Alvin and the Chipmunks
{குழந்தைகளுக்கான திரைப்ப்டம்}
டேவிட் என்ற பாடலாசிரியரின் வாழ்க்கையில் வந்த மூன்று குட்டி அணில்களின் கதை.முழுக்க முழுக்க குழந்தைகளுக்கான அனிமேஷன் கலந்த மிகச்சிறந்த நகைச்சுவை திரைப்படம்.
பாடலாசிரியன் டேவிட் தனது வேலையை பறி கொடுத்தபடி மிகவும் துன்பத்தில் உழல்கிறான்.கிறிஸ்மஸ் பண்டிக்காக காட்டிலிருந்து ஒரு கிறிஸ்மஸ் மரத்தை வெட்டி Los Angels க்கு எடுத்து வருகிறார்கள். அந்த மரத்தில் வசிக்கும் Alvin, Simon & Theodore என்ற 3 அணில்களும் பேசவும் பாடும் திறனுடையது.
டேவிடிடம் அடைக்கலம் கேட்கும் அணில்களை கண்டதும் மிகுந்த மகிழ்ச்சியோடு அவற்றை தன் குழந்தைகளை போல பாதுக்காக்கவும் அவைகளை கொண்டு எப்படியாவது மீண்டும் வாழ்க்கையில் வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கையோடு பராமரிக்கிறான்.
ஆனால் டேவிடின் முதலாளி Ian எப்படியாவது இந்த அணில்களை கொண்டு கோடிக்கணக்கில் சம்பாதிக்க பேராசையுடன் காத்திருக்கிறான்.
ஒரு சந்தர்பத்தில் டேவிடிடம் சண்டையிட்ட 3 அணில்களும் அவன் முதலாளியிடம் சென்றுவிடவே அவைகளை வைத்து மிகப்பெரிய இன்னிசை கச்சேரி நடத்துகிறான். பணம் குவிகின்றன.
அவைகளுக்கு இம்மியளவும் ஒய்வில்லாமல் சதா கச்சேரி, பாட்டு, நடனம் விளம்பரம் என அவைகள் சோர்ந்து போகும் அளவிற்கு அவைகளை துன்புறுத்தி பணம் சம்பாதிக்கிறான்.
அமெரிக்கா முழுவதும் அவைகள பிரபலமடைகின்றன. அவைகளை கொண்டு உலக பயணம் மேற் கொள்ளவும் திட்டமிடுகின்றான்.இவைகளை அறிந்த டேவிட் மனது மிகவும் வருந்துகிறான். ஆனால் அவைகளை காண்வும் பேசவும் முடியாதபடி Ian அணில்களுக்கு கட்டுபாடு விதிப்பதோடு காவலாளிகளை வைத்து கண்காணிக்கிறான்.
Ian னின் சூழ்ச்சிகளை முறியடித்து பத்திரிகை நிருபரான தன் காதலியின் துணை கொண்டு அவைகளை மீட்டு மீண்டும் தன் குடும்பமாகவே இணைத்து கொள்வதாக திரைப்படம் இனிதே முடிகிறது.
டேவிடின் வீட்டில் குட்டி அணில்கள் செய்யும் லூட்டிகள் குழந்தைகளை துள்ளி குதிக்க வைக்கும். அணில்களின் அனைத்து உரையடல்களும் நல்ல நகைச்சுவை.
அனிமேஷன் மிகவும் இயல்பாக அணில்கள் நடிப்பது போன்றே இருக்கிறது.
குழந்தைகளை மட்டுமல்ல மனம் மகிழ்ந்து சிரிக்க அனைவருக்கும் பார்க்க வேண்டிய திரைப்படம்.
சுட்டிகளுக்காக இப்போவே டிரைலர்
குறிப்புகள்:
நடிப்பு: Jason Lee, David cross, Cameron Richardson மற்றும் சிலர்.
மொழி: ஆங்கிலம்
காலம்: 91 நிமிடங்கள்
கதை: Jon Witti
இயக்கம்: Tim Hill
வெளிவந்தது: 2007 -08
வெளியீடு: Fox 2000 Pictures
விருதுகள்: 2008ம் ஆண்டின் அமெரிக்காவின் Nickelodeon's (n)th Annual Kids' Choice Award மற்றும் குடும்பதிரைபட பிரிவில் சில விருதுகளும்.
டிஸ்கி: இந்த பதிவுல குழந்தைகளை விரட்டியதால் மனசு கேக்கலை. அதனால கோடை விடுமுறையில் குழந்தைகள் கண்டு களிக்க ஒரு மீள் பதிவு.
40 comments:
Cutie Pie, squirrels:-):-)!
Cheers!
Thanx Viji for your speedy comment.
Cheers.
அனிமேஷன் நகைச்சுவை திரைப்படங்கள் எனக்கும் பிடிக்கும். பார்க்க முயல்வேன்.
நன்றி டொக்டர். சும்மா ஜாலியா பார்க்கலாம்.
பார்க்க வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம்பார்ப்பேன்
நல்ல அறிமும்.
உங்கள் பதிவில் உள்ள் அனைத்து படங்களின் டீவிடிகளி வாங்க முற்பட்டுள்ளேன்...எங்கே கிடைகும் என தெரிவிக்கவும்
அனிமேஷன் படங்கள் பார்க்கும் குழந்தை மன்ம் ஒரு தியானம்.அது இன்னும் எனக்குக் கைகூடவில்லை என்று நினைக்கிறேன்.இருப்பினும் கதை ஸ்வாரஸ்யமாக இருக்கிற்து சூர்யா..
அக்னி பார்வை இன்னும் நிறைய நல்ல படங்களும் உள்ளது. நானும் தேடி வருகிறேன்.
Most of the DVD's available at Burma Bazar & Sathya Bazzar @ T.Nagar.
Burma Bazar Shop No: 114 ( Opp: Head Post Office )
ரொம்ப பொறுமையாக தேட வேண்டும்.
இன்னும் விவரம் தேவையெனில் எனக்கு ஈமெயிலிடவும். butterflysurya@gmail.com
ஷண்முகப்பிரியன் சார், விரைவில் கை கூட பிரார்த்திக்கிறேன்.
அருமை அருமை... அருமையோ அருமை! இந்த மாதிரியான பிளாக் ஒன்றை தான் தேடிக்கிட்டு இருந்தேன். இப்போ கண்டுபிடித்துவிட்டேன். நன்றிகள் பல. மீண்டும் வருகிறேன்.
உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை. அப்படியே ஒவ்வொரு பதிவின் முடிவில் அந்த படம் இணையத்தில் கிடைத்தால் அதையும் வெளியிடலாம். உதாரணமாக Alvin and the Chipmunks படத்தை பதிவிறக்க
இங்கு செல்லலாம்.
நன்றி சிவாஜி. பிரபஞ்ச சக்தி நாம் தேடுவது அனைத்தையும் கொடுக்கும் என்று எனது குரு ஓஷோ சொல்வதை தான் நினைவிற்கு வருகிறது.
அடிக்கடி வாருங்கள்.
நன்றி. நல்வாழ்த்துகள்.
நன்றி KRICONS. உங்கள் வலையை பார்க்க முடியவில்லையே..??
வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் பல.
பெரும்பாலும் இணையத்தில் திரைப்ப்டங்களை பார்க்கும் வசதி இல்லை.
தகவலுக்கும் நன்றி. இனி முயற்ச்சிக்கிறேன்.
வாழ்த்துகள்.
//அனிமேஷன் படங்கள் பார்க்கும் குழந்தை மன்ம் ஒரு தியானம்.அது இன்னும் எனக்குக் கைகூடவில்லை என்று நினைக்கிறேன்.//
ஷண்முகப்ரியன் சார்.., வேலைக்கே பிரச்சனைன்னு ஆனப்ப கூட.. ‘டாம் & ஜெர்ரி’ பார்த்து சிரிச்சிகிட்டு இருந்தேன். :) :)
பிக்ஸாரின் அத்தனை அனிமேஷன் படங்களின் டிவிடியும் என்கிட்ட இருக்கு. எல்லா படங்களையும் சேர்த்துக்கொண்டு இருக்கேன்.
ஒரு ரெண்டு நாள் என்கூட டைம் ஸ்பெண்ட் பண்ணுங்க சார்! அப்புறம் பாருங்க.. அனிமேசன் படங்களை நீங்க எப்படி விரும்பப்போறீங்கன்னு! :) :)
அதானே.. எல்லோரும் பாலா வாகிவிட முடியுமா..??
பாலா, நீங்க சென்னை வரும் போது நான், நீங்க, ஷண்முகப்பிரியன் சார், கேபிளார் இரண்டு நாள் ரூம் போட்டு கும்மி அடிக்கணும்ன்னு அந்த நாளை எதிர்பார்த்து ஆண்டவன் கிட்டே வேண்டிகிட்டு இருக்கேன்.
கும்மி மட்டும் தான்,, நீங்க படிக்கிறப்ப வேற மாதிரி தெரிஞ்சா அதுக்கு நான் பொறுப்பில்லை.
டிரைலர் அருமையா இருந்தது
படமும் நல்லாயிருக்கும் கணேஷ்.
வருகைக்கு நன்றி.
//பாலா, நீங்க சென்னை வரும் போது நான், நீங்க, ஷண்முகப்பிரியன் சார், கேபிளார் இரண்டு நாள் ரூம் போட்டு கும்மி அடிக்கணும்ன்னு//
அடிச்சிடுவோம்.... ‘கும்மியை’! :)
அருமையான படம். அதற்கேற்ப விவரிப்பு. கலக்கல்.
Nallaa kadhai solreenga anna.. :)))
நன்றி பாலா..
நன்றி ஸ்ரீதர் சார்.
ஆயிரம் கதை சொல்லலாம். என் தங்கை ஸ்ரீ போல ஒரு கவிதை எழுத வருமா..??
Interesting post. Nice pictures.
:-)
health tips
I also feel like watching it... en vayasukku naan paarka vendiya padam illayaa.. athaan....
Alvin & chipmunks-nalla animation kathai.It really is a tough job for making an animation story,is it so Butterfly?
Thax Rose for your visit and wishes.
வாங்க டயானா, பரீட்சை எல்லாம் முடிந்ததா..?? ஆமாம். அனிமேஷன் படம் எல்லா வயசுக்கும் பார்க்கலாம்.படம் பார்க்க வயசவிட மனசு தான் முக்கியம். So Enjoy....
Thanx Dr. Making of animation is not much tough at hollywood bcoz a lot of software is available for that now a days.
Here also you can watch "BalGanesh, Ramayan and Mahabharat DVD's available in animation form. Very useful and informative for kids.
வண்ணத்துபூச்சியார்,
நிறைய உலக சினிமாக்களைப் பார்க்கின்றவன் என்ற முறையில், உங்களின் அருமையான விமரிசனப் பதிவுகளைப் படிக்கின்ற பொழுது எப்படி இவ்வாறு எழுதமுடிகிறதென்று எனக்கு ஆச்சர்யமாய் இருக்கிறது.
பார்ப்பதோடு சரி. என்னால் எழுத முடிவதில்லை.
தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்.
வைத்தி
நார்வேயிலிருந்து
நார்வேயிலிருந்து வந்து வாழ்த்திய வைத்திக்கு நன்றி. வைத்தி என்றதும் நினைவிற்கு வருவது “தில்லானா மோகனாம்பாள் நாகேஷ் தான்.
நன்றி. வாழ்த்துகள்.
I've already watched this movie. I love all the animation movies.. Enjoyed reading ur description on this movie.
U've got such a nice blog here..Luvd it. :)
Thanx Vani for your visit and wishes.
thanks for the info.. i'll definitely see this movie.. :)
நன்றி சரவண குமார்.
என்னங்க வண்ணத்துபூச்சியாரே நீங்க மட்டும் உலக சினிமாலாம் பாக்கறிங்க...
என்ன மட்டும் மரியாதை படம் பார்க்கலையான்னு கேக்கறது என்னங்க நியாயம்.
நான் புறா படத்துக்கு fdfs சென்றேன் ஒத்துக்குறேன் என் தப்புதான் ஆனா அதனால எத்தனை பேரு நன்மை அடைந்தார்கள் என்று எனக்குதான் தெரியும். எல்லாம் ஒரு சோசியல் சர்வீஸ் தான்.
வாங்க ஜெட்லி. நான் மரியாதை பார்க்கவில்லை. அதனாலத்தான் கேட்டேன். தொடரட்டும் உங்க சோஷியல் சர்வீஸ்.
This post will help your Blog
http://110cc.blogspot.com/2009/05/150-movies-collection.html
சமீபத்தில் பார்த்த அனிமேஷன் படங்களிலேயே சிறந்த பாட்டு மற்றும் சிறந்த திரைக்கதை அமைந்த படம். ஏன் இப்படிபட்ட படங்கள் வணிகரீதயாக வெற்றி பெற்றாலும், Critics இடம் கொட்டு வாங்கியது என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. வெகுஜன அபிப்ராயத்தில் இருந்து மாற்றம் அடைய அவர்கள் என்ன வானத்தில் இருந்து குதித்தவர்களா என்ன... அவர்கள் இந்த நல்ல படத்திற்கு தந்த மரியாதை, 2007 ன் மட்டமான படம் என்பது.
எப்படியோ சினிமா ரசிகர்களையும், குழந்தைகளையும் ரசிக்க வைத்ததிலேயே இதன் வெற்றி தெரிகிறது. நல்ல படம் ஒன்றை பற்றி பதிவிட்டதற்கு நன்றி வண்ணத்துபூச்சியாரே.
காமிக்கியல் & ராணி காமிக்ஸ்
நன்றி காமிக்கியல்.
கருத்துக்கும் நன்றிகள் பல.
Post a Comment