அளவற்ற அன்பும் நண்பர்களிடம் மிகுந்த நட்பும் கொண்டவள் ஜேன்.
தோழிகளின் திருமணத்தை விமர்சையாக்கும் விதமாக பல வகை ஏற்பாடுகளையும் சுய ஆர்வத்தோடு செய்வதை வழக்கமாக கொண்டவள்.
இதுவரை 27 தோழிகளின் திருமணத்தில் பங்கெடுத்த்து
நற்பெயரை பெற்றவள். ஒவ்வொரு திருமணத்திற்கும் ஒவ்வொரு விதமான உடைகளை தேர்ந்தெடுத்து அந்தந்த பாரம்பரியத்தோடு தைத்து அவைகளை அணிந்து திருமணத்திற்கு பணிவிடை செய்வதோடு அனைத்தையும் குறிப்பெடுத்து தனது டைரியில் எழுதி வைக்கிறாள்.
அவளின் முதலாளியான ஜார்ஜ் மீது ஒரு தலை காதலை கொண்டவள். அவனோடு தனது எல்லாவிதமான விருப்பங்களோடும் விதவிதமான ஏற்பாடுகளோடும் திருமணம் நடை பெற வேண்டும் என்ற கனவில் வாழ்ந்து வருகிறாள்.
28 வது உடையாக ஜார்ஜோடு திருமணம் என்ற கனவு நனவானதா என்பதே ரசனை மிகுந்த 27 Dresses திரைப்படம். A Simple theme entertainment movie. வெளிவந்தது 2008.
ஒரே நாளில் இரண்டு திருமணவிழாக்களில் பங்கெடுத்த களைப்பால் ஜேன் எழுதி வைத்துள்ள டைரியை தவற விட்டு விடுகிறாள். அதை கெவின் என்ற பத்திரிகையாளன் ( Freelance Journalist ) கண்டெடுக்கிறான். அந்த டைரியில் அவளுக்குள்ள வினோத திருமண பங்கெடுப்புகளை அறிந்து அவள் மேல் காதல் கொள்கிறான்.
இதற்கிடையே அவளுடன் சில நாட்கள் தங்குவதற்காக ஜேனின் தங்கை டெஸ் வருகிறாள். ஒரு பார்டிக்கு அழைத்து செல்லும் போது அவளது தங்கை அவளது முதலாளியான ஜார்ஜை விரும்புகிறாள்.
அது தவிர ஜார்ஜை கவர்வதற்காக டெஸ் பல விதமான பொய்களை கூறி அவனை தன் வசப்படுத்திவிடுகிறாள்.
நற்பெயரை பெற்றவள். ஒவ்வொரு திருமணத்திற்கும் ஒவ்வொரு விதமான உடைகளை தேர்ந்தெடுத்து அந்தந்த பாரம்பரியத்தோடு தைத்து அவைகளை அணிந்து திருமணத்திற்கு பணிவிடை செய்வதோடு அனைத்தையும் குறிப்பெடுத்து தனது டைரியில் எழுதி வைக்கிறாள்.
அவளின் முதலாளியான ஜார்ஜ் மீது ஒரு தலை காதலை கொண்டவள். அவனோடு தனது எல்லாவிதமான விருப்பங்களோடும் விதவிதமான ஏற்பாடுகளோடும் திருமணம் நடை பெற வேண்டும் என்ற கனவில் வாழ்ந்து வருகிறாள்.
28 வது உடையாக ஜார்ஜோடு திருமணம் என்ற கனவு நனவானதா என்பதே ரசனை மிகுந்த 27 Dresses திரைப்படம். A Simple theme entertainment movie. வெளிவந்தது 2008.
ஒரே நாளில் இரண்டு திருமணவிழாக்களில் பங்கெடுத்த களைப்பால் ஜேன் எழுதி வைத்துள்ள டைரியை தவற விட்டு விடுகிறாள். அதை கெவின் என்ற பத்திரிகையாளன் ( Freelance Journalist ) கண்டெடுக்கிறான். அந்த டைரியில் அவளுக்குள்ள வினோத திருமண பங்கெடுப்புகளை அறிந்து அவள் மேல் காதல் கொள்கிறான்.
இதற்கிடையே அவளுடன் சில நாட்கள் தங்குவதற்காக ஜேனின் தங்கை டெஸ் வருகிறாள். ஒரு பார்டிக்கு அழைத்து செல்லும் போது அவளது தங்கை அவளது முதலாளியான ஜார்ஜை விரும்புகிறாள்.
அது தவிர ஜார்ஜை கவர்வதற்காக டெஸ் பல விதமான பொய்களை கூறி அவனை தன் வசப்படுத்திவிடுகிறாள்.
இதை அறியாத ஜேன் தன் தங்கைக்கும் ஜார்ஜ்க்கும் திருமண ஏற்பாடுகளை தானே செய்கிறாள்.
தனது தங்கையின் நேர்மையின்மையால் ஜேன் மிகுந்த மன வருத்தம் அடைகிறாள். ஒரு சந்தர்பத்தில் சகோதரிகள் இருவரும் சண்டையிடவே நேர்மை தவறிய டெஸ் கூறிய பொய்களை போட்டு உடைக்கிறாள். ஜார்ஜ் டெஸ் திருமணம் தடை படுகிறது.
இறுதியில் தன்னை மிகவும் நேசித்த கெவினை மணக்கிறாள். சுபம்.
ஜேனின் திருமணத்திற்கு அவள் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் பங்கெடுத்த 27 மணமக்களும் அந்தந்த உடையணிந்து ஜேனுக்கு நன்றியை செலுத்துவது அத்தனை அழகு.
டெஸ் தனது நேர்மையின்மையை உணர்ந்து இனி உண்மையாக நடக்க விரும்பி தனக்கு ஏற்ற துணைக்காக காத்திருக்கிறாள்.
30 வயது ஆன ஜேனாக நடித்த Katherine Heigl நடிப்பு அருமை. நடிப்பில் மட்டுமல்லாது கதையாசிரியர், தயாரிப்பாளர் என்று பன்முகம் திறமை கொண்டவர். பல விருதுகளை அள்ளி சென்றவர்.
இத்திரைப்படத்தின் இயக்கம் Anne Fletcher என்ற பெண் என்பதும் இவரும் நடனம் தொடங்கி பன்முகம் திறமை கொண்டவர் என்பதும் கூடுதல் சிறப்பு.
பொழுது போக்காக பார்க்கலாம்.
A simple entertainment movie.
21 comments:
27 Dresses,the reason for it,& the aim for the 28 th dress are nice.Limited characters & emotion oriented film.I have heard of Katherine Heighl.thank u Butterfly Surya for giving a look into a nice film.
Thanx Dr for your comments.
அறிமுகத்திற்கு மனமார்ந்த நன்றி.
நன்றி புதுகை.
அடிக்கடி வாங்க.
தங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் நன்றி
நான் அதிகம் படம் பார்ப்பதில்லை.. ஆனால், உங்கள் விமர்சனம்(!?) அழகா இருக்கு..:)) நிச்சயம் பார்க்க முயற்சிக்கிறேன்.. :))
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நல்ல திரைப்படங்களை பாருங்கள்.
ரசனை மாறினால் வாழ்க்கை மாறும் - ஓஷோ
Hello Surya,
Surprised to see your post 27 Dresses" !!!
This is one of fav movies and i really enjoyed every bit of it. It was sheer fun to watch Jane (Katherine Heigl)swap costumes as braidesmaid for diff weddings!!
Your review is pleasant tribute to a b'ful movie!
Keep writing:-).
Cheers.....Viji
Thanx Viji. Of course it is one of my pet movies too.
Thanx for your motivating comments which will encourage me to keep going.
Cheers.
சூர்யா,
உங்கள் எழுத்தே படத்தைப்பார்க்கும் ஆர்வத்தை தூண்டி விடுகின்றதே. படத்தை விட எழுத்தில் எனக்கு ஆர்வம் அதிகம் அதனால் உங்கள் எழுத்தால் ஒரு படத்தைப்பார்த்த நிறைவும் சேர்ந்தே வருகின்றது.
நட்புடன்,
அஞ்சனா
அஞ்சனா வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள் பல.
தங்கள் வாழ்த்தும் அளவற்ற அன்பும் நீங்களும் ஒரு ஜேன் என எண்ண தோன்றுகிறது.
அள்ளிதர நட்புடன்
சூர்யா
Hey Surya,
Last week only i watched this movie. I like her voice very much ( oru mathiriyaana kara kara kural, but it was nice to me ).
I like, "jane and george verifying their love" scene also. She delivered her emotions (anger, adjustment, love, sacrifice ) incredibly in that movie.
good movie and nice review
Hi,
There is word verification while submitting comments, is there any special reason for that? if not, could you please remove that. thanks!
நன்றி ஆளவந்தான் முதல் வருகைக்கும் வாழ்த்திற்கும்.
காட்சிகள் எல்லாமே நிறைவுதான். As you said nice movie to watch.
Thanx for your visit.
அடிக்கடி வரணும்.. ஆலோசனை தரணும்.
வாழ்த்துக்கள்.
Removed the word verification. Plz try again.
//
அடிக்கடி வரணும்.. ஆலோசனை தரணும்.
//
kandippaaka undu
//
Removed the word verification. Plz try again.
//
neenga romba faast :)
நன்றி... நன்றி... நன்றி...
நல்ல நட்பிற்கு கொஞ்கம் ஓவர் Fast தான். தலை கால் தெரியாதுன்னு தங்கமணி வையும்.
என்ன பண்றது.?? பழகிட்டேன்..
வண்ணத்துப்பூச்சியார்... உங்கள் பதிவுகள் அழகான படங்களுடன் அற்புதமாக உள்ளன. தொடர்ந்து உலகப் படங்களை அறிமுகப்படுத்தும் உங்கள் பணி தொடரட்டும்... உங்களைப் பற்றிய சிறு அறிமுகத்தை profile-ல் போட்டால் நன்றாக இருக்கும் என்பது என் எண்ணம்...
வருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றி சாணக்கியன்..
Profile ல் போடற அளவுக்கு ஒரு பெரிசா ஒண்ணும் இல்லை. சின்னதா போட்டு இருக்கேனே..
உங்களுக்காக:
பிறந்து வளர்ந்தது சென்னை.
16ம் வாய்ப்பாடு வரை படிச்சிருக்கேன்..
Software தெரியாது.. சேமியா உப்புமா பிடிக்காது.. பல ஊர்களிலும் அமீரகத்திலும் வேலை செய்து விட்டு மீண்டும் குடும்பத்துடன் சென்னை.
அறிந்து கொண்டது:
அதன் பயனாக பணம் ஒண்ணும் பெரிசா சம்பாதிக்கல.. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் & ஆங்கிலம் போன்ற மொழிகளையும் நிறைய நண்பர்களையும் சம்பாதிச்சேன் என்ற நிறைவு உண்டு..
புரிந்து கொண்டது:
உலகம் முழுவதும் வாழ்கையே யந்திரமயமாகவே இருக்கிறது.
"வாழ்க்கைக்காக தான் வேலையே தவிர,
வேலைக்காக வாழ்க்கை இல்லை..."
நட்புகொண்டது:
Lot of friends... Friends எல்லாம் தலைன்னு கூப்பிடுவாங்க..
அப்பாவும் தலைன்னுதான் சொல்லுவா.(தறுதலை)
கற்றுகொண்டது:
10 வயதில் படித்து என்னை மெருகேற்றிய அம்புலிமாமா , பாலமித்ரா, தெனாலி ராமன் கதைகள், முத்து, ராணி மற்றும் லயன் காமிக்ஸ்" போன்ற புத்தகங்கள்.
20 வயதில் Lenin, Marx, Sujatha, Sandilyan, Madan, Balakumaran,Merwin, Dale carnegey, Steven covey etc.,etc.,
தற்போது ஓஷோ..
Master of all masters Osho தான் குரு...
பக்திகொண்டது:
பக்தி ரொம்ப தெரியாது.. ..அன்புதான் பக்தின்னு நம்புறேன்..
But much beleive in cosmic power.{பிரபஞ்ச சக்தி) Very interesting subject..
ஆதங்கபட்டது:
உலக சினிமாவிற்கும் தற்போதைய தமிழ் சினிமாவிற்கும் வானத்திற்கும் பூமிக்குமான இடைவெளி.....
மற்றும் கதை புத்தகங்களை படிக்கும் ஆர்வம் மிகுதியாக இல்லாத இந்தியாவில் குழந்தைகளுக்கு என்று திரைப்படமே இல்லை என்பது மிகுந்த வேதனையான விஷயம். அதனால் தான் குழந்தைகளுக்கு மன அழுத்தமும் வீணான சிந்தனக்களும் வருகிறது என்பது உளவியலாளர்கள் கருத்து.
தமிழகத்தில் எல்லா குழந்தைகளும் அழுது வடியும் சீரியல்களையும் சினிமா, போட்டிகள் என்ற பெயரில் ஆபாச நடனங்களையும் அருவருக்கதக்க நிகழ்வுகளையும் நடு ஹாலில் உட்கார்ந்து மணிகணக்கில் பார்ப்பது என்பது கொடுமையிலும் கொடுமை.அந்த ஆதங்கத்தில் தான் குழந்தைகளுக்கானயும் திரைப்படங்களை தேடி தேடி பார்த்து பதிவு செய்கிறேன்.
மகிழ்ச்சிகொண்டது:
தங்களை போன்ற முகம் தெரியாத பல நல்ல உள்ளங்களை மகிழ்ச்சியடைய செய்ததற்கு கிடைத்த வாய்ப்பை எண்ணி நானும் மகிழ்ச்சியால பறக்கிறேன்.
So simply: NOT BEST BUT NOT LIKE REST.
படங்களின் கதையை விட உங்கள் வாழக்கைக் கதைச் சுருக்கம் இனிமையாக உள்ளது,நண்பரே.மேலும் மேலும் வளங்கள்,நலங்களுடன் நீங்கள் வாழ எனது வாழ்த்துகள்.
நீங்கள் எழுதும் விமர்சனம் படத்தை பார்க்க தூண்டுகிறது.
Post a Comment