Charlie and the Chocolate Factory
குழந்தைகளுக்கான திரைப்படம்
சாக்லேட்டை விரும்பாத குழந்தைகள் உலகத்தில் உண்டா..??அதே போலத்தான் இந்த திரைப்படத்தை பார்த்தால் பரவசப்படாத குழந்தைகளும் உலகில் இருக்க மாட்டார்கள்.
இது முழுக்க முழுக்க குழந்தைகளுக்கான திரைப்படம்.
நவீன விட்டலாசார்யா படம் என்று கூட சொல்லலாம்.
ஒரு சாக்லேட் தொழிற்சாலையின் முதலாளியான வில்லி வோன்கா தன் சாக்லேட் தொழிற்சாலைக்கு வந்து பார்வையிட குழந்தைகளுக்கு ஒரு வாய்ப்பு அளிபதற்காக சாக்லேட்டுடன் ஐந்து கூப்பன்களை இணைத்து நாடு முழுவதும் அனுப்புகிறார்.
அந்த ஊரிலேயே வசிக்கும் மிகுந்த ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த சார்லிக்கு இந்த சந்தர்பத்தை எப்படியாவது அடைய வேண்டும் என்று மிகுந்த ஆர்வம்.
சார்லியின்ஆசைநிறைவேறியதா..???

என்னஅதிசயம்அந்தசாக்லேட் தொழிற்சாலையில் என்பதே கதை.
இது சாதாராண சாக்லேட் தொழிற்சாலை அல்ல. ரகசிய செய்முறைகளை யாரோ கடத்தி வெளியே விற்றுவிட்டார்கள் என்ற கோபத்தில் முதலாளியான வில்லி வோன்கா எல்லா தொழிலாளர்களையும் விரட்டி விட்டு தானே நடத்தும் ஆச்சரியமும் ரகசியமும் மிகுந்த சாதாரண ஆட்களே இல்லாத ஒரு அதிசய தொழிற்சாலை.
ஆட்களே இல்லாமல் சாக்லேட்கள் உற்பத்தியாகி வெளியே அழகாக டப்பாக்களில் அடைக்கப்பட்டு வெளியே வருகிறது
சாக்லேட் சாப்பிடக்கூடாது என்று பல்டாக்டரான தந்தையால் மிகவும் கண்டித்து வளர்க்கப்பட்டவர்தான் இந்த அதிசய சால்லேட் தொழிற்சாலையின் முதலாளி வில்லி வோன்கா . அந்த கோபத்தில் தான் இந்த தொழிற்சாலையே துவங்குகிறார்.
முன்னொருநாளில் இந்த தொழிற்சாலையில் வேலை பார்தவர்தான் சார்லியின் தாத்தா
இந்த வேளையில் தான் அந்த அறிவிப்பு வருகிறது. எல்லா இடங்களிலும் போஸ்டர் ஒட்டபடுகிறது.
வோன்காவின் சாக்லேட்களில் ஐந்து சாக்லேட்களில் மட்டும் "தங்க அனுமதி சீட்டு" (கோல்டன் டிக்கெட்) வைக்கப்பட்டிருக்கிறது என்றும் யாருக்கு கிடைக்கிறதோ அந்த ஐந்து குழந்தைகள் தொழிற்சாலையை சுற்றிப்பார்க்க ஒரு நாள் அனுமதிக்கப்படுவார்கள்.
அதைவிட முக்கியம் அவர்களில் ஒருவருக்கு நினைத்துப்பார்க்கமுடியாத ஒரு பரிசு கூடுதலான இன்ப அதிர்சியும் உண்டு என்பதே. குழந்தைகள் அனைவரும் பேரார்வம் கொள்கின்றனர்.
ஆனால் ஏழ்மை காரணமாக சாக்லேட் வாங்க முடியுமா என்ற கவலை அடைகிறான் சார்லி.
சார்லியின் பிறந்தநாளுக்காக ஒன்று பரிசாக பெறுகிறான். ஆனால் அந்த சாக்லேட் பட்டையில் கூப்பன் கிடைக்கவில்லை. ஆனால் அவன் அதை பெரிதாக நினைக்காமல் அதனை குடும்பத்திலிருப்போர் அனைவருடனும்பகிர்ந்துகொள்கிறான்.
தன் பேரனுக்காக தனது சிறு சேமிப்பில் இருந்து அவன் தாத்தா ஒரு சாக்லேட் வாங்கி தருகிறார். துரதிருஷ்டமாக அதிலும் கூப்பன் கிடைக்கவில்லை
ஆனால் அதற்கும் 4 பேர் கூப்பன் (கோல்டன் டிக்கெட்) பெற்றதாக தொலைகாட்சியில் பேட்டிக்கொடுக்கிறார்கள்..
இன்னும் இருப்பது ஒரே ஒரு சீட்டுத்தான்

மிகுந்த சோகத்தோடு சாலையில் சென்று கொண்டிருக்கும் போது
சாலையில் பணத்தை கண்டெடுக்கிறான்.
அந்த பணத்தை கொண்டுஒரு சாக்லேட்டும் வாங்குகிறான். உலகமே தன் வசப்பட்டதுபோல பூரித்து போகிறான் சார்லி.
ஆம்.. சார்லிக்கு அந்த கூப்பன் கிடைத்துவிடுகிறது.

ஆனால் குடும்பத்தில் வறுமை. அவனது தந்தைக்கும் வேலை போய்விட்டது. அந்த கூப்பனுக்கு ஏகப்போட்டி. உடனே தனது குடும்பத்தின் ஏழ்மை காரணமாக அதை நல்ல விலைக்கு கூட விற்று விடலாம் என எண்ணுகிறான். ஆனால் அவனது இன்னொரு தாத்தாவோ ஒப்பு கொள்ளாமல் கண்டிப்பாக இந்த வாய்ப்பை பயன் படுத்த சொல்கிறார்.
சார்லி பெருத்த உற்சாகமடைகிறான். ஒவ்வொரு குழந்தையும் தன்னோடு ஒரு பெரியவர்களை அழைத்துச் செல்லலாம் என்பதால் அவன் அவனுடைய அங்கு வேலை பார்த்த தாத்தாவையே கூட்டி செல்கிறான் அங்கே வருகின்ற குழந்தைகளில் சார்லியைத் தவிர மற்றக்குழந்தைகள் அனைவருமே பெரிய பணக்கார குழந்தைகள். அதுவும் சரியாக வளர்க்கப்பட்டவர்கள் இல்லை. அனைவரும் பலவித சேஷ்டைகளில் ஈடுபட சார்லியோ கடைசி வரை தொழிற்சாலையை சுற்றி பார்த்ததுடன் வில்லி வோன்காவின் அன்பையும் நல்லெணத்தையும் பெறுகிறான்.
நீதான் எனது வாரிசு. இந்த தொழிற்சாலைக்கு உன்னை முதலாளி ஆக்குகிறேன். இங்கேயே தங்கிவிடு எனபதுதான் வில்லி வோன்கா வின் இன்ப அதிர்ச்சி.
அந்த சந்தர்பத்திலும் பேராசை படாத சார்லி குடும்பத்தினரை விட்டு பிரிய மனமில்லாமல் வேண்டாம் என மறுக்கிறான்.
இதை எதிர்பார்க்காத வில்லி வோன்கா அவனது நல்லெண்ணத்தை பாராட்டி குடும்பதினருடன் தங்கி கொள்ள அனுமதி தந்ததும் சார்லியும் மொத்த குடும்பமும் தொழிற்சாலைக்கு இடம் பெயருவதுடன்... சுபம்.
ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விதமாக அடிக்கும் லூட்டிகள் நல்ல நகைச்சுவை. அதுவும் அந்த குண்டு பையன் செய்யும் சேஷ்டைகளும் சதா பபூள் கம் ஊதும் பெண்ணும் திரைப்படம் பார்க்கும் குழந்தைகளை மகிழ செய்யும்.
தொழிற்சாலை செட்டிங்குகளும் சாக்லேட் ஆறு, சாக்லேட் அருவி என்றும் அதில் வேலை செய்யும் குள்ளமனிதர்களின் ஆட்டமும் பாட்டும் நிச்சயம் குழந்தைகளை துள்ளி குதிக்க வைக்கும்.
Roald Dahl என்பவரின் குழந்தைகளுக்கான நாவலையே அற்புத திரைப்படமாக எடுத்துள்ளார் இயக்குநர் Tim Burton
குழந்தைகளுக்காக அதிக திரைப்படங்களை வெளியிடும வார்னர் பிரதர்ஸ் தான் இந்த திரைப்படத்தையும் தயாரித்து வெளியிட்டுள்ளது.
குழந்தைகள் மட்டுமல்லாது அனைவரும் பார்க்க, ரசிக்க
மகிழவைக்கும் சிறந்த குடும்ப திரைப்படம்.
குறிப்புகள்:
நடிப்பு: Johnny Depp, Freddie Highmore மற்றும் பலர்.

கதை : Roald Dahl
இயக்கம்: Tim Burton.
காலம்: 115 நிமிடங்கள்
வெளிவந்தது: 2005
வெளியீடு: Warner Bros. Pictures
13 comments:
வண்ணத்துபூச்சியார்,
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.என் வலைக்கு வந்து வாழ்த்தியதற்கு நன்றி. மேலே உள்ள படம் நான் பார்த்துள்ளேன். வேறு ஒரு வலையில் கூட இதைப்பற்றிப் போட்டிருந்தார்கள்.
நன்றி.
படம் பார்க்கலை, பார்த்துட்டுச் சொல்றேன், ரசிப்புத் தன்மையில் குறைந்தவர் இல்லைனு புரியுது. புத்தாண்டு வாழ்த்துகள்.
Thanks for dropping in my blog. Nanri! I loved this film. The second version was better than the first one, I thought.
Happy New Year to you and hope it brings you everything that you wish for :)
Hi, Nice Review,
Thanks for visiting my blog
EE RAA
வந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி.
வாழ்த்துக்கள்
விமர்சனம் நன்று. கூகிளின் inline comments முதல் முதலா உங்க பதிவுல தான் செயல்பட்டு பார்க்கின்றேன் (தமிழ் பதிவுகளில்)
புத்தாண்டு வாழ்த்துக்கள்.
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி காண்டீபன். அடிக்கடி வரவும். தங்களுக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
என் வலையை வந்து பார்த்து கவிதையாய் வாழ்த்து சொன்ன உங்களுக்கு நன்றி..
இந்த படங்களில் சில POGO TV இல் வருவதால் காணும் வாய்ப்பு கிடைக்கிறது .
நல்ல புதுமையான தகவல் சொல்கிறது உங்கள் வலை..
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி அகிலா.
POGO TV யில் வருகிறாதா?அப்படியா..?? நான் ரொம்ப டிவி பார்பதில்லை.
புத்தகம் அல்லது DVD தான்.
வாழ்த்துக்கள். அடிக்கடி வரவும்.
நீங்கள் குழந்தைகளுக்கான படம் என்றதுமே ஓடி வந்து பார்த்தேன்:)
சாக்லெட் போலவே இனிப்பாக இருக்கின்றன உங்கள் எழுத்தும்.
இனி ஆங்கிலப்படங்களை உங்கள் வலைப்பதிவிலேயே பார்த்துவிடலாம்.
நன்றி.
நட்புடன்,
அஞ்சனா
அஞ்சனா.
ஒடி வந்ததிற்கு நன்றிகள் பல. குழந்தையாய் மாறிவிட்டால் இல்லை ஒரு தொல்லை என்ற கவியரசரின் வரிகள் நினைவிற்கு வருகின்றன.
நான் சிறு வயதில் படித்து என்னை மெருகேற்றிய அம்புலிமாமா , பாலமித்ரா, தெனாலி ராமன் கதைகள், முத்து, ராணி மற்றும் லயன் காமிக்ஸ்” போன்ற புத்தகங்கள் இந்த தலைமுறைக்கு அன்னியமாக வே இருக்கிறது.
கதை புத்த கங்களை படிக்கும் ஆர்வம் மிகுதியாக இல்லாத இந்தியாவில் குழந்தைகளுக்கு என்று திரைப்படமே இல்லை என்பது மிகுந்த வேதனையான விஷயம். அதனால் தான் குழந்தைகளுக்கு மன அழுத்தமும் வீணான சிந்தனக்களும் வருகிறது என்பது உளவியலாளர்கள் கருத்து.
தமிழகத்தில் எல்லா குழந்தைகளும் அழுது வடியும் சீரியல்களையும் சினிமா, போட்டிகள் என்ற பெயரில் ஆபாச நடனங்களையும் அருவருக்கதக்க நிகழ்வுகளையும்
நடு ஹாலில் உட்கார்ந்து மணிகணக்கில் பார்ப்பது என்பது கொடுமையிலும் கொடுமை.
அந்த ஆதங்கத்தில் தான் குழந்தைகளுக்கான திரைப்படங்களை தேடி தேடி பார்த்து பதிவு செய்கிறேன்.
தங்களையும் மகிழ்ச்சியடைய செய்ததற்கு கிடைத்த வாய்ப்பை எண்ணி நானும் மகிழ்ச்சியால பறக்கிறேன்.
தங்களுடைய வலைப்பூ முகவரி கொடுக்கவும்.
இந்தக் கதை சுட்டி விகடனில் தொடராக வந்த போது படித்திருக்கிறேன்.. விறுவிறுப்பாக இருந்தது..
Post a Comment