






ஸ்பெயினில் வாழும் ஒரு சில குடும்பங்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களின் தொகுப்பே இந்த திரைப்படம்.
தாயின் பெருமைகளை சார்ந்து எடுக்கப்ப்ட்டதாலும் ஒரு மகனை மையப்ப்டுத்தியதாலும் திரைப்பட பெயர் All about my mother.
Barcelona To Madrid:
ஒரு காமுகனால் கைவிடப்பட்டு கருவை சுமந்து பயணமாகிறாள் மேனுலா.
17 வருடங்கள் கணவனை மறந்து அவன் விபரங்களை மறைத்து தன் அன்பு மகனுடன் ஸ்டீபனுடன் மேட்ரிட் நகரில் வசித்து வருகிறாள்.
உடல் உறுப்புகளை தானம் செய்யும் உறவினர்களிடம் அதன் அவசியத்தையும் அவற்றின் பயன்களையும் எடுத்து சொல்வதே அவள் வேலை. {co-ordinator Donor organ transplants}
ஸ்டிபனுக்கோ மிகப்பெரிய எழுத்தாளராக வேண்டும் என்பதே லட்சியம். அதற்காக வாழ்க்கையின் அனைத்து நிகழ்வுகளையும் அனுபவங்களையும் குறிப்பெடுத்து கவிதையாக கதைகளாக வேண்டும் என தீராத ஆர்வத்துடன் இருக்கிறான்.
பார்சிலோனாவிலிருந்து வந்திருந்து நடைபெற்று கொண்டிருக்கும் நாடகத்தை காண ஆவலுடன் இருக்கிறார்கள் இருவரும்.
ஸ்டிபனின்17வயது பிறந்தநாளில் தாயும் மகனும் அவள் தனது இளவயதில் பாத்திரமேற்று நடித்த நாடகத்தை பார்க்க செல்கிறார்கள்.
நாடகம் முடிந்ததும் ஆர்வத்தாலும் பிறந்த நாள் சந்தோஷத்தாலும் ஹீமா என்ற நடிகையிடம் ஆட்டோகிராப் வாங்க ஒடும்போது கார்விபத்தில் பலியாகிறான் ஸ்டீபன்.
ஒரே மகனின் திடிர் மரணத்தால் சொல்ல முடியாத வேதனையுடன் அவனது உறுப்புகள் அனைத்தையும் தானமாக கொடுக்க சம்மதிக்கிறாள்.
Back To Barcelona
மகனின் பிரிவால் அவளால் எதுவுமே செய்ய இயலவில்லை. வேலையையும் உதறிவிட்டு வாழ்க்கையே வெறுத்துபோய் தனது கணவனான லோலாவைத் தேடி பார்சிலோனாவுக்கு பயணமாகிறாள் மேனுலா.
தனக்கு மகன் பிறந்ததும் வளர்ந்தும் அவன் திடீரென விபத்தில் இறந்ததும் தெரியாதவன் லோலா.
பார்சிலோனாவில் தனது பழைய தோழி அக்ரடோவை சந்தித்து தான் பட்ட வேதனைகளையும் தனது நிலையையும் கூறுகிறாள். காலம் எல்லாவற்றையும் மாற்றிவிடும் அதுவரை தன்னுடன் தங்கும் படியும் அவளுக்கு வேலை ஏற்பாடு செய்வதாகவும் அவளது கணவனையும் கண்டுபிடித்துவிடலாம் என நம்பிக்கை ஊட்டுகிறாள்ள் தோழி. ஆனால் அக்ரடோ பாலினம் மாறி விபச்சார தொழில் புரிபவள். திருநங்கைகளும் பாலியில் தொழில் புரிபவர்களுமே அவளது துணை. அரைமனதுடன் அவளுடன் தங்க சம்மதித்து வேலை தேடும் முயற்ச்சியில் ஈடுபடுகிறாள்.
அக்ரடோவின் தோழியான ரோஸா. செவிலியும் பாலியல் தொழில் செய்பவர்களுக்கான மறு சீரமைப்பு வாழ்க்கை ஏற்படுத்தும் சேவையும் செய்துவருபவள்.
ரோஸாவை சந்தித்து உதவி கோருகிறாள் இருவரும்.
ரோஸாவின் தந்தை ஞாபக மறதி நோயால் பாதிக்கப்டடவர். எனவே தாயிடம் மேனுலாவின் நிலையை எடுத்து கூறி தந்தையை கவனிக்க அவளது வீட்டிலேயே வேலை ஏற்படுத்தி கொடுக்க முயற்ச்சிக்கிறாள்.
ரோஸாவின் தாய் மறுக்கவும் அவளை இது போன்ற மனிதர்களின் நட்பையும் அவளது சேவையும் அடியோடு வெறுக்கிறாள். தாயின் போக்கை எண்ணி வருந்தி குடும்பத்தை பிரிந்து மேனுலாவுடன் சேர்ந்து வசிக்கிறாள்.
மேட்ரிடில் கடைசியாக மகனுடன் நாடகம் தற்போது பார்சிலினோவில்
நடைபெற்று கொண்டிருக்கிறது. மகனின் பிரிவை எண்ணி தினந்தோறும்
நாடகம் காணச்செல்கிறாள். ஒரு நாள் நாடக நடிகையான ஹீமாவை சந்தித்து நடந்தது அனைத்தையும் கூறவே தன் காரியதரிசியாக
வேலையில் அமர்த்துவதுடன் போதை மருந்துக்கு அடிமையான தனது மகளையும் கண்காணிக்க வேண்டுகிறாள்.
மகளான நினாவுக்கோ மேனுலாவின் வருகையும் அவள் தன்னை கண்காணிப்பதையும் பொறுக்க முடியாமல் நித்தம் சண்டையிடுகிறாள். நினாவை திருத்த தன்னாலான அனைத்து முய்ற்ச்சிகளையும் செய்கிறாள் மேனுலா.
இதற்கிடையில் ரோஸா தான் கருவூற்று இருப்பாதாகவும் அதுமட்டுமல்லாது தனக்கு எய்ட்ஸ் நோய் தாக்கி இருப்பதையும் கூறவே அதிர்ந்து போகிறாள் மேனுலா.
அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக ரோஸாவின் கர்பத்திற்கு காரணம் பல பெண்களுடன் தொடர்புடைய தன்னுடைய கணவன் லோலாவேதான் என்பதை எண்ணி மேலும் குழப்பமும் வருத்தமும் அடைகிறாள்.
ரோஸா ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்து விட்டு எய்ட்ஸ் தீவிரமாகி இறக்கிறாள்.
லோலாவை சந்தித்து அவனின் செய்கைகளையும் அவனுக்கு ஒரு மகன் பிறந்து 17 வயதில் இறந்ததையும் கூறவே தான் செய்த செய்கைகளையெல்லாம் எண்ணி எண்ணி வருந்துகிறான்.
Again To Madrid:
கால மாற்றத்தாலும் தனது வாழ்க்கையில் புதிய வரவான பிஞ்சு குழந்தைக்கு ஸ்டீபன் என்று பெயரை சூட்டி அவனுக்க்காக தான் வாழ வேண்டும் என மன உறுதியோடு Aids Awarness Co ordinator வேலையை ஏற்றுக்கொண்டு மீண்டும் மேட்ரிட் நோக்கி பயணமாகிறாள்.
Visit To Barcelona:
பணி நிமித்தம் காரணமாக இரண்டு வருடம் கழித்து தன் குட்டி மகனுடன் பார்சிலோ செல்லும் மேனுலா அனைவரையும் சந்திக்கிறாள்.
தோழியான அக்ரடோ பாலியல் தொழிலை விட்டுவிட்டு நாடக நடிகை ஹீமாவின் காரியதரிசியாகிறாள். மகளும் நினாவும் போதை பழக்கத்தை விட்டு மணமாகி செட்டில் ஆகிவிட்டதை அறிந்து மகிழ்கிறாள்.
மனநலம் குன்றியவர், பாலியல் தொழில் புரிபவர், பாலினம் மாறியவர், எய்ட்ஸ் நோய் தாக்கியவர், போதைபழக்கத்திற்கு அடிமையானவர் என்று சமூகத்தால் வெறுத்து ஒதுக்ப்படும் பல்வேறு பாத்திரங்களை வைத்து எந்த வித ஆபாசமோ அருவருப்பான காட்சிகளோ இல்லாத ஒரு அற்புத திரைப்படம்.
சாவின் விளிம்பில் இருக்கும் நிலையில் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் தந்தையுடன்வாக்கிங செல்லும் நாய் ரோஸாவை
பார்த்து குதித்து அன்பை வெளிப்படுத்துவதும் ஆனால் தந்தையே மகளை பார்த்து What is your age..?? What is your height ..?? என்று கேட்பது நெகிழ்ச்சியான காட்சிகள்.
ரோஸாவாக நடித்த Penélope Cruz பற்றி சொல்ல வார்த்தைகள் இல்லை. பல உலக விருதுகளை குவித்ததுடன் இந்த வருடம் ஆஸ்கர் அள்ளியவர்.
மேனுலாவாக நடித்த Cecilia Roth மிகச்சிறந்த ஸ்பெயின் நடிகை. பல விருதுகளை பெற்றது மட்டுமல்ல பல உலக விழாக்களில் சிறந்த திரைப்ப்டங்களை தேர்ந்தெடுக்கும் குழுவிலும் இருப்பவர்.
இயக்கம் Pedro Almodóvar. இவரை பற்றி ஒரு புத்தகமே போடலாம் போல இருக்கு. யப்பா பதக்க பட்டியல் இங்கே .. பொறுமை இருப்பவர்கள் படிக்கலாம்.
47 உலக விருதுகளுடன் 2000ம் ஆண்டு ஆஸ்கர் வென்றது.
நிச்சயம் பார்க்க வேண்டிய திரைப்படம்.


