Tuya de hun shi { Tuya's Marriage}
சீன திரைப்படம்.
மங்கோலிய பாலைவன பிரேதசத்தில் வாழும் தூயா என்ற பழங்குடி பெண்ணின் வாழ்க்கை போராட்ட கதைதான் Tuya' Marriage.
தூயாவின் கணவனான Bater விபத்து ஒன்றில் இரு கால்களையும் செயலிழக்கிறான். அதனால் குடும்பம் வருமானமின்றியும் ஆதரவில்லாமல் மிகுந்த அல்லல் படுகின்றனர். அவளோ மன தைரியத்துடன் கணவனையும் இரு குழந்தைகளையும் மிகுந்த சிரமங்களுக்கிடையில் பராமரிக்கிறாள்.
தூயாவிற்கு மறுமணம் புரிதலே இதற்கு தீர்வாகவும் என Bater கூறவே அவனை விவாகரத்து செய்யவும் வேறு ஒருவரை மணக்கவும் இருவரும் ஒரு மனதோடு சம்மதித்து குடும்ப நீதி மன்றதில் மனு இடுகின்றனர்.
ஆனால் தனது கணவனையும் இரு குழந்தைகளையும் அன்போடு வாழ்நாள் முழுவதையும் ஆதரிப்போம் என வாக்குறுதி தருவோரையே தான் மணப்ப்பேன் என் உறுதியோடு கூறுகிறாள் தூயா.
அவளை பெண் பார்க்க பல பேர் வருவதும் அவர்க்ள் சென்றதும் அதை பற்றி இருவரும் விவாதிப்பதும் சோகத்திலும் ஒரு நகைச்ச்சுவை.
தூயாவின் பழைய பள்ளி தோழனும் பெரிய செல்வந்தனுமான ஒருவன் அவளை மணக்க விரும்புகிறான். ஆனால் அவளது கணவனை ஒரு விடுதியில் வைத்து பராமரிக்க மட்டுமே இயலும் என்றும் அனைவரும் சேர்ந்து இருப்பது இயலாது என கூறி கணவனை விடுதியில் சேர்த்து விடுகின்றனர். கணவனும் அரை மனதுடன் சம்மதித்து விடுதியில் தங்குகிறான்.
பின்னர் மன உளச்சலால் குடும்பத்திற்கு தான் பாரமாக இருப்பதை எண்ணி தற்கொலைக்கு முயலுகிறான். இதை அறிந்த தூயா பதறியடித்து துடித்து போய் மருத்துவமனைக்கு ஒடி வருகிறாள்.
தனது உடல் சுகத்திற்க்காக தான் நண்பன திருமணத்திற்கு ஒப்பு கொண்டதாகவும் நினைக்கிறாள். நண்பனின் செயல்களுக்கும் தூயாவிற்கு பிடிக்கவில்லை. எனவே அவனை மணக்கும் எண்ணத்தையே அடியோடு விட்டு விடுகிறாள்.
தூயாவின் அண்டை வீட்டுகாரனான சென்கிக்கு தூயா மீதும் அவளது குடும்பத்தின் மீது அளவு கடந்த அன்பும் பாசமும் உண்டு.
சென்க்கியின் மனைவியோ பணத்திற்கு ஆசைப்பட்டு இவனை விட்டு விட்டு வேறு ஒருவனுடன் ஒடிப் போய் விடுகிறாள். வாழ்க்கையையே வெறுத்த சென்கி தூயாவின் குடும்பத்துடன் அதீத பாசத்துடன் பழகுகிறான்.
அந்த பாலைவன பிரதேசத்தில் தூயா தினமும் தண்ணீருக்காக மிகுந்த தூரம் செல்ல வேண்டி இருப்பதால் அவளுக்காக கிணறு தோண்டும் முய்ற்ச்சியில் சென்கி ஈடுபடுகிறான். எதிர்பாராத விதமாக கிணறு தோண்டும் போது விபத்தில் சிக்குகிறான். தனக்காக சிரம்ப்படும் சென்கிக்காக தூயா வருத்தமும் வேதனையும் அடைகிறாள்.
சென்கியும் தூயாவை மணக்க நினைக்கிறான். அவளுக்கும் அவன் மீது காதல் அரும்புகிறது.
ஆனால் விதி விடாது தூயாவை துரத்துகிறது...
தூயாவின் திருமணம் நடந்ததா..?? அது யாருடன்..??
Wei Lu வின் கதையை மையமாக கொண்டது இத்திரைப்படம்.
கால் நடைகளுடனும் குளிருக்கான மதுவுடனும் அவர்களின் வாழ்வோடு இசைந்து செல்வதை கவிதையாக படைத்திருக்கிறார் இயக்குநர்.
நுண்மையான உணர்திறன், அவதானிப்புத்திறன்தான் படைப்பின் நுண் அம்சங்களையும் காட்சிகளை சிறப்பாக்குகிறது. உணர்வதும் பிறகு அதை மொழிவதும் இந்த நுண் அம்சங்களிலேயே பெரிதும் தங்கியிருக்கிறது. இதை அற்புதமாக செய்திருக்கிறார் இயக்குநர் Quanan Wang
இயற்கை எழில் கொஞ்சும் மலைகளின் மீதும் அந்த பாலைவனத்திலும் ஒளிப்பதிவு அருமை. நம்மை படத்துடன் இயைந்து அழைத்து செல்கிறார் இயக்குநர்.
தூயாவாக நடிக்கும் Nan Yu மிகச்சிறந்த சீன நடிகை. மிக துல்லியமான உணர்ச்சிகளை வெளிகாட்டுவதிலும் நம்மை அதிர வைக்கிறார்.
தாயாக அவர் காட்டும் அன்பும் பரிதவிப்பும் அத்தனை இயல்பு.
உலகமெங்கும் ஒவ்வொரு பெண்ணும் வாழ்க்கைக்காக போராடதான் வேண்டுமா..?? என்ற கேள்வி மனதின் அடிமனதில் ஒரு சுமையாக சித்தரிக்க திரைப்படம் நிறைவு பெறுகிறது. அந்த கடைசி காட்சியில் தூயாவின் மனதில் நிகழும் உள்வலியும் கலந்த வெளிப்பாட்டை காணலாம், உணரலாம்
பெண்ணின் மனதை உணர்த்தும் உமா மகேஸ்வரியின் கவிதை ஒன்று:
எற்றி உடைத்துப் போன
பீங்கான் சிதறல்களைப்
பெருக்கிச் சுத்தப்படுத்துகையில்
கேவலத்தின் நுனியில் நிற்கிறேன்
புறக்கணிப்புகளைத்
தொடுத்துக் கொள்கிறேன்
பூக்களைப்போல மென்மையாக.
முகச்சுழிப்புகளின் கசப்பில்
உப்பும் புளிப்பும் விரவி
உண்ணத்தகுந்ததாகப் பதப்படுத்துகிறேன்.
என் செத்த கோபத்தை மட்டும்
செய்வதறியாது
எறிகிறேன்
கழிவறைக் கோப்பைக்குள் .....
இந்த சீன திரைப்படம் பெர்லின் மற்றும் பல சீன திரைப்பட விருதுகளை வாரிக்குவித்தது. அனைத்து இந்திய திரைவிழாக்களிலும் திரையிடப்பட்டதும் குறிப்பிடதக்கது.
2007 ல் பெர்லின் & சிகாகோ திரைப்பட விழா விருதுகள் மற்றும் நான்கிற்கும் மேற்ப்பட்ட உலக விருதுகளை அள்ளியது.
சந்தர்பம் கிடைத்தால் கண்டிப்பாக பாருங்கள்.
உடனே பார்க்க வழக்கப்படி டிரைலர்
இந்த சீன திரைப்படம் பெர்லின் மற்றும் பல சீன திரைப்பட விருதுகளை வாரிக்குவித்தது. அனைத்து இந்திய திரைவிழாக்களிலும் திரையிடப்பட்டதும் குறிப்பிடதக்கது.
2007 ல் பெர்லின் & சிகாகோ திரைப்பட விழா விருதுகள் மற்றும் நான்கிற்கும் மேற்ப்பட்ட உலக விருதுகளை அள்ளியது.
சந்தர்பம் கிடைத்தால் கண்டிப்பாக பாருங்கள்.
உடனே பார்க்க வழக்கப்படி டிரைலர்
டிஸ்கி: சற்றே விரிவான மீள் பதிவு.
22 comments:
TEST...
அருமையான விமர்சணம், அவசியம் பார்க்க தூண்டுகிறது.
நன்றி நண்பரே!
Nalla kathai,Tuya - did she get married again,hope not.Uma Maheswari's kavithai nice.
Just just women, but men too have their share of struggle with LIFE!
Tuya's story is really sad....But it would have been much better if she was clear abt what she wanted to do? Either to love & live with her husband or marry someone else!! The dilemma is she wants both!!!
சூர்யா...
நீங்கள் தேர்ந்தெடுக்கும் படங்கள், அதற்காக நீஙகள் செலவிடும் மணித்துளிகள், பார்த்தபின் எங்களையெல்லாம் கட்டியிழுக்கும் விமர்சனங்கள்... அசத்துகிறீர்கள்.
மனித வாழ்வியலை மையமாக கொண்ட படங்களை நீங்கள் அதிகமாய் விமர்சிப்பதன் மூலம் நேரடியாக இதயத்தை தொடுகிறீர்கள், படத்தினை பார்த்தாக வேண்டும் எனும் எண்ணத்தை உள்ளுள் விதைத்து விடுகிறீர்கள். இதுதான் உங்களிடம் மிக கவந்த விஷயம்...
நன்றி சூர்யா, மற்றுமொரு நல்ல படத்தினை அறிமுகப்படுத்தியதற்கு...
பிரபாகர்...
நன்றி ஜமால்..
நன்றி டாக்டர். கவிதையை படித்தால் முடிவு ஒரளவு தெரிந்திருக்கும். அதானால அப்படியே விட்டு விட்டேன்.
Thanx Viji for your visit and comments.
நன்றி பிரபாகர். உங்கள் அன்பும் நட்பும் என்னை திக்குமுக்காட வைக்கிறது.
நன்றிகள் பல..
நல்ல படமோ.. பார்க்க முயல்வோம்
புது தியேட்டர் அருமைய இருக்குங்க சூர்யா
// அவளை பெண் பார்க்க பல பேர் வருவதும் அவர்க்ள் சென்றதும் அதை பற்றி இருவரும் விவாதிப்பதும் சோகத்திலும் ஒரு நகைச்ச்சுவை.//
நான் பாத்தவரைக்கும் சீனப்படங்கள் பெரும்பாலும் சேகமயமாவே இருக்குங்க.
விமர்சனம் மிக அருமை,நல்லா எழுதிருக்கிங்க!!
"உலகமெங்கும் ஒவ்வொரு பெண்ணும் வாழ்க்கைக்காக போராடதான் வேண்டுமா..??" இவ்வசனங்கள் மனத்தைப் பிசைகிறதன.
தேடிப் பார்ப்பேன். கிடைத்தால் பார்ப்பேன்.
நன்றி உழவன்..
நன்றி கார்த்திக். என்ன ரொம்ப நாளா ஆளையே காணோம்..?? நகைச்சுவை படங்களும் இருக்கு கார்த்திக்.
நன்றி மீனா மேடம்.
சந்தர்ப்பம் கிடைத்தால் நிச்சயம் பார்க்கலாம் மாதேவி. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
உங்களுக்கு மட்டும் எங்கிருந்து தான் இந்த மாதிரி படம் தெரியுதோ... உங்கள் விமர்சணங்கள் தொடரட்டும் :-)
இந்த படத்தை பார்த்தாச்சு தலை
ஒரு தொடர்பதிவு விருதாக எனது வலைப்பூவான, காலடி-க்கு 'The Interesting Blog' அவார்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது! என்னை ஊக்குவிக்கும் விதமாக உங்கள் வலைப்பதிவைக் காண்கிறேன். அதற்கு என் அன்பு மற்றும் நன்றிகள்! உங்கள் வலைப்பூவைப் பற்றி இந்த இடுகையில் குறிப்பிடுவதில்பெருமகிழ்ச்சியடைகிறேன்!
நன்றி ஜெகநாதன்..
"Interesting Blog" விருதில் உங்களை இனைத்துள்ளேன். நிறைய எழுதுங்கள்.
Post a Comment