படத்தின் பேரை பார்த்தவுடன் ஏதோ விளையாட்டு சம்மந்தமான படம்தான்னு நினைச்சேன். ஆனால் அதான் இல்ல. சுத்த சைவ குடும்ப படம். நகைச்சுவைக்கு நான் கிராண்டி.
ஏஞ்சலா தனது எட்டு வயது மகன் குல்லேயுடன் புகுந்த வீட்டிலிருந்து தந்தை வீட்டுக்கு ( ஏன்னா அவளுக்கு தாய் கிடையாது) பயணமாகிறாள். தந்தை சீரியசாக இருப்பதாக போன் வருகிறது. போன் செய்தவள் அவள் சித்தி சாரோ. ஆனால் ஊர்ல அவளை வைப்பாட்டின்னுதான் சொல்றாங்க..
சாரோ ஏற்கனெவே திருமணமாகி கணவன் கொடுமைப்படுத்த அவனை இரும்பு கம்பியால் மண்டையில் லைட்டாக தட்ட அது போலிஸ் கேஸாகி கொஞ்சம் நாள் உள்ளே இருந்து விட்டு வந்தவள். பிறகு தான் ஏஞ்சலாவின் அப்பா அவளுக்கு அடைக்கலம் கொடுத்து வருகிறார்.
சரி கதைக்கு வருவோம்.
ஏஞ்சலா வந்து சேருவதற்குள் தந்தை இறந்தும் விடுகிறார். அடக்க செலவுக்கு ஈமச்சடங்கு செய்யும் கம்பெனியில விசாரித்ததில் எக்கசக்கமாக செலவாகும் என்கிறான்.
கையில காசு இல்லாத வெறுப்புல சாரோவோ இதுக்கு உங்க அப்பன் உயிரோடவே இருந்திருக்கலாம் என்கிறாள்.
அப்பாவின் Billiard Clubம் வீடும் என்னவாயிற்று...? என்றாள் ஏஞ்சலா..
எல்லாம் திண்டுக்கல் பூட்டு போட்டு மூடிகிடக்கு.. வியாபாரம் நொடிச்சு போச்சு. கடைசி நாள் வரை தான் மட்டுமே தனியாக ஆடி ஆடி அங்கேயே உயிரையும் விட்டுட்டார் உங்கப்பா. அங்க மயங்கி கிடந்த விஷயமே வேலைக்கார பொண்ணு எவ்லின் சொல்லிதான் எனக்கு தெரியும் அப்புறம் தான் தூக்கி கொண்டு ஒடினேன் ஆஸ்பத்ரிக்கு.. அதுக்குள்ள எல்லாம் முடிஞ்சு போச்சு என்று பெருமூச்சுடன் கூறினாள் சாரோ..
Amount ஏதாவது வெயிட்டா வெச்சிருந்தாரா என்றாள் ஏஞ்சலா..??
அந்த கொடுமைய ஏன் கேக்குற ..? வங்கி பணம்., இன்சூரன்ஸ் எல்லாத்தையும் முழுங்கிட்டு என்ன தனியா தவிக்க விட்டு போயிட்டார் அந்த மவராசன். அந்த ஏழு Billiards டேபிளும் மேலே உள்ள வீடுதான் அவர் சம்பாதித்த சொத்து .அதுக்கு கூட எந்த உயிலும் எழுதல.. எனவே சட்டப்படி உனக்கு தான் சேரும் என்கிறாள் சாரோ.
அதெல்லாம பின்னால பாத்துக்கலாம். .. போட்டது போட்ட படி வந்துட்டேன். என் கணவன் வேறு ஆபிஸ் வேலையா ஒரு வாரமா ஊரில் இல்லை நான் உடனே கிளம்பணும் என்று ஒரு வழியாக
ஈமச்சடங்குகளை முடித்து விட்டு கணவன் வீடு வந்து சேருகிறாள். ஏஞ்சலா.
இங்கு வந்தால் பக்கத்து வீட்டில இரண்டு நாளா உன் புருஷனை தேடி போலிஸ் வந்ததாக கூறுகிறார்கள்.
நண்பர் ஒருவர் போலிஸில் இருக்க குழப்பத்துடன் அவரை சந்திக்கிறாள்.
அவரோ ஏம்மா இப்படி புரியாத பொண்ணா இருக்க... அவன் எக்கசக்க லஞ்ச பணத்தோட எஸ்கேப் ஆயிட்டான். என்கிறார். இடிந்து போகிறாள் ஏஞ்சலா.. இதுக்கே மலைச்சிட்டியே அவனுக்கு ஏற்கனவே இன்னொரு திருமணமாகி ஆறு வயசுல ஒரு மகன் வேறு இருக்கான். நாங்க எதையோ துப்பு துலங்க போய் பல உண்மைகள் வெளிய வருது என்கிறார் போலிஸ்காரர்.
சரி.. இனிமேல் அந்த ஒடுகாலி புருஷனை நம்பினால் வேலைக்காவது என்று உணர்ந்து கிளப்பை எடுத்து நடத்தி மகன் குல்லேவை காப்பாற்ற தந்தையின் வீட்டிற்கே மூட்டை முடிச்சுகளுடன் வந்து செட்டில் ஆகிறாள்.
தந்தையின் நண்பர் அந்தோணியோ வை சந்தித்து . விபரம் அனைத்தையும் கூறுகிறாள்.
அந்தோணியோ ஒரு பிஸினஸ்மேன். செருப்பு கடை நடத்துவதோடு நல்ல Billiards Player. பயிற்ச்சியாளர். ஆனால் அவருக்கோ சாரோ மீது ஒரு அதீத அன்பு. அவளை அடைய வேண்டும் ஒரு தலை காதலோடு அலைகிறார்.
சாரோவுடன் சீரியஸ் டிஸ்கஷனுக்கு பிறகு அவளையும் பார்டனராக சேர்த்து விரைவில் கிளப்பை திறக்க ஏற்பாடு செய்கிறாள் ஏஞ்சலா. மறு சீரமைப்பு வேலைகள் தொடங்குகிறது.
அந்தோணியோ இன்னும் இரண்டு மூன்று Billiards Players இருந்தால் தான் டீமாக இருக்கும். அப்போதுதான் விளையாட மற்ற டீம்கள் வரும் என்றும் கூறுகிறார்.
நீங்களே ஏற்பாடு செய்யுங்கள். என்கிறாள் ஏஞ்சலா. அவரும் ஒரு ஒற்றை கண்ணன் உங்கப்பாவிற்கும் நண்பன அவனையும் சேர்ப்பதாக சொல்லி சேர்த்தும் விடுகிறார். கிளப்பை பெயிண்ட் அடிக்க வந்த பெயிண்டர் ஒருவன் தனக்கு ஆட்டத்தில் மிகுந்த விருப்பம் என்றும் பயிற்ச்சி கொடுத்தால் சிறப்பாக விளையாட முடியும் என்று கூறகிறான். வேலைக்கார பொண்ணு எவ்லினும் சிபாரிசு செய்யவே அவனையும் டீமில் சேர்கின்றனர்.
எவ்லின் ஏற்கனவே திருமணமானவள். அவள் கணவனுக்கோ வெளி நாட்டில் வேலை. மூன்று வருடங்களாக அவன் வருகையை ஆவலோடு காத்திருக்கிறாள் எவ்லின்.
எப்படியோ டீமிமை உருவாக்கி ஒரு சுபயோக சுபதினத்தில் கிளப்பை திறக்கின்றனர்.
வியாபாரமும் சுமாராக பிக்கப் ஆகிறது.
வெளியூரில் நடக்க இருக்கும் ஒரு Billiards போட்டிக்காக இவர்கள் கிளப் சார்பில் விண்ணப்பிக்கின்றனர். அதற்காக பெரும் தொகை ஒன்றையும் சேமித்து வைக்கின்றனர். அந்தோணியோ அனைவருக்கும் போட்டியில் விளையாட பயிற்ச்சியும் அளித்து வருகிறார். ஒற்றை கண்ணனுக்கு டச் விட்டு போனதால் விளையாட மிகவும் சிரமாக இருக்கிறது. அனைவரும் கேலி செய்யவே தன்னாலேயே போட்டியில் தோற்று விடுவோமோ என்று சதா வருத்தமும் அனைவர் மீது கடும் கோபமும் அடைகிறான்.
இதற்கிடையே சாரோவின் தாய்க்கு உடல் நலம் பாதிக்கிறது. வயதான தாயுடன் மிகவும் சிரமப்படுகிறாள் சாரோ. இதையறிந்த ஆண்டனோ அவளுக்கு பல உதவிகள் செய்ய முற்படுகிறான்.அவளுக்கு மறு வாழ்வு கொடுக்கவும் எண்ணுகிறான். அவனது உண்மையான அன்பை புரிந்து கொள்ளாமல் அவளோ அனைத்தையும் மறுக்கிறாள்.
திடீரென ஒரு நாள் ஏஞ்சாலாவின் கணவன் வந்து சேருகிறான். தன் தவறுகளுக்கு வருந்துவதாகவும் மகனை அழைத்து சென்று நன்கு படிக்க வைக்க விரும்புவதாகவும் கூறுகிறான். போதும் சாமி நான் பட்ட வேதனை. என் மகனை நான் காப்பாற்றுவேன் நீ கிளம்பு என்று கண்டிஷனாக கூறி அனுப்பி விடுகிறாள் ஏஞ்சலா.
வேலைக்கார பெண் எவ்லின் கணவனுக்காக காத்திருந்து காத்திருந்து .அவனும் வருவதாக சொன்ன நாளில் அளவற்ற ஆசையுடன் ஏர்போர்ட் சென்று ஏமாற்றமே அடைகிறாள். இதனால் பெயிண்டருக்கு எவ்லின் மீது அன்பும் காதலும் உண்டாகிறது. காதலை ஏற்பதா மறுப்பதா என்ற குழப்பான மன நிலையில் தவிக்கிறாள்.
போட்டிக்கு இன்னும் சில நாட்களே உள்ளது. ஒற்றை கண்ணனின் பயிற்ச்சி போதாதென்றும் சிறு வய்தில் தந்தையிடம் பெற்ற பயிற்ச்சியில் ஏஞ்சலாவே விளையாடலாம் என்று கூறுகிறாள் அந்தோணியோ. தன்னால் இயலாதென மறுக்கிறாள் ஏஞ்சலோ.
உடல் நலம் குன்றிய சாரோவின் தாய் மருத்துவ மனையில் அனுமதிக்கப்படுகிறாள். அந்தோணியோ அனைத்து உதவிகளையும் செய்து மருத்துவ செலவு முழுவதையும் ஏற்கிறான். சாரோவிற்கு அந்தோணியோ மீது சிறிது அன்பும் உண்டாகிறது. அது டச்சிங் சீன்.
போட்டிக்கான நாள் நெருங்குகிறது. அனைவர் மீதுள்ள வெறுப்பாலும் தன்னால் விளையாட முடியாது என்ற அவ நம்பிக்கையாலும் ஒற்றை கண்ணன் சேமித்து வைத்திருந்த பணத்துடன் அப்பீட்டாகி விடுகிறான். இத்தனை நாள் பட்ட கஷ்டம் வீணாகி விட்டதே என அனைவரும் வருத்தம் அடைகின்றனர்.
அந்தோணியோ எதற்கும் கவலை படாது பணத்தை தானே தருவதாகவும் ஏஞ்சலா தன்னம்பிக்கையோடு விளையாடினால் கண்டிப்பாக ஜெயிக்கலாம் என்றும் கூறுகிறார். அவளுக்கு சில பல டெக்னிக்களையும் சொல்லி கொடுக்கிறார்.
தந்தையின் சிறு வயது பயிற்ச்சியும் அவரது ஆசியும் துணையிருக்கும். தைரியமாக விளையாடு என்று அனைவரும் ஊக்கப்படுத்துகின்றனர். மிகுந்த உற்சாகத்தோடும் தன்னம்பிக்கையோடும் போட்டிக்கு சென்று வெற்றியும் பெறுகிறாள்.
சாரோவும் முத்தமிட்டு அந்தோணியோவை வாழ்த்துகிறாள். சுபம்.
பெண்களை மையப்படுத்தி அவர்களின் உணர்வுகளை கொண்டு அற்புதமாக திரைக்கதை அமைத்து இயக்கியிருப்பவரும் Gracia Querejeta என்ற பெண்ணே. பத்திற்கும் மேற்பட்ட திரைபபடங்களை இயக்கி பல விருதுகளையும் பெற்றுள்ளார்.
ஏஞ்சலாவாக நடித்திருப்பது Maribel Verdu. ஸ்பானிஷ் மொழியின் மிகச்சிறந்த நடிகை. அழுத்தமான நடிப்பால் மனதை கொள்ளை கொள்கிறார்.
சிறுவ்னாக நடித்த Victor Valdivia. துடிப்பும் குறும்பும் அவன் ஒவ்வொரு முறையும் சாரோவை பார்த்து நீ அடிச்சதுல உன் பழைய புருஷன் செத்துட்டானா ..?? என்று கேட்பது நல்ல நகைச்சுவை.
திரைப்படம் வெளிவந்தது 2007. அந்த ஆண்டின் ஸ்பானிஷ் திரையுலகின் மிக உயரிய விருதுகள் அனைத்தையும் தட்டி சென்ற படம்.
குடும்பத்தோடு பார்க்க வேண்டிய அற்புத திரைப்படம்.
24 comments:
Me The First எல்லாம் இங்க கிடையாதே......
மீதெ firstம் Secondம்
கையில காசு இல்லாத வெறுப்புல சாரோவோ இதுக்கு உங்க அப்பன் உயிரோடவே இருந்திருக்கலாம் என்கிறாள்.//
விமர்சனத்தோடு ட்ரெயிலரும் பார்ப்பதால் படத்தினைப் ப்ற்றிய முழுமையான கண்ணோட்டம் கிடைத்துவிடுகிறது சூர்யா.நன்றி.
Hi Surya, as usual u have created the feel of watching the movie!!
Interesting Narration!
Cheers!
தல,
என்ன அப்படி சொல்லிட்டீங்க?
இதோ மீ த தேர்ட்.
நான் என்னும்படி விமர்சனம் எழுதும் மிகக் குறைவான ஆட்களில் நீங்களும் ஒருவர். படங்களையும், கதையையும் சரியான முறையில் உபயோகப் படுத்துகிறீர்கள்.
தொடருங்கள் தல.
கிங் விஸ்வா.
தமிழ் காமிக்ஸ் உலகம்
நன்றி ஷண்முகப்பிரியன் சார்.
Thanx Viji..
வாங்க காமிக்ஸ் கிங் விஸ்வா. உங்க வரவும் பின்னூட்டமும் அளவற்ற மகிழ்ச்சி.
இப்போ நீங்கதான் First.. நான் comments withdraw பண்ணிக்கிறேன்.(தேர்தல் நேரம்)
அடிக்கடி வாங்க.. ஆலோசனை தாங்க...
தல,
உங்களுக்கே ஆலோசனையா?
என்ன கொடுமை சார் இது?
இனிமே உங்க ஒவ்வொரு பதிவிலும் நான் ஆஜர் தல.
கிங் விஸ்வா.
தமிழ் காமிக்ஸ் உலகம்
தல,
இந்த பதிவ என்னோட நண்பர் ஒருவருக்கு இப்போது காட்டினேன்.
அவர் கேட்ட முதல் கேள்வி: சந்தான பாரதி எப்போது அயல் நாட்டு படங்களில் நடிக்க ஆரம்பித்தார்?
அவர் நம்ம அன்டோனியோ போட்டோ'வை பார்த்துத்தான் கேக்குறார்.
என்ன கொடுமை சார் இது?
//கையில காசு இல்லாத வெறுப்புல சாரோவோ இதுக்கு உங்க அப்பன் உயிரோடவே இருந்திருக்கலாம் என்கிறாள்// அட்டகாசமான வரிகள் இவை. நிலைமையை அப்படியே விளக்குகிறது.
கிங் விஸ்வா.
தமிழ் காமிக்ஸ் உலகம்
King Viswa said...
தல,
உங்களுக்கே ஆலோசனையா? //////
ஆமாம். கண்டிப்பா ஆலோசனை தரணும்.முதல்ல ஈ மெயில் ID தரணும்.
நிறைய பேசணும் உங்க கிட்ட..
இனிமே உங்க ஒவ்வொரு பதிவிலும் நான் ஆஜர் தல.//// BAFTA அவார்டு கிடச்சது போல இருக்கு..
சந்தான பாரதி எப்போது அயல் நாட்டு படங்களில் நடிக்க ஆரம்பித்தார்? haha haha.. Super..
குங்கும பொட்டு இல்லாத சந்தான பாரதின்னு சொல்லுங்க...
நண்பருக்கும் நன்றி.
இந்தாங்க தல.
உங்களுக்கு இல்லாததா? prince.viswa@gmail.com
கிங் விஸ்வா.
தமிழ் காமிக்ஸ் உலகம்
அந்த touching scene உண்மைலயே டச்சிங்.. நீங்க சொன்னீங்கன்னு எழுதி கிளிச்சிட்டு இருக்கேன்... நீங்க என்னடான்னா.. என் கட பக்கமே வரல.. ஒரு நட வந்துட்டு என்ன பண்ணனும்னு சொல்லுங்க!!! உங்க பின்னூட்டம் எனக்கு ரொம்ப பெரிய பூஸ்ட்!!!
நன்றி கடைக்குட்டி. கண்டிப்பா வரேன்.
Seven woders is a nice post Butterfly.U r straining 2 give nice stories.Heart felt Wishes.
நண்பரே!!
நல்ல பதிவு!
நல்ல உழைப்பு!
Thanx Dr.
நன்றி தேவன்.
ம்ம் என்னத்த சொல்ல ...
அருமையான தொகுப்பு வழமை போலவே
வாழ்த்துக்கள்
நன்றி டயானா.
//திரைப்படம் வெளிவந்தது 2007. அந்த ஆண்டின் ஸ்பானிஷ் திரையுலகின் மிக உயரிய விருதுகள் அனைத்தையும் தட்டி சென்ற படம்.//
kadhaiyileye therigiradhe!!!virudhugal porundhumena!!!
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சசிரேகா.
அறிமுகப்படுத்தியதற்கு நன்றி. அழகாக விரிவாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
நன்றி டொக்டர்
Post a Comment