அதானால ஆங்கில பெயரான Turn Left at the End of the World அப்படின்னு அதையே வெச்சிட்டேன்.
மேலே உள்ள படத்தை பார்த்து ஏதோ லெஸ்பியன் அயிட்டமாக இருக்கும் என்று நினைத்து படிப்பவர்கள் ஏமாற வேண்டாம். நிச்சயமாக அது இல்லை.
பின்னே என்ன கதை? அப்படின்னு கேட்டாதனாலேயே சொல்றேன்.
1960களில் இஸ்ரேலில் நடந்த உள்நாட்டு குழப்பங்கள் அடங்கிய பிறகு எண்ணற்ற தொழில் மற்றும் வேலைவாய்ப்பு இருப்பதாக நம்பி குடியேறிய பல இந்திய குடும்பங்களில் ஒரு இந்திய குடும்பத்தை மையமாக கொண்ட கதைதான் இந்த இஸ்ரேலிய மொழி திரைப்படம்.
நம்ப வீட்டில் கரண்ட் கட் ஆனதும் பக்கத்து வீட்டை எட்டி பார்க்கும் இந்திய குடும்பங்களை பற்றி சொல்லவா வேண்டும்..?? ( எவ்வளவு நல்லெண்ணம் )
நடு இரவில் குடியேறி இந்திய குடும்பத்தினர் பால் காய்ச்சி சாப்பிடாச்சு.
கதை இங்கிருந்துதான் நகருகிறது..
பக்கத்து வீட்டில் குடியிருப்பது ஒரு மொராக்கோ யூத குடும்பத்தினர். இந்தியர்கள் என்றாலே கறுப்பினம் என்றும் மட்டமானவர்கள் என்று நினைக்கும் மனதுடையவர்கள். அவர்களின் பதின்ம வயது பெண் நிக்கோலே. நம்ம இந்திய குடும்ப பதின்ம வயது பெண் சாரா. இருவரும் ஒரே பள்ளியில் சேருகின்றனர்.
சாராவுக்கு டைரி எழுதும் பழக்கமுண்டு. சதா எல்லாவற்றையும் டைரி எழுதி தள்ளுகிறாள். இதை கேலியும் கிண்டலும் செய்கிறாள் நிக்காலே.
ஆனால் நிக்காலேவின் வயது கோளாறால் புதிதாக வந்துள்ள ஆசிரியரை காதலிக்கிறாள். இதை கண்டிக்கிறாள் சாரா. அவளையே நினைத்து உருகும் ராமராஜன் கணக்காக இருக்கும் முறை மாமனையே மணப்பதேநல்லது என்றும் கூறுகிறாள்.
துவைத்த துணியை கொடியில் காயப்போடுவது முதல் இருவரது அம்மாகளுக்கும் சிறு சிறு சண்டைகள். ஒருவருக்கு மற்றவர் மொழி தெரியாமல் சிரித்து கொண்டே திட்டி கொள்வதும் பிறகு ஹிப்ரூ மொழியும் ஆங்கிலமும் கலந்து பேசி கொள்வதும் தினசரி வாடிக்கை.
நிக்கோலேவின் அப்பாவிற்கு நடனமும் கிரிக்கெட்டும் தான் பொழுது போக்கு. சாராவின் அப்பாவும் இவரும் நல்ல நண்பர்களாக பழகுகின்றனர்.
இந்த குடியிருப்பில் எல்லா அப்பாக்களும் பக்கத்தில் உள்ள தொழிற்சாலையில் தான் வேலை செய்கிறார்கள்.
அதே குடியிருப்பில் மாடியில் வசிப்பவள் சிமோன். அவள் ஒரு இளம் விதவை.. அவளை கண்டால் எவருக்கும் பிடிக்காது. அவளுக்கோ இந்தியர்கள் என்றால் கொள்ளை ஆசை. ஏன்னா காமசூத்ரா எழுதியது இந்தியர்கள் தான். அவர்களுக்கு எல்லாம் தெரியும். அதுவும் அந்த விஷயத்தில் அவர்களை மிஞ்ச முடியாது என்று நிக்கோலேவிடம் சொல்லவே சாரா மீது மதிப்பும் நட்பும் உண்டாகி விடுகிறது.
சிமோனுக்கு சாராவின் தந்தை மீது எப்போதும் ஒரு கண். அவரிடம் நடனம் பயில விரும்புகிறாள். தொழிற்சாலையில் கேரளா வழக்கம் போல ஊதிய உயர்வு கேட்டு ஸ்டைரக் நடக்கிறது. பிழைக்க வந்த இடத்தில் இதெல்லாம் தேவையா என்கிறார் சாராவின் அப்பா. அவர் பேச்செல்லாம் எடுபடவில்லை.
எதற்கும் மசியாது கேட்டை இழுத்து மூடுகிறார் முதலாளி. வேலை இழந்த யூதர்கள் கால் பந்தும், இந்தியர்கள் கிரிகெட்டும் ஆடி பொழுதை கழிக்கின்றனர். சாராவின் தந்தை அனைவருக்கும் கிரிக்கெட் கற்று தருகிறார்.
சிமோனும் சாராவின் அப்பாவும் மிகவும் நெருங்குகின்றனர். இந்த மேட்டர் குடியிருப்புகளில் அரசல் புரசலாக தெரிய ஆரம்பிக்கிறது
ஒரு ஸ்டேஜ்ஜில் நெருக்கம் அதிகரித்து வாத்சாயனரை பற்றி விக்கி பீடியா எழுதும் அளவிற்கு சென்று விடுகின்றனர்.
நிக்கோலாவிற்கும் ஆசிரியர் மீதுள்ள காதல் எல்லை மீறுகிறது. நிக்கோலாவின் தாய் ஏற்கெனவே தீராத நோயினால் துன்ப படுகிறாள். மகளின் போக்கையும் கண்டிக்கறாள். உன் பழைய பெருமையெல்லாம் எங்களுக்கு தேவையில்லை.. என் இஷ்டப்பபடிதான் நான் இருப்பேன் என சண்டை போடுகிறாள் நிக்கோலா.
நிக்கோலா, சாரா இருவரும் ராணுவ பயிற்ச்சியில் மேல் படிப்பு படிக்க வெளியூருக்கு விண்ண்ணப்பிக்கின்றனர். கண்டிப்பாக அனுப்ப மாட்டேன் என்று சாராவின் தாய் மறுக்கிறாள்.
நிக்கோலாவின் பருவ கோளாறு என்று முதலில் மறுத்த ஆசிரியரே பிறகு சத்யராஜ் ஸ்டைலில் அல்வா கொடுத்து விட்டு கிளம்பி விடுகிறார்.
தன் மகளுக்கு விஷயம் தெரிந்து அவள் நொந்து போனதால் தன் தவறை உணர்ந்து சாரா அப்பா சீமோனிடம் இருந்து மெல்ல விலகுகிறார்.
தன் மகளுக்கு விஷயம் தெரிந்து அவள் நொந்து போனதால் தன் தவறை உணர்ந்து சாரா அப்பா சீமோனிடம் இருந்து மெல்ல விலகுகிறார்.
நிக்கோலா தாயின் உடல் நிலை முற்றி இறந்தும் போகிறாள்.
நித்தம் சண்டையிட்ட சாராவின் தாயுடன் குடியிருப்பு முழுவதும் சோக
மயமாகிறது.
நித்தம் சண்டையிட்ட சாராவின் தாயுடன் குடியிருப்பு முழுவதும் சோக
மயமாகிறது.
குடும்ப சூழ்நிலையையும் தன் நிலைமையும் எண்ணி வருத்தப்பட்ட நிக்காலே மேல் படிப்பை மூட்டை கட்டுகிறாள். அதே நேரத்தில் தன் விருப்பப்படி தாயின் சம்மதத்தோடு சாரா மேல் படிப்புக்காக பயணிக்கிறாள்.
முதலில் வெறுத்த சாராவை தோழியுடன் மேலான சகோதரியாக நினைத்து நினைத்து உருகுவதுடன் இந்தியர்கள் எவ்வளவு இனிமையானவர்கள் என சந்தோஷமும் அடைகிறாள் நிக்காலே.
புது அரசின் தலையீட்டால் மூடிய தொழிற்சாலையும் திறக்க படுவதுதாக நல்ல செய்தி வருகிறது.
நிக்காலேவும் ராமராஜனும் .. Sorry.. முறை மாமனும் இணைகின்றனர்.
பருவ வயது பெண்களுக்கு ஏற்படும் உடலும் மனம் சார்ந்த மாற்றங்களையும் அவர்கள் மனதில் அன்பு, பாசம் ஏக்கம், காதல், உணர்ச்சி எப்படியெல்லாம் சுற்றி உழல்வதையும் நகைச்சுவையுடனும் ஆழ்ந்த கருத்துகளுடனும் தந்திருக்கிறார் இயக்குநர் Avi Nesher. இவர் பல ஹாலிவுட் படங்களில் பணியாற்றியவர் என்பதால் சில காட்சிகள் தாராளம்.
சந்தர்ப்பம் கிடைத்தால் நிச்சயம் பாருங்கள்.
26 comments:
Avi Nesher இந்தியனா..??
இந்தியர்களை நல்ல விதமாக சித்தரித்து உள்ளாரே..
விமர்சனம் ரசிக்கும்படியா இருந்துச்சு சார்..
பிரெஞ்சு மொழி திரைப்படத்திற்கு ஒரு விமர்சனம் எழுதுங்க..
எதாச்சும் படம் உங்கள் Choice..
நான்தான் முதலில் வந்து பால் காய்ச்சுகிறேன் வண்ணத்துப்பூச்சியாரே!
கதை பரவலாக இருப்பதால் பார்த்து ரசிக்க வேண்டிய படம் என நினைக்கிறேன்.
'சந்தர்ப்பம் கிடைத்தால் நிச்சயம் பாருங்கள்.'
முயல்கிறேன்.நன்றி.வண்ணத்துப்பூச்சியாரே!
தமிழ்ப்பதிவு அப்படிங்கிறதால தமிழ் விக்கி கட்டுரைக்கு இணைப்பு தரலாமே? http://ta.wikipedia.org/wiki/காம_சூத்திரம்
வண்ணத்துப்பூச்சாயாருக்கு நன்றி
இப்படி நல்ல படங்களை தேர்வு செய்து
விமர்ச்சனம் போடுவது என்னை போன்றவர்களுக்கு உதவிகளாக உள்ளது.
இன்னும் நீங்க இன்னும் the mission பார்கலையா
சீக்கிரம் பார்த்து பதிவ போடுங்க சார்
டைரக்டருக்கு முதல் வணக்கம். உங்க ராசி நல்லாயிருக்கட்டும் சார். வாழ்த்திட்டு பொறுமையாக சாப்பிட்டு போங்க
நன்றி வினோத். கண்டிப்பாக எழுதறேன்.
இல்லை வினோத் இயக்குநர் இந்தியர் இல்லை.
Avi Nesher இஸ்ரேல் தேசத்தவர். இதுவும் இஸ்ரேல் திரைப்படம் தான். ஆனால் நிறைய ஹாலிவுட் படங்களில் பங்காற்றியுள்ளார்.
அடிக்கடி அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் பறந்து பறந்து பணியாற்றுபவர்.
I bet if our Tamil cinema did not change its attitude all our best technicians will be flying to holloywood for better carrier improvement like medical/ scientific professionals.
திரு. சுந்தர் வருகைக்கு முதல் வணக்கம். ஆங்கில விக்கியில் கூடுதல் செய்தி இருப்பதாக நினைத்தேன்.
அது தவிர இந்த பதிவு எழுதும் போது குகிள் தேடலில் இந்த பக்கம் தமிழ் விக்கியில் இரண்டு மூன்று முறை திறக்க வில்லை. மீண்டும் முயற்ச்சித்த போது திறக்க சிறிது நேரமாகி திறந்தது. அதனால் ஆங்கில இணைப்பை அளித்தேன். இனி தமிழ் இணைப்புகளையே அதிகம் பயன்படுத்துகிறேன்.
விக்கி பிடியாவில் இருந்து ஒருவர் என் வலைக்கு வந்தது மிகவும் மகிழ்ச்சியே.
வாழ்த்துகள்.
வணக்கம் முத்துராமலிங்கம். வாழ்திற்கு நன்றிகள் பல. இன்னும் பார்க்க வேண்டிய படங்களில் the mission உள்ளது.
பார்த்ததும் பதிவிடுகிறேன்.
நன்றி.
Nalla post Butterfly.Ammaakkal sandai pottaalum,appakkal nanbargal,nalla vaarthai. l
நன்றி வேலு..
மற்ற பதிவுகளையும் படித்து நிறை / குறை சொல்லுங்கள்.
வாழத்துகள்.
அருமை.. பார்க்க வேண்டும் போல இருக்கு.. காமம் கொஞ்சம் தூவி அடிப்படோயான காதலைக் காட்டுவதே பிற மொழிப் படங்களின் வாடிக்கையோ?
நன்றி லோஷன். நீங்கள் சொல்வது போலவும் இருக்கலாம். நான் பார்த்தவரை அன்பை அடிப்படையாக கொண்டு குடும்ப சூழ்நிலைகளின் போக்குடன் உணர்ச்சிகளின் வெளிப்பாடே உலக திரைப்படங்கள். Love and sex in a casual way..
========================================
கை கால் அசைவிற்கெல்லாம் அங்கே சவுண்ட் கிடையாது.!!!!!!
Shh.. Silence.. பேசிட்டு இருக்கோம்ல..
காமம் இல்லாம காதலா? மரத்தை சுத்தி, சுத்தி, மரத்துக்கு பின்னாடி இருந்து வாயை துடைச்சிகிட்டு வெளிய வர்றதை விடவா, படுக்கை அறையை காட்டுறது அசிங்கம்?
சும்மாதான் கேக்கறேன். வாயை துடைக்கிற அளவுக்கு மரத்துக்கு பின்னாடி என்னதான் நடந்துச்சி! :-) :-) :-)
------
நீங்க அடிச்சி கலக்குங்க பூச்சி! விமர்சனம் எப்பவும் போல நச்! ;-)
அப்புறம் இந்த லிங்க் பிரச்சனை என்னன்னு பாருங்களேன். நேத்து பூரா நிறைய தடவை க்ளிக் பண்ணி பார்த்தும் வொர்க் ஆகலை! :-(
நிச்சயம் பார்க்கிறேன்..படம் இணையத்தில் கிடைக்குமா?
இத்தனை விசயமும் ஒரே சிங்கிள் திரைப்படத்தில் நடக்குதா????
பரவாயில்லை இந்தியரை வைத்தும் வெளிநாட்டுக்காரன் திரைப்படம் எடுக்கின்றான்.
I've posted my comment as Velusamy Mohan,plz note it down.muniappan pakkangal.
பாலா.. Cool. திரைப்படம் ஆங்கில பெயர் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே.. ????
வாங்க ரிஷான். நலமா? இணையத்தில் கிடைப்பது கஷ்டம் என நினைக்கிறேன். முயற்ச்சியுங்கள்.
மயூரேசன் ( பெயர் சரியா ) நன்றி. இந்தியரை இந்தியர்கள் தவிர அனைவரும் நன்றாக பயன் படுத்துவர்.
வினோதுக்கு சொன்ன பின்னூட்ட பதில் இங்கும் பொருந்தும்.
Thanx Dr. Oh.. Sorry. I thought it was some one.
//ஆங்கில பெயர் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே.. ????//
அந்த பயம் இருக்கட்டும்’ -ன்னு டைப் பண்ண நினைச்சி மறந்துட்டேன்... (மரத்துக்கு பின்னாடி அப்படி என்னதான் நடந்திருக்கும்னு யோச்சிட்டு இருந்ததுல :-) )!
ஜூப்பரப்பு! :-)
மரத்துக்கு பின்னாடி அப்படி என்னதான் நடந்திருக்கும்னு யோச்சிட்டு இருந்ததுல :-)
வர வர தூங்காம ரொம்ப யோசிக்கறத.. நிறுத்தணும்.
சதா ஹாலிவுட் பாலா பதிவு போடற மாதிரி சாரா டைரி எழுதி தள்ளுறா அப்படின்னுதான் எழுதினேன். அப்புறம் எடுத்திட்டேன்.
இதே பிரகாஷ் ராஜ் அப்பாவாக இருந்தால் அடுத்த சீன் திண்டிவனம் மேம்பாலத்திலேயோ அல்லது ஷீட்டிங்குக்காகவே மூன்றாண்டுகளாக திறக்காமல் இருக்கும் OMR - தாம்பரம் 200 அடி சாலையிலோ கனல் கண்ணன் கோஷ்டியுடன் ஒரு 20 நிமிட சேஸிங்கும் அதுக்கு அப்புறம பறந்து பறந்து பைட்டும் நிச்சயம்.//
பாவம் சார் நாங்கள்!பொழுது போக்கு விரும்பிகள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம்
கண்ட கண்ட கூட்டணிகளை இனிமேல் செய்திதாளில் பார்க்கலாம். ஆனால் ஆஸ்கர் விருதுகளை வென்ற மூவரின் வெற்றி கூட்டணி You Me and Dupree .
So, Please don't miss it.//
சொன்ன விதம் அருமை. நான் ஏற்கனவே படம் பார்த்து விட்டேன்.
//கண்டிப்பாக பின்னூட்டம் இடுபவர்களுக்கு மட்டும்://
சினிமா விமர்சனத்திலேயே சினிமா டெக்னிக்கா?!
கடைசி வரி வரைக்கும் ரசிகர்களை எங்கேஜ் பண்ணும் கலையில் ராஜா நீங்க.நன்றி வண்ணத்துபூச்சியாரே.
உங்கள் 'யூ,மீ அன்ட் டுப்ரீ'கமமன்ட் பாக்ஸ் திறக்க முடியவில்லை ஆதலால் இதில் வெளியிடுகிறேன். சாரி சார்.
Post a Comment