நடந்த கோணல் பாதை மீதினில்
புதிதாய் சின்னஞ்சிறு பாதங்கள்..
சற்றே நடுங்கி
நிதானித்து
பத்திரமாய் எழுகின்றன கால்கள்
தொடரப்போகும் அடிகளுக்கு…
என்ற விழியனின் கவிதை வரிகளுக்கு ஏற்ற தந்தையில்லை கியானி.
பாலோ பிறந்த அன்றே மனைவி இறக்க காரணமானது இந்த குழந்தைதான் என்று எண்ணி குழந்தையை விட்டு விட்டு ஓடிப்போனவன்.
பதினைந்து வருடங்களாக தனது மகனை போல வளர்ந்து வருபவர்கள் பாலோவின் மாமனும் அவனது மனைவியும். ஆனால் அவனுக்கு ஆறு வயதுக்குள்ள குழந்தையின் மன வளர்ச்சியே உள்ளதென்றும் இப்போது பெற்றோரின் அரவணைப்பு மிக மிக அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள். அதனால் அவனது மன நிலையில் மாற்றம் வரும என்று சொன்னதால் கியானியை அழைத்து அவனிடம் பாலோவை ஒப்படைகிறான் மாமன்.
மன்னிக்கவே முடியாத தவறை செய்து விட்டதாக வருந்தும் கியானி மன வளர்ச்சி குன்றிய தனது மகனை உள்ளத்தால் நெருங்குகிறானா ? பாலோ கியானியை தந்தையாக ஏற்று கொள்கிறானா என்பதே The Keys to the House இத்தாலிய திரைப்படம்.
துளியும் நஞ்சு கலக்காத பிஞ்சு மனதிற்குள்ளும் கடலளவு குற்ற உணர்வு கொண்ட தந்தை மனதிற்குள்ளும் நடக்கும் பாச போராட்டம்.
பெர்லினில் புகழ்பெற்று விளங்கும் MRC குழந்தைகளுக்கான மருத்துவமனையில் சில நாட்கள் தங்கி நடை பயிற்ச்சியும் மன நல பயிற்ச்சியும் பெறுவதற்காக வருகின்றனர் பாலோவும் கியானியும்.
மருத்துவமனையில் இருக்கும் மற்ற குழந்தைகளை கண்டு அதிர்ச்சியும் பதற்றமும் அடைகிறான் கியானி. அந்த மருத்துவமனையில் தனது மகனை விட கொடுமையான நோயால் பாதிக்கப்ட்டிருக்கும் இருபது வயது பெண்ணையும் அவளது தாய் நிக்கோலாவையும் பார்த்து நிலை கொள்ளாமல் தவிக்கிறான்.
அவனது தந்தை கியானிதான் என்று மாமா சொன்னதாக கூறும் பாலோ தந்தை கியானியை ஆரம்பம் முதலே முற்றாக வெறுக்கிறான். என்னதான் நீ எனக்கு செய்தாலும் என் மாமா ஆல்பிரட்டோ போல் வருமா என்கிறான்? ஆனாலும் தன் குற்ற உணர்ச்சியால் எல்லாவற்றையும் பொறுத்து கொண்டு பாலோவை நெருங்க அனைத்து வழியிலும் முயற்ச்சிகிறான் கியானி.
தினந்தோறும் அவனை நடை பயில பக்கத்தில் உள்ள பூங்காவிற்கும் அழைத்து செல்கிறான். அவன் கேட்ட உணவு பொருட்களையெல்லாம் வாங்கி கொடுக்கிறான். ஆனாலும் பாலோவோ கியானியை வெறுத்து கொண்டே இருகிறான். இவர்கள் இருவரின் அனைத்து செய்கைகளையும் அமைதியாக கவனித்து கொண்டிருக்கிறாள் நிக்கோலா.
ஒரு சமயம் பாலோ செய்கைகளை பொறுத்து கொள்ள முடியாது கோபம் கொள்கிறான் கியானி. என்ன செயவதென்றும் புரியாமல் தவிக்கவே நிக்கோலாவிடம் ஆலோசனை கேட்கிறான். அதற்கு நிக்கோலா இளம் வயதில் அவனுக்கு கிடைக்காத பெற்றோரின் அன்பும் அரவணைப்புமே இதற்கு காரணம். அதனால் "Prepare yourself for suffering if you intend to be close to him." என்று அறிவுரை சொல்கிறாள். அதையே பின் பற்றவும் உறுதி கொள்கிறான்.
ஒரு நாள் கைப்பந்தாட்ட மைதானத்தில் விளையாட்டை பாலோ ரசித்து கொண்டிருக்க சற்று அசட்டையாக வெளியே உலவுகிறான் கியானி. சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தால் பாலோவை காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. துடித்து போகிறான் கியானி. பாலோ தன்னந்தனியே இரயில் ஏறி எங்கோ சென்று விடுகிறான். பிறகு காவலர் அவனை கண்டுபிடித்து கியானியிடம் ஒப்படைகின்றனர். மன நிலை சரியில்லாத மகனை இப்படிதான் கவனிப்பதா என்றும் கேள்வி எழுப்பவே பதில் சொல்ல முடியாமல் தவிக்கிறான் கியானி.
பாலோவை இன்னும் கூடுதல் கவனிப்புடன் பார்த்து கொள்வதாகவும் உறுதியளிக்கிறான். அவன் மீது இப்போது கோபத்திற்கு பதில் கனிவும் அன்புமே கியானிக்கு அதிகரிக்கிறது. தான் செய்யும் செயல்கள் நிலையறியாது செய்யும் குழந்தையை நினைத்து இரவெல்லாம் சோகமே உருவாகி பாலோவின் அருகிலேயே அமர்ந்து கண்ணீர் வடிக்கின்றான்.
கடும் மருத்துவ பயிற்ச்சிக்கு பிறகு சிறிது சிறிதாய் உடல் நலம் தேறும் பாலோவிற்கு மனம் மட்டும் இன்னும் தெளிந்த பாடில்லை. அது உடனடி தீர்வாகதென்றும் தொடர்ந்து செலுத்தும் அன்பும் ஆதரவுமே அவனை சிறிது குணமாகும் என்று மருத்துவர்கள் சொல்ல ஊருக்கு அழைத்து போக ஆயுத்தமாகின்றான்.
நீண்ட கார் பயணத்தில் செல்லும் போது பல்வேறு சேஷ்டைகளே செய்து கொண்டே வருகிறான் பாலோ. முதலில் அவைகளையெல்லாம் ரசித்து வரும் கியானி அவன் காரோட்ட இடையூறாகும் போது சிறிது கோபம் கொள்கிறான் கியானி. உடனே மாமா வீட்டிற்கே திருமவும் போக விரும்புவதாக கூறுகிறான் பாலோ.
காரை ஒரிடத்தில் நிறுத்தி தன் கோபத்தை குழந்தையிடம் காண்பித்தற்காகவும் இன்னும் பாலோ தன்னிடம் நெருங்க வில்லை என்று நினைத்து கண்ணீர் விட்டு கதறுகிறான். அந்த முடியாத கைகால்களுடன் தத்தளித்து காரிலிருந்து இறங்கி பாலோ தந்தையை அணைத்து “நான் இருக்கும் வரை நீ அழவே கூடாது. நான் உன்னை விட்டு என்றும் பிரிய மாட்டேன் என்று கூறுவதுடன் திரைப்படம் நிறைவு பெறுகிறது.
பதினைந்து மகனுக்கு தந்தையாக உணர்ச்சி குவியலாய் நடிப்பை கொட்டியிருப்பவர் நாற்பதே வயதான Kim Rossi Stuart. நடிப்பை விருப்ப பாடமாய் படித்திருக்கும் இவர் ஐந்து வயது முதல் நடித்து வருபவர். இவரது குடும்பமே ஒரு கலை குடும்பம் தான். இவரது தந்தையும் சகோதரியும் நடிகர்களே.
மனதின் பொது மொழி மெளனம். அந்த மெளனத்தின் அடியாழத்தில் இருப்பவை சிரிப்பும் அழுகையும் தான். அந்த சிரிப்பையும் அழுகையையும் தனது அருமையான நடிப்பால் திரையில் மொழி பெயர்த்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.
இனம், மதம், மொழி என்று அனைத்தையும் கடந்து மானுட உணர்ச்சிகளை பேசுவதே உலக படைப்பு. அப்படியொரு அற்புத படைப்பை தந்திருக்கும் இயக்குநர் Gianni Amelio. தனது பெயரையே தந்தையின் பாத்திர படைப்பிற்கு வைத்து அற்புத ஒளிபதிவோடு கதையை ஒரு கவிதையாக்கியிருக்கிறார்.
ஒரு இரயில் பிராயணத்தில் தொடங்கி ஒர் கார் பிராயணத்தில் முடிவதாய் திரைக்கதை அமைத்திருப்பது வாழ்க்கை பயணத்தின் சந்தோஷம், வலி, அன்பு, சகிப்புதன்மை, தியாகம், என்று அனைத்தையும் சொல்லாமல் சொல்லியிருக்கும் இயக்குநரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
2004ல் வெளிவந்த இத்திரைப்படம் வெனிஸ் திரைப்பட விருதுகள் உட்பட உலக அளவில் பல விருதுகளை வாரி குவித்துள்ளது.
சந்தர்ப்பம் கிடைத்தால் நிச்சயம் பார்க்க வேண்டிய படம்.
உடனே பார்க்க டிரைலர் இங்கே
58 comments:
இது போன்ற படங்களை எல்லாம் எங்கே போய் பிடிக்கிறீர்கள்..?
நல்ல பதிவு...
சூர்யா,
கனத்த மனத்தோடு படித்து வந்தேன்.
//காரை ஒரிடத்தில் நிறுத்தி தன் கோபத்தை குழந்தையிடம் காண்பித்தற்காகவும் இன்னும் பாலோ தன்னிடம் நெருங்க வில்லை என்று நினைத்து கண்ணீர் விட்டு கதறுகிறான். அந்த முடியாத கைகால்களுடன் தத்தளித்து காரிலிருந்து இறங்கி பாலோ தந்தையை அணைத்து “நான் இருக்கும் வரை நீ அழவே கூடாது.//
இந்த வரிகளை படித்த பின் வாய்விட்டு அழுதே விட்டேன். என்ன ஒரு உணர்ச்சிக்குவியல்? கண்டிப்பாய் இந்த படத்தை தனியே ரசித்தழுது பார்க்கவேண்டும்.
அருமையான நடை, தெளிவான நடை என திரும்பத்திரும்ப சொல்ல கூச்சமாயிருக்கிறது, ஆனாலும் திரும்பவும்.
இருப்பினும் ஒன்று சொல்லலாம், இது போன்றே எழுதுங்கள்.
மனநிலை சரியில்லாதவர்களை எப்படி நடத்தவேண்டுமென்பத்ற்கு இதுவோர் பாடம்.
பிரபாகர்.
மிகவும் அருமை நண்பரே விமர்சணம்.
எவ்வளவோ விடயங்கல் கொட்டி தான் கிடக்கின்றன நாம தான் இன்னும் ஃபைட்டு டூயட்டு - எதுக்குமே லாயக்கில்லாத படங்களாக எடுத்துகிட்டு இருக்கோம் ...
ஹூம் ...
Nice selection Surya.Itz the father who is the impression for the development of the child & hence the child requires the father's affection.
மனதின் பொது மொழி மெளனம். அந்த மெளனத்தின் அடியாழத்தில் இருப்பவை சிரிப்பும் அழுகையும் தான்.//
உங்களைப் போன்ற நல்ல ரசிகர்கள்தான் நல்ல படைப்பாளிகளின் ஆன்ம சக்தியே எனபதனைத் திரும்பத் திரும்ப உறுதிப் படுத்திக் கொண்டே இருக்கின்றீர்கள் சூர்யா.
வாழ்த்துகள்.
நன்றி கீழை ராஸா. எல்லாமே தீவிர தேடுதல் தான் நண்பரே...
நன்றி பிராபாகர். உங்கள் அன்பும் ஆதரவும் தொடர்ந்த ஊக்கமும் என்னை சிறகடிக்க வைக்கிறது.
மிக்க நன்றி.
நன்றி ஜமால். நீங்கள் சொல்வது மிகவும் சரியே. இன்னொன்று 40 வயதான Kim Rossi 15 வயது மகனுக்கு அப்பாவாக நடிக்கிறார்.
நம்ம தமிழ் சினிமாவில் தாத்தா ஆனவனல்லாம் குத்தாட்டம் போட்டு கொண்டு இருக்கிறார்கள். இருந்தாலும் இந்த அவலத்தை நம்ம மக்கள் பாலாபிஷேகம் செய்து பார்த்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
ரொம்ப நல்லவர்கள்..
நன்றி டாக்டர்.
ஷண்முகப்ரியன் said... ////
மனதின் பொது மொழி மெளனம். அந்த மெளனத்தின் அடியாழத்தில் இருப்பவை சிரிப்பும் அழுகையும் தான்.//
உங்களைப் போன்ற நல்ல ரசிகர்கள்தான் நல்ல படைப்பாளிகளின் ஆன்ம சக்தியே எனபதனைத் திரும்பத் திரும்ப உறுதிப் படுத்திக் கொண்டே இருக்கின்றீர்கள் சூர்யா.///
நன்றி சார்.உங்கள் பின்னூட்டமே எனக்கு மிகுந்த சக்தியையும் ஊக்கத்தையும் அளிக்கிறது.
வெளியூர் சென்று திரும்பி விட்டீர்களா..?? பயணம் இனிமையாய் இருந்திருக்கும் என்று நம்புகிறேன்.
மிகவும் அருமை நண்பரே விமர்சணம்.
நன்றி கார்த்திகேயன்.
வித்தியாசமான ஆங்கிலப்படங்களை அறிமுகப்படுத்தும் உங்களை எப்படிப்பாராட்டுவது.
அன்புடன்
வர்மா
நன்றி வர்மா.
உங்கள் வருகையும் பின்னூட்டமுமே மிகப்பெரிய பாராட்டுதான்.
இந்த ஊக்கமே இன்னும் தேடவும் அவற்றை அறிமுகப்படுத்த ஆவலையும் தூண்டுகிறது.
இதைவிட வேறு என்ன வேண்டும்.
Thanx a lot.
படிக்கும் போதே மனதை பிசைந்து எடுத்து விடுகிறது
இதற்க்கு காரணம் உங்களின் எழுத்தே.
//துளியும் நஞ்சு கலக்காத பிஞ்சு மனதிற்குள்ளும் கடலளவு குற்ற உணர்வு கொண்ட தந்தை மனதிற்குள்ளும் நடக்கும் பாச போராட்டம்.//
இந்த அர்த்தமுள்ள சொற்தொடரை காட்சிபடுத்துவது
இயக்குனருக்கு மிக கடினமான ஒன்று கத்தி மேல் நடப்பதை போன்றது.
//சந்தர்ப்பம் கிடைத்தால் நிச்சயம் பார்க்க வேண்டிய படம்//
ஆனால் உங்களின் பதிவு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொண்டு பார்க்க தோன்றுகிறது.
arumai Surya....
ungal pathivugal menmelum thodara iraivanai piraarthikkiren,....
neenda naatkal ...ungal pathivugal pakkam ettippaarkavillai....sariyaana kavalaiyaappochu... en minanjalil vanthu kuvintha ungal pathivu azhaippugalaim paarththapothu.... iththanaiyum miss pannivittume endru..
ini... adikkadi varuven....
வேல்கண்ணன்,வருகைக்கும், வாழ்த்திற்கும் பின் தொடர்தலுக்கும் மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்.
இந்த ஊக்கமே எனக்கு உற்சாகம்.
நன்றி டயானா, அடிக்கடி வாருங்கள். நிறை / குறை கூறுங்கள்.
மிக்க மகிழ்ச்சி...
நல்ல விமர்சனம்....இந்த படத்தின் குறுந்தகடு எங்கு கிடைக்கும்.சமீபத்தில் அமீர்கான் படம் குழந்தையைப் பற்றிய படம் பார்த்தேன் நன்றாக இருந்து..... அதிலும் குழந்தையின் மனநிலையை நன்கு காட்டியுள்ளார்கள்.அப்படத்தையும் ஒவ்வொரு பெற்றோரும் ஆசிரியரும் பார்கவேண்டுமென் எண்ணுகின்றேன்.
ஒரு மூன்று மணிநேர திரைக்கதையை
ஒரு பக்கத்தில் சொல்ல, நல்ல எழுத்துவளம் வேண்டும்.
படிக்கிறவர்களைத்தூண்டுகிற உங்கள் பதிவு
நம்ம ஊர் கதைசொல்லிகளை நினைவுபடுத்துகிறது.
ரொம்ப நல்லாருக்கு.
கருத்திற்கு நன்றி கல்பனா.
குறுந்தகடுகள் சென்னையில் பர்மா பஜார் / தி.நகர் சத்யா பஜாரில் கிடைக்கும்.
மேலும் விபரங்கள் தேவையெனில் தனி மின்னஞ்சலிடவும்.
நன்றி காமராஜ்.
தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க மகிழ்ச்சி.
பாட்டியிடம் வளர்ந்ததால் இருக்கலாம். அவள் அன்பு மட்டுமே அறிந்த ஒரு ”அற்புத கதை சொல்லி”
Looks like, off late you you have decided to take on senti/touchy movies!!
// “நான் இருக்கும் வரை நீ அழவே கூடாது. நான் உன்னை விட்டு என்றும் பிரிய மாட்டேன் என்று கூறுவதுடன் திரைப்படம் நிறைவு பெறுகிறது.//
உங்க அளவுக்கு நான் ரசிச்சு பாக்குரதில்லைனு நெனைக்குறேன்.
பார்க்கவேண்டிய படம்
நல்ல விமர்சனங்க சூர்யா :-))
வண்ணத்திரை வண்ணம் மாறாமல் வரைந்த வண்ணத்துபுசியார்ருக்கு வாழ்த்துக்கள்.
வண்ணத்திரை வண்ணம் மாறாமல் வரைந்த வண்ணத்துபுசியாருக்கு வாழ்த்துக்கள்
நம்ம பக்கமும் ஒரு தடவ பார்வைய செலுத்துறது !!!!! நேரம் இல்லன்ன பிரச்னை இல்ல விடுங்க பிறகு ஆறுதலாக் வாங்க, அனுமதி இலவசம் ,,,கதவுகள் பூட்டப்படுவதே இல்ல.
கட்டாயம் தேடிப் பார்க்க வேண்டிய படம். பகிர்விற்கு நன்றி.
Thanx Viji. Sure I will also try to post different varities soon.
நன்றி தென்னவன்.
நன்றி பிரபா. கட்டாயம் வருகிறேன். வருகைக்கும் அழைப்புக்கும் நன்றி.
நன்றி டொக்டர்.
அழகான கவிதை வரிகள்.எப்பவும் போல பட விமர்சனம் அருமை.
வழக்கம் போல் அருமை சூர்யா. பார்க்கவேண்டிய படம்.
நன்றி ஹேமா.
நன்றி Sridhar சார். நலமா? சென்னை விஜயம் எப்போ..??
அருமையான விமர்சனம். உங்கள் நடை அபாரம். படம் பார்த்து விட்டது போல ஒரு திருப்தி எனக்கு. இத்தனை நாள் உங்கள் வலயத்தை மிஸ் பண்ணி இருக்கிறேனே!
வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ஜெஸ்வந்தி.
மிக்க மகிழ்ச்சி.
Downfall - A movie about Hitlers last few days..Please do see and write review
நல்ல விமர்சனம்... படத்தை பார்த்த மாதிரியே ஒரு ஃபீலிங்.. பகிர்வுக்கு நன்றிகள்.
இது உங்கள் கருத்து.
அதை நான் மதிக்கிறேன்
ஆனால் உங்கள் கருத்து தான் என் கருத்தாக இருக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்
நன்றி கணேஷ். முயல்கிறேன்.
நன்றி தர்ஷினி.
டாக்டர் புருனோவின் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.
எந்த கருத்தை சொல்கிறீர்கள் என்று புரியவில்லை.. ?? படம் பார்க்க வேண்டும் என்பதையா..??
வணக்கம், எல்லோர்க்கும் எப்படியும் ஏதாவ்தோரு நல்ல விஷயத்தை மட்டுமே கொடுக்க வேண்டும் என்பதை தீர்மானமாக செய்து வரும் மனமாஎந்த பாரட்டுதல்களுக்குரிய உங்களிடம் ஒரு வேண்டுகோள்! தயவு செய்து என் ப்ளாக் http://chinthani.blogspot.com/ கடந்த இரு பதிவுகளையும் அதை தொடர்ந்து அதில் குறிப்பிட்டுள்ள மற்ற ஆங்கில இணையப்பக்கங்களையும் படித்து உங்கள் மனதுக்கு சரியென்று படுவதை உங்கள் ப்ளாக்கை படிப்பவர்களிடம் பகிர்ந்து கொள்ளவும்!! இது ஒரு மொத்த இனத்தின் வாழ்வாதார போராட்டத்துக்கு நம்மால் முடிந்த உதவி!
//மனதின் பொது மொழி மெளனம். அந்த மெளனத்தின் அடியாழத்தில் இருப்பவை சிரிப்பும் அழுகையும் தான்//
:)
மொத்த பதிவுமே உணர்ச்சி குவியலாய் இருந்தது.
முடிக்கும் போது ஆழ்ந்த மௌனம் எனை சூழ்ந்துக்கொண்டது.
உங்களுக்கு சுவாரசிய பதிவர் என்று ஒரு விருது கொடுத்திருக்கிறேன். அருமையாக எழுதுவதற்கு என் பாராட்டுகள். ஏற்கனவே இந்த விருது கொடுக்கப்பட்டிருந்தால் என் கவனக் குறைவுக்கு மன்னியுங்கள். :-)
http://koottanchoru.wordpress.com/2009/09/12/சுவாரசிய-பதிவர்-விருது/
அன்புடன்
ஆர்வி
ஆங்கில மொழி படம் தானா?
நீங்க மீ த பர்ஸ்ட் போட கேப் உடுறதில்லன்னு உங்க மேல கம்ப்ளைண்ட்!
மிகவும் நன்று
Hi!
After a long time :)
Ungalukku indha padangal eppadi kidaikkindrana? Do you go to movie libraries in search of them? Or is it a part of your profession?
Ennavaaga irundhaalum, ippadi oru world cinema tour-ku ungalukku nandri :)
Oru small observation -
Cannes festival-ai "Khan" (Namma Salman, shahrukh surname madiri) pronounce pannanum. Adhanala tamizh-la kaan endru ezhudi, within paranthesis Cannes kurippittal padippavargalukku sulabama irukkum. First time readers-um terindhu kolvargal.
நன்றி அசோக்.
நன்றி பப்பு. மீத first and last ன்ன்னு ஒரு நாள் எல்லோரும் போய்விட்டால்..?? அதுக்கு தான் ..
hi Sowmya.. Thanx for your suggestion and comments.
Cinema is not my profession.. its my passion. இருக்கவே இருக்கார் கூகிளாண்டவர். I read some books and pick good movies.
உங்கள் தோட்டத்தில் இனி நானும் ஒரு மலராக....அதாங்க ஃப்ளோயர் ஆயிட்டேன்....
கதை இன்னும் படிக்கவில்லை படித்து கருத்து போடுகிறேன்...
"மனதின் பொது மொழி மெளனம். அந்த மெளனத்தின் அடியாழத்தில் இருப்பவை சிரிப்பும் அழுகையும் தான்"
*** Highlight ***
Hi...nice pictures of Cuba...
Great to read ur comments, my email address is cyberkitty123@gmail.com.
Post a Comment