பேரே சற்று வித்தியாசமாக இருக்கும் இத்திரைப்படம் யூப் அவனது மனைவி ஹேசர் மற்றும் அவர்களது பதின்ம வயது மகன் இஸ்மாயில் பற்றிய துருக்கி திரைப்படம்.
இந்த மூவரின வாழ்க்கையில் எதிர்பாராத சம்பவங்களால் என்ன நடக்கிறது என்பதே அழகாகவும் அற்புதமாகவும் சித்தரிக்கப்பட்ட எளிய திரைப்ப்டம்.
சர்வட் என்ற ஒரு உள்ளூர் அரசியல்வாதியின் காரோட்டியாக பணிபுரிகிறான் யூப்.
சர்வட் ஒரு நடுஇரவில் காரோட்டும் போது விபத்தாகி இறக்கிறாள் ஒரு பெண். முதலாளியின் அறிவுறுத்தலின் பேரில் அதற்கு பொறுப்பேற்று சிறை செல்கிறான் யூப்.
யூப் சிறை சென்றாலும் அவனது மாதச்சம்பளத்தை குடும்பத்திற்கு அளிப்பதாகவும் விடுதலையாகும் போது பெரும் தொகை தருவதாகவும் வாக்குறுதி அளிக்கிறான் சர்வட் .
மாத்ந்தோறும் தொகையை பெறுவதற்காக சர்வட்டிடம் செல்கிறாள் ஹேசர். இருவரும் நெருங்கி பழக ஆரம்பிக்கின்றனர்.
தந்தை அருகில் இல்லாத தைரியத்தில் எந்த பொறுப்பும் இல்லாமல் நண்பர்களுடன் குடிப்பதும் ஊர் சுற்றுவதுமாய் திரிகிறான் இஸ்மாயில்.
சர்வட் ஹேசர் உறவுகள் எல்லை மீறுகின்றன. இச்சந்தர்பத்தை பயன் படுத்தி அவனிடமிருந்து சிறிது சிறிதாக பண்த்தையும் கற்க்கிறாள் ஹேசர்.
மகனுக்கு ஒரு கார் வாங்கி பரிசளிக்கிறாள். திடிரென பணவரவால் சந்தேகம் கொள்கிறான் இஸ்மாயில்.
சற்றும் நம்ப முடியாத ஒரு தருணத்தில் இருவரது உறவுகளையும் அறிந்து விடுகிறான் இஸ்மாயில்.
பதின்ம வயதானதால் சொல்ல முடியாத வேதனையில் தவிக்கிறான். இத்தருணத்தில் யூப் விடுதலையாகிறான்.. தன்னை அழைத்து செல்ல காரோட்டி வந்த மகனிடம் பணவரவுக்கான
காரணத்தை கேட்கிறான். பதில் கூற முடியாமல் திணறுகிறான் இஸ்மாயில்.
ஹேசரின் மனதில் ஏதோ மாற்றம் இருப்பதாக யூகிக்கிறான் யூப். கணவன் மனைவி இடையே
மனஸ்தாபங்களும் வாக்குவாதமும் வலுக்கிறது.
யூப் பெரும்பாலும் வீட்டில் இருக்காமல் ஒரு சிற்றுண்டி விடுதியில் வேலை செய்யும் உறவுகள்ற்ற ஒரு விடுதி சிப்பந்தியோடு பொழுதை கழிக்கிறான். யூப் செய்யும் உதவிகளுக்காக அவன் பெரும் கடைமை பட்டிருப்பதாயும் அவனுக்காக எந்த உதவியும் செய்ய தயாராக இருப்பதாயும் கூறுகிறான்.
ஹேசர் தனிமையில் சந்திந்து சர்வட்டிடம் முறையிடுகிறாள். சர்வட்டும் நடந்தவைகளையெல்லாம் மறந்து விட்டு தன்னை விட்டு விலகும் படி கோபப்படுகிறான். ஹேசர் மறுக்கிறாள்.
இக்கட்டான தருணத்தில் முதலாளி சர்வட் கொலை செய்ய படுகிறார். தானே இக்கொலையை செய்ததாக பெற்றோரிடம் கூறுகிறான் இஸ்மாயில்.
எல்லாவற்றையும் தான் பார்த்து கொள்வதாயும் கவலைப்பட தேவையில்லை என்றும் கூறி மகனை சமாதான படுத்துகிறான் யூப்.
ஒவ்வொருவரும் தத்த்ம் நிலையை எண்ணி வருந்துவதாக முடிகிறது THREE MONKEYS.
இத்திரைப்படத்திற்கு ஒளிப்பதிவும் எடிட்ங்கும் மிக்ப்பெரிய பலம்.
முதல் காட்சியியே {opening shot } மிரள வைக்கும் வித்ததில் ஒளிப்பதிவு.
ஒளிப்பதிவு இயக்குநர் Gokhan Tiryaki. மிக மிக வித்தியாசமான காட்சி அமைப்புகள்.
அருமையான எடிட்டிங். கொலை செய்ததது யார் என யூகிக்க முடியாமல் சில காட்சிகள் திகிலடைய செய்கிறது. மூவர் இத்திரைப்படத்திற்கு குழுவாக எடிட் செய்துள்ளனர்.
இயக்கம்: Nuri Bilge Ceylan. இதுவரை முப்பதைந்திற்கும் மேற்பட்ட விருதுகளை வாங்கியவர்.
கேன்ஸ் திரைப்படவிழாவிலும் இன்னும் பல விழாக்களிலும் பரிசு பெற்ற திரைப்படம்.
தமிழில் இது போன்ற "குரங்குகள்" எப்போது...????
Labels:
Dont Miss Movies,
Three Monkeys,
Turkey Film
|
Estou lendo: "Uc Maymun" (Three Monkeys)Tweet this! | Assine o Feed |
Subscribe to:
Post Comments (Atom)
28 comments:
என்னுடைய துருக்கிய தோழி பரிந்துரைத்து நான் பார்த்த படங்கள். முடிஞ்சா பார்த்துட்டு விமர்சனம் எழுதுங்க தல.
Babam ve Oglum (My Father, My Son)
Iklimler (Climates)
சூர்யா,
உங்கள் வலை பூவுக்கு வாழ்த்துக்கள்.
நீங்க போட்டு தாக்க ஆரம்பிச்சு ரெம்ப நாளாச்சு போலயே...சொல்லவே இல்ல :)
ரொம்ப நாள் சினிமா பத்தி எழுதலாமா வேண்டாமா அப்பிடின்னு ஒரு யோசனை, சரின்னு முடிவு பண்ணி ஒரு வித்யாசமா ஒரு ட்ரைலர் போட்டேன். மக்கள் நாடி சரி புடிக்கல போல..நெறைய பேரு நான் என்ன சொல்ல வந்தேங்கறதே புரியலேன்னு சொல்லிடாங்க :)
ஆனா நான் தளர்றதா இல்ல...ஹிட்ச்காக் பத்தி ரொம்ப டீடெய்லா ஒரு கட்டுரை எழுத போறேன்..
ஆன் சைட் வந்ததுல ஒரு பெரிய உபயோகம் என்னனா...எனக்கு புடிச்ச சினிமாவ ரசிச்சு ருசிச்சு பாக்கறேன். எந்த தொந்தரவும் இல்லாம... ஒரு 1 TB hard driveல முழுக்க உலக சினிமா தான். என்ன நேரம் போதல... எத பாக்க எத மொதல்ல பக்கன்னு தெரியாம தவிக்கிறேன்..:(
ஹாலிவுட் பாலா நன்றி... தோழிக்கும் எனது நன்றிகள்..பார்க்க கொள்ளை ஆவல் தான். ஆனால் DVD தேடுவது பெரிய வேலை. முயற்ச்சி செய்கிறேன். பார்க்க வேண்டிய லிஸ்ட் கூடிகிட்டே போகுது.
முதல் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி பாலா.சொல்லாமல் போனதற்கு மன்னிக்கவும். தங்கள் நண்பர்களுக்கும் கூறவும்..
ஆன்சைட்டா..??? தூள்தான்.. ஆன்சைட் பத்தி சில அழகிய {???} மெயில்கள் உள்ளது. மெயில் முகவரி கொடுங்கள். அனுப்பி வைக்கிறேன்.
வாரத்திற்கு மூன்று படம் பாருங்கள். குறிப்பு மட்டும் எடுத்து வைத்து கொள்ளுங்கள். நேரம் கிடைக்கும் போது எழுதுங்கள். (I follow this}
அடிக்கடி வாருங்கள்.. ஆலோசனை தாருங்கள்.
வாழ்த்துக்கள்..
Iklimler (Climates)
Climate பார்த்தேன் அதன் முடிவு அருமையாக இருக்கும்.துருக்கின்னாளெ இஸ்தான்புல்தான் நினைவுக்கு வரும் இதுல கொஞ்சம் வேரு விதமா காட்டிருப்பாங்க.
நல்ல படம்.
// ஆனால் DVD தேடுவது பெரிய வேலை. முயற்ச்சி செய்கிறேன். பார்க்க வேண்டிய லிஸ்ட் கூடிகிட்டே போகுது.//
இவருகிட்ட கேளுங்க சூர்யா கவுத்;9841898145
வாங்க கார்த்திக். தகவலுக்கு மிக்க நன்றி.
Is it an emotional film?
Story of a family with turns & twins.
எல்லாமே அருமையான,தரமான விமர்சனங்கள்.பாராட்டுக்குரிய பணி.நன்றி நண்பரே..
மதிப்பிற்திற்குரிய இயக்குநர் ஷண்முகப்பிரியன் மிக்க நன்றி.
திரைத்துறை இயக்குநரின் பாராட்டு என்னை மிகவும் ஊக்கப்படுத்துவதுடன் அளவில்லா மகிழ்ச்சியும் தருகிறது. தங்களின் படைப்பான பிரம்மா என் தந்தையை மிகவும் கவர்ந்த திரைப்படங்களில் ஒன்று. தொடர்ந்து வாசித்து நிறை / குறைகளையும் ஆலோசனைகளையும் தாருங்கள்.
மீண்டும் நன்றியும் வணக்கமும்.
'விரைவில்’ இலங்கை போவார்ன்னு சொன்ன ப்ரணாப் முகர்ஜி கூட போய்ட்டு வந்துட்டாராமே? நீங்க விமர்சனம் போட மாட்டேங்கறீங்களே?!
டெய்லி 1-2 தடவை பார்த்து போய்ட்டே இருக்கேன். ரொம்ப பிஸியா இருக்கீங்கன்னு நினைக்கிறேன்.
[அந்த இரண்டு படங்களையும் நான் பார்த்துட்டேன். நியாயம், தர்மம் எல்லாம் நினைக்காம, Torrent technology பற்றி கேள்விப்பட்டு இருந்தீங்கன்னா... உலகின் எந்த மொழிப்படமும் உங்கள் வீட்டு கணினியில். Non-English படங்களுக்கு மட்டும் நான் உபயோகிப்பது.]
அன்பு வணக்கங்கள்
உங்கள் பதிவுகள் அருமை....
இந்த மாதிரியான விடயங்களுக்காகத்தான் நான் தேடலில் என்னை தொலைத்திருந்தேன்..... என்னுடைய நிகழ்ச்சிக்காக
அதனால் கிடைத்தது உங்கள் பதிவுகள்.....
மிக்க நன்றி ....
நான் உங்களைத் தொடர்பு கொள்ள விரும்புகிறேன்...
எவ்வாறு என்பதை அறியத்தாருங்கள் ....
எனது வலைப்பூ - http://wisdomblabla.blogspot.com/
வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி டயானா.
தொடர்புக்கு என் மின்னஞ்சல்: butterflysurya@gmail.com
சூர்யா
சென்னை
ஹாலிவுட் பாலா.. தவிர்க்க முடியாத சில காரணங்களால் துரிதப்படுத்த முடியவில்லை. Really Sorry to kept you waiting. Your maild id plz..
Thanx.
படம் பார்க்கலாம் போல தோன்றுகிறது...
உங்கள் வலைப் பூவுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் வருவேன்...
அவசியம் வாங்க சிந்து.. நீங்களும் வண்ணத்துபூச்சி பிரியரா..?
வாழ்த்துக்கள்.
A story of emotion in a family.Father going to jail for his owner's fatal accident.owner using the circumstances getting involved with yuub's wife haesar,their son ismail unable to do anything abt his mother's betrayal,yuub getting released from the prison joining a restaurant,his frnd there.the murder of sarvat.Who is the murderer? Ismail or the restaurant worker? The story line is nice Surya.You are taking lot of interest in bringingout stories to b known.Wishing you the best always.
//ஹாலிவுட் பாலா.. தவிர்க்க முடியாத சில காரணங்களால் துரிதப்படுத்த முடியவில்லை. Really Sorry to kept you waiting. Your maild id plz..
Thanx.//
Finally,..!!! மன்னிக்கனும் தல..! ரெண்டு நாளா ரொம்ப நேரம் கணினி பக்கம் வர முடியலை.
விமர்சனம் வழக்கம்போல சூப்பர். நான் வித்தியாசமான படங்கள் பாக்க ட்ரை பண்ணினாலும் மேக்ஸிமம் இங்லீஸ் படமா இருக்கற மாதிரி செலக்ட் பண்ணுவேன். நீங்க உலகம் ஃபுல்லா பார்த்து கலக்கறீங்க.
எனக்கு இந்த DVD கிடைக்கலை. டோரண்ட்-ல முடிஞ்சா பார்த்துட்டு இன்னொரு கமெண்ட் போடுறேன்.
email: hollywoodbala@gmail.com
நன்றி பாலா. உடம்பு சரியில்லையோ என பயந்து விட்டேன்.
வாங்க சேர்ந்து கலக்குவோம்.. வாழ்த்துக்கள்.
//தமிழில் இது போன்ற "குரங்குகள்" எப்போது...???? //
ஏங்க சார்.. இருக்கற ‘குரங்குகள்’ போதலையா உங்களுக்கு.
இருக்கற குரங்குகள் வேண்டாம்..
விமர்சனங்கள் ந்ன்றாக இருக்கின்ற்ன. 3 படங்களுக்கான விமர்சனம் படித்தேன். பார்க்க வேண்டும் என்று தூண்டும் வகையில் எழுதுகிறீர்கள்.
ஒரு சந்தேகம், நல்ல படங்களை பற்றி மட்டும்தான் எழுதுவீர்களோ. மோசமான படைப்புகளை மோசம் என்று எழுதினால் என் போன்றவர்களுக்கு தேர்வு செய்ய எளிதாக இருக்கும்.
அறிவிலி.. வருகைக்கும் ஆலோசனைக்கும் மிக்க நன்றி நண்பரே.
இவை தவிர பார்த்த பார்த்து கொண்டிருக்கிற சினிமாக்கள் நிறைய உண்டு.{good, bad & worst too}
மிகவும் ரசித்த ரசிக்கும் படியான தரமான படங்களை முதலில் அறிமுகப்படுத்துவதே என் நோக்கம்.
மோசமான படங்களையும் பட்டியலிட, பதிவேற்ற விமர்சனங்களுடன் விவாதிக்க நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்கள் அதை செவ்வன செய்கிறார்கள். வாழ்த்துகள்.
ஒன்று.. எனக்கு இதற்கே நேரம் கிடைப்பதில்லை. வேலைகளுக்கிடையே தான் செய்கிறேன்.
இன்னொன்று.. நமக்கு மோசமானது என்று பட்டது சிலருக்கு அருமையாக கூட தோன்றலாம்.
நடிகனுக்கு பாலாபிஷேகமும், நடிகைக்கு கோயிலும் கை கால் பிம்ப அசைவிற்கே சூடம் கொளுத்தும் தமிழ் ரசிகர்களை எனக்கு புரிந்து கொள்வது மிகவும் கடினம்.
அதனாலும் தான் தவிர்கிறேன்.
நான் அதிகம் படம் பார்ப்பதில்லை... ஆனால், உங்கள் விமர்சனம்... அழகா இருக்கு...
வாங்க சமையல் ராணி..
நன்றி..
ஆப்பிள் அல்வா சூப்பர்.
அதைவிட டேஸ்ட் உண்டா..??
நெறைய சினிமா பாப்பிங்களோ , உங்க பதிவ பாத்ததுக்கு அப்புறம் தான் இந்த படம் ஏலத்தையும் பாக்கணும் போல இருக்கு , நெறைய எழுதுங்க
good review surya..will surely watch this film. thanks. uma
Post a Comment