மூன்று வருடம் மூன்று மாதம் மூன்று நாட்கள் குகையின் உள்ளேயே கடும் தவம் புரிந்து வரும் தாஷிவை அழைத்து செல்ல மடாலயத்தின் குருமார்கள் வருகின்றனர்.
பாறை மீது எழுதியுள்ள 'ஒரு சொட்டு நீரை காய்ந்து போகாமல் எப்படி தடுக்க முடியும்?' என்ற வாக்கியத்தை படித்து யோசித்து கொண்டே தன் துறவற மடாலயத்திற்கு திரும்புகிறான் தாஷி.. ஐந்து வயது முதல் பெண் பார்வையும் வாசனையும் இல்லாத கடும் துறவறம்.
தாஷிவை லாமாக்க அவனது குருமார்கள் செய்யும் ஏற்பாடுகள் ஒருபுறமிருக்க
தாஷிவுக்கு கடுமையான தடுமாற்றம் மறுபுறம். மீண்டும் துறவறமா..?? என்ன சாதித்தோம் இந்த துறவறத்தில். குழப்பி போகிறான்.
அறுவடை காலத்தில் பயிர்களையும் விவசாயிகளையும் ஆசிர்வதிக்க போன இடத்தில் பேமாவை பார்க்கிறான். சந்திக்கிறான். மனம் இழக்கிறான். மீண்டும் திரும்பி வந்ததும் மடலாயத்தில் அவனுக்கு இருப்பு கொள்ளவில்லை. ஆண்மையையும் அடக்க முடியவில்லை. பேமைவை தேடி செல்ல முடிவும் எடுக்கிறான்.
பேமா ஏற்கனவே குடும்ப முறைப்பையன் ஒருவனுக்கு நிச்சயிக்க பட்டவள். துறவறத்தை துறந்து சாதாரண உடையில் பார்த்ததும் கிராமத்தினருக்கு அதிர்ச்சியும் ஆச்சரியும் கூடுகிறது.
பேமாவும் தாஷியை விரும்புகிறாள். புல் வெளியில் இயற்கையோடு இருவரும் கலக்க முறைப்பையன் பார்த்தும் விட விட்டும் கொடுக்கிறான். பேமா தாஷி திருமணம் இனிதே நடக்கிறது.
மண்வாசனையே அறியாதவனுக்கு திடிரென்று கிடைத்த இல்லறம். அதுவும் அடக்கி வைக்கப்பட்ட ஆண்மை.... கேட்க வேண்டுமா..? காமத்தில் கொக்கேகருக்கே கற்று கொடுக்கும் அளவிற்கு மூழ்கி திளைக்கிறான் தாஷி. ஒரு மகனும் பிறக்க அவனுக்கு கர்மா என்று பெயர் சூட்டுகிறார்கள் தம்பதியர்கள்.
குடும்பஸ்தன் ஆகி விட்டதால் பொருள் ஈட்டும் ஆசையும் வருகிறது. விவசாயத்திலும் நாட்டம் கொள்கிறான். தரகு முதலாளி வேண்டாம், நாமே சந்தையில் போய் விற்றால் நல்ல லாபம் பார்க்கலாம் என்று கிராமத்தினரிடமும் தன் மாமானாரிடம் வாதாடுகிறான். ஆனால் இரவோடு இரவாக பயிர்கள் தீ பிடித்து எறிய தரகன் தான் காரணமென சந்தேகித்து அவனோடு சண்டையிட நகருக்குள் செல்கிறான். தனியாய் வந்து மாட்டி கொண்டவனை தரகனின் ஆட்கள் புரட்டி அடிக்க மீண்டும் கிராமத்திற்கே வந்து சேருகிறான்.
மீச்சம் மீதி இருக்கும் தானியங்களையாவது விற்று நாலு காசு பார்க்கலாம் என மகனுடன் நகரத்துக்கு பயணிக்கிறாள் பேமா. கூலி வேலை செய்யும் கவர்ச்சி பெண்ணொருத்தியான சுஜாதாவின் மேல் வெகு நாட்களாக கண் வைத்து காத்திருக்கிறான் தாஷி.
வீட்டில் மனைவியும் இல்லை எவரும் இல்லை. அந்த நேரத்தில் சுஜாதாவும் அடிக்கடி வந்து செல்கிறாள். ஆசையும் மோகமும் பற்றி எரிய இதுவரை எவருமே செய்யாத புது வித கலவியில் இருவரும் ஈடுபடுகின்றனர்.
தாஷிவைக் காண பழைய மடாலயத்தோழன் வருகிறான். அவனது இல்லறம் பற்றியெல்லாம் விசாரிக்கிறான். மெளனத்துடன் திரும்பி செல்கிறான். மனைவி இருக்க வேறொரு பெண்ணுடன் உறவு கொண்டதை எண்ணி வருந்துகிறான். குற்ற உணர்வால் நிலை கொள்ளது தவிக்கிறான்.
இந்த வாழ்க்கையும் கசந்து விடவே துறவறமே நல்லறம் என்று எண்ணியவனாய் இரவோடு இரவாக துறவற உடையணிந்து மடாலயம் நோக்கி பயணிக்கிறான்.
அதே பாறையின் அருகே சென்று கொண்டிருக்கும் போது பேமா குறுக்கிடுகிறாள். சித்தார்த்தன் கதையில் யசோதாவை தெரியுமா..?? என்று ஆரம்பித்து அவள் பட்ட வேதனைகள், அவமானங்கள். இரவோடு இரவாக விட்டு சென்றபின் யாரறிவார்..??
ஆண்களுக்கு இது வழக்கமாக இருக்கலாம். ஆனால் பெண்ணின் நிலைப்பாடு அவ்வாறு இருக்குமா..?? அதனை செய்ய துணியுமா என்று ஆவேசத்தோடு கேள்வி கணைகளால் தாஷிவை துளைக்கிறாள்.
பதில் பேச முடியாமல் உடைந்து போகிறான் தாஷி. பேமாவின் காலடியில் கண்ணீருடன் விழுகிறான். அவனையும் அவன் துறவறத்தையும் மதிக்காத பேமா குழந்தையை எண்ணிய படி வீட்டை நோக்கி செல்கிறாள்.
பாறையின் இன்னொரு புறத்தில் 'சொட்டு நீர் காய்ந்து போகாமல் இருக்க, அதனை கடலில் எறியுங்கள்!' என்ற வாசகம் காணப்படுகிறது. இந்த காட்சியுடன் நிறைவடைகிறது திரைப்படம்.
திபெத் / லடாக்கி மொழிகளிம் ல் வெளியான இத்திரைப்படம் பல உலக விழாக்களில் பங்கு பெற்றதுடன், உலகம் முழுவதும் முப்பதுக்கு மேற்பட்ட விருதுகளுடன் மெல்போர்ன் பட விழாவில் பரிசையும் தட்டி சென்றது. சுஜாதாவாக நடித்திருப்பது Neelesha BaVora
வசூலிலும் நூறு கோடிகளை வாரி குவித்துள்ளது.
திபெத் / லடாக்கி மொழிகளிம் ல் வெளியான இத்திரைப்படம் பல உலக விழாக்களில் பங்கு பெற்றதுடன், உலகம் முழுவதும் முப்பதுக்கு மேற்பட்ட விருதுகளுடன் மெல்போர்ன் பட விழாவில் பரிசையும் தட்டி சென்றது. சுஜாதாவாக நடித்திருப்பது Neelesha BaVora
வசூலிலும் நூறு கோடிகளை வாரி குவித்துள்ளது.
இயற்கை எழில் கொஞ்சும் மலை பிரதேசம், தூய்மையான நீரோடைகள், வெளிர் நீல வானம், என்று இயற்கை காட்சிகள் அனைத்தும் கண்ணுக்கு விருந்து. மலைகளின் உச்சியில் மடாலயம். அங்கு பால்யம் மாறாமல் வாழ்க்கை அறியாமல் சுற்றி திர்யும் குழந்தை துறவிகள் என்று ஒவ்வொன்றையும் ஒரு தவம் போல் இயக்கியுள்ளார் பான் நளின்.
இயக்குநர் பான் நளின் இந்தியர். குஜாராத்தை சேர்ந்தவர். பரோடா பல்கலை கழகத்தில் பயின்றவர். திரைப்பட தாகத்தால் பல வித மனிதர்களையும் அவர்களின் வாழ்வியல்புகளை நேரில் காணவும் இந்தியா முழுவதும் சுற்று பயணம் செய்தவர். இருபது மேற்பட்ட குறும்படங்களை எடுத்துள்ள பான் நளினின் முதல் திரைப்படம் இது.
2006ல் உலக சுற்று விழிப்புணர்வு குறித்தான ஸ்பெயின் நாட்டின் மிக உயரிய விருதினையும் பெற்றுள்ளார்.
பல உலக நாடுகளின் திரைபட விழாக்களிலும் நடுவர் குழுவில் இடம் பெற்றதுடன், ஐக்கிய நாடுகள் சபை உலக அளவில் அடுத்த வருடம் சுற்று சூழல் குறித்தான 30 நாடுகளிலிருந்து 30 இயக்குநர்களை ஆவண படம் எடுப்பதற்காக அழைத்துள்ளதில், அதில் அழைக்கப்பட்ட ஒரே இந்தியர் பான் நளின் ஒருவர் மட்டுமே என்பது கூடுதல் தகவல்.
நம் இந்தியர் ஒருவரின் இந்த உலக சினிமாவையும் பாருங்கள்.
உடனே பார்க்க வழக்கப்படி டிரைலர்.
சில கூடுதல் காட்சிகள் இங்கே
61 comments:
அருமையான அறிமுகப் பதிவு. நன்றி.
சூர்யா... முதன் முறையாய் நான் பார்த்த ஒரு படத்துக்கு விமர்சனம் எழுதியிருக்கிறீர்கள், வழக்கம்போல் அற்புதமாய்... நூறு சதம் நீங்கள் விமர்சித்ததைப்போல் தான் நான் feel பண்ணினேன்... ஆபாசங்கள் கூட அழகாய் இருக்கும் படமிது, சில இடங்களை தவிர.
சூப்பர் சூர்யா, ஓட்டு போட்டாச்சு 5/5...
பிரபாகர்.
சூர்யா நலமா! ரொம்ப நாளாச்சு பார்த்து!
எப்பிடி பாஸ் இதுமாதிரி படமெல்லாம் உங்களுக்குத் தெரியுது?
சம்சாரா - விமர்சனம் மிக அருமை. கீப் இட் அப்...
நல்ல விமர்சணம்.. அருமை.. :))
நன்றி முரளி கண்ணன்.
பிரபா, அப்படியா..?? ஆச்சரியமாய் இருக்கு.
கருத்துக்கு மிக்க மகிழ்ச்சி. ஒட்டுக்கு நன்றி. டெபாசிட் வாங்குவேனா..??
நன்றி டாக்டர். நலம். நலமறிய ஆவல்.
வாங்க ஸ்ரீ. இன்னும் நிறைய இருக்கு. எழுததான் முடியல.
முயற்சிக்கிறேன்.
வருகைக்கு மிக்க நன்றி.
நன்றி அக்கீலீஸ். உங்கள் முதல் பின்னூட்டம் என்று நினைக்கிறேன். தொடர்ந்து வாருங்கள். நிறை / குறை சொல்லுங்கள்.
நன்றி ராகவன் அண்ணா. அரவிந்த் நலமா..??
பாறையில் எழுதப்பட்டிருந்த வசனங்கள்தான் ஆழமாக என்னையும் சிந்திக்க வைத்துவிட்டது. சுப்பர்பதிவு நண்பரே..இந்தப்படத்தையும் பார்த்திட்டா போச்சு.
//'ஒரு சொட்டு நீரை காய்ந்து போகாமல் எப்படி தடுக்க முடியும்?//
//'சொட்டு நீர் காய்ந்து போகாமல் இருக்க, அதனை கடலில் எறியுங்கள்!' //
இந்த இரண்டு வரிகளுக்கு நடுவில் ஒரு அற்புதக் காவியத்தைப் படைத்தவர் பால் நளின்.
வாழ்க்கையையே மறந்தால் ஒழிய,
வாழ்க்கையில் நான் என்றுமே மறக்க முடியாத திரைப்படங்களில் ‘சம்சாரா’ நிச்சயம் இருக்கும்.
புத்தாவே மறுபடியும் பிறந்து அவரது செய்திகளுக்குப் படம் எடுத்தாற் போலிருக்கும் படம் ‘சம்சாரா’
ஒரு கூடுதல் தக்வல்.
வலைத் தளத்துக்கு நான் வந்த புதிதில் பி.கே.பி.சார் வலைத்தளத்தில் ‘ஆயுர்வேதம்’ பற்றி பால் நளின் ஒரு ஆவணப்படம் செய்திருக்கிறார் என்ற தகவல் கிடைத்தவுடன் ஓடோடிச் சென்று அதனைப் பார்த்து இடுகையிட்டேன்.
அதனுடைய சுட்டி இதோ:
http://shanmughapriyan.blogspot.com/2009/01/blog-post_1491.html
தயவு செய்து அதனைப் பாருங்கள்,நீங்களும் இதனைப் படித்துக் கொண்டிருக்கும் அனைவரும்.
நிச்சயம் பால் நளினால் பயனடைவீர்கள்.
HATS OFF SURYA.
சூர்யா இத்திரைப்படம் எனக்கு மிகவும் பிடித்த படம். இத்திரைப்படத்தின் விமர்சனமும் எழுதியுள்ளேன். ஆனால் ப்ளாக்கில் போடத் தயங்கி என் ஃபோல்டரிலேயே இருக்கிறது. நல்ல விமர்சனம் ;)))
நானும் ஒரு உலகப்பட விழாவின்போது சென்னை ஆனந்த் தியேட்டரில் பார்த்தேன்..
படத்தின் பல காட்சிகள் அதிர்ச்சியடைய வைத்தன.
அதிலும் இறுதிக் காட்சி மிக இறுக்கம்..
இதுபோல் என்றைக்கு தமிழில் வரும்..?
கதையைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் தந்துள்ளீர்கள். சமீபமாக ட்ரெய்லருக்கும் லிங்க் கொடுக்கிறீர்கள். அது உங்கள் பதிவை மேலும் மெருகேற்றியுள்ளது. பிரமாதம்!
வாருங்கள் ஜனா.. கண்டிப்பாக பாருங்கள்.
நன்றி ஷண்முகப்பிரியன் சார். அந்த சுட்டியை பார்த்தேன். ஆவண படம் இல்லையே..?? சரி பாருங்கள்.
எப்போதும் போல உங்கள் ஊக்கம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.
நன்றி உமா. எனக்கும் தயக்கம் தான்.
ஆனால் மெட்ராஸ் பாஷையில் தனி நபர்களை குறி வைத்து தாக்கும் பதிவுகளை விடவும் ஆணவமாக பின்னூட்டமிட்டவர்களை தாக்குவதை விடவும் இது ஒன்றும் மோசமில்லை என்று நினைக்கிறேன்.
Just ஒரு பகிர்வு தான்.
கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி தோழி.
அதிர்ச்சி தான். அந்த அதிர்ச்சியே அழகு அண்ணே..
தமிழிலா..?? இதுக்கு நான் என்ன பதில் சொல்வது... ??
//அதே பாறையின் அருகே சென்று கொண்டிருக்கும் போது பேமா குறுக்கிடுகிறாள். சித்தார்த்தன் கதையில் யசோதாவை தெரியுமா..?? என்று ஆரம்பித்து அவள் பட்ட வேதனைகள், அவமானங்கள். இரவோடு இரவாக விட்டு சென்றபின் யாரறிவார்..??
ஆண்களுக்கு இது வழக்கமாக இருக்கலாம். ஆனால் பெண்ணின் நிலைப்பாடு அவ்வாறு இருக்குமா..?? அதனை செய்ய துணியுமா என்று ஆவேசத்தோடு கேள்வி கணைகளால் தாஷிவை துளைக்கிறாள்.
//
புத்தரை நியாபக படுத்துகிறது .....................வைரமுத்து "கொஞ்சம் தேனிர் நிறைய வானம்"
புத்தகத்தில் இதை போன்று ஒரு கவிதை படித்திருக்கிறேன்.........தன்னை அறிவது ஆன்மிகம் ......தன்னை ஏமாற்றி கொள்வது அல்ல ......நல்ல உலக சினிமா நான் கட்டாயம் பார்கிறேன்
நன்றி ரவி பிரகாஷ் சார்.
நன்றி கார்த்திக். கட்டாயம் பாருங்கள்.
இல்லறத்தையும், ஆன்மீகத்தையும் முடிச்சு போட்டு பார்க்கும், கிறுக்குத்தனம் இன்னும் உலகம் முழுக்க இருந்துகிட்டுதான் இருக்கு.
புத்தரை கொண்டாடியவர்கள், அவர் மனைவியை நினைத்துப் பார்த்ததில்லை தான்!!!
அருமையான.. அறிமுகம் பூச்சி! கலக்கிட்டீங்க. ஏன் இன்னும் தமிழிஷில் இணைக்கலை? 8/8!! :)
சம்சாரா - அருமையான படம் , நான் சொந்தமாக டிவிடி வாங்கி வைத்திருக்கிறென்.
Everything you contact in place is a way of practice போன்ற மொழியாக்கங்கள் என்னை கவர்ந்தன.
29 வயது வரை சித்தார்த்தனுக்கு கிடைத்தது எல்லாம் ஐந்து வயதிலிருந்து எனக்கு மறுக்கப்பட்டன என்ற தாஷாவின் வசனங்கள், படத்தின் ஒளிப்பதிவு இப்படி நிறைய இருக்கின்றன.
நல்லதொரு அறிமுகம்! பகிர்வுக்கு நன்றி.
நன்றி பாலா. காமத்திலிருந்து கடவுளுக்கு என்னும் ஓஷோ வின் புத்தகத்தை வாசித்தீர்களா..??
பல முடிச்சுகள் அவிழும்..
தமிலிஷ்ல உங்க ஒட்டையும் சேர்த்து 11 ஒட்டு வாங்கியிருக்கு பாலா.
நன்றி சின்ன அம்மணி. படத்தை பற்றி சொல்லி கொண்டே போகலாம். அவ்வளவு ஆச்சரியத்துடன் அருமையான திரைப்ப்டம்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மேடம்.
மாதவராஜ் said...
நல்லதொரு அறிமுகம்! பகிர்வுக்கு நன்றி.////
நன்றி தோழரே.
முதன் முறையாக வாசிக்கிறேன்... அருமையான விமர்சனம்
காய்ந்து போகாமல் இருக்க கடலில் எறியுங்கள்..
ஆஹா.... அற்புதமான வரி
அடிக்கடி நம்ம பக்கமும் வந்து பார்த்தல் தானே தெரியும் , நாங்களும் என்னாத்த வெட்டி கிழிக்கிறோம் என்னு.....
நேரம் இருக்கும் போது வாங்க... எந்த நேரத்திலும் கதவுகள் அடைக்கப்படுவதில்லை..
//ஆண்களுக்கு இது வழக்கமாக இருக்கலாம். ஆனால் பெண்ணின் நிலைப்பாடு அவ்வாறு இருக்குமா..?? அதனை செய்ய துணியுமா என்று ஆவேசத்தோடு கேள்வி கணைகளால் தாஷிவை துளைக்கிறாள். //
அருமையான கேள்வி! ஆணித்தரமானதும் கூட. நல்லதொரு பட அறிமுகத்திற்கு நன்றி.
//இதுபோல் என்றைக்கு தமிழில் வரும்..?//
உ.த. ஜோக் அடிக்கிறீங்க தானே??? கனவு காணலாம், தமிழில் எடுத்தால் நல்லா இருக்குமோனு! எங்கே! :(((((
நன்றி தலைவா.
எப்பவோ ஓடவிட்டு ஓடவிட்டு பார்த்த ஞாபகம். அப்போ தெரியாது... சி.டி. குடுத்தவன் ‘அப்படித்தான்’ சொல்லிக்குடுத்தான். நீங்க சொன்ன பிறகுதான் தெரிகிறது இப்படிப்பட்ட படம் என்று.
மறுபடியும் முழுசா பாக்கனும்... நா படத்தச் சொன்னேன்.
நல்ல பகிர்வு மிக்க நன்றி நண்பா
நன்றி கதிர். அடிக்கடி வாருங்கள்.
நன்றி பிரபா. வருகிறேன்.
நன்றி கீதா மேடம். உ. தவுக்கு என்ன பதில் சொல்வதுன்னு சொல்லியிருந்தேன். நீங்க சொல்லிடீங்க..
வாழ்த்துகள்.
'சொட்டு நீர் காய்ந்து போகாமல் இருக்க, அதனை கடலில் எறியுங்கள்!'
அர்த்தமான வார்த்தை..என்னையும் ஒரு அன்னிய மொழிப்படம் பார்க்க வச்சிட்டீங்க....
நன்றி பெஸ்கி. பார்க்க வேண்டிய படம்.
நன்றி தமிழரசி.
நல்ல நல்ல ரசனையோடு படங்கள் தேடிப் பார்க்கிறீர்கள்.எப்படி ?அதோடு உங்கள் விமர்சனம் படம் அருமை.
நன்றி சூர்யா.
வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ஹேமா.
//'சொட்டு நீர் காய்ந்து போகாமல் இருக்க, அதனை கடலில் எறியுங்கள்!'//
இவ்வரிகளை கடக்கும் போது ஒரே பரவசமாக..
பதிவு முழுக்க சீராய் ஒடியது..
முடிக்கும் போது தெம்பாக..
விமர்சணம் பற்றிய விமர்சணம் தேவையில்லை இங்கே ...
விவகாரமா எடுத்து இருந்தாலும் விடயம் இருக்கு சொல்ல
அருமை அறிமுகம்
நன்றி.
நன்றி அசோக்.
நன்றி ஜமால்.
இந்த திரைப்பட குறுந்தகடு எங்கு கிடைக்கும் சூர்யா...?
பர்மா / சத்யா பஜாரில் கிடைக்கும்.
கண்டிப்பாக வேண்டுமென்றால் செல் பேசவும்.
பாத்துருவோம்!
நன்றி வால்பையன்.
வாங்க சூர்யா ஜி வாங்க, இன்னும் நிறைய வேண்டும் உங்களிடமிருந்து. ரெண்டு நாளா வேலை அதிகம் இப்போதுதான் படித்தேன். உங்கள் எழுத்தைபற்றி என்ன சொல்வது....!
எப்பொதும்போல கலக்கல் விமர்சனம்.
DVD கிடைக்குமா என்று முயற்சி
செய்கிறேன்.
:-)
அன்புக்கு நன்றி முரளி. இன்னுமா..?? நேரம் குறைய குறைய பொறுப்பு கூடி கொண்டே போகிறது.
கண்டிப்பாக முயற்சிக்கிறேன்.
Nice Surya.
அருமையான விமர்சனம்.படத்தை பார்க்க தூண்டுகிறது
Thanx Dr...
நன்றி அடலேறு...
அருமை... நானும் ஒரு உலக சினிமாவுக்கு விமர்சனம் எழுதி இருக்கிறேன்... முடிந்தால் படிக்கவும்...
நல்ல படங்களை எங்களுக்கு அறிமுக படுத்துவதற்கு நன்றி. தங்கள் ரசனை நன்றாக உள்ளது.
சென்னையிலா உள்ளீர்கள்? அதி பிரதாபன் தொலை பேசி மூலம் நண்பர் ஆனார். அவர் வலை மனையிலிருந்து உங்கள் பெயர் பார்த்து இங்கு வந்தேன். இயலும் போது நம் வலை பக்கம் வாருங்கள்
மோகன் குமார்
http://veeduthirumbal.blogspot.com
விமர்சனம் மிக அருமை. இதுமாதிரி படமெல்லாம் உங்களுக்குத் தெரியுது?
Post a Comment