Rueng San Tee Chan Kit என்ற தாய் மொழி நாவலை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம்.
பிம்டோ என்ற பெரும் செல்வந்தரான பெண்மணி ரியல் எஸ்டேட் தொழிலில் கொடிகட்டி பறப்பவர். அவரின் ஒரே செல்ல பெண் எர்மா. சேவையே அவள் வாழ்வின் லட்சியம் என் நினைப்பவள்.
பசுமை பூத்து குலுங்கும் ஒரு சின்னஞ்சிறிய கிராமத்திற்கு தனது கல்லூரி மாணவர்கள் சிலருடன் சேவை செய்ய வருகிறாள். பல ஆண்டுகளாய் கேட்பாரற்று கிடக்கும் ஒரு பள்ளி. அதில் 50க்கும் குறைவான மாணவ மாணவிகளே பயிலுகின்றனர். ஆனால் ஆசிரியர் வசதி இல்லாத்தால் பள்ளி இயங்கவில்லை. இருந்த ஒரே ஆசிரியரும் வேலையே வேண்டாம் என எழுதி கொடுத்து விட்டு நகரத்திற்கு வேறு வேலை பார்க்க போய் விடுகிறார்.
அதே கிராமத்திற்கு சேவை செய்யும் எண்ணத்தோடு பல் மருத்துவர் ஒருவரும் வந்து சேரவே அந்த இளைஞனின் சேவையை எண்ணி மனம் லயித்து கல்வி சேவையும் மருத்துவ சேவையும் இணைந்து செய்யலாம என்று மகிழ்கிறாள் எர்மா. தானே ஆசிரியராய் இருந்து ஏழை குழந்தைகளுக்கு கல்வி போதிக்க நினைக்கிறாள்.
குழந்தைகளின் கல்வி ஆர்வத்தை கண்டு வியந்து கிராம மக்களின் துணையோடு பள்ளியை தூசு தட்டி கூரை கட்டி மண் சுவர் எழுப்பி உருவாக்குகின்றனர்.
இதே நேரத்தில் தான் கட்ட போகும் Miracle City க்காக பல இடங்களை தேடி எந்த இடமும் சரியாக கிடைக்காமல் தன் மகள் சேவை செய்ய போன பசுமை நிறைந்த கிராமத்தை அவளுக்கு தெரியாமலே தேர்வு செய்கிறாள் பிம்டோ.
பல கோடி ரூபாய் திட்டமாகவும் தனது கனவு நகரமாக அது இருக்க போவதாகவும் பங்கு தாரர்களிடம் கூறவே அதிக விலை கொடுத்தும் வாங்க ரியல எஸ்டேட் ஏஜெண்டுகள் போட்டி போட்டு புக்கிங் செய்கிறார்கள்.
தான் ஆசிரியராய் இருந்து கல்வி சேவை செய்ய போவதை தன் அம்மாவிடம் சொல்லி அவளின் அனுமதி வாங்க நகரம் நோக்கி பயணமாகிறாள் எர்மா.
நகரம் அடைந்ததும் நேரே தாயின் அலுவலகத்திற்கு செல்கிறாள்.ஆனால தனது தாயே அங்கு Miracle City அமைக்க போவதை ஆறிந்து அதிர்ச்சி அடைகிறாள். தாயிடம் கடும் வாக்கு வாதமும் செய்கிறாள். பங்குதாரர்களிடம் வாக்குறுதி அளித்து விட்டதாகவும் வேறு வழியில்லை என்கிறாள் தாய்.
மனமுடைந்து கதறி அழுதும் ஒன்றும் பலனில்லை. வீட்டிற்கு சென்று பேசி முடிவு செய்யலாம் என்று சொல்லி கிளம்ப செல்லும் வழியில் கார் விபத்தில் உயிரிழக்கிறாள் எர்மா. உயிருக்கு போராடும் நிலையில் உள்ள எம்டாவிற்கு மகளின் இதயம் பொருத்தப்பட்டு உயிர் பிழைக்கிறாள் தாய். மகளை இழந்த சோகத்தில் மனம் மாறுகிறாள் எம்டா.
சிறிது உடல் நலம் தேறியவுடன் மகள் சேவை செய்ய கிராமத்திற்கு தனது காரியதரிசியுடன் வந்து சேருகிறாள் எம்டா. முதலில் குடிநீர் வசதி வேண்டி பள்ளிக்கு குடி நீர் தொட்டி அமைக்கும் பணியில் ஈடுபடுகிறாள். எல்லா வசதிகளும் செய்து கொடுத்து பள்ளியும் கோலகலமாக தொடங்குகிறது. ஊர்மக்கள் அனைவரும் உற்சாகமாக பெரிய விருந்துக்கும் ஏற்பாடு செய்கிறார்கள்.
கல்லூரி நண்பர்களும் பல் மருத்துவரும் குழந்தகளுக்கு சிறிது சிறிதாய் பாடங்களையும் சுகாதாரத்தையும் கற்பிக்க ஆவலோடு பயில்கின்றனர் குழந்தைகள். திடீரென ஒரு நாள் பள்ளி அதிகாரி ஒருவர் வந்து குறைவான குழந்தைகள் பயிலுவதாலும் ஆசிரியர் நியமிக்க முடியாத்தாலும் பள்ளி மூடுவதாய் அரசாங்கம் தீர்மானித்து விட்டதாக குண்டை போட்டுவிட்டு செல்கிறார்.
இதற்கிடையே வேலைக்கு செல்ல மறுத்து குழந்தைகள் கல்வி பயில விரும்புவதால் வருமானத்திற்கு வழி இல்லாத பள்ளி இருக்க கூடாதென எண்ணிய கிராமத்தான் ஒருவன் பள்ளிக்கு தீ வைக்கிறான். பள்ளி முழுவதும் தீக்கிரையாகி சாம்பலாகிறது.. குழந்தைகளும் ஊர்மக்களும் மன முடைந்து போகின்றனர். எம்டாவின் உடல் நலமும் நாளுக்கு நாள் மோசமாகிறது.
வேறு வழியின்றி குழந்தைகள் அனைவரையும் நகரத்து பள்ளியில் சேர்த்து அவர்களை கல்வி பயில வைப்பதே லட்சியம் எனக்கூறி அழைத்து செல்கிறாள் எம்டா. காரியதரிசியின் மூலம் அனைத்து ஏற்பாடுகளும் செய்து விட்டு அன்று Miracle City அறிவிப்பு பற்றி பெரிய கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்கிறாள் எம்டா.
தங்களை போன்ற செல்வந்தர்கள் இது போன்ற குழந்தைகளின் எதிர்காலம் பற்றி சிறிதும் சிந்திக்காமல் வியாபாரம் ஒன்றே குறியாய் இத்தனை நாட்கள் செய்த செயல்களுக்கு வருந்துவதாகவும் கூறுகிறாள்.
Miracle City யாக ஆரம்பித்து வாழ்க்கையின் உண்மையான அதிசய்ம் {Miracle } இந்த குழந்தைகள் தான என பேசி முடித்து தனது அனைத்து சொத்துக்களும் கல்வி பயில முற்படும் ஏழை குழந்தைகளுக்கு அற்பணிப்பதாக கூறி மேடையிலேயே உயிர் துறக்கிறாள் எம்டா.
நாலு படம் ஹிட்டானாலே நாற்காலி கனவு காணும் நம்நாட்டு திரையுல பிரபலங்களை போல அல்லாமல் தனது நாவல் திரைப்படமாக வேண்டும் என்று நினைத்து தானே நடித்தும் அதை நிறைவேற்றியும் காண்பித்துள்ளார் தாய்லாந்து நாட்டு அரச குடும்பத்தை சேர்ந்த
Princess Ubolratana Rajakanya .
பல திரைப்படவிழக்களில் பங்கு பெற்றதுடன் சென்ற வருடம் கேன்ஸ் திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டது.
அழகான பசுமை கிராமங்களும் இயல்பாக நடித்திருக்கும் குழந்தைகளும் அற்புதமான ஒளிப்பதிவும் மனதை வருடும் காட்சிகளின் நளினமான இயக்கமும் கொண்ட அருமையான திரைப்படம்.
சந்தர்ப்பம் கிடைத்தால் நிச்சயம் பாருங்கள்.
உடனே பார்க்க டிரைலர் இங்கே
Miracle City யாக ஆரம்பித்து வாழ்க்கையின் உண்மையான அதிசய்ம் {Miracle } இந்த குழந்தைகள் தான என பேசி முடித்து தனது அனைத்து சொத்துக்களும் கல்வி பயில முற்படும் ஏழை குழந்தைகளுக்கு அற்பணிப்பதாக கூறி மேடையிலேயே உயிர் துறக்கிறாள் எம்டா.
நாலு படம் ஹிட்டானாலே நாற்காலி கனவு காணும் நம்நாட்டு திரையுல பிரபலங்களை போல அல்லாமல் தனது நாவல் திரைப்படமாக வேண்டும் என்று நினைத்து தானே நடித்தும் அதை நிறைவேற்றியும் காண்பித்துள்ளார் தாய்லாந்து நாட்டு அரச குடும்பத்தை சேர்ந்த
Princess Ubolratana Rajakanya .
பல திரைப்படவிழக்களில் பங்கு பெற்றதுடன் சென்ற வருடம் கேன்ஸ் திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டது.
அழகான பசுமை கிராமங்களும் இயல்பாக நடித்திருக்கும் குழந்தைகளும் அற்புதமான ஒளிப்பதிவும் மனதை வருடும் காட்சிகளின் நளினமான இயக்கமும் கொண்ட அருமையான திரைப்படம்.
சந்தர்ப்பம் கிடைத்தால் நிச்சயம் பாருங்கள்.
உடனே பார்க்க டிரைலர் இங்கே
17 comments:
வர வர விமர்சங்கள விட விமர்சனம் வருது டிரைலர் பாருங்கன்ற அறிவிப்புகள் ஜாஸ்தியா இருக்கே.
Trailer shows a determined lady,a reforming story?
GOOD MORNING SOORYA! HOW WAS YUOR VACATION?
ஹைய்யா, மீ த பஸ்ட்.
கிங் விஸ்வா.
Carpe Diem.
தமிழ் காமிக்ஸ் உலகம்
தலைப்பே கவிதை மாதிரி இருக்கே, அப்போ படம் எப்படி இருக்கும்?
இதெல்லாம் நாங்க பார்க்காத படம் சார்.
உங்க விமர்சனத்த வச்சு தான் டீ.வி.டி.ஐ தேடனும்.
கிங் விஸ்வா.
Carpe Diem.
தமிழ் காமிக்ஸ் உலகம்
ஆர்வத்துடன் விமர்சனத்தை எதிர்பார்க்கிறேன்.
Princess Ubolratana Rajakanya நடித்த படம். தமிழ் பட கதை சாயல் போல் எனக்கு தோன்றியது அந்த செண்டிமெண்ட் காட்சிகளை பார்க்கும்பொழுது. உங்கள் விமர்சனதிற்காக காத்திருக்கிறேன்.
One Flew Over The Cuckoos Nest
1975 வெளியான ஹாலிவுட் திரைப்படம்.
நீங்கள் விமர்சித்தால் சூப்பரா இருக்கும்.
காத்திருக்கிறேன்!!
சூர்யா, சீக்கிரம் எழுதுங்க (வேலைப்பளு அதிகமா)
‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்
As usual, pics are classy....and look fwd to your review!
ஆமாம் வாசு. தேர்தல் முடிந்ததும் எழுதலாம் என்று இருந்தேன். வேலைப்பளு.. இந்த வாரம் முடித்து விடுகிறேன்.
தாமததிற்கு மன்னிக்கவும் நண்பர்களே. பொறுமைக்கு நன்றி..
Wow the trailer is so nice..Expecting ur review before actually getting to watch the movie.
pics are very nice..Reviews'la sila nall scenes-ai kurippitu sonnal innum nanraaga irukkum..
this movie is not listed in IMDB :-( am also not able to find in NETFLIX :-(
யாத்ரீகன்.I watched this movie in Film Festival. Plz try this torrent.
http://www.torrentz.com/5f73ad5222a766e16a1cc06358c4207d38a73e29
முதல வருகை.ஆழ்ந்து கவனிக்கப்படவேண்டியவர் என்பது இடுகைகள் மூலம் தெரிகிறது.மீண்டும் வருகிறேன்.
முதல் வருகைக்கு நன்றி ராஜ நடராஜன். ஆழ்ந்து கவனிகபடவேண்டியவரா..?? அது எனக்கு தெரியவில்லை. அடிக்கடி வாருங்கள். வாழ்த்துகள்.
Post a Comment