இத்திரைப்படத்தை "Delicious Fun" என்ற USA Today பத்திரிக்கையின் விமர்சனத்தையே விளம்பரப்படுத்தி வசூலை வாரி குவித்திருக்கிறார்கள். வெளிவந்தது 2007
ஜீனா தாயாக போகும் ஒரு இளம் மனைவி. அவளுக்கோ ஒரு சிறுஉணவகத்தில் கேக் தயாரிப்பதுடன் கூடிய சர்வர் வேலை.
கணவனோ ஒரு பண வெறி பிடித்தவன். சதா அவளை துன்புறுதுவதுடன் அவள் சேமிப்பு அனைத்தையும் அபகரித்து கொள்கிறான். அவனை பிரிந்து வாழ தன் நிதி நிலைமை சரி வராததால் பல கஷடங்களையும் பொறுத்து கொண்டு வாடுகிறாள் ஜீனா.
அவ்வளவு சிரமங்களிலும் அளவற்ற உற்சாகத்துடனும் சுறுசுறுப்புடனும் உணவக வாடிக்கையாளர்க்ளை உபசரிக்கிறாள்.
விரைவில் தான் தாயாக போவதால் தன் உடல் நலம் பற்றி தகுந்த ஆலோசனைகள் வழங்க ஜிம் என்ற ஒரு மருத்துவரை சந்திக்கிறாள் ஜீனா.
வாழ்க்கையே மாறுகிறது. டாக்டருக்கு ஜீனா மீது காதல் ஏற்படுகிறது.
கணவனின் அன்பை பெற்றிராத ஜீனாவும் டாக்டரிடம் அதீத காதல் கொள்கிறாள். ஆனால் கருவுற்றிருக்கும் தான் எப்படியும் குழந்தை பெற்று தனியாக வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற மன உறுதியுடன் இருக்கிறாள்.
தான் தயாரிக்கும் உணவு வகைகளை கொண்டு ஒரு சமையல் போட்டியில் வென்று 25,000 டாலர் பரிசை பெற கடும் முயற்ச்சிகளை மேற்கொள்கிறாள்.
குழந்தையை சுமந்தபடி அந்த இளம் மனைவி பாடுபடும் காட்சிகள் அத்தனை சோகம். அவளின் ஒரே உறுதுணை அவளுடன் வேலை பார்க்கும் Dawn என்ற தோழி மட்டுமே. தோழியின் கதாபாத்திரமாக நடித்திருப்பது Adrienne Shelly என்ற ஹாலிவுட் நடிகை.
தான் கருவுற்று தாயான தருணங்களில் தான் பெறப்போகும் குழந்தையை நினைத்து அதற்கு தயார் செய்வதாக எண்ணி புதுப்புது உணவு வகைகளை தயார் செய்கிறாள். தான் பெறப்போகும் குழந்தைக்கும் லூலூ என பெயரிடுகிறாள். குழந்தையும் பிறக்கிறது.
டாக்டருக்கு ஜீனா மீது காதல் தீவிரமாகிறது. டாக்டர் ஏற்கெனவே திருமணமானவர். டாக்டரின் மனைவியோ டாக்டர் மீதும் அவரது மருத்துவ சேவை மீதும் அதிக நம்பிக்கையுடன் இருப்பதை உணர்ந்து ஜீனா டாக்டரை ஒரு நல்ல நண்பராகவே பாவிக்க முயல்வதுடன் அவரிடம் உள்ள காதலை தவறென உணர்ந்து அதற்கு ஒரு முற்று புள்ளி இடுகிறாள்.
குழந்தையுடன் மருத்துவ்மனையில் இருக்கும் நாட்க்ளில் அவள் அன்புடனும் உற்சாகத்துடனும் ஹோட்டலில் உபசரித்த பெரும் செல்வந்த முதியவர் ஒருவர் உடல் நலம் குன்றி ஒரு அறுவை சிகிச்சைக்காக அதே மருத்துவ மனையில் அனுமதிக்கப்படுகிறார்.
ஜீனாவின் துன்பங்களையும் அவளது கணவனின் கொடுமைகளையும் அறிந்த முதியவர் மிகப்பெரிய தொகையை அவளுக்கு பரிசாக வழங்குகிறார். அத்துடன் சமையில் போட்டியிலும் வென்ற செய்தி அவளுக்கு தெரிய வருகிறது.
எல்லாமே தனது குழந்தையினால கடவுள் தனக்கு அளித்த பரிசாக எண்ணி அந்த பணத்தை கொண்டு தானே ஒரு புதிய உணவகத்தை தன் அன்பு குழந்தையின் பெயரிலேயே {லூலூ உணவகம் } தொடங்கி குழந்தையுடன் தன் விருப்பபடி ஒரு புது வாழ்வு வாழ முற்படுகிறாள்.
ஜீனாவாக நடிக்கும் Keri Russell அமெரிக்காவில் மிகவும் புகழ் பெற்ற சின்ன திரை தாரகை. ஏகப்பட்ட விருதுகளை குவித்தவர். இவரது தந்தையும் ஒரு நாடக நடிகர்.
இவரது கொள்ளை அழகும், நடனமும் துறு துறு வென நடிப்பையும் விவரிக்க வார்த்தைகள் இல்லை.
தோழியாக நடித்த Adrienne Shelly என்ற ஹாலிவுட் நடிகை இத்திரைப்படம் வெளிவரும் முன்னரே (1 நவம்பர் 2006) தற்கொலை என கருதப்பட்டு பின்பு திட்ட மிட்ட கொலை என நியூயார்க போலிஸால் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அமெரிக்காவில் மிகவும் பரபரப்பானதுடன் ஒரு கொடிய சோகம்.
திடீர் திடீரென முத்த காட்சிகளும் நகைச்சுவையும் கொண்ட பொழுது போக்கு திரைப்படம்.
Yes.. Really It's Delicious Fun.. But Not For Kids
14 comments:
நல்ல திறனாய்வு. பதிவிற்கு நன்றி.
என் தளம் காண
http://pnaptamil.blogspot.com சொடுக்கவும்.
கதை சூப்பர் கட்டாயம் படத்தை பாக்கணும்
Nice story,waitress,the girl,her husband,pregnancy,doctor,cooking competition,the baby,the reward-all mixed evenly.
முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி பிரசன்னா.
கட்டாயம் பார்க்கிறேன். அடிக்கடி வாருங்கள்.
வாழ்த்துக்கள்.
வருகைக்கு நன்றி கஜன்.
நல்ல கதையும் நிறைவையும் தரும் படங்களின் அறிமுகமும் அதன் தொடர்பு செய்திகளை மட்டுமே இட விரும்புகிறேன்.
4 fight 5 பாட்டு பற்றி எழுத நிறைய பேர் இருக்கிறார்கள்.
தங்கள் ஊக்கத்திற்கும் நன்றிகள் பல.
Thanx Dr.M for your first visit and comments. Yes It's a good movie to watch.
Plz visit and post your valuable comments often.
Thanx again.
சூர்யா,
இங்கேயும் கலி முத்திடுத்து போல் தெரிகிறது. :-)(கடைசி படத்தை சொல்கிறேன்)
Good to see the visit of an ardent film reviewer!!
So Nice & thanx Bags.
ஹாலிவுட்ல இதெல்லாம் சகஜமப்பா.. தங்கள் திருவுள்ளம் அறியாததா..??
சும்மா குழந்தைகளுக்கு மட்டும் தான் படம் காட்டுவியாடா? என்று நண்பன் நச்சரித்து நல்ல படம் போடாவிட்டால் "பாடிகாட் மூனிஸ்வரன்" கிட்டே முறையிடுவேன்னு சொன்னான்.
அதானால் தான்.
அடிக்கடி வாங்கோ..
மீண்டும் நன்றிங்கோ..
நல்லா இருக்கு உங்கட பதிவு .. நாங்கள் பின்தொடருவதற்கு வசதியாக ஒரு லிங்கை கரையில் பொட்டால் நல்லாருக்கும். அந்த word verification ஐ எடுத்து விட்டுருங்கோ
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பாண்டி.
எப்படிங்க நேரம் கிடைக்குது !!!!
:)
சேவியர்
வாங்க சேவியர்.. என்ன பண்ணறது தல.? ஒரு உற்சாகம்தான்.
நன்றிகள்.. அடிக்கடி வாங்க..
படம் பார்க்க தூண்டுகிறது உங்கள் விமர்சனம்
Good review. Just to add, Adrienne Shelly whom you have mentioned here (character Dawn in the film) is also the director of this film.
Post a Comment