ரெக்ஸ் என்ற நாய்தான் இத்திரைப்படத்தின் கதாநாயகன். என்ன ஆச்சிரியமாய் இருக்கிறதா..? ஆம்..அப்படிதான் சொல்ல வேண்டும்..
ஒரு சிறுவனின் வாழ்க்கையில் ஒரு நாய் ஏற்படுத்திய மாற்றமும் அவர்களின் அழகான அன்பும் ஆழமான நட்பும் தான் மிகச்சிறந்த குடும்ப திரைப்படமான Fire House Dog
வீர சாகசங்களும், விளையாட்டுகளும் செய்யும் ரெக்ஸ், ஹாலிவுட் திரைப்டங்களிளும் விளம்பர பட ங்களிலும் நடிக்கும் ஒரு நாய். அதை ஒரு பொக்கிஷமாக வைத்திருக்கும் அதன் முதலாளி அதை மிகவும் அன்போடு குடும்பத்தில் ஒருவராக பராமரித்து வருகிறார்.
குடும்பத்தில் ஒருத்தராக போற்றப்பட்ட ரெக்ஸ் ஒரு எதிர் பாராத திரைப்பட படப்பிடிப்பில் விமானதிலிருந்து விழுந்து விடுகிறது. அனைவரும் அது இறந்து விட்டதாகவே எண்ணி கண்ணீருடன் அதற்கு இறுதி சடங்குகளும் செய்து விடுகிறார்.
ஆனால் விமானத்திலிருந்து விழுநத ரெக்ஸ் தெரு நாய்களுடன் சுற்றி வருகிறது. இதை ஷேன் என்ற 12 வயது சிறுவன் கண்டெடுக்கிறான். அவனது தந்தை ஒரு தீ விபத்து அதிகாரி. ஷேனும் அவனது தந்தையும் ரெக்ஸின் உண்மையான உரிமையாளரை கண்டுபிடிக்க முயல்கின்றனர். முடியாமல் போகவே அதற்கு ஒரு புதிய பெயரிட்டு வளர்க்க ஆரம்பிக்கிறார்கள்.
இந்த அதிசிய நாயின் வரவால் ஷேனுக்கும் வாழ்வில் ஒரு வித பிடிப்பு ஏற்பட்டு விடுகிறது. அதை மிகவும் அன்புடனும் ஆழ்ந்த நட்புடனும் பராமரிக்கிறான்.
தீயணைப்பு அதிகாரியான ஷேனின் தந்தைக்கு பல வழிகளில் உதவி அந்த தீயணைப்பு குழுக்களில் ஒன்றாகி விடுகிறது ரெக்ஸ்.
எதிர்பாரதவிதமாக ஷேனின் குடும்ப சொந்தங்களில் ஒருவர் சந்தேகத்திற்கு இடமான முறையில் இறக்கிறார். ரெக்ஸின் துணையோடு அதையும் கண்டு பிடிக்கிறான் ஷேன்.
பத்திரிகைகளில் செய்தி வெளிவரவே ரெக்ஸின் புகழ் மீண்டும் ஊர் முழுக்க பரவுகிறது. வந்தது வினை. அதன் உண்மையான உரிமையாளர் வந்து விடுகிறார்.
ரெக்ஸை பிரிய மனமில்லாமல் வாடுகிறான் ஷேன்.
தீயணைப்பு குழுக்களில் ஒன்றாகி பல வித சேவைகளை செய்து வரும் ரெக்ஸ், ஷேனின் இருப்பதே சிறந்தது என்று உணர்ந்த அதன் உரிமையாளர் அவனிடமே விட்டு விட்டு செல்ல முடிவெடுக்கிறார்.
சொல்ல முடியாத ஆனந்ததில் குதிக்கிறான் ஷேன். மீண்டும் தன் பயணத்தை தொடர்கிறது ரெக்ஸ். சுபம்.
இதுவும் குழந்தைகளுக்கேற்ற மிக சிறந்த திரைப்படம். வெளி வந்தது 2007.
நாய் செய்யும் சாகசங்களும்,விளையாட்டுகளும் குழந்தைகளை மகிழ்ச்சியூட்டும்.
ஷேனாக நடித்த சிறுவன் குழந்தை நட்சத்திரத்திற்க்காக பல விருதுகளை வென்ற Josh Hutcherson.
அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம்.
Don't Miss குட்டீஸ் ....
10 comments:
:) Innum parkala. but sounds interesting.
Dear Dinesh Thanx for your visit & Comments.
Focus Lanka திரட்டியில் இணைந்து கொள்ளுங்கள்
http://www.focuslanka.com
You are posting nice movies.Firehouse dog story nice vannaththu poochchi.
Thanx Dr.M for your comments.
நன்றாக உள்ளது, தொடரட்டும் உங்கள் பணி, மேலும் செழியன் மற்றும் எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய உலக சினிமா புத்தகங்களை படித்தீர்களா?,
அதில் குறிப்பிட்டுள்ள படங்களை உங்கள் எழுத்து நடையில் படிக்க ஆசைபடுகிறேன்.
http://aruvadai.wordpress.com
நன்றி ஆதிரை.
செழியனின் புத்தகங்கள் பல மாதங்களுக்கு முன்னால வாங்கினேன். மிகவும் நன்றாக இருக்கிறது. அவரின் எழுத்தும் நடையும் என்னை மிகவும் கவர்ந்தது. His writings inspired me a lot to write.
எஸ்.ராவின் உலக சினிமாவும் உள்ளது. ஆனால் அது ஒரு சினிமா கரூவூலம் போல எனக்கு தோன்றுகிறது.
I felt it's like a dictionary.
But Good collection & informative.
ஆர்வ மிகுதியால் சென்னை புத்தக கண்காட்சியில் நிறைய வாங்கி விட்டு தங்கமணியிடம் செம திட்டு வேறு.
நிறைய எழுத ஆசைதான். நேரம் ..??
நிச்சயம் முயலுகிறேன்.
வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் பல.
வண்ணத்துபூச்சியாரே, நன்றி! நன்றி! மிக்க நன்றி!
குழந்தைகள் பற்றி நீங்கள் கூறுவது ரொம்ப சரி,
“ஒரு காட்சியை காண்பிப்பதற்கு பதில், படிப்பவர் கற்பனைக்கு விட்டு விட்டால் தான் குழந்தைகளின் எண்ணத்தில் அதை பற்றிய காட்சி விரியும் creativity யும் வளரும்” என்று எங்கோ படித்தது ஞாபகம் வருகிறது.
நான் சிறு வயதில் படித்து என்னை மெருகேற்றிய “பூந்தளிர் , அம்புலிமாமா , பாலமித்ரா , ராணி மற்றும் லயன் காமிக்ஸ்” போன்ற புத்தகங்கள் இந்த தலைமுறைக்கு அன்னியமாக வே இருக்கிறது,
சுட்டி, டூன் போன்ற டீ வீ க்கள் சிறிதளவாவது இந்த வேலையை செய்கின்றன,
மேலும் நான் wordpress இல் அதிகம் எழுதுவதில்லை, http://aruvadai.blogspot.com/ என்ற முகவரிக்கு ஒரு முறை சென்று பாருங்கள், (அறுவடையில் இருப்பது எல்லாம் நான் படித்த , கேட்ட, குறுஞ்செய்தி களில் வந்த துணுக்குகள் , சொந்த சரக்கு கிடையாது, என்னுடைய சொந்த சரக்கிற்கு http://paazhveli.blogspot.com/ ஒரு முறை சென்று பாருங்கள்)
வருகைக்கும் comments க்கும்
நன்றி
வாழ்க வளர்க.
ஆதிரை
http://aruvadai.blogspot.com/
http://paazhveli.blogspot.com/
ஆதிரை Absolutely right.. Sure. I will.
இந்த படம் எங்கேயே பார்த்த மாதிரி இருக்குது...
சன் டிவியில் ஹாலிவுட் திரைப்படங்கள் வரிசையில் இதை போட்டார்களா!!
எனக்கு இந்த நாய் சம்பந்தப்பட்ட படங்கள் என்றால் பார்க்க விருப்பம்.
Post a Comment