Sukkar banat
Caramel { Lebanese Movie }
பெய்ரூத் நகரில் வாழும் பியூட்டி பார்லர் நடத்தும் பெண்களும் அவர்களை சுற்றியுள்ள பெண்களின் வாழ்க்கை பற்றிய கதை.
ஒவ்வொருவருக்குமுள்ள காதல், நட்பு, ஏக்கம், குடும்பம் மீதுள்ள அக்கறையை கொணட ஒரு அற்புத திரைப்படம்.
நஸ்ரின் & ரீமாவும் அழகு நிலையத்தை நடத்துகிறார்கள். அவர்களின் நெருங்கிய தோழி லயாலே அந்த நிலையத்தில் பணி புரிபவள். அவளுக்கு ஏற்கனவே திருமணமான ஒருவனுடன் தீராக்காதல்.
அவன் தினந்தோறும் பணி முடித்து திரும்பி லயலேவுடன் சுற்றி திரிகிறான். அவளும் தன்னை திருமணம் செய்வான் என்ற நம்பிக்கையுடன் அவனின் கார் ஹார்ன் சத்தம் கேட்டதுமே துள்ளி குதித்து ஒடி சந்தோஷமாக அவனுடன் பொழுதை கழிக்கிறாள். இந்த விஷயம் தனது பெற்றோருக்கு தெரியாமல் இருக்க அவள் செய்யும் பிரயத்தனங்கள் பல.
இவர்கள் அனைவரின் தோழியும் மிகப்பெரிய நடிகையாக வரவேண்டும் என்ற ஆசையும் ஏக்கமும் கொண்ட நடுத்தர வய்து பெண்மணி ஜமாலே.
அழகு சாதன நிலையத்தின் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் பெண்மணி ரோஸ். வயது முதிர்ந்த கன்னி. அவளின் சகோதரி ஒரு வயதான கிழவி. சற்று மன நிலை பாதிக்கப்ப்ட்ட தனது சகோதரிக்காக திருமணம் செய்து கொள்ளாமல் தன் வாழ்வையே அர்பணிக்கிறாள். அவளை பராமரிப்பதற்காகவும் தன் அன்றாட வாழ்க்கைகாகவும் தையல் தொழில் புரிந்து தன் வயதான சகோதரியை காப்ப்பாற்றுகிறாள்.
லயாலே தவறான இடத்தில் காரை நிறுத்தியதற்காக காவல்துறை அதிகாரியான சிஹாம் என்பவரால் அபராதம் விதிக்கப்படுகிறாள். அவளும் அவசரத்தில் நிறுத்திவிட்டதாகவும் ஒரு முறை மன்னிக்குமாறும் கெஞ்சவே காவலரும் அவளது அழகில் மயங்கி மன்னிக்கிறார். அவளை ஒரு தலையாக காதலிக்கவும் தொடங்குகிறார்.
லயாலேவின் திருமணமான காதலன் மனைவியின் வற்புறுத்தலின் பேரில் லயாலேவை சந்திப்பதை நிறுத்தி எஸ்ஸாகி விடுகிறான். இது அறியாத லயாலே தினந்தோறும் கார் ஹார்ன் சத்ததிற்காக காத்து கிடக்கிறாள். அவனோ வருவதாக காணோம்.
சிஹாமின் ஒருதலை காதல் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வருகிறது. லயாலேவின் தோழிகள் அனைவரிடத்திலும் நல்ல நட்பையும் பெறுகிறான்.

அதே நேரத்தில் பக்கத்து வீட்டு முதிர் கன்னி ரோஸிடம் துணிகள் தைப்பதற்காக வருகிறார் துணை ஏதுமில்லாத வயதான ஒரு அமெரிக்கர்.
ரோஸை சந்திப்பதற்காகவும் அவளுக்கு உதவிடவேண்டிய நல்லெண்ணத்திலும் நிறைய துணிகளை தைக்க கொடுக்கிறார். அவர்களிடையே நட்பு மலருகிறது.
லயாலேவுக்கு திருமணம் செய்ய பெற்றோர்கள் நிர்பந்திக்கிறார்கள். அவள் மறுக்கிறாள். தோழிகள் இனியும் தன் பழைய காதலுனுக்காக காத்து கிடப்பதை விட்டுவிடும் படியும் புதிய வாழ்க்கையை தொடங்கவும் அறிவுரை கூறுகின்றனர். லயாலேவுக்கும் அவர்களின் அறிவுரை நியாயமாகப்படுகிறது.
அழகு நிலையத்திற்கு வரும் வாடிக்கையாளர்களின் பெண்ணொருத்தி லயாலேவுக்கு விரைவில் திருமணம் நடைபெறுமென்றும் கிழக்கு திசையில் பறக்கும் வெண்புறா அவள் மீது எச்சமிடும் நேரத்தில் அவளது வருங்கால கணவன் கிடைப்பான் என்றும் கூறுகிறாள். இதையெல்லாம் நம்ப மறுக்கிறாள் லயாலே.
நஸரீனுக்கு திருமண ஏற்பாடுகள் நடக்கிறது. . திருமண நாளன்று தோழிகள் அனைவரும் ஒன்று கூடுகின்றனர். ஒரே பாட்டும் ஆட்டமுமாக படு விமரிசையாக திருமணம் நடக்கிறது. காவலர் சிஹாமையும் திருமணத்திற்கு

அழைக்கிறாள் நஸரின். அவனும் திருமண நிகழ்ச்சிக்கு வருகிறான்.
அப்போது வானத்தில் பறக்கும் ஒரு வெண்புறா எச்சமிடுகிறது. எதிரே காவலரான சிஹாம்.....
அந்த காட்சியுடன் திரைப்படம் நிறைவடைகிறது.....
நடிகையாக ஆசைப்பட்டு ஒவ்வொரு முறையும் பல வித மேக்கப்புடன் தன்னை இளமையாக காட்டி கொள்ள ஜமாலே செய்யும் சேட்டைகள் நகைச்சுவை மட்டுமல்ல ஒவ்வொரு பெண்ணின் மனதிற்குள்ளும் எத்தனை விதமான விருப்பங்கள் நிறைவேறாத ஆசைகள்...
அமெரிக்க முதியவர் ரோஸிற்காக காத்திருப்பதும் தனது மனநிலை பாதிக்கப்பட்ட சகோதரிக்காக அவரின் காதலை துறப்பதும் நெகிழ்வான காட்சிகள்.
மொத்தம் பத்திற்கும் குறைவான கதாபாத்திரங்களை மட்டுமே கொண்டு ஒரு திரைப்படத்தை இயக்கியிருகிறார் லயாலேவாக நடித்த Nadine Labaki. இதில் வருபவர்கள் யாரும் நடிப்பதை போன்ற ஒரு உணர்வேயில்லை. நிஜ மனிதர்களை காண்பது போன்ற காட்சியமைப்புகள். அவ்வளவு யதார்த்தம். எந்த வித பிரும்மாண்டமும் இல்லாமலும் சினிமாவின் சாத்தியம் என்ன என்பதை நிரூபித்திருக்கும் ஒரு அரிய முயற்ச்சி என்று தான் சொல்ல தோன்றுகிறது..
Caramel என்ற சாக்லேட் கொண்டு தயாரிக்கப்பட்டு பெண்களின் தேவையற்ற ரோமங்களை பிரித்தெடுக்கும் ஒரு வித அழகு சாதன பொருள்தான் இத்திரைப்பட பெயர்.
பெண்களின் வாழ்க்கை போல அது தித்திக்கும் சாக்லேட்டா அல்லது ஒரு வலியான மருந்தா என்று சொல்லாமல் சொல்லியிருக்கும் இயக்குநரை எத்தனை பாராட்டினாலும் தகும்.
சிறந்த வெளிநாட்டு மொழிக்காக பிரான்ஸ் திரைப்பட விழாவில் பரிசு பெற்ற திரைப்படம். வெளிவந்தது 2007
சந்தர்ப்பம் கிடைத்தால் Don't Miss.
25 comments:
வெயிட்டிங்...!! ;-00
சீக்கிரம் பதிவிடுங்கள் ...
I THINK I HAVE SEEN THIS MOVIE.ANY WAY,I AM WAITING FOR YOUR REVIEW.
Thanx Bala..
Sure Jamal. Sorry to kept you waiting last time.
Pretty, cool pics! As usual look fwd to your review:-).
Good Day....Viji
Thanx Viji.
உலக திரைப்படம் பற்றிய நல்ல வலைப் பதிவு...
A tempting story of passion ?
லெபனானில் பெய்ரூத் நகரில் சிகையலங்காரம் செய்யும் தோழிகளின் வாழ்க்கையை கொண்ட திரைப்படம் Caramel.
அது என்ன சாக்லேட் பெயர்??
விபரம் விரைவில்......///
விரைவில்???
எப்படி இதுமாதிரி மென்மையான அணுகுமுறைகளை கொண்ட படங்களையே தொடர்ந்து பார்க்கறீங்க? என்னால 1-2 படத்தை கூட பார்க்க முடியலை.
ஆனா உங்க விமர்சனமே படத்தை பார்க்கற எஃபெக்டை கொடுத்துடுது. வெரி இண்ட்ரஸ்டிங்.
என்னை மாதிரி மசாலா படங்களுக்கும் விமர்சனம் எழுதுங்க வண்ணத்துபூச்சி. ஒரு ச்சேஞ்ச் கிடைக்குமில்ல..!!! :-)))
ஒழுங்கா இருக்கற உங்களை கெடுக்க வந்துட்டான் பாவின்னு மத்தவங்க திட்டுறாங்க...!! அதனால நான் அப்பீட்டு.
முதல் வருகைக்கு நன்றி ஹரிணிஅம்மா. இப்போ படிங்க..
நன்றி பாலா. அப்படியே பழகிட்டேன்.
இதே போல படங்கள் இன்னும் நாலைந்து பாக்கி இருக்கு எழுதறத்துக்கு...
மசாலா படமும் பார்க்காமல் இல்லை. இதுக்கே நேரமில்லை. அதனால் எழுதாம சாய்ஸ்ல விட்டுடறேன்.
அன்பு நண்பர் உண்மைத்தமிழன் இரவெல்லாம் இணையத்துல என்னய்யா ..?? உடம்பை கெடுத்துகிட்டுன்னு செல்லமாக கண்டித்தார்.
I respect his love and care...
தங்களை போன்ற முகம் தெரியாத பல நண்பர்களின் அன்பும் ஆதரவும் தான் எழுத தூண்டுகிறது.
விரைவில்.. பாலாவிற்காக ஒரு ஸ்பெஷல் மசாலா போட்டுறுவோம்..
கதை நன்றாக இருந்தாலும் சிலர் சொல்லிக் கேட்கும் பொழுது அழகு கெட்டு விடும் .நீங்கள் கதையைச் சொல்லியிருக்கும் விதம் அருமை .
வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி கோமதி. மற்ற பதிவுகளையும் படித்து நிறை/ குறை சொல்லுங்கள்.
உங்களுடைய வலைப்பூவின் ப்ரியை நான் !
மிகவும் அருமையான விதத்தில், இலகு மொழி நடையில் பல பதிவுகளை இட்டு வருகிறீர்கள் !
உங்கள் சேவை மேலும் வளர வாழ்த்துக்கள் தோழா..
அதேவேளை சின்ன ஒரு கருத்து .. நீங்கள் படங்களை பதிவில் சேர்க்கும் போது அதன் அடியில் குறித்த படத்தில் உள்ள கதாபாத்திரங்களை சுட்டினீர்கள் என்றால் இன்னும் சிறப்பு...!
ப்ரியமுடன் உங்கள் தோழி
White Dove's dropping & Siham remaind Tamil cinema.
வாழ்த்துக்கும் கருத்துக்கும் நன்றி டயானா. செய்கிறேன்.
ஆமாம் Dr.M.
காழியூர் நாராயணன் & சீவல் புரி சிங்காரம் மாமு பையன் மூலம் இரானின் Half Moonல் பார்த்தோம்,.
இப்போது லெபனானிலும் கிளை பரப்பியுள்ளார்கள் என நினைக்கிறேன். இது போன்ற நம்பிக்கைகள் இந்தியாவில் மட்டுமல்ல உலகம் எங்கும் பரவித்தான்
இருக்கிறது..
கண்டிப்பாக இந்த வார இறுதிக்குள் பார்த்து விடுகிறேன்.
யோகோஹாமாவில் எதாவது ஒரு வீடியோ லிப்ரரியில் கிடைக்கலாம்.
வருகைக்கு நன்றி ஜோ..
நல்ல இருக்கு சார்.
தொடர்ந்து உங்களடுய விமர்சனம் இதே மாதிரி ஒரு மென்மையான கதைகளுக்கு மட்டுமே இருக்கிறது..
ஆனால் எல்லாமே ரசிக்கும் விதத்தில் இருக்கு சார்.
நன்றி வினோத். மென்மையான படங்களையே அதிகம் விரும்புகிறேன். சஸ்பென்ஸ் திரில்லர் படமும் பார்க்காமல் இல்லை. அதுவும் விரைவில் வரும்..
மீண்டும் மிக்க நன்றி.
சூர்யா
உங்களது விமரிசனம் எனக்குள் இந்தப் படத்தைப் பார்த்தே தீரவேண்டும் என்ற எண்ணத்தை உண்டாக்கி விட்டது.
நன்றி மைதிலி மேடம்.
ஒவ்வொரு பெண்ணிற்கும் உள்ள மென்மையான உணர்வுகள் நிறைய உள்ளது. அதிகம் சினிமாவை விரும்பாத எனது மனைவியே ரசித்து ரசித்து பார்ததும் "இந்த படத்தை கண்டிப்பாக எழுதுங்கள்" என்று கேட்டதால் தான் பதிவிட்டேன்.
கண்டிப்பாக பாருங்கள்.
Post a Comment