமிழ்த் திரைப்படமாகும். கெய்ரோவில் நடைபெற்ற ஆப்பிரிக்க ஆசிய திரைப்பட விழாவில் பங்கேற்ற வீரபாண்டிய கட்டப்பொம்மன் திரைப்படமே வெளிநாட்டுத் திரைப்பட விழாவில் காண்பிக்கப்பட்ட முதல் தமிழ்த் திரைப்படமாகும்.
1934 ஆம் ஆண்டு வெளிவந்த ஸ்ரீ கிருஷ்ண லீலா திரைப்படமே அதிக பாடல்களைக் கொண்டு வெளியிடப்பட்ட தமிழ்த் திரைப்படமாகும்.இத்திரைப்படம் 62 பாடல்களைக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
1986 ஆம் ஆண்டு வெளிவந்த மாவீரன் திரைப்படமே முதன் முதலாக 70 எம்.எம் அளவினால் எடுக்கப்பட்ட தமிழ்த் திரைப்படமாகும்
1943 ஆம் ஆண்டு கன்னட மொழியில் வெளிவந்த அரிச்சந்திரா திரைப்படமே தமிழில் மொழி மாற்றம் செய்து வெளியிடப்பட்ட முதல் வேற்றுமொழித் திரைப்படமாகும்
பதினொரு இயக்குனர்கள் 12 கதாநாயகர்கள் 8 கதாநாயகிகள் இணைந்து நடித்து 24 மணி நேரங்களிலேயே எடுக்கப்பட்ட சுயம்வரம் என்னும் தமிழ் திரைப்படம் உலக சாதனை புத்தகமான கின்னஸ் இல் பதிவு செய்யப்பட்ட பாரட்டுதற்குரிய திரைப்படமாகும்
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
samsaram adhu misaram padatthirku oru thanga thamarai virudhu kidaitthadhe(visu/avm)
வெல்கம்
டு
த
விகடன்
ப்ளாக்
க்ளப்.
கங்கிராட்ஸ்
வண்ணத்துபூச்சி
சார்.
யு
மேட்
இட்.
மன்னிக்கனும்.திடீர்ன்னு--ஸ்பேஸ்பார்--வொர்க்--ஆகலை.அதுதான்..இப்படி--அடிக்க--வேண்டியதா--ஆய்டுச்சி.
Thanx Bala.. All with your encouragement and wishes..
ஹாய்......... வ. பூ. யாரே
நல்ல தேடல் ......என்னுடைய நிகழ்ச்சியிலும் உங்கள் பெயரோடு
இதை சேர்த்துக்கொள்ள விரும்புகிறேன்.... உத்தரவு தருவீர்களா ???
1944-ல் வெளிவந்த ஹரிதாஸ் திரைப்படமே தமிழில் அதிக நாட்கள் ஓடிய திரைப்படமாகும். தொடர்ந்து 110 வாரங்கள் திரையில் காண்பிக்கப்பட்ட மிகப்பெரும் சாதனைப்படமாக இத்திரைப்படம் விளங்குகின்றது.
இந்த சாதனையை சந்திரமுகி முறியடித்துவிட்டது...
ENA NINAIKIREN...
blogs பக்கம் சென்ரு கண்டு பிடித்து விட்டேன்.
நல்ல தொகுப்பு .சினிமா பார்த்து விமரிசனம் பண்ணுவது மட்டும் போதாது ,அதன் வளர்ச்சி,அதற்கான விருதுகள் பற்றியும் அறிந்திருக்க வேண்டும்
நன்றி கோமதி. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் பல..
Post a Comment